Tuesday, July 21, 2020

திருஎழுக்கூற்றிருக்கை பகுதி : நான்கு

திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#திருஎழுகூற்றிருக்கை
பதிவு : நான்கு
முதலாம் திருமுறை: 01.128:
வரிசை 6 வரிகள் 19-31 மற்றும்
வரிசை 7 வரிகள் 32 - 42 வரை.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பக்தியும் தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்...
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
❇️  நாம் இந்த பதிவுகளில் #திருஎழுக்கூற்றிருக்கை என்ற அமைப்பில் உள்ள பாடல் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்

💠ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🛡️ பாடல் அமைப்பு முறை, பொருள் விளக்கம், சிறப்பு பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

📝 #திருஎழுக்கூற்றிருக்கை:

🛑அமைப்பு :

திரு + எழு + கூற்று + இருக்கை

பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும்  அடுக்கில்
முதல் 7 வரை படிப்படியாக     
           ஒன்று, இரண்டு, ஒன்று,  
                            1  2  1
ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று
                        1  2  3  2  1
என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்
                       1  2  1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
                   1  2  3  2  1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
                1  2  3  4  3  2  1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
            1  2  3  4  5  4  3  2  1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி, 
         1  2  3  4  5  6  5  4  3  2  1
ஆறாம் கூற்றிலும், ஏழாம் கூற்றிலும்
   பதிமூன்று அறைகள்  அமைப்பர்
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1

🎎இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும் 

எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. 

அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி
தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும்.

✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.
              
                        o
                    1  2  1 
                1  2  3  2  1
            1  2  3  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
             ⏫மேலடுக்கு
                    நடு பீடம்
                    கீழடுக்கு ⏬
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
            1  2  3  4  3  2  1
                1  2  3  2  1
                    1  2  1 
                        o
          
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

☸️ திருஞானசம்பந்தர் அருளிய திருமுறையில் வரும் இந்த அமைப்பு பதிகப் பாடல் வரிகள் அமைந்துள்ள முறைமை பற்றியும், பாடல், பொருள், சிறப்பும் விளக்கமும் பற்றி ... ...

முதல் பதிவில்*
முதல் அடுக்கு வரிசையில் அமைந்துள்ள பாடல் வரிகள் 1 மற்றும் 2 பற்றியும்,

இரண்டாவது பதிவில்**
இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
   பாடல்கள் வரிகள் 3 முதல் 5 வரை  
   மற்றும் வரிகள் 6 முதல் 9 வரையிலும்

மூன்றாவது பதிவில்,***
நான்காவது மற்றும் ஐந்தாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
    பாடல் வரிகள் 10 முதல் 13 வரை
    பாடல் வரிகள் 14 முதல் 19 வரை
பற்றியும் சிந்தித்தோம்.

📔இனி

✳️ இப்பதிகத்தில் அமைந்துள்ள பாடல் வரிகள் .. 19 முதல் 31வரையுள்ள 6வது அடுக்கு வரிசையில் அமைந்த பாடல்கள்:

அமைப்பு, பொருள், விளக்கம் பற்றியும் இந்தப் பதிவில் சிந்திப்போம்; வாருங்கள்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

6️⃣மேல் அடுக்கு : 6
             (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)

☢️ பாடல் : (வரிகள்: ...19- 31)

... ... ..... ....       ஒருங்கிய மனத்தோடு,
இரு பிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து,
நான்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆரங்கம்முதல்எழுத் தோதி,
வரன்முறை பயின்றுஎழு வான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை;
பொங்குநால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;
வரபுரம் என்றுஉணர் சிரபுரத்து உறைந்தனை;

💠பாடல் அமைப்பு : 
              1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1

(1) ஒருங்கிய மனத்தோடு 
(2) இரு பிறப்பு ஓர்ந்து
(3) முப்பொழுது குறை முடித்து
(4) நால்மறை ஓதி
(5) ஐவகை வேள்வி அமைத்து,
(6) ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி, வரல் 
            முறை பயின்று,
(7) எழுவான்தனை வளர்க்கும்
             பிரமபுரம் பேணினை
(6) அறுபதம் முரலும் வேணுபுரம்    
            விரும்பினை இகலிய
(5) அமைந்து உணர் புகலி அமர்ந்தனை
            பொங்கு 
(4) நால்கடல் சூழ் வெங்குரு விளங்கினை
(3) மூஉலகும் புதைய, மேல் மிதந்த
            தோணிபுரத்து உறைந்தனை
(2) இருநிதி வாய்ந்த பூந்தராய் 
            ஏய்ந்தனை
 (1) வரபுரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை

