Sunday, May 3, 2026

திருச்செந்தூர் ஆனந்தவல்லி அம்மன் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம்

திருச்செந்தூர்
ஆனந்தவல்லி அம்மன் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் 

திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி ஆலய மேற்கு நுழைவு வாயில் எதிரில் உள்ள பழமையான சிவ தலம்

திருச்செந்தூர் முருகாலயத்திற்கும் முற்பட்ட ஆலயமாக திகழும், சற்றே பிரமாண்டமான 
நீண்ட மண்டபங்கள் கடந்து சற்று உயரமான வா அலங்கார மண்டபம் அதை அடுத்து நீண்ட உள் மன்டபம் சுவாமி கிழக்குப்பார்த்த அமைப்பு
இச்சிவத்தலத்தின் கருவறையில், ஈசன்,சுயம்பு லிங்க மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார்.

சுவாமி முன் மன்டபத்தின் வடபுறம் தனி நடராஜர் 
அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி கருவரை அடுத்து வடபுறம் கிழக்கு நோக்கி அம்பாள் சன்னதி உள்ளது. அம்பிகை ஶ்ரீ ஆனந்தவல்லி தனி சன்னதியில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அழகு திருக்காட்சியளிக்கிறாள்.

இரண்டு கருவரைகளையும் ஏகமாய் வலம் வரலாம்.
கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி வடபுறம் தனி சன்டிகேஸ்வரர் உள்ளனர்

அடுத்துள்ள வெளிப் பிரகாரத்தில் வடபுறம் கிழக்கு நோக்கிய கல்யாண விநாயகர் தனி சன்னதியில் உள்ளார்.

இரவில் அர்த்தஜாம பூசையில் அம்பாள் சன்னதியிலிருந்து அம்பாள் புறப்பட்டு சுவாமி சன்னதிக்கு வரும் நடைமுறை சுவாமி ஜோதியாக இருப்பதால், இந்தமுறையில் நடைபெறுகிறதாக குறிப்பிட்டனர்.

கால பூசையில், சுவாமி அம்பாள் பால் அபிஷேகம் பிறகு அலங்காரம் பூசைகள் சுவாமி நடராஜர் அம்பாள் என்ற பூசைகள் வரிசை

இவ்வாலத்தில் திருமணங்கள் முதலிய சுபகாரியங்கள் நடந்து வருகின்றன
திருமணம் வரம் அமைய, ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் தனி சன்னதியில் அமர்ந்திருக்கும் ஶ்ரீ கல்யாண விநாயகர் தரிசனமும், வளம்பெற அருகிலேயே
சிறு சன்னதியின் மிகச்சிறு 'கருவறையில்', ஶ்ரீ லக்ஷ்மி தாயார் சமேதராய் சயன திருக்கோலமாக வீற்றிருக்கும் ஶ்ரீ பள்ளி கொண்ட பெருமாள் தரிசனம் காண்பதும் சிறப்பு.

1995, 2009, ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
கருப்புசாமி பேச்சியம்மன் முதலிய வழிபடு தெய்வங்களும் ஆலய முன்பகுதி தூண்களில் உள்ளன.

பரபரப்பான ஊரின் மத்தியில், ராஜகோபுரம் இல்லாத, அமைதியும் பழமையும் மிகுந்த இந்த பெரிய சிவாலயத்தை, உள்ளூர் மக்கள் மற்றும் சிவத்தொண்டர்களைத்தவிர, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இத்தலம்தான், ஆதி முருகன் கோயில் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆவணி மூலம் மற்றும் மாசி மகம் அன்றைய நாட்களில், திருச்செந்தூர் ஆலயத்திலிருக்கும் ஆறுமுகப்பெருமான் இச்சிவத்தலத்தில் எழுந்தருள்வதும், அவருக்கு 48-பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவதும், ஆறுமுகனார் பச்சை சாத்தி பச்சை சப்பரத்தில் எழுந்தருளி ஶ்ரீ மகாவிஷ்ணுவாக மக்களுக்கு அருள்பாலித்து, பின்பு நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்து மீண்டும் திருச்செந்தூர் முருகன் ஆலயத்திற்கே எழுந்தருள்வதும் மிகவும் சிறப்புமிகு விழாகாலமாகும்.
சிவராத்திரி, நவராத்திரி. என, சிவபெருமான் தம்பதியருக்கு உரிய அத்தனை விழாக்களும் தவறாமல், இத்தலத்தில் மிகச்சிறப்பாக நடைபெறுவது தல விசேஷம்.

26.04.26 அன்று காலசந்தி பூசை தரிசனம் கிடைத்தது.
நிறைவான பயனம் இனிதாக புறப்பட்டோம்.
எத்தனை முறை வந்தாலும்
கருணைக்கடல் அருள் இருந்தால் மட்டுமே எல்லாம் பெறலாம்.
26.04.26 சுப்ராம் தரிசனம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

No comments:

Post a Comment

எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டுக்குடி முருகன் கோவில்  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ளது 800 ஆண்டுகள் பழமையானது. இது ஆடிப்படை வீடு என்று போற்றப்படுகிறது....