Tuesday, July 21, 2020

திருஎழுக்கூற்றிருக்கை பகுதி : இரண்டு

திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#திருஎழுகூற்றிருக்கை
பதிவு : இரண்டு. 
முதலாம் திருமுறை 
தேவாரம்:01 - 128- 
(பாடல்வரிகள் 3-5 மற்றும் 6-9)
வரிசை: 2 மற்றும் 3.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பக்தியும் தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்...
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
❇️  நாம் இந்த பதிவுகளில் #திருஎழுக்கூற்றிருக்கை என்ற அமைப்பில் உள்ள பாடல் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்

💠ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🛡️ பாடல் அமைப்பு முறை, பொருள் விளக்கம், சிறப்பு பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

📝 #திருஎழுக்கூற்றிருக்கை:

🛑அமைப்பு :

திரு + எழு + கூற்று + இருக்கை

பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும்  அடுக்கில்
முதல் 7 வரை படிப்படியாக     
           ஒன்று, இரண்டு, ஒன்று,  
                            1  2  1
ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று
                        1  2  3  2  1
என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்
                       1  2  1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
                   1  2  3  2  1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
                1  2  3  4  3  2  1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
            1  2  3  4  5  4  3  2  1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி, 
         1  2  3  4  5  6  5  4  3  2  1
ஆறாம் கூற்றிலும், ஏழாம் கூற்றிலும் பதிமூன்று அறைகள் அமைப்பர்.
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1

🎎இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும் 

எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. 

அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி
தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும்.

✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.
              
                        o
                    1  2  1 
                1  2  3  2  1
            1  2  3  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
             ⏫மேலடுக்கு
                    நடு பீடம்
                    கீழடுக்கு ⏬
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1 
    1  2  3  4  5  6  5  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
            1  2  3  4  3  2  1
                1  2  3  2  1
                    1  2  1 
                        o
          
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

📔இனி
☸️ திருஞானசம்பந்தர் அருளிய திருமுறையில் வரும் இந்த அமைப்பு பதிகப் பாடல் அமைந்துள்ள முறைமை பற்றியும், பாடல், பொருள், சிறப்பும் விளக்கமும் பற்றி  முதல் அடுக்கின் முதல் வரிசையில் உள்ள பாடல் வரிகள் 1,2 , விளக்கம் 
முதல் பதிவில்* பார்த்தோம். 

✳️ இதன் இரண்டாவது மற்றும் மூன்றாம் அடுக்கின் வரிசை அமைப்பை, மற்றும் பாடல் வரிகள் 3 முதல் 5 மற்றும் 6 முதல் 9 வரை பற்றித் தொடர்ந்து சிந்திக்கலாம்.
      🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

💠தேரின் மேல்பாகம்:

2️⃣மேல்  அடுக்கு : இரண்டு :
                        1  2  3  2  1
☢️ பாடல்: (வரிகள்: 3 - 5)

ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை;

💠பாடல் அமைப்பு : 
                         1  2  3  2  1
(1) ஒன்றிய

(2) இருசுடர் உம்பர்கள்,  பிறவும்
       படைத்து, அளித்து, அழிப்ப, 

(3)  மும்மூர்த்திகள் ஆயினை

(2) இருவரோடு

(1) ஒருவன் ஆகி நின்றனை;

☣️ பொருள்: (வரிகள்: 3 - 5)
(1)
ஐம்பூதங்களை அவற்றுக்குரிய செயல்பாடுகளை ஒழுங்காக செய்யுமாறு  செய்பவன் இறைவனே.

(2) இருசுடரான, சூரியன் சந்திரன், தேவர்கள்,  மற்ற உயிர்கள்
என்று அனைத்தையும் படைத்து, காத்து, அழிக்கும் முத்தொழிலும் செய்கிறார்.

🔸இருசுடர் = சூரியன் சந்திரன்
🔹உம்பர்கள்= தேவர்கள்
🔼பிறவும்= மற்ற உயிர்கள்

(3) மும்மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகள் ஆயினன்.

(2) பிரம்மா வும், திருமாலும் உடனாக்கியவன்.

(1) அதே நேரத்தில் ஒரே ரூபமாகவும் ஒப்பற்ற ஒருவனாய் ஆகிநின்றவன்.

