#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்
பதிவு : இரண்டு
#திருவிராகம்
#வழிமொழிதிருவிராகம்
#வண்ணகம்
#முடுக்கியல்
#அடுக்கியல்
தேவார இசைப்பாடல்கள் பற்றியது
பதிவு : இரண்டு.
பக்தியும், தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾
ஞானசம்பந்தரின் தமிழ் இசை மற்றும் தாள சந்தங்கள் சிறப்புக்கள்
கொண்டு அமைந்த பதிகப் பாடல்களைப் பற்றி மேலும் சிந்திக்கலாம்.
#வண்ணகம்
#முடுகியல்
#அடுக்கியல்
🔽இவ்வுறுப்பு இசை, இனிமை, உடையது. அதனால் #வண்ணகம் எனவும் பெயர் பெறும்.
🔼விரைந்து செல்லும் ஓசையுடையது என்பதனால் #முடுகியல் எனவும் பெயர் பெறும்.
குறில் அல்லது நெடில் கலந்த விரைவு நடைப் பாடல்வரிகளில் அமைந்தது. இதில் குறில் தாளச் சிறப்பையும் நெடில் ஓசை நயத்தையும் உணர்த்தும்.
🔽ஓசை அடுக்கி வருவது என்பதனால் #அடுக்கியல் எனவும் பெயர் பெறும்.
♦️சந்தவாய்பாடுகளைக் கொண்டு அமையும் பாடல்கள். இந்த வகைப் பாடல்களுக்குரிய சந்தவாய்ப்பாடுகள் பல சேர்ந்து துள்ளலாகவும் வரும்.
இந்த சந்த அமைப்புப் பாடல்களை
#வண்ணகம் - வண்ணப்பாக்கள் என்கிறார்கள் இசை இலக்கண ஆராய்ச்சியாளர்கள்*.
⚜️ #வண்ணகம் : சந்தத்துடன் தொடர்புடையது.
'எந்தக் கவியினும் சந்தக் கவி மேல்'
வல்லிசை, மெல்லிசை, நெடுஞ்சீர், குறுஞ்சீர், அமைப்பு வண்ணம், இயைபு வண்ணம் என்றல்லாம் வகைப்படுத்துகிறார்கள்; இசையிலக்கணவிலார்கள்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
🎶இந்த வகையில் சந்தப்பாடல்களுக்கு எடுத்துக்காட்டாக,
'பிறையணி படர்சடை முடியிடை
பெருகிய புலனுடை யவனிறை'
01.19.01
எனும் பாடலில்வரும் சந்தம் :
தனதன தனதன தனதன
தனதன தனதன தனதன
என்று வருகிறது.
💠இந்த வகையில் இன்னோரு பாடல்
மூன்றாம் திருமுறையில் பதிகம்: 326 தலம்: திருக்கைலாயம். பாடல் 1.
💠 (தயவு செய்து ஒரு முறையாவது திரு சம்பந்தம் குருக்கள் அய்யாவின் 'கயிலைப் பதிக'த்தில் வரும் இந்தப் பாடல்களைக் கேட்டு அவசியம் கேட்டு உணரவேண்டும்).
✳️பாடலில் 'ள' கரத்தை வைத்து அமைத்துள்ள திறன் சிந்திக்கத்தக்கது.
வாளவரி கோளபுலி கீளதுரி
தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில
கோளகளிறு ஆளிவரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ
மீளிமிளிர் தூளிவளர்பொன்
காளமுகில் மூளும் இருள் கீளவிரி
தாளகயி லாய மலையே.
🔸மூன்றாம் திருமுறை பாடல்: -726- (3.326.1).
🎶பொருள் :
சிவபெருமான் ஒளிபொருந்திய வரிகளையுடைய புலியின் தோலை உடுத்தவர். அது பாதத்தில் பொருந்த எக்காலத்திலும் ஆனந்தமாய் இருப்பவர். அடியவர்களை ஆட்கொள்பவர். எதிரிட்ட விலங்குகளைக் கிழிக்கும் கூரிய பற்களை யுடைய திரண்ட வடிவுடைய யானையை அடக்கியாண்டவர். சிறந்த வில்லினை ஏந்திய தோளர். கூளிகள் தாளமிட நடனம் புரிபவர். திருவெண்ணீற்றினை அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் கயிலாய மலையானது கரிய மேகங்களால் மூண்ட இருட்டை ஓட்டும் வெண்பொன்னாகிய ஒளியை விரிக்கும் அடிவாரம் உடையதாகும்.
🎶பொருள் விளக்கம்:
வாள - ஒளி பொருந்திய.
வரி - கீற்றுக்களையுடைய.
கோள - கொலைபுரிவதாகிய.
புலி - புலியை.
கீளது - கிழித்ததாகிய.
உரி - தோல் ( உடுப்பதால் )
தாளின் மிசை - ( அது ) பாதத்தில் பொருந்த.
நாளும் மகிழ்வர் - என்றும் மகிழ்வர்.
வேள் - கண்டவர் விரும்பும்.
அநகர் - தூயோர்.
ஆளுமவர் - ஆள்பவர்.
போள் - ( எதிரிட்ட விலங்குகளை ) கிழிக்கும்படியான.
