பரமக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள பெரிய ஆலயம்
கிழக்கு நோக்கிய அமைப்பு. சுவாமிக்கு 5 நிலை ராஜகோபுரத்துடன் வாயில் உள்ளது. சுமார் 12 படிகள் உயரே ஏறினால் ஆலயம். வெளி மண்டபம் நீண்ட உயரமான கட்டுமானம்.
மண்டபத்தில் பலிபீடம் கொடிமரம் மற்றும் நந்தியம் பெருமாள் உள்ளனர். மேலும் கருவரை உள் நுழைவு வாசலில் விநாயகர் பாலதண்டாயுதபாணி இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளனர்.
கருவரையில் கிழக்கு நோக்கி சுந்தரேஸ்வராள் சுவாமி அருள்பாலிக்கின்றார்.
உள் மண்டபத்தில் நால்வர் சிலைகள் எதிர்புரத்தில் நடராஜர் சிவகாமியம்மன், அம்மையார், மற்றும் மணிவாசகர் உலோக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது
கருவரை கோஷ்ட்ட பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி லிங்கோத்பவர் பிரும்மா துர்க்கை தனி சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளார்கள்.
மேல் பிரகாரத்தில் விநாயகர் வள்ளி தெய்வாணையுடன் முருகன் சரஸ்வதி மகாலெட்சுமி ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன
வடக்குப்பிரகாரத்தில் தலவிருட்சமும் எதிரில் தனி சிவலிங்கம் நந்தி உள்ளது .
கிழக்கில் பைரவர், நவகிரகம் சூரியன் சந்திரன் சன்னதிகள் உள்ளன.
ஆலயத்தின் தென்புறம் பெரிய திருமண மண்டபம் அமைத்துள்ளனர்.
எதிரில் கிழக்குப் புறம் சிறிய நீர்த்தொட்டி அமைத்து சிவன் சிலை அமைத்துள்ளார்கள்
அடுத்து மீனாட்சியம்மன் தனி ஆலயம்
கிழக்கில் 3 நிலை ராஜகோபுரம்
நீண்ட உள் மண்டபம் அடுத்து உள்கோபுரத்துடன் தனி ஆலயமாக அம்மன் உள்ளார். முன் மண்டபத்தில் வடக்குப்புறம் பள்ளியரையும், கிழக்கு நோக்கிய உயரமான தனிக்கருவரையும் உள்ளது கருவரை முன் தனி விநாயகர் பால தண்டாயுதபாணி சிறிய சிலைகள் இருபுறம் உள்ளது.
கோஷ்ட்ட சுவரில் அம்பாள் படம் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது
முழுவதும் கற்றளி ஆலயம்
இரண்டு பெரிய ஆலயங்களும் பெரிய சுற்றுச்சுவருடன் அமைந்துள்ளது.
ஆயிர வைசிய செட்டியார் பெருமக்களுக்கு முழுவதும் பாத்தியதைப்பட்ட ஆலயம்
நகருக்குப் பெருமை தரும் அளவில் ஆலயம் சிறப்பாக உள்ளது எல்லா பூசை காலங்கள் மற்றும் முறையான விழாக்கள் அணைத்தும் கொண்டாடப்பட்டு வருகிறது
பரமக்குடி செல்பவர்கள் இவ்வாலயம் தரிசனம் செய்வது சிறப்பு
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment