Sunday, May 3, 2026

திருச்செந்தூர் மூவர் சமாதி வைகுண்ட பதி துண்டுகை விநாயகர்

திருச்செந்தூர்
மூவர் சமாதி
திருச்செந்தூர் ஆலயத்தின் தென்புறம் அமைந்துள்ள நாழிக்கினறு தாண்டி அமைக்கப்பட்டுவரும் நடை பாதையில் 200 மீட்டர் தூரம் சென்று மூவர் சமாதி தரிசித்தோம்

மௌன சாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி இம்மூவர்களும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தை ஆதிகாலத்தில் புரைமைப்பு செய்து பராமரித்தவர்கள். இவர்களுடைய சிலைகள் ஆலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது.
செந்தூர் கடற்கரையில் இவர்களின் ஜீவசமாதிகள் உள்ளது. இங்குள்ள பனை மரங்கள் மட்டுமே இந்த இடத்தை அடையாளம் காணக்கூடிய அளவில் இருந்தன. 
தனித்தனி ஆலய அமைப்பில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைத்து சுற்று சுவருடன் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் அடியார் முயற்சிகளால் இவைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது இந்த இடங்கள் முழுவதுமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது ஆலயத்திலிருந்து நாழிகினறு வழியாக புதிய நடை பாதை அமைத்தும், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டும், ஆலயப்பகுதி முழுவதுமாகப் புனரமைப்பும் பல்வேறு பணிகளும் செய்யப்பட்டு வருகிறது

திருச்செந்தூர்
அய்யா வைகுண்டர்பதி
திருச்செந்தூர் ஆலயம் தென்புறத்தில் உள்ள அய்யா வைகுண்டர்பதி தற்காலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆலயம்.
மூவர் சமாதியிலிருந்து 100 மீட்டர் தென்பகுதியில் உள்ளது.
அய்யா வைகுண்டர் சிவன் விஷ்ணு பிரும்மா மூவரின் அம்சமுமாக புதிய அவதாரம் செய்து நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
இந்த ஆலயம் மிகப்பெரிய மண்டபத்துடன் கூடியது. கருவறையில் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் அலங்கார வேல் உள்ளது. கருவரை சுற்றிவர ஆண்கள் மேல் ஆடைகள் கழற்றிக்கொண்டு சென்று தரிசித்து வர வேண்டும்

அய்யா வைகுண்டர்பதி ஆலயம் மிக அருகில் தனித்தனியாக 3 ஜீவசமாதிகள் உள்ளன.

சம்ஹார மூர்த்தி, ஆவுடையப்பர், சங்கர சுவாமிகள் என்று மூன்று மடங்கள் உள்ளன. 
இவையெல்லாம் தனியார் அறக்கட்டளைகள் மூலம் ஏற்படுத்தி பரிபாலணை செய்யப்பட்டுவருகிறது.

திருச்செந்தூர்
துண்டுகைவிநாயகர் ஆலயம்
 திருச்செந்தூர் ஆலயம் மேற்கு வாசல் வழியாக சுப்பிரமணியர் ஆலயம் செல்லும் வழியில் துண்டுகைவிநாயகர் ஆலயம் உள்ளது
பிரதான சாலையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலிலிருந்து முருகன் கோவில் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது.

இவ்விநாயகப் பெருமான் தம் தம்பியாகிய செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை பக்தர்களுக்குத் தூண்டிக் காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகின்றார். திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முதலில் தூண்டுகை விநாயகரை வணங்கி தேங்காய் உடைத்து விட்டு, பின்பு முருகனை தரிசிப்பது என்பது வழக்கமாக உள்ளது. முருகனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் பக்தர்கள் தூண்டுகை விநாயகர் கோயிலில் இருந்துதான் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வருகின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தபோது, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவிற்கு நிதி தட்டுப்பாடு இருந்தது. எனவே கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி பிரசாதத்தை பன்னீர் இலைகளில் வைத்து சம்பளமாக கொடுத்தனர். வேலை நாளின் முடிவில் தூண்டுகை விநாயகரிடம் பிரார்த்தனை செய்த பிறகு, தொழிலாளர்கள் பன்னீர் இலை விபூதி பொட்டலத்தைத் திறந்து பார்த்தால், அதில் இருக்கும் விபூதியானது அன்றைய தினம் அவர்கள் செய்த வேலைக்கு ஏற்ப தங்க நாணயங்களாக மாறி இருக்கும் அதிசயம் நிகழ்ந்தது.

ஆலயம் சிறிய முன் மன்டபமும் முகமன்டபம்முன்பு விநாயகர் சிலையும் உள்ளது.
கிழக்கு நோக்கிய கருவரையில் விநாயகர் அருள்புரிகிறார். பின்புறம் உள்ள ஆலய தலமரத்தில் ஏராளமான பிரார்த்தனை குழந்தை தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன.

25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

No comments:

Post a Comment

எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டுக்குடி முருகன் கோவில்  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது 800 ஆண்டுகள் பழமையானது. இது ஆடிப்படை வீடு என்று போற்றப்படுகிறது....