#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
பதிவு : நான்கு
#வழிமொழி_திருவிராகம், பற்றிய பதிவு.
மூன்றம் திருமுறை பதிகம்: 325
பாடல்கள் 5, 6, 7, 8
🙏🙇♂️அன்பு வேண்டுகோள்:🙇♂️🙏
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.
🙇♂️நன்றி🙏
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
#தமிழரின்பொக்கிஷம்.
#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல்
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.
📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்: 714 - 725
பதிகம் 325 தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.
⚜️வழிமொழி திருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.
🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)
🔸இதன் ஓசை அமைப்பில் பாடல்
தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதனனா
என அமைகிறது.
இப்பதிகத்தின் 1, 2, 3, 4 பாடல்கள் பற்றி முன்பதிவில் பார்த்தோம்.
இப்பதிவில்
இப்பதிகத்தின் 5, 6, 7, 8 பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.
🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.
⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.
🔹சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் : 5
💠தோணிபுரம் : அர்ச்சுனன் வழிபட்ட இடம்.
பிரளய காலத்தில் தோனி போல் விளங்கி காத்ததால் இத்தலம் தோணிபுரம் என விளங்கிற்றது.
✳️'ண' சீர் அமைப்பில் உள்ள பாடல்.
பாடல். 718
ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருண் மாணுபிர மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக ஆணின்மலி தோணிநிகர் தோணிபுரமே.
-03.325:05 (718)
பொருள் :
ஆண் இயல்புகாண ( விசயனுடைய ) வீரத்தன்மையை உமைகாண.
வன வாணஇயல் - வனத்தில் வாழ்பவர்களாகிய வேடர் வடிவம்.
பேணி - கொண்டு,
எதிர். அவனுக்கு எதிராக. ( போர் தொடங்கி )
பாணமழை - ( அவன் சொரியும் ) மழைபோன்ற அம்புகளும்.
சேர் - அவ்வம்புகள் தங்கிய.
தூணி - அம்பறாத் தூணியும்.
அற - நீங்கவும்.
நாணி அற - வில்நாண் அறுபடவும். வேணுசிலை பேணி - அவனது மூங்கிலால் ஆகிய வில்லின் வளைவு. அற - நீங்கவும்.
விசயன் - அவ்வர்ச்சுனன்.
நாணி - நாணமுற்று.
பாணி அமர் பூண - கையால் அடித்துச் செய்யும் மற்போரைச் செய்ய வர.
அருள் மாணு - அவனுக்கு மிகவும் அருள் புரிந்த,
பிரமாணி இடம் - கடவுட்டன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் சிவபெருமானின் இடம்.
ஏணி முறையில் - மிக்கது என்ற முறையினால்.
பாணி - பிரளயகால வெள்ளமானது. உலகு ஆள - உலகம் முழுதும் மூழ்கச் செய்ய.
மிக ஆணின் - அதனின் மிகவும் பொருந்திய ஆண்மை வலிமையினால். மலி - சிறந்த.
தோணி நிகர் - அதனைக்கடக்கவல்ல தோணியை யொத்த ( தோணிபுரம் ஆம் ).
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 6.
💠பூந்தாராய் : திருமால் வழிபட்ட இடம்.
பூந்தாராய் என்றும் இப்பதி.
✳️'ரா' என்னும் சீர் அமைப்பு அமைந்துள்ளது.
பாடல். 7 19
நிராமய பராபர புராதன
பராவுசிவ ராகவருளென்று
இராவுமெ திராயது பராநினை
புராணன் அராதிபதியாம்
அராமிசை யிராதெழில் தராயர பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே.
-03.325:06 (719)
பொருள் :
திருமால் வெள்ளைப் பன்றி உருவெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்றி அவனை வருத்திய பழிபோகச் சிவனை வழிபட்ட புகழ்மிக்க பூந்தராய் என்னும் திருத்தலமாகும்.
நிராமய - நோயற்றவனே.
பராபர - உயர்வுடையதும், உயர்வற்றதும் ஆனவனே ;
புராதன - பழமையானவனே.
பராவு - அனை வரும் துதிக்கின்ற.
சிவ - சிவனே.
ராக - விரும்பத்தக்கவனே.
அருள் என்று - அருள் வாயாக என்று.
இராவும் - இரவிலும்.
எதிராயது - பகலினும்.
பரா - பரவி.
நினை - உயிர் அனைத்தும் தியானிக்கின்ற.
புராணன் - பழமையானவனும்.
அமர ஆதி - தேவர்களுக்குத் தலைவனுமாகிய சிவபெருமானின்.
பதி - இடமாகும்.
அராமிசை - ஆதிசேடனாகிய பாம்பின்மேல்.
இராத - இல்லாத. ( இரணியாக்கனாற் கொள்ளப்பட்டுக் கடலிற் கிடந்த )
எழில் - அழகிய பூமியை.
தரு - கொம்பினால் கொண்டு வந்த.
ஆய - அத்தகைமை பொருந்திய. அரபராயண - சிவனைத் துதிக்கின்ற. வராக உரு - வெள்ளைப் பன்றி வடிவுகொண்ட.
வாதராயனை - திருமாலை.
விராய + எரி
விராய் - கலந்த.
எரி - தீப்போன்ற பழி நீங்குதற்பொருட்டு. பராய் - அவனால் வணங்கப்பட்டு. ( அதனால் )
மிகு - புகழ்மிகுந்த.
தராய் மொழி - பூந்தராய் என்னும் பெயர். விராய - கலந்த,
பதி ஆம்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 7.
💠சிரபுரம் : திருமால் சிலம்பன் என்ற அசுரனை சிரம் அறுக்க, அந்த சிரம் இரு கிரகமாக நின்று வழிபட்டு நின்று பூசித்த தலம்.
✳️'ர' சீரில் அமைத்துள்ளார்.
பாடல். 720.
அரணையுறும் முரணர்பலர் மரணம்வர இரணமதில் அரமலிபடைக்
கரம்விசிறு விரகன்அமர கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறும் அரவையரி சிரம் அரியஅச்
சிரம்அரன சரணம்அவை பரவஇரு கிரகம் அமர் சிரபுரமதே.
-03.325:07 (720)
பொருள் :
அரணையுறும் - மதிலைப்பொருந்திய, முரணர் - திரிபுரத்தசுரர்களால்.
பலர் மரணம்வர - பலருக்கு மரணம் நேர. இரணம் - காயங்கள் முதலியன உண்டாக்கித் துன்புறுத்தும்,
மதில் - அம்மதிலின்மேல்.
அரமலி படை - அரத்தால் அராவப்பட்ட ஆயுதத்தை,
கரம் - கையினால்.
விசிறு - ஏவிய,
விரகன் - சமர்த்தனும்,
அமர் கரணன் தன்னை அடைந்தவருக்கு கரணங்களின் சேட்டையை அடக்குவிப்போனும்.
உயர்பரன் - யாவரினும் உயர்ந்த மேன்மை உடையவனும் ).
நெறி கொள்கரன் அது - உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமாகிய சிவபெருமானின்,
இடமாம் - தலமாகும்.
பரவு - துதிக்கத்தக்க.
அமுது - அமிர்தம்,
விரவ - தனக்குக்கிடைக்கும்படி
உறும் அரவை - பந்தியில் வந்த பாம்பை. விடல் - விடத்தோடு.
புரளம் உறும் - புரளுதல் உறும்,
அரிசிரம் அரிய - திருமால் அதன்தலையை வெட்ட.
அச்சிரம் - அந்தத் தலையானது,
அரன் - சிவபெருமானது,
சரணமவை - பாதங்களை,
பரவ - துதித்ததினால்
இருகிரகம் - இரண்டு கிரகங்களாக,
அமர் - நவக்கிரக வரிசையில் அமரச்செய்த,
சிரபுரம் - சிரபுரமாம்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 8.
💠புறவம் : இந்திரன் பருந்தாகவும், அக்னி புறாவாகவும் சென்று சிபிச்சக்கரவர்த்தியிடம் சோதிக்க புறாவின் எடைக்காக உடல் அறுத்து ஈடு செய்தான். பாவம் நீக்க புறா வழிபட்டதால் புறவம் எனப்பட்டது.
✳️ ' ற ' சீர் அமைப்புள்ளது.
பாடல் : 721.
அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறல்அழிய நிறுவிவிரல்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிறன்
உறஅருளும் இறைவனிடமாம்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர்
நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல்
பெறவருளும் புறவமதுவே.
- 03.325.08 (721)
பொருள் :
புறாவின் எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்த சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும், தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள், தவறு உணர்ந்த ராவணனுக்கு அருள்புரிந்த சிவபெருமானை,
பூசித்து அருள்பெற்ற புறவம் என்னும் திருத்தலமாகும்.
அறம் அழிவுபெற - தர்மம் அழியும் படியாக.
உலகு - உலகத்தை,
தெறு - அழித்த,
புயவன் - தோள்களையுடைய இராவணனது.
விறல் அழிய - வலிமை யொழியும்படி, விரல் நிறுவி - விரலை அழுத்தி ; ( பின் )
மாமறையின் ஒலி - சிறந்த சாமவேத கானத்தை,
முறை - வரிசையாக,
முரல் செய் - பாடிய,
பிறை எயிறன் - பிறை போன்ற பற்களையுடைய அவ்விராவணன்.
உற - நாளும், வாளும் பெற.
அருளும் இறைவன் இடமாம்.
மறை அமரர் - வேதங்களுக்கும் தேவர்களுக்கும் ஒத்ததாகிய,
நிறை - நீதியை.
அருள - வழங்கும்படி.
முறையொடு வரும் - முறையிட்டு வந்த,
புறவன் - புறாவிற்குரியவனாகிய வேடன், எதிர் - எதிரே,
குறைவில் - புறாவின் எடைக்குச் சரியாக இட்ட மாமிசத்தின் குறைவில்.
மிக - அதிகரிக்க,
நிறைதை உழி - நிறைவுவேண்டியிருந்த பொழுது.
நிறைதை - நிறைவு.
பொறை - பாரம், எடை
நிறை நிலவு - அந்த எடையின் நிறை சரியாகப் பொருந்த இட்ட.
பொறையன் - உடலின் அரிந்த மாமிசத்தை எடையாக்கினவனாகிய சிபி, உடல் பெற - தன் உடம்பைப்பெற,
அருள் - அவன் வந்து பணிய அருள் புரிந்த
புறவம் அது - புறவம் என்னும் பெயருடைய திருத்தலமாம்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
#வழிமொழிதிருவிராகம் என்னும் இவ்வற்புத பதிகத்தின் பாடல்களின் விளக்கத்தையும் சிறப்புகளையும் அடுத்தடுத்த பதிவில் தொடர்ந்து சிந்திக்கலாம்.
🙏நன்றி.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.🙇♂️🙏🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
மூன்றம் பதிவின் #வழிமொழிதிருவிராக பாடல்கள்: 1 முதல் 4 வரை விளக்கம் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=4176651552410070&id=100001957991710
No comments:
Post a Comment