திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#திருஎழுகூற்றிருக்கை
பதிவு : மூன்று
(திருமுறை: 01.128: வரிகள்10முதல்19 வரை வரிசை 4,5)
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
பக்தியும் தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்...
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
❇️ நாம் இந்த பதிவுகளில் #திருஎழுக்கூற்றிருக்கை என்ற அமைப்பில் உள்ள பாடல் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்
💠ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
🛡️ பாடல் அமைப்பு முறை, பொருள் விளக்கம், சிறப்பு பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
📝 #திருஎழுக்கூற்றிருக்கை:
🛑அமைப்பு :
திரு + எழு + கூற்று + இருக்கை
பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும் அடுக்கில்
முதல் 7 வரை படிப்படியாக
ஒன்று, இரண்டு, ஒன்று,
1 2 1
ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று
1 2 3 2 1
என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.
கூறுகளாக அறைகளைக் கீறும்போது...
முதற்கூற்றில் மூன்று அறைகளும்
1 2 1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
1 2 3 2 1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
1 2 3 4 3 2 1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
1 2 3 4 5 4 3 2 1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி,
1 2 3 4 5 6 5 4 3 2 1
ஆறாம் கூற்றிலும் ஏழாம் கூற்றிலும்
பதிமூன்று அறைகள் அமைப்பர்.
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
🎎இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும்
எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.
அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி
தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும்.
✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.
o
1 2 1
1 2 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
⏫மேலடுக்கு
நடு பீடம்
கீழடுக்கு ⏬
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1
1 2 3 4 5 6 5 4 3 2 1
1 2 3 4 5 4 3 2 1
1 2 3 4 3 2 1
1 2 3 2 1
1 2 1
o
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
☸️ திருஞானசம்பந்தர் அருளிய திருமுறையில் வரும் இந்த அமைப்பு பதிகப் பாடல் வரிகள் அமைந்துள்ள முறைமை பற்றியும், பாடல், பொருள், சிறப்பும் விளக்கமும் பற்றி ... ...
முதல் பதிவில்*
முதல் அடுக்கு வரிசையில் அமைந்துள்ள பாடல் வரிகள் 1 மற்றும் 2 பற்றியும்,
இரண்டாவது பதிவில்**
இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
பாடல்கள் வரிகள் 3 முதல் 5 வரை
மற்றும் வரிகள் 6 முதல் 9 வரையிலும்
பற்றியும் சிந்தித்தோம்.
📔இனி
✳️ இப்பதிகத்தில் அமைந்துள்ள பாடல் வரிகள் 10 முதல் 13 வரையுள்ள 4வது அடுக்கு வரிசையில் அமைந்த பாடல்கள்:
மற்றும்,
பாடல் வரிகள் 14 முதல் 19 வரை ஐந்தாவது மேலடுக்குவரிசையில் அமைந்துள்ள பாடல் வரிகளின்
அமைப்பு, பொருள், விளக்கம் பற்றியும் இந்தப் பதிவில் சிந்திப்போம்; வாருங்கள்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
4️⃣மேல் அடுக்கு: 4
(1-2-3-4-5-4-3-2-1)
☢️ பாடல்: (வரிகள் - 10 -13)
ஒருதாள் ஈர் அயில் மூ இலைச் சூலம்,
நால்கால் மான்மறி, ஐந்தலை அரவம்,
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இரு கோட்டு ஒருகரி ஈடுஅழித்து உரித்தனை.
💠பாடல் அமைப்பு :
1 2 3 4 5 4 3 2 1
(1) ஒருதாள்
(2) ஈரயின்
(3) மூவிலைச் சூலம்,
(4) நால்கால் மான்மறி
(5) ஐந்தலை அரவம் ஏந்திணை காய்ந்த
(4) நால்வாய்
(3) மும்மதத்து
(2) இரு கோட்டு
(1) ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை.
☣️ பொருள் :
✴️வரிசை 4: பாடல் வரிகள்: 10 - 13:
(1) திருவடி
ஒருதாள்= தாள் (தண்டு) இறைவனின் திருவடி தாமரையை சுட்டுகிறது.
(2) வாள், மழு போன்ற கூர்மையான இரும்பு ஆயுதம் ஏந்தியவர்.
ஈராயின் = ஈர்க்கும் கூர்மையுடையவை.
ஈர் அயில்= வாள், மழு (கோடரி போன்ற) அயில்(இரும்பினால் ஆனது.
(3) திரி சூலம் ஏந்தியவர்
மூ இலைச் சூலம்= திரி சூலம்
(4) நான்கு வேதங்களும் இறைவனின் கையில் இருக்கும் மானின் கால்களாக இருக்கின்றன.
நால்வாய்-தொங்குகின்ற வாய்.
நால்கால் மான்மறி= நான்கு வேதங்களும் இறைவனின் கையில் இருக்கும் மானின் கால்களாக இருக்கின்றன.
மறி= மான் குட்டி
(5) பஞ்சாட்சரமாகிய ஐந்து தலைகளையும் உடைய நாகத்தை இறைவன் கழுத்தில் ஏந்தி இருக்கிறார்.
ஐந்தலை அரவம் ஏந்தினை= ஐந்து தலைகளையும் உடைய நாகத்தை இறைவன் கழுத்தில் ஏந்தி இருக்கிறார். ஐந்து தலைகளும் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்தை சுட்டுகின்றன.
