Friday, May 29, 2026

இளையான்குடி மாறனார் மடம் /கோவில் 17.05.2026

இளையான்குடி மாறனார் மடம் /கோவில்.

இறையான்குடி சிவன் ஆலயம் எதிரில் உள்ள சிறிய தெருவில் உள்ளது.
இந்த இடம் நாயனார் வாழ்ந்த இடமாகக் கருதி இந்த புனித இடத்தை அடியார்கள் வந்து தொழும் மடமாக மாற்றி உள்ளனர்
இது ஒரு நீள் செவ்வக மண்டபம் கிழக்குமேற்கு அமைப்பில் தெரு இருந்தாலும் மடத்தின் வாசல் தென்புறம் உள்ளது.
உள்ளே நாயன்மார் துணைவியுடன் உள்ள சிலை வைத்து வணங்கப்படுகிறது.
மேலும், மன்டபத்தின் ஒரு பகுதியில்மேற்கில் சிறிய அளவில் விநாயகர்,மீணாட்சி சொக்கநாதர், நந்தி மற்றும் பாலமுருகன் ஒரு பெரிய மேடையில் வைத்து வணங்கி வருகிறார்கள்.
63 நாயன்மார்களில் ஒருவரான மாறநாயனார் அவதரித்த மற்றும் முத்தி பெற்ற இடம்.  

அடியவர் வேடத்தில் வந்த
நம் ஈசனாருக்கு உணவளித்த இடம் என்பது சிறப்பு 

அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு தொண்டு இன்றும் நடைபெறுகிறது.

நாயன்மார் குரு பூசை ஆவணி மகம் அன்று மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
தனியார் டிரஸ்ட் மூலம் இந்தக்கோயில் /மடம் பராமரிக்கப்பட்டு வருகிறது

இளையான்குடி சிவன் ஆலயம் மிகவும் அருகாமையில் இருப்பதால், நடந்து வந்து இந்தமடம் தரிசனம் செய்து பக்தர்கள் செல்வது வழக்கம்.

நன்றி🙏
17.5.2026 சுப்புராம் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

பெருங்குடி : அருள்மிகுஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேதஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்)அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், 5.06.26

பெருங்குடி : அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத ஶ்ரீ (திருப்பெருமுடி பரமேஸ்வரமுடையார்) அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்குடி கிராமம்,...