ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர் ஆகும்.
பலமுறை வந்து தரிசனம் பெற்றாலும் ஒவ்வொரு பயணத்தையும் சிறப்பு செய்வது கண்கண்ட தெய்வம் செந்திலாண்டவர் கருணையே.
பயண அனுபவக்குறிப்புகள்
சுப்ராம் 🔱🇮🇳 26.04.26
விடியற்காலை 3.30 க்கு சிறப்பு தரிசனம் ரூ 100/- வரிசையில் நுழைந்தோம். பொருள் வைப்பு அறை 4.30 க்குத்தான் திறப்பார்கள் என்று கூறியதால், உடமைகளுடன், கைப்பேசி எல்லாவற்றையும் சுமந்து கொண்டே வரிசையில் நின்று 5.30 அளவில் விஸ்வரூப தரிசனம் மிகவும் அற்புதமாக கிடைத்தது நிதானமாக மிகவும் திருப்தியாக அருகில் நின்று தரிசனம் பெற்றோம்.
மேலும், ஜெயந்திநாதர், சண்முகர் தரிசனம் முடித்து, இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சூரனை வதம் செய்யும் சத்ருசம்ஹார மூர்த்தி முருகரை அபிஷேகத்துடன் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும், ஆலய முதல் பிரகாரத்தில் உள்ள தட்சினாமூர்த்தி வள்ளி தெய்வாணை சஷ்ட்டி மண்டபம் மற்றும் சண்டிகேஸ்வரர், நடராஜர், பைரவர் தரிசித்து கொடி மரம் வணங்கி இரண்டாம் பிரகாரம் சகஸ்கரலிங்கம் சம்ஹார மூர்த்தி விநாயகர்பெருமாள் பெருமாள் தரிசனம் செய்து ஆலயம் வலம் வந்து காலை 6.00 மணி அளவில் கோவில்யானை தென்புறம் கோபுரம் அருகில் வணங்கும் காட்சியையும் கண்டோம்.
அடுத்து நாழி கினறு நடை பாதையில் சென்று, மூவர் சமாதி தரிசித்து, அடுத்து 100 மீட்டர் தூரத்தில் தற்போதுள்ள எழுப்பப்பட்டுள்ள அய்யா வைகுண்டர் பதி சென்று தரிசித்து பக்கத்தில் உள்ள சத்ருசம்ஹர மூர்த்தி மடம், ஆவுடையப்பர் மடம், சங்கர சுவாமி மடங்களையும் தரிசித்தோம்.
மேலும், ஆலயம் வந்து மேற்கு வழி பாதையில் சென்று துண்டுகைவிநாயகர் ஆலயம்
தரிசித்தோம்
பிறகு, ஆலய மேற்குமுன் நுழைவு வளைவுக்கு எதிரில் உள்ள பழமையான
சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் சென்று கால பூசை தொழுது பின் எங்கள் வாகனம் சென்று அடைந்தோம்.
நிறைவான தரிசனம் தந்து மகிழ்வுடன் பயணம் நிறைவு செய்ய கருணை கடலின் அன்புதான் முழுமுதல் காரணமாகும். நன்றி நன்றி🛐🙏🛐
திருச்செந்தூர் தரிசனத்திற்கு செல்பவர்களுக்கு மேலும் சில குறிப்புகள்
ஆலய தரிசன வசதிகள்
⚡பேருந்து, ரயில் பயணிகள் இறங்கும் இடங்களில் இருந்து ஆலயம் தென்புறம் அருகில் வர வாகன வசதிகள் உண்டு
முடிந்தவர்கள் நடந்து வந்து மேற்கு புற ஆலய நுழைவு வாயில் வழியாகவும் வரலாம்.
⚡வாகனங்கள் ஆலய தென்புறம் நிறுத்த இடம் இருந்தாலும், வேன்கள் சிறிய பேருந்துகளை தெப்பக்குளம் அருகில் நிறுத்த செய்யப்படுகிறது.
⭐சுப்பிரமணியர் ஆலயம் வரும் வழிப்பாதையில் இரண்டு புறமும் கடைகள் பல்வேறு ஆதின மடங்கள், மற்றும் பல்வேறு சாதி இனத்தாருக்குச் சொந்தமான மடங்கள் தங்கும் வசதியுடன் கூடிய இடங்கள் பொருட்கள் வைப்பு அறைகள், குளியல் அறைகள் முதலிய வசதிகள் ஏராளம் உள்ளன. பக்தர்கள் பொருட்களை / உடமைகளை பத்திரமாக வைத்துவிட்டு ஆலய தரிசனம் செய்து வரலாம். தங்குவதற்கும் வசதிகள் உண்டு வாடகை விபரங்கள் விசாரித்துக் கொள்ளலாம்.
⭐ஆலயம் சார்பாக, ஆலயம் தென்புறம் ஆலயவளாகத்திலும் பக்தர்கள் நலமாக தங்குவதற்கு புதிய புதிய கட்டிட அமைப்புகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது ஆதார் அட்டை காட்டி அறைகள் முன்பதிவு செய்யலாம் online மூலமாகவும் செய்து கொள்ளலாம்
⭐இலவசமாக பொருட்கள் பாதுகாப்பு இடங்கள் இலவச அன்னக்கூடம், இலவச முடி வெட்டிக்கொள்ளும் இடங்கள் இலவச கழிப்பிடங்கள் இலவச குளியல் இடங்கள் முதலிய பல வசதிகள் உண்டு
⚡தனியார் உணவு சாலைகள், தேநீர் கடைகள், ஆலய பொருட்கள் விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன.
💥தரிசனம்
⚡இலவச தரிசனம் தனி வரிசை ஆலயம் வட பகுதியில் சென்று வரிசையில் வர வேண்டும்.
⚡சிறப்பு நுழைவு வரிசையில் ரூ 100/- கட்டனம் கட்டி வரிசையில் சென்று ஆலயம் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்
⚡முதியோர்கள் முக்கிய பிரமுகர்கள் ஆலய தென்புற பிரதான வாசல்வழியில் ஆதார் அட்டை அடையாளம் மூலமாக அனுமதிக்கப்பட்டு நேரடியாக ஆலயம் உள் சென்று தனி வரிசையில் தரிசனம் செய்விக்கப்படுகிறர்கள்
(காலை 7.30 மணி முதல் என்று கூறுகிறார்கள்)
⚡அர்ச்சணைப் பொருட்கள் தேங்காய் பழம் முதலியவைகளுக்குப் பதிலாக சுவாமிக்கு வேல் மலர்மாலை முதலியவை சமர்ப்பித்து நேரடியாக சங்கல்ப அர்ச்சனை செய்து கொள்கிறார்கள்.
⚡ஆண்கள் பனியன் முதலிய மேல் சட்டைகள் அணிந்து தரிசிக்க அனுமதி இல்லை
💥சாதாரணமாக வரிசையில் உள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்து ஆலயம் வெளியில் வர குறைந்தபட்சம் சுமார் 3 மனி நேரம் ஆகலாம் வரிசையில் உள்ளே வேறு எந்த வித வசதிகளும் கிடையாது. அவசரமாக வெளியில் வருவது கடினம்.
மிக முக்கியம்
💥குழந்தைகள் முதியவர்கள் சிகிச்சையில் உள்ளவர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் முன்னேற்பாடுகளுடனும் தரிசனத்திற்கு செல்வது மிகவும் அவசியம்
💥சாதாரண நாட்களில் கூட எங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் எந்த ஒரு செயல்பாட்டிற்கும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்
முருகன் திருவருள்🔱
நன்றி🙏
25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
No comments:
Post a Comment