(4) நீர் வற்றித் தொங்கும் வாய் உடைய
(3) (மும்) மதம் பொருந்திய,
(2) இரு தந்தங்களையுடைய,
(1) ஒரு யானையை உரித்தது.
நால்வாய்-தொங்குகின்ற வாய்.
🔰பொருள் விளக்கம்:
✴️வரிசை 4: பாடல் வரிகள்: 10 - 13:
⏺️ஒரு தாளையும், ஈர்க்கும் கூர்மை கொண்ட மூன்று இலைகளை உடைய சூலத்தையும், நான்கு வேதங்களையும் கால்களாக உடைய மான் கன்றையும், ஐந்து தலை அரவமும் ஏந்தியவர்.
⏺️சினந்து வந்த, நீர் வற்றித் தொங்கும் வாயையும் இரு தந்தங்களையும் கொண்ட ஒப்பற்ற யானையை அதன் வலி குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப் போர்த்தவன்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
5️⃣மேல் அடுக்கு : 5
(1-2-3-4-5-6-5-4-3-2-1)
☢️ பாடல் : (வரிகள்: 14-19...)
ஒரு தனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்சக்
கொன்று தலத்துறு அவுணரை அறுத்தனை;
ஐம்புலன் நால்ஆம் அந்தக் கரணம்,
முக்குணம் இருவலி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ... ... .... .... ....
💠பாடல் அமைப்பு :
1-2-3-4-5-6-5-4-3-2-1
(1) ஒரு தனு
(2) இருகால் வளையவாங்கி,
(3) முப்புரத்தோடு
(4) நானிலம்
(5) அஞ்சக் கொன்று தலத்து உறு
அவுணரை
(6) அறுத்தனை
(5) ஐம்புலன்,
(4) நால் ஆம் அந்தக்கரணம்,
(3) முக்குணம்,
(2) இருவலி,
(1) ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை
☣️ பொருள் : (வரிகள்: 14-19...)
(1) மேருமலையை
(2) வில்லாகக் கொண்டு வளைய வாங்கி
(3) முப்புரங்களையும்
(4) உலகம்
(5) அஞ்சி வியக்குமாறு அழித்து
அதிலிருந்த தீய அசுரர்களை
(6) அழித்தவர்.
(5) மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய
ஐம்புலன்களையும்,
(4) அந்தக் கரணங்கள் நான்கும்,
(3) முக்குணங்களாகிய (சாத்துவிகம்,
ரஜோகுணம், தாமோ குணம் ஆகிய
முக்குணங்களும்,
(2) இருவகையான (உள்/வெளி மூச்சு)
காற்றும் ஒருங்கி
(1) ஒன்றிய மனத்தினராய், மேவிய
வானோர் ஏத்த நின்ற ஈசன்.
🔰பொருள் விளக்கம்:
✴️ பாடல் வரிகள்: 14-19...
⏺️மேருமலையை ஒப்பற்ற வில்லாக்கிக் கொண்டு வளையுமாறு செய்து உலகம் அஞ்சி வியக்குமாறு கணை தொடுத்து முப்புரத்தசுரர்களை இவ்வுலகம் அஞ்சுமாறு கொன்று தரையில் அவர்கள் இறந்து கிடக்குமாறு அழித்தவர்.
⏺️மெய், வாய்,கண், மூக்கு, செவியாகிய ஐம்புலன்களையும், நான்கு அந்தக் கரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் மற்றும்முக்குணங்களாகிய ரஜோ குணம், தாமோ குணம், ஆகியவற்றையும், மேலும், பிராணன், அபானன் என்றும் இரு வாயுக்களையும் ஒடுக்கியவர்களான, தேவர்கள் ஏத்த நின்றவன்.
☸️முதல் பாதி திரிபுரம் எரித்த வரலாற்றையும் (வெளிப்புறமாக), அடுத்தபாதி உட்புறமாக , எப்படி ஐம்புலன்களை அடக்கி, மனம் , புத்தி, ஒடுக்கி முதலியவற்றை மனதை கொண்டு ஒருநிலைப்படுத்திநம்மை வெற்றிகொள்ள வேண்டும் என்பதை சொல்கிறது இந்த அடிகள் .
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
💥இப்பதிக சிறப்பு:
⏺️சிவபெருமானின் பல்வேறு பராக்கிரமங்களையும் சிறப்புகளையும் மனம் ஒன்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்களையும் குறிப்பால் உணர்த்தி யருயது.
🔸சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர் ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக் கூறினார் என்பர்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
இது போன்று ஒவ்வொரு அடுக்கிலும் செந்தமிழ் பாக்களை அடுக்கி இந்த பாடல் அமைகிறது இப்பாடல்களின் அமைப்பு பொருள், விளக்கம், சிறப்புக்களை பதிவின் நீளம் கருதி தொடர்ந்துவரும் பதிவுகளில் சிந்திப்போம்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
சிந்தனையும் தொகுப்பு ஆக்கம்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
பதிவு ஒன்று : முதல் வரிசை: வரி 1, 2:
https://m.facebook.com/story.php?story_fbid=4051843124890914&id=100001957991710
பதிவு : 2, வரிசை 2,3 பாடல்வரி: 3 - 9:
https://m.facebook.com/story.php?story_fbid=4066646166743943&id=100001957991710
No comments:
Post a Comment