🔰பொருள்விளக்கம்:
✴️பாடல் வரிகள்: 3 முதல் 5 வரை

விண்ணில் தொடங்கிப் பூவுலகம் வரையில் ஒன்றிக் கலந்த இரு சுடர்களாகிய சூரியன், சந்திரன் மற்றும் தேவர்கள் மக்கள் முதலியோரையும் படைத்துக் காத்து அழிக்க அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகள் ஆயினன்.
பிரமன் திருமால் ஆகிய இருவரையும் வலத்திலும் இடத்திலும் அடக்கி ஏக மூர்த்தியாக ஒப்பற்று நின்றவன்.
என்பர் அறிஞர்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

3️⃣மேல் அடுக்கு : 3
                    (1-2-3-4-3-2-1)

☢️ பாடல்: (வரிகள்:6 - 9)

ஓர் ஆல் நீழல், ஒண் கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றும் ஆகக் கோட்டினை;
இரு நதி அரவமோடு ஒருமதி சூடினை;

💠பாடல் அமைப்பு : 
                         1  2  3  4  3  2  1

(1) ஓரால் நீழல் ஒண்கழல்
(2) இரண்டும்
(3) முப்பொழுது ஏத்திய
(4) நால்வருக்கு ஒளிநெறி காட்டினை    
            நாட்ட
(3) மூன்றாகக் கோட்டினை
(2) இருநதி  அரவமொடு
(1) ஒரு மதி சூடினை

☣️ பொருள்: (பாடல் வரிகள்:6 - 9)

(1) இறைவன் ஆலமர நிழலில் வீற்று இருக்கிறார். திருக்கழல் - திருவடி

ஓர் + ஆல் + நிழல் = ஆலமரம் என்பதும் ஒரு குறியீடு தான். பரந்த நிழலைத்தருவது ஆலமரம். நமக்கு  நிழல் தரும் திருவடி அதுவே.

(2)இறைவனின் திருவடிகள் இரண்டையும் ஒன்றாக சொல்கிறார்.

(3) மூன்று வேளைகளிலும் தொழுத

(4) நான்கு சனகாதி முனிவர்களுக்கு, எல்லையில்லா பெருவாழ்வளித்தாய்.

(3) உயர்ந்த நெறியைச் சின்முத்திரை கொண்டு காட்டி, மும்மலங்களை அறுக்க,
உண்மைப் பொருளை உணர்த்துபவன்.

(இறைவனின் கண்கள்,எவ்வகை இருளையும் போக்குவதாய் ,  சூரியன், சந்திரன் மற்றும் நெருப்பாக இருக்கிறது.
⏺️நாட்டம் = கண்கள்   என்று பொருள் கூறுவர்)

(2) இரு நதி அரவமோடு கங்கையையும், பாம்பினையும் தலையில் வாய்த்திருக்கும் இறைவன், 

(1) தலையில் சந்திரனை சூடியவர்.

🔰பொருள்விளக்கம்: (பாடல் வரிகள்:6 - 9)

ஒப்பற்ற கல்லால மரநிழலில் உனது இரண்டு திருவடிகளை முப்பொழுதும் ஏத்திய சனகர், சனந்தனர் முதலிய நால்வர்க்கு உயர்ந்த ஒளி நெறியாகிய சின்முத்திரைக் காட்டி, உண்மைப் பொருளை உணர்த்தி மும்மலங்களை அறுத்து மேன்மை கொள்ளும் வகை காட்டினன். 
சூரியன் சந்திரன் அக்கினி ஆகியோரை மூன்று கண்களாகக் கொண்டு உலகை விழுங்கிய பேரிருளை ஓட்டினாய், கங்கையையும் பாம்பையும் பிறைமதியையும் முடிமிசைச் சூடினாய்.

- இது அறிஞர் குறிப்பு
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

💥இப்பதிகச் சிறப்பு:

💥இப்பதிக சிறப்பு:

⏺️சிவபெருமானின் பல்வேறு பராக்கிரமங்களையும் சிறப்புகளையும் மனம் ஒன்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்களையும் குறிப்பால் உணர்த்தி யருயது.

🔹இத்தலத்தின் பெருமையையும் கூறி, சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர் ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக் கூறினார் என்பர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

இது போன்று ஒவ்வொரு அடுக்கிலும் செந்தமிழ் பாக்களை அடுக்கி இந்த பாடல் அமைகிறது இப்பாடல்களின் அமைப்பு பொருள், விளக்கம், சிறப்புக்களை பதிவின் நீளம் கருதி தொடர்ந்துவரும் பதிவுகளில் சிந்திப்போம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
சிந்தனையும் தொகுப்பும்....
என்றும் அன்புடன்

சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
முதல் பதிவின் விளக்கம் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=4051843124890914&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...