Friday, May 29, 2026

இளையான்குடி அருள்மிகு ஶ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் 17.05.2026 தரிசனம்

இளையான்குடி அருள்மிகு ஶ்ரீ ஞானாம்பிகை சமேத ஶ்ரீ ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் 

இளையான்குடி எனும் சிற்றூர், சிவகங்கை மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ளது . பரமக்குடி - காரைக்குடி செல்லும் பிரதான சாலையில் உள்ளது.
சுமார் 1000-ஆண்டுகள் பழமையான,
சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.
ஆலய அமைப்பு
பிரதான சாலையில் கிழக்கு நோக்கிய ஆலயம் வடபுறம் பெரிய குளம் உள்ளது. குளத்தின் தென்கிழக்கில் பெரிய அரசமரம் மற்றும் ஒரு விநாயகர் ஆலய வளாகத்தின் முன் உள்ளது.
கிழக்குப்பார்த்து மூன்று நிலை ராஜகோபுரம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயம் முன்புறம் புத்தர் சிலை ஒன்றும் கண்டு எடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது
அம்மன் சன்னதிக்கு தனி நுழைவு வாயிலும் காட்சி கோபுரத்துடன் அமைந்துள்ளது.
ஆலய ராஜகோபுரம் நுழைவில் விநாயகர் முருகர் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன
உட்புறம் சூரியன் சந்திரன் மேற்கு நோக்கிய அமைப்பில் உள்ளன.
ஆலயம் உள்ளே பெரிய மண்டபத்தில் பலிபீடம் கொடிமரம் நந்தி அமைக்கப்பட்டுள்ளது

சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்த்தானம் கட்டுப்பாட்டில் இளையான்குடி ஆயிர வைசியசபையினரின் பேராதரவுடன் ஆலயம் பராமரிக்கப்படுகிறது.

கருவறை மண்டபம் முன்பு வெளி சுவற்றில் இளையான்குடி மாற நாயன்மாரின் வாழ்க்கைச் சித்திரம் பழமையான ஓவியம் உள்ளது.
 நுழைவில் ஒரு விநாயகர் உள்ளார்.
உள் மன்டபத்தில் நால்வர் மற்றும் சேக்கிழார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் 
சோமஸ்கந்தர் மற்றும் நாயன்மார் தம்பதியுடன், விநாயகர், முருகன் வள்ளி தெய்வானையுடன், உலோக சிலைகளும் உள்ளன. பதஞ்சலி வியாக்கிரபாதருடன் நடராஜர் சபையும் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கிய கருவரை.
 நுழைவு முன் மண்டபத்தில் சிறிய நந்தி கிழக்கு நோக்கிய விநாயகர் மற்றும் முருகன் அமைத்துள்ளனர்.
கருவரையில் ஸ்ரீ இராசேந்திர சோழீஸ்வரர் அருள்பாலிக்கின்றார்.

பிரகாரத்தில் இளையான்குடி மாற நாயனார் மற்றும் புனிதவதியார் தம்பதிகளுக்கு வடக்கு நோக்கி தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
வாழ்கை வரலாறும் புடைசிற்பமாக கல்லில் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய புராணம் நாயனார் வரலாறு கல்வெட்டாக பாடல்கள் சிறப்பாக அமைத்துள்ளனர்.
ஆலய தென்பிரகாரத்தில் முன்மண்டபத்துடன் தனி சன்னதியாக கிழக்கு நோக்கி ஸ்ரீ ஞானம்பிகை அருள் தருகிறார்.

சுவாமி கருவரை கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி லிங்கோத்பவர் துர்க்கை தனி சன்டிகேஸ்வரர் உள்ளார்.

ஆலய பிரகார கன்னிமூலையில் தனி விநாயகர் சன்னதி உள்ளது.
தனி சரஸ்வதி சன்னதியும், வெங்கடேஸ்வரர் சன்னதியும் மற்றும் முன்மன்டபத்துடன் தனி சன்னதியாக வள்ளி தெய்வானையுடன் முருகன் உள்ளன.

தெற்கு நோக்கிய கால பைரவர் தனி சன்னதி ஆலயம் வடகிழக்கில் உள்ளது.
அருகில் நவகிரகம் தனி சனிஸ்வரர் உள்ளார்
சிறப்புகள்
63 நாயன்மார்களில் ஒருவரான மாறநாயனார் அவதரித்த மற்றும் முத்தி தலம். அடியவர் வேடத்தில் வந்த
நம் ஈசனாருக்கு உணவளித்த தலம் என்பது தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும்.

தேவார வைப்புத்தலமாக போற்றப்படும்
இத்திருத்தலத்தில்,
இந்திரன் பூஜித்ததால், முற்காலத்தில்
(இத்திருத்தலத்தின் ஊர் பெயர்)
'இந்திர அவதாரநல்லூர்' என அழைக்கப்பட்டனவாம்.

சோழர்களால் கட்டப்பட்ட பழமையான இத்திருத்தலத்தில், மூலவரின் சன்னதியின் பின்னே, ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பதும்,
சுவாமி கருவரை முன் ஸ்ரீவள்ளி இல்லாமல்
எம்பெருமான் முருகன் 
திருவருள்புரிவதும்
தலச்சிறப்புக்களில் சிலவாகும்.
நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

நயினார் கோவில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் 17.05.2026 தரிசனம்

நயினார் கோவில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்  அமைவிடம்  பரமக்குடியிலிருந்து வடகிழக்கே வைகை ஆற்றைத் தாண்டி சுமார் 8 கி.மீ. தொலைவில் அம...