Friday, May 29, 2026

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம் 16.05.2026 தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம்
இராமாயண காலத்திற்குச் சமமான பழமையான திருத்தலமான இராமேஸ்வரம், இந்தியாவின் மிகப் புனிதமான சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு ஸ்ரீ ராமபிரான், இராவணனை சம்ஹரித்த பின் ஏற்பட்ட தோஷத்தை நீக்க சிவபெருமானை வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. சீதாதேவி மணலில் உருவாக்கிய சிவலிங்கமே இங்குள்ள மூலவர் ராமநாதசுவாமி.

இந்தத் தலம் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், நான்கு முக்கிய புண்ணிய தலங்களில் தெற்குத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு அக்னிதீர்த்தத்தில் நீராடி, 22 தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது மிகப் புனிதமாக கருதப்படுகிறது.
865 அடி நீளமும், 657 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான கோவில், உலகப்புகழ் பெற்ற 1212 தூண்கள் கொண்ட மூன்றாம் பிரகாரத்தால் சிறப்பு பெறுகிறது. மேலும், பித்ரு தோஷ நிவர்த்திக்கான முக்கிய பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.

காசி யாத்திரை முடிவடைய, இராமேஸ்வரம் தரிசனம் அவசியம் என்று கருதப்படுகிறது.

கிழக்குப்பார்த்த ஆலயம் 
முதலில் அக்னி தீர்த்தத்தில் நீராடி பின் வடக்கு வாசல் வழியாக நுழைந்து 25 ரூபாய் கட்டனம் செலுத்தி 22 தீர்த்தங்களில் புனித நீர் தெளித்துக்கொண்டு 
ஈரஆடை நீக்கி உலர்ந்த ஆடைகளை அனிந்து கிழக்கு வாசல் வழியாக ஆலயம் உள் செல்ல வேண்டும்.
உள் நுழையும் வழியில் காசி ஹனுமான் சன்னதி மற்றும் விநாயகர் சுப்பிரமணியர் சன்னதிகள் தரிசிக்க வேண்டும். அதன் பின் ஆலயம் உள் சென்று சீதாபிராட்டி பிரதிஸ்ட்டை செய்த மனல் லிங்கமாகிய ராமநாதர் வணங்கி பின் அனுமான் கொண்டு வந்து வைத்த விஸ்வநாதர் லிங்கம் மற்றும் விசாலாட்சி பர்வதவர்த்தினி சன்னதிகள் தரிசனம் செய்து வரவேண்டும்.
மேலும் பிரகாரத்தில் உள்ள சேது மாதவர் சன்னதியும் வணங்கி வர வேண்டும்.
வாழ்நாளில் ஒருமுறை கண்டே ஆக வேண்டிய தெய்வீகத் திருத்தலம் இதுவே!
  நன்றி.
16.05.2026 மீள் தரிசனம்
என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

நயினார் கோவில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் 17.05.2026 தரிசனம்

நயினார் கோவில் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்  அமைவிடம்  பரமக்குடியிலிருந்து வடகிழக்கே வைகை ஆற்றைத் தாண்டி சுமார் 8 கி.மீ. தொலைவில் அம...