அயில - கூரிய பற்களையுடைய.
கோள - திரண்டவடிவையுடையதான. களிறு - யானையை.
ஆளி - அடக்கியாண்டவர்.
வர வில் - சிறந்த வில்லைத் தாங்கிய.
தோள் - தோளையுடைய.
அமரர் - தேவராவர்.
மதர் - செருக்கிய.
கூளி - கூளிகள்.
தாளம் எழ - தாளத்தை எழுப்ப.
மீளி - ( நடனமாடும் ) வலியர்.
மிளிர் - பிரகாசிக்கின்ற.
தூளி - திருநீற்றைப் பூசியவர்.
காளமுகில் - கரிய மேகங்களாய்.
மூளும் - மூண்ட.
இருள் - இருட்டை.
கீள - ஓட்ட.
பொன் - வெண்பொன்னாகிய.
விரி - ஒளியை விரிக்கும்.
தாள - அடிவரையையுடைய கயிலாயமலை.
போழ் - போள் என எதுகை நோக்கி நின்றது.
♦️இந்தப் பாடலின் சந்த அமைப்புமுறையும் மிக அற்புதமானது.
தானதன தானதன தானதன
தானதன தானதன தானதனன.
🔶#வழிமொழிதிருவிராகம் இலக்கனமும் பொருந்தியிருக்கிறது.
🔸பல்வேறு பண், தாளம், இராகத்தில் சுமார் 40 பதிகங்களை திருவிராக அமைப்பில் அருளிச்செய்துள்ளார். இவை எல்லாம் திருஞானசம்பந்தர் அருளிய புதிய இசை வடிவம்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
#திருவிராகம் - இதன் இலக்கணம்:
⏺️வழியெதுகை பெறாது முடுகியல் மட்டும் பெற்ற திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகங்கள் திருவிராகம் எனப்படும்.
💠#திருவிராகப்பதிகங்களில் இசைத்தன்மையும் தாளச் சிறப்பும்
பெற்ற சில பாடல்களை மிகவும் சிறப்பானதாக இசை நூல் ஆராய்ச்சியாளர்கள்* குறிப்பிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
திருவிராக பதிகங்கள் :
முதலாம் திருமுறை :
பதிகங்கள் தலம்
பண் : நட்டப்பாடை
19 திருக்கழுமலம்
20 திருவிழிமிழலை
21 திருச்சிவபுரம்
22 திருமறைக்காடு
பண் : வியாழக்குறிச்சி
120 திருவையாறு
121 திருவிடைமருதூர்
122 திருவிடைமருதூர்
123 திருவலிவலம்
124 திருவிழிமிழலை
125 திருச்சிவபுரம்
இரண்டாம் திருமுறை:
பண் : இந்தளம்
165 திருப்புகலி
166 திருப்புரம்பயம்
167 திருக்கப்பறியலூர்
168 திருவையாறு
169 திருநள்ளாறு
170 திருப்பழுவூர்
பண்: நட்டராகம்
233 சீர்காழி
234 திருத்துருத்தி
235 திருக்கோவிலூர் வீரட்டானம்
236 திருஆரூர்
மூன்றாம் திருமுறை :
பண் : கௌசிகம்
310 திருஆலவாய்
311 திருவாணைக்காக்கா
பண் : சாதாரி
325 திருபிரம்மபுரம்*
(இது #வழிமொழிதிருவிராகம் எனப்படும்; இது பற்றி தனிப் பதிவில் விளக்கம் பெறலாம்)
326 திருக்கயிலாயம்
327 திருக்காளத்தி
328 திருமயிலாடுதுறை
329 திருவைக்காவூர்
330 திருமாறகல்
331 திருப்பட்டிஸ்வரம்
332 திருத்தேவூர்
333 திருசண்பைநகர்
334 திருவேதவனம்
335 திருமாணிக்குழி
336 திருவேதிக்குடி
337 திருக்கோகரணம்
338 திருவிழிமிழலை
339 திருத்தோணிபுரம்
340 அவளிவனல்லூர்
341 திருநள்ளாறு
342 திருப்புறவம்
343 திருவிழிமிழலை
344 திருச்சேறை
345 திருநள்ளாறு
346 திருவிளமர்
⏹️மேற்கண்ட பதிகங்கள் திருவிராகப் பதிகங்கள் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது. இவைகள் தமிழ் இசைப்பாடல்களுக்குப் பொக்கிஷமாகத் திகழ்கின்றன.
🔹தமிழ் மொழியில் - இது போன்ற அமைப்பில் - இவ்வகை சந்த இசை அமைப்பில் - பல்வேறு பண்களில் இசைப் பாடல்களை அமைத்து முதன் முதலாக ஏராளமான பதிகங்களை இயற்றியவர் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ஞானசம்பந்தரே.
✳️இதனால் இவரை இசைத்தமிழ் இறைவர் என்று போற்றுகிறார்கள்;
அவ்வழி நின்று நாமும் போற்றுவோம்.
🙏நன்றி.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு : ஒன்று
https://m.facebook.com/story.php?story_fbid=4163567850385107&id=100001957991710
No comments:
Post a Comment