தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெருங்குளம் என்னும் ஊரில் திருவழுதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது
ஆலய சிறப்புகள்⭐
இந்த கோவில் பெருங்குளம் கிராமத்தில் திவ்ய தேசம் பெருமாள் மாயக்கூத்தர் திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
இக்கோயில் பசுமையான நிலப்பரப்பின் நடுவில் அமைந்துள்ளதுடன், அமைதியான தியானத்திற்கு ஓர் நிம்மதியான புகலிடத்தையும் வழங்குகிறது.
இக்கோயில், உத்தம பாண்டியன் என்றழைக்கப்பட்ட வழுது பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் காலத்தில் கட்டப்பட்டது (இருப்பினும், இது வரகுண பாண்டியனின் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற முரண்பட்ட தகவலும் உள்ளது ).
தமிழ் கவிஞரும் ஞானியுமான திருவள்ளுவரின் தலைசிறந்த படைப்பான திருக்குறளின் அரங்கேற்றம் இங்குதான் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது .
இத்தலம் வாலைக்குமரன் சித்தர், செங்கோல் ஆதீனம் போன்ற சிறப்புக்களுடன், பாண்டியர் கால கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது.
மூலவரின் பெயர் வழுது பாண்டியன் அல்லது இங்குள்ள திருவள்ளுவர் கதையிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது (ஆகையால் மூலவர் சில சமயங்களில் திருவள்ளுதீஸ்வரர் என்றும் குறிப்பிடப்படுகிறார்).
மண்டபங்களிலும் தூண்களிலும் தெளிவாகத் தெரிவது போல, இக்கோயில் செவ்வியல் பாண்டிய பாணி கட்டிடக்கலையால் நிறைந்துள்ளது . இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கோயில்களைப் போலவே, இக்கோயிலிலும் ராஜகோபுரம் இடம்பெறவில்லை, மாறாக மொட்டைக் கோபுரமே உள்ளது.
கோயில் வளாகம் ஒப்பீட்டளவில் பெரியதாக இருந்தாலும், கர்ப்பகிரகம் மிகவும் சிறியதாக உள்ளது. அர்த்த மண்டபத்திற்குப் பிறகு, அக்னி பிரகாரம் என்றழைக்கப்படும் ஒரு உள் பிரகாரம் உள்ளது, இது பிரத்தியேகமாக மூலவர் வழுதீஸ்வரருக்கென ஒதுக்கப்பட்டுள்ளது
இக்கோயிலில் அக்னி வளையம் மற்றும் சித்தர் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆலய அமைப்பு🛕
கிழக்கு நோக்கிய பெரும் ஆலயம்
மிக விசாலமான பரப்பளவில் பெரிய மதில் சுவரும் இருக்கிறது. இக்கோவிலில் இராஜ கோபுரம் இல்லை. காட்சி கோபுரத்தில் விநாயகர், சுவாமி அம்பாள் மற்றும் முருகர் உள்ள நுழைவு முன் மன்டப முகப்பில் சுதையில் உள்ளனர்
அடுத்து உள்ளே நுழைந்தால், இருபுறங்களும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி உள்ளனர்
நந்தி தனி மன்டபத்தில் ஆலயம் நோக்கியுள்ளார்
இங்கு உள்ள மூலவர் சன்னதி தரையில் இருந்து உயர்ந்து காணப்படுகிறது
தென்புறம் அதிகார நந்தி மற்றும் சிவசூரியன் உள்ளார்
தென்கிழக்கில் தீர்த்தக் கினறு ஒன்று உள்ளது.
சில படிகள் ஏறினால் நீண்ட உள் பிரகாரம் அதில் நடராஜர் தெற்கு நோக்கிய ஒரு சன்னதியில் உள்ளார். உற்சவர் சிலைகளும் பாதுகாப்புடன் உள்ளன.
மற்றும் நிருத்த மண்டபம் தாண்டி கிழக்கு நோக்கிய கருவரையில் சுவாமி திருவழுதீஸ்வரர் உன்னார் சிறிய முன் நந்தியும் உண்டு
கருவரை மிகவும் வித்தியாசமாக குறுகிய ஒரு உள் பிரகார அமைப்புடன் உள்ளது பிரம்மாண்ட அகலமான மூல கோபுரத்தோடு இருக்கிறது.
வேறு எங்கும் இல்லாத அமைப்பு.
முன்புறம் அனுஞை விநாயகர் மயில்வாகனத்துடன் பாலமுருகர் சிறிய அளவில் உள்ளனர்
கோஷ்ட்ட பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி தெற்கு நோக்கி மிக உயரத்தில் உள்ளார். படிகள் அமைப்புகள் உண்டு.
பிரகார மண்டபத்தில் சப்தமாதர்கள் ஜுரதேவர் உள்ளனர் பிரகார கன்னி மூலையில் விநாயகர் அடுத்து சொக்கநாதர் மீனாட்சி நந்தியுடன் உள்ளார்.
வித்தியாசமான கருவரையின் உயர கோபுர அமைப்பில் வடகிழக்கு மூலையில் பைரவர் சுதையில் உள்ளார்
வடக்குப்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் தனி சன்னதி மற்றும் சனீஸ்வரர், பைரவர் உள்ளனர்
கிழக்கில் சிவசந்திரர் உள்ளார்.
சுவாமி ஆலயம் அடுத்து வலது புறம் கோமதி அம்பாள் தனி சன்னதி உள்ளது
நீண்ட முன் மண்டபம் உள் மண்டபம் கடந்தால்
கிழக்கு நோக்கிய தனி கருவரையில் அம்பாள் நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகிறார்.
சிறிய முன் நந்தியும் உள்ளது
முன்மன்டபத்தில் வட பகுதியில் பள்ளியரையும்
தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய முனிவர் - திருவள்ளுவ நாயனார் - சிற்பமும் உள்ளது
பயண அனுபவக்குறிப்புகள்🕊️
ஆலய வளாகத்தில் சுற்றி மிகப் பெரிய மாமரங்கள் இன்றும் காய்கின்றன. ஆலய தென்கிழக்கில் அம்மன் ஆலய முன்புறம் அழகிய வடிவில் ஒரு குளம் உள்ளது. சுவாமி அம்பாள் ஆலய நடுவில் பிரகாரத்தில் பூமி அடிமட்ட சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.
இந்த கோவில் நன்கு பராமரிக்கப்பட்டு, அமைதியாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.
மிகவும் பழமையான இந்த கோவிலில் கூட்டம் குறைவாக காணப்படுவதால் ஈசனை எந்தவித இடர்பாடுஇன்றி நிம்மதியாக தரிசிக்கலாம்
சுவாமி சன்னதிக்கு முன்பு இருக்கும் மேடையில் நிற்கும் போது வரும் காற்று மனதுக்கு அமைதி தருகிறது. கோவில் சுத்தமாக பராமரிப்பு செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் பக்தர்கள் வருகை குறைவு
கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த, இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பிரசித்திப் பெற்ற சிவன் கோயிலாகும்.
கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும்.
🔱🇮🇳
நன்றி
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ஏரல் அருகில்
🔱🇮🇳
No comments:
Post a Comment