Saturday, May 30, 2026

பரமக்குடி முத்தாலம்மன் ஆலயம் 17.05.26 தரிசனம்

பரமக்குடி  முத்தாலம்மன் ஆலயம்
நகரின் நடுவில் உள்ள ஆலயம்
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் மிக அழகுற அமைந்துள்ளது.
எதிர்புறம் மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் உள்ள செல்வ சக்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

முத்தாலம்மன் ஆலயம் சாலையிலிருந்து
10 படிகள் மேலே ஏறினால் ஆலயம் மிக நீண்ட வெளிமண்டபம் இது அழகிய ஓவியங்கள் அமைந்தது.
அடுத்துள்ள உள் மண்டபத்தில் விநாயகர் பலிபீடம் கொடிமரம் சிங்கம் உள்ளது. 

கிழக்குப் பார்த்த உயரமான கருவறையில் முத்தாலம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். கருவரை முன்பாக இருபுறமும் விநாயகர் மற்றும் திரெளபதை சன்னதிகள் உள்ளன
ஆலயம் முழுவதும் கற்றளியால் கட்டப்பட்டு அழகிய வடிவமைப்பில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது.
கருவரை பின்புறம் ஆதி முத்தாளம்மன் சன்னதி உள்ளது. 
பிரகாரத்தின் முன்பகுதியில் கருப்பண்ணசுவாமி, போத்திராஜா, துர்க்கை மற்றும் வடக்குப்புரத்தில் ஆஞ்சநேயர், மற்றும் பைரவர் உள்ளனர்.

இந்த ஆலயம் முழுமையும் பரமக்குடி மஞ்சப்புத்தூர் ஆயிர வைசிய செட்டியார் சமூகத்திற்கு சொந்தமானது   அவர்கள் சமூகத்தினரின் உதவியால் இந்த ஆலயத்தை எழுப்பி பராமரித்து அனைத்து பூசை விழாக்கள் எடுத்து வருகிறார்கள். அவர்களின் குலதெய்வ ஆலயம் என்று போற்றி வணங்கி வருகிறர்கள்.
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் 17.05.26 தரிசனம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் , அப்பர் ஆகியோரின் பாடல்...