Saturday, May 30, 2026

திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம் 17.05.2026 தரிசனம்

திருகோஷ்டியூர்
சௌமிய நாராயணப்பெருமாள் ஆலயம்

தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.
⛳அமைவிடம்
மதுரையிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
⭐சிறப்பு:
நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தல் விஷ்ணு எழுந்தருளினார். தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.

⭐கோபுர விமானத்தின் சிறப்பம்சம்

மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. மேல் பகுதி தங்கத்தால் கவசம் அணியப்பட்டுள்ளது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் ஒரு சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளது.

விளக்கு நேர்த்திக்கடன்
மகப்பேறு கிடைக்க, திருமகள் தாயாருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் அப்பேறு கிடைப்பதாக தொன் நம்பிக்கை.
🛕ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய ஆலய அமைப்பு கிழக்கு கோபுரம் 5 நிலை உடையது
ஆலயம் உள்ளே பிரகார மண்டபம் Sheet போடப்பட்டு உள்ளது. நீண்ட பெரிய மண்டபம் அடுத்து ஆலயம் உள் நுழைவில் இடது புறம் தனி சன்னதியில் சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் கிழக்கு நோக்கி அருள்காட்சி தருகிறார் 
கருவரை முன்புறம் முனிவர்கள் மற்றும் 
கருவரை இரு புறங்களிலும் சிறிய விநாயகர் நாகர் மற்றும் சற்று பெரிய உருவத்துடன் தண்டாயுதபாணி உள்ளனர். பிரகாரத்தில் கன்னி மூலையில் தனி விநாயகர் உள்ளார்.
இவர்களை வணங்கிய பின்னர் ஆலயம் உட்புறத்தில், கிழக்கு நோக்கிய சன்னதியில் வேணுகோபாலர் தரிசித்து
இடதுபுறம் உள்ளபடிகட்டுகளில் ஏறி
முன்மண்டபத்தில் உள்ள கருடாழ்வார்
மற்றும் கிழக்கு நோக்கிய கருவரையில் கிடந்து அருள்பாலிக்கும் செளமிய நாராயணர் சயன கோல தரிசனம் செய்ய வேண்டும். பின் படிகள் இறங்கி கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ள
 மகாலெட்சுமி தாயார் சன்னதியில் அவரை வணங்கி அதன்பின் குறுகிய படிகள் வழி ஏறி விமானத்தில் நடுவில் உள்ள நின்ற கோலத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேதரராக இருக்கும் பெருமாளை தரிக்க வேண்டும். இதை அடுத்து மேலும் சில குறுகிய படிகளில் மேல் ஏறி அஷ்ட்டாங்க விமானத்தின் உள்ள அமர்ந்த கோலப்பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பின் அஷ்ட்டாங்க விமானத்தில் உள்ள மிகக் குறுகிய வாசல் வழியாக நுழைந்து சென்று தெற்குப்புறத்தில் நின்று ஸ்ரீ ராமானுஜர் மோட்சத்தை தரும் மந்திரத்தை பொதுமக்களுக்கு அறிவித்த இடத்தைக் கண்டு தரிசித்து அங்கிருந்து திருக்கோஷ்ட்டியூர் நம்பிகளின் மடத்தை  
கண்டு தரிசிக்க வேண்டும். பின் வந்த வழியே படிகள் இறங்கி மீண்டும் மகாலெட்சுமி சன்னதி சுற்றி ஆலய பிரகாரம் வலம் வர வேண்டும்.

💥குறுகலான படிகள் குனிந்து நிமிர்ந்து செல்லும் பாதை உடல் நலத்தில் தகுந்த அக்கரையுடன் எச்சரிக்கையுடன் மேலே சென்று தரிசித்து வர வேண்டும்.

⭐பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் . அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மருக்கு அருகில் ராகு, கேது உள்ளனர்.
⭐இவ்வாலயத்தை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் திருமழிசையாழ்வார் பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
💥விழாக்கள்
சித்திரை பிரம்மோற்சவம், மாசியில் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பு. மேலும் வைகுண்டஏகாதசி நவராத்திரி

💥சிறப்பான ஆலயம் சிவகங்கை சமஸ்த்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆலயம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
💥108 திவ்ய தேசத்தில் இவ்வாலயம் முக்கியானது என்பதால் பக்தர்கள் வருகை எப்போதும் உண்டு.

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

பெருந்தலையூர் -பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் 14.06.2026

பெருந்தலையூர் - பிரகன்நாயகி சமேத மகிழீஸ்வரர் சிவன் ஆலயம் கோபிச்செட்டிப்பாளையம் - ஈரோடு பிரதான சாலையில் உள்ள கவுந்தப்பாடிக்கு வடக்கில் உள்ள ...