⛳அமைவிடம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் கண்டரமாணிக்கம் என்னுமிடத்தில் அமைந்துள்ள பெரிச்சி கோவில் (சுகந்தவனேஸ்வரர் கோவில்) ஒரு பழமையான சிவன் கோயிலாகும்.
பட்டமங்கலம் தட்சிணா மூர்த்தி ஆலயம் மிக அருகில் உள்ளது
திருப்பத்தூரிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது
💥சிறப்புகள்
இறைவன்: சுகந்தவனேஸ்வரர்
(எ) ஆண்ட பிள்ளை நாயனார்
இறைவி: சமீபவல்லி அம்பாள்
தல விருட்சம்: வன்னி
இக்கோயில் சித்தர் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர் மற்றும் கடுமையான சக்தி வாய்ந்த காசி பைரவருக்காக மிகவும் பிரசித்தி பெற்றது.
வன்னி மரத்தடி ஒற்றை சனிஸ்வரர் தனித்துவமானது
🛕ஆலய அமைப்பு
கிழக்குப்பார்த்த அமைப்பில் உள்ளது
முன்வாசல் காட்சி கோபுர அமைப்பு
உள் நுழைவில் அகண்ட பிரகாரம் இடதுபுறம் வன்னி மரத்தடியில் விநாயகர்
நாகர் உள்ளனர்
கல் மன்டபத்தில் கொடி மரம் பலிபீடம் அடுத்து நந்தியம் பெருமான் உள்ளார். சுவாமியை நோக்கியிருக்கிறார். சிறிய முன்மண்டபம் தாண்டி உள்ளே
கிழக்கு நோக்கிய கருவரையில் சுவாமி
சுகந்தவனேஸ்வரர் (எ) ஆண்ட பிள்ளை நாயனார் உள்ளார். சுவாமி சுவாமி கருவறை வலது புறம் அம்பாள் சமீபவல்லி அம்பாள் தனி சன்னதி கருவறை முன் மண்டபம் நந்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது
கோஷ்ட்டத்தில் தட்சிணாமூர்த்தி துர்க்கை தனி சண்டேஸ்வரர் சன்னதியும் உண்டு
பிரகாரத்தில் கன்னி மூலையில்
விநாயகர் சன்னதி மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தனி சன்னதியில் உள்ளார்
காசி நவபாஷாண பைரவர் சன்னதி
வடக்கு பிரகாரத்தில் அம்பாள் சன்னதி
அடுத்து மேற்கு நோக்கி தனி சன்னதியில்
காசி நவபாஷாண பைரவர் உள்ளார்.
சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட 2 அடி உயரமுள்ள பைரவர் சிலை தனி சன்னதியில் கருவறையுடன் மேற்கு பார்த்து இங்குள்ளது. பழனி தண்டாயுதபாணி சிலைக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த சிலை, பிட்சாடணர் தோற்றத்தில் சற்று உடலைச் சாய்த்து காட்சி தருகிறது.
கபால மாலை அணிந்தவர் வலது இடது இரண்டு பக்கங்களிலும் நான்கு திருக்கரங்கள் உடையவர் ஒவ்வொரு கையிலும்தீமைகளை அழிக்கும் ஆயுதங்களை உடையவர் குறிப்பாக இடது நான்காவது திருக்கரம் ஒரு தீய அரக்கன் தலையை வெட்டி கையில் பிடித்துள்ளார்
அந்தத் தலையில் இருந்து சொட்டும் குருதியை பைரவர் வாகனமாகிய நாய் சுவைத்த வண்ணம் உள்ளது
பைரவர் கருவறையின்முன் மண்டபத்தில் தனி பைரவர் ஒன்றும் உள்ளது
அதிசய சக்தி: மூலவர் காசி பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் மற்றும் வடை மாலை பிரசாதம் பக்தர்களுக்குத் தரப்படுவதில்லை. அவற்றின் வீரியம் மிக அதிகமாக இருப்பதால், வடை மாலைகள் கோயிலின் மேல் பகுதியில் போடப்படுகின்றன.
தோஷ நிவர்த்தி: பித்ரு தோஷம், ஸ்திரீ தோஷம் மற்றும் கடுமையான சனி தோஷங்களை நீக்க பக்தர்கள் இங்குள்ள பைரவரை வழிபடுகிறார்கள்.
சனீஸ்வரர் சன்னதி
பைரவர் சன்னதிக்கு அடுத்து பின்புறம் வன்னி மரத்தடியில்ஒற்றை சனீஸ்வரர் எழுந்தருளி உள்ளார்
சனீஸ்வரரை, சிவ அம்சமான பைரவரின் சீடராக கருதி வழிபடுகிறார்கள். வன்னி மரத்தின் அடியிலிருந்து அவர் பைரவரை எப்போதும் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இவருக்காக பைரவர் பின்புறம் ஒரு முகத்துடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள். பௌர்ணமி அன்று மாலையில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
சிவகங்கை தேவஸ்த்தான நிர்வாகத்தில் உள்ள ஆலயம்
வழிபாட்டு நேரம்:
தேய்பிறை அஷ்டமி நாட்கள் பைரவர் வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமானவையாகும். சாதாரண நாட்களில் பகலில் திறந்திருக்கும் திறந்திருக்கும் மாலை 6 மணி வரை தரிசிக்கலாம்
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment