Tuesday, July 21, 2020

ஏகபாதம் பதிவு: 3

#திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :
பதிவு : மூன்று (பாடல் 5 மற்றும் 6)

ஏகபாதம் :
ஒரே அடியில் உள்ள சொற்கள் நான்கு அடிகளிலும் வரும்போது பொருள் வேறு, வேறு பெற்று விளங்குவதுதான் திருஏகபாதம்.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
தமிழ் ஞானசம்பந்தரின்  பதிகங்களில் ஏகபாதம் என்னும் மிகச்சிறந்த இந்த
வகை யாப்பு அமைந்த பதிக பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம் வாருங்கள்.
இன்றைய சிந்தனை 
பாடல்கள்: 5, 6 பற்றியது.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿
பாடல் 1374.

சீர்காழி பதியின் 12 பெயர்களில்
தோணிபுரம் என்பதும் ஒன்றாகும்
பிரளயகாலத்தில் ஈசன் தோணியில் காட்சி தருதல் எனவே இப்பெயர் பெற்றது.

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿
தேவாரம் - முதல் திருமுறை 
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல் : 5

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏿‍♂️🙏🏾
வரி விளக்கம் - 1.

"சுடர்மணி இமம் ஆளி கைத்தோணி புரத்து அவன்;

சுடர்மணி - சூடாமணி; இமம் - ஈமம்; ஆளி - ஆள்பவன்; கைத்தோணி - தும்பை மாலையை அணிந்தவன்; புரத்தவன் - முப்புரம் எரித்தவன்.

சூடார் எனற்பாலது சுடர் எனவும், 
 ஈமம் எனற்பாலது இம் எனவும் குறுகி நின்றன.
 துரோணம் எனற்பாலது தோணி எனமருவிற்று. 
பொருள் :
சுடுகின்ற இடமாகிய மயானத்தை நடமாடும் இடமாகக்கொண்டு, முப்புரங்களையும் எரித்துத் தும்பை மாலையை அணிந்தவன்.

வரி விளக்கம் - 2.

சுடர்மணி மாளி கைத்தோள் ணிபுரத்தவன்;

சுடர்மணி - சூடாமணி; 
மாளி - மாலி - மயக்கம்; 
கைத்தோள் - தோலை உரித்துத் துதிக்கையை உடைய யானையை; ணிபுரத்தவன் - வடிவழித்தவன்.

சூடாமணி எனற்பாலது சுடர்மணி எனவும், மாலி எனற்பாலது மாளி எனவும்,
தோல் எனற்பாலது தோள் எனவும் நின்றன. 
மாலையுடையவன் - மாலி. 
தோல் - யானை. 

பொருள் :

என் உச்சியில் சூடாமணியாய்த் திகழ்பவன்; என்மேல் அன்பு என்னும் மயக்கத்தை உடையவன்; துதிக்கையை உடைய யானையை உருவழித்தவன்.

வரி விளக்கம் - 3

சுடர்மணி மாளி கைத்தோணி புரத்தவன்;

சுடர் - சூரியன்; 
மணி - கழுவி;
மாளி - கெட்டவன்; 
கைத்தோணி - தெப்பம்; 
புரந்தவன் - உபதேசிப்பவன்

பொருள் :

சூரியனது களங்கத்தைப் போக்கிய கடலைப்போன்ற பிறவியைப் போக்கும் பொருட்டுத் தெப்பமாக உதவும் பிரணவ மந்திரத்தை, ஆன்மாக்களின் செவியில் போதித்தவன்.

வரி விளக்கம் -4.

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

சுடர் - விளக்கம்; 
மணி - நவரத்தினம்; 
மாளி(கை) - மாளிகை சூழ்ந்த; தோணிபுரம் - திருத்தோணிபுரம்.

நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மாளிகை சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ஆவான்.

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿
மற்றும் ஒரு பழைய உரையின் சுருக்கம்:

1. பிரளய காலத்தில் யாவும் வெள்ளத்தில் மூழ்கி நிற்கத் தோணியில் விளங்கும் பரமன், மெய்யடியார்களைத் தமது காயத்தில் ஆரோகணித்து அருள் வழங்குபவன்.

2. சுடர்விடும் வண்ணமிகு செம்மேனியனாய், மாணிக்கமாய் விளங்குகின்றவன்.

3. அடியவர் மனத்தில் சுடர்விடும் சோதியாய் விளங்குபவன். ஏகாந்த நிலையினருக்கும், விஞ்ஞானகலர் என்று பேசப்படும் ஒரு மலத்தார்க்கும் நித்தியச் சுடராய் விளங்கும் அவன்,  

4. ஒளிபொருந்திய மணிகளால் பதிக்கப் பெற்ற மாடமாளிகையுடைய தோணிபுரத்துப் பெருமான் ஆவன்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏿‍♂️🙏🏾
பாடல் 1375

சீர்காழிப்பதியின் மற்றொரு பெயர்.
பூந்தாராய்  இதன் விளக்கம்:
பூமியைப் பிளந்த இரணியாக்கதனை வதம் செய்த வராக மூர்த்தி (திருமால்) வழிபட்டது என்பதால், இப்பெயர் விளங்கிற்று.
🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

தேவாரம் - முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 6.

பூசுரர்  சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர்  சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர்  சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர்  சேர்பூந்த ராயவன் பொன்னடி

🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿🏔️🙏🏽
பொருள் :
1.இரணியாக்கதனை வதம் செய்த வராக மூர்த்தியான திருமால் வழிபட்ட பூந்தராய் மேவிய பொன்னடி, பூவுலகத்தின் உயர்ந்தோராகிய அந்தணர்களால் வழிபடப் பெறுவதாகும்.

2. அப்பொன்னாகிய ஒளிமிக்க திருவடியைச் சார்ந்து விளங்க, மென்மை மிக்க தேவர் ஆவர்.

3. தாயாக விளங்கிப் பாதுகாக்கும் ஈசனின் பொன்னார் சேவடி, எல்லா போகத்தையும் இவ்வுலகத்தில் சேர்த்து வழங்க வல்லது. 

4. தெய்வத் தன்மையை. இவ்வுலகில் சேர்க்கும் ஈசன் திருவடிக் கமலத்தை, மலர் கொண்டு தூவிப் போற்றுவோமாக.
.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
மற்றும் ஒரு பழைய உரையின் சுருக்கம்:

1. பூமியிலுள்ளாரையும்  
  தேவகணங்களாய் உள்ளாரையும்
  தனது நாபிக் கமலத்திலே   
  தோற்றுவிக்கப்பட்ட       
  பிரமாவிஷ்ணுவினது  போதத்திலே 
  கண்ணாடியும் நிழலும் போலப் 
  பிரதிவிம்பியா நின்றவன். 

ஆடி என்பது அடி எனக் குறுகிநின்றது.

2. மலத்திரயங்களைக் கழுவப்பட்ட சிவஞானிகள் கூட்டம் பொலிவு பெறத்தக்க வனப்பையுடைய ஆனந்த நிருத்தம் செய்தருள்பவன்.

3. சர்வாங்கமும் உத்தூளனம் பண்ணின மார்பை உடைய சிவஞானிகளும், புண்ணிய  பாவக்கட்டை அரிந்து விசுவத்தைத் தள்ளப்பட்ட சிறப்பையுடையருமாயிரா நின்றவர்களுக்கு  
 மிகுதியான மூலமாயுள்ளவன். 

உந்தராய் என்பது, ஊந்தராயென நீண்டது.

4. மறுவிலா மறையோர் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் திருப்பதியின்கண் வீற்றிராநின்ற சிவனது அழகிய திருவடித் தாமரை என்னை ஆண்டிடுகிறது.
பூந்தராய் என்பது சீகாழி பதியாகும்

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏

பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
முதல் பாடல் முதல் பதிவில் காணலாம்:

https://m.facebook.com/story.php?story_fbid=3964605860281308&id=100001957991710

பாடல் 2,3 மற்றும் 4 விளக்கத்திற்கு :

https://m.facebook.com/story.php?story_fbid=3971000689641825&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...