☣️ பொருள் :(வரிகள்: ...19- 31)

மேல் தட்டு 6: (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)

(1) மனதை ஒருநிலைப்படுத்தி ,

(2) அன்னையின் கருவில் ஒரு முறையும், பூணூல் அணியும்போது ஒரு முறையும் என அந்தணர்களுக்கு இப்பிறப்பு என்பதை சொல்கிறார் சம்பந்தர்.

 (3) மூன்று பொழுதும் முறையான கிரியைகளை செய்து (சந்தியா வந்தனம்)

(4) நான்கு வேதங்களாகிய
இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம் ஆகியவற்றை ஓதி,

(5) ஐவகை வேள்வியாகிய சிவபூசை, குருபூசை, மகேஸ்வர பூசை, பிராமண உபசரிப்பு, அதிதி உபசாரம், ஆகியன ஆற்றி,

(6)  ஷடங்கம் எனப்படும் வேதத்தின் ஆறு அங்கங்களாகிய  சந்தசு, கற்பம், வியாகரணம், சிட்சை, சோதிடம், நிருத்தி ஆகியவற்றின் பிரதானமான முதல் எழுத்தாகிய பிரணவத்தை ஓதியும்
எப்படி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்ற சொல்முறை பயின்று  

(7) அந்தனர்கள் வேள்வியில் வளர்க்கும் அக்கினி பிழம்பு எழும் சீர்காழி நகரில் விரும்பி இருப்பவர் இறைவன்.

(6) அறுபதம்(வண்டு) ரீங்காரமிடும் சீர்காழியை விரும்பினை  

(5) நரகர்கள் தன்னைக் கொடியவன் என்று இகழும் பழி நீங்க யமன் வழிபட்ட சீர்காழி நகரில் அமர்ந்தவர்.

(4) பொங்கும் நால்கடல் சூழ் வெங்குரு நகரில் விளங்கும்

(3) மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை-

(2) இருநிதி வாய்ந்தந்தராய் ஏய்ந்தனை-சங்கநிதி,பதுமதி என்ற இருநிதிகளோடு பொருந்தியவராக இறைவன் இருக்கிறார்

 (1) அமுதம் பெற வந்த ஒரு அரக்கனின் சிரம் கொய்யப்பட்டு பின் வரம்பெற்ற சிரபுரம் சீர்காழியாம்.

🔘பொருள் விளக்கம்::(வரிகள்: ...19- 31)

வரிசை - 6

ஒருமித்த மனத்தோடு, இரு பிறப்பினையும் உணர்ந்து முச்சந்திகளிலும் செய்யத்தக்க கடன்களை ஆற்றி நான்மறைகளை ஓதி ஐவகை வேள்விகளையும் செய்து ஆறு அங்கங்களையும் ஓதி, பிரணவத்தை உச்சரித்து தேவர்களுக்கு அவி கொடுத்து மழை பெய்விக்கும் அந்தணர் வாழும் பிரமபுரத்தை விரும்பினாய்,

ஆறுகால்களை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பினாய்,

தேவர்கள் புகலிடம் என்று கருதி வாழ்ந்த புகலியை விரும்பினாய். 

நீர் மிகுந்த கடல் சூழ்ந்த வெங்குரு என்னும் தலத்தை விரும்பினாய்.

மூவுலகும் நீரில் அழுந்தவும் தான் அழுந்தாது மிதந்த தோணிபுரத்தில் தங்கினாய்.

வழங்கக் குறையாத செல்வவளம் மிக்க பூந்தராயில் எழுந்தருளினாய்.

வரந்தருவதான சிரபுரத்தில் உறைந்தாய்.

🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

♦️மேலும் இவ்விடத்தில்
மிகப் பழைய உரை ஆசிரியர்கள்  உரைகளின் சிறப்புகளையும் சுருக்கமாக சிந்திப்போம்.
🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘
🛐குறிப்புரையும், விளக்கமும்: (மிகப் பழமையான நூல்களில் உள்ள விளக்கம்)

பாடல்வரிகள்: 19-31

ஒருங்கிய மனத்தோடு இருபிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறைமுடித்து நான்மறை ஓதி ஐவகை வேள்வியமைத்து ஆறங்க முதலெழுத்தோதி வரன்முறை பயின்றெழுவான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை - என்றது, 

ஒருங்கிய மனம்: ஆகாரம் - நித்திரை - பயம் - மைதுனம் இவற்றில் செல்லும் மனத்தைப் இறைவன் பாதங்களிலே ஒருங்கி.

இரு பிறப்பு: முன்பு தாம் மாதாவின் உதரத்திலே பிறந்த பிறப்பும், உபநயனத்தின் பின்பு உண்டான பிறப்புமாகிய இரண்டையும் விசாரித்து

முப்பொழுதும்: மூன்று சந்தியும், செபதர்ப்பண - அனுட்டான - ஓமங்களையுமுடிப்பது

நான் மறை: இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்கின்ற நாலு வேதங்களையும் ஓதி,

5 வகை வேள்வி : சிவபூசை, குருபூசை, மகேசுரபூசை, பிராமண போசனம், அதிதி புசிப்பு என்கின்ற ஐந்து வேள்விகள்.

 6 அங்கங்கள்: ஓதல் - ஓதுவித்தல் - வேட்டல். வேட்பித்தல் - ஈதல் - ஏற்றல் என்னும் ஆறங்கங்கள்.

பிரம்மபுரம் :இவைகளுக்கு முதலாயிருந்துள்ள பிரணவத்தையும் உச்சரித்துத் தேவலோகத்திலுள்ள தேவர்களுக்கும் அவிகொடுத்து மழையைப் பெய்விக்கும் பிராமணராலே பூசிக்கப்பட்ட பிரமபுரம்.

ஆறங்கமாவன மந்திரம் - வியாகரணம் - நிகண்டு - சந்தோபிசிதம் - நிருத்தம் - சோதிடம் என இவ்வாறு வழங்கப்படு கின்ற முறையொன்று.

🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

♦️மேலும் இவ்விடத்தில் சீர்காழி பதியின் பல பெயர்களும் சிறப்புகளும் எடுத்துரைக்கிறார்கள் மிகப் பழைய உரை ஆசிரியர்கள் அவற்றின் சுருக்கம் :

📝சீர்காழிப்பதியின் பல பெயர்களும் அதன் தலப்பெருமைகளும்:
🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

🔘தலப் பெருமை:
❄️வேணுபுரம்:

⏺️அறுகாலுடைய வண்டுகளிசைபாடும் பொழில்சூழ்ந்த வேணுபுரம் என்பது,இந்திரன் இறைவனை வேண்டியதால்,  கணபதி அழைத்து, கஜமுகாசுரனை தன் வலக்கொம்பை முறித்தெறிந்து அவனையுங்கொன்று வேணு என்கின்ற இந்திரனையும் சுவர்க்கலோகத்திலே குடிபுக வைத்தது.

🔘தலப் பெருமை:
☸️புகலி :

🔹தேவர்கள் முன்பு சூரபத்மனால் துன்புறுத்தப்பட ஈசனை புகலிடமென்று புகுதலால், ஈசன் சுப்ரமணியரை அழைத்து அரக்கனை வெற்றி கொண்டு தேவர்களை புகலியில் அமர வைத்ததனால்  திருப்புகலி என்றும் பெயர்.

🔘தலப் பெருமை:
🔯வெங்குரு:

🔼பொங்கு நாற்கடல் சூழ்ந்த வெங்குரு நகரில் தேவகுருவாகிய பிரகஸ்பதியின் கர்வத்தை அடக்கி பின் அவர் தவம் செய்து வரம் பெற்ற இடம் என்பதால் வெங்குரு என்றும் பெயர் பெற்றது.

🔘தலப் பெருமை:
✡️தோணிபுரம் :

🔽பாணி என்கின்ற சலம் பிரளயமாய்ப் பூமி அந்தரம் சுவர்க்கம் மூன்று லோகங்களையும் புதைப்ப அதைச்சங்காரம் பண்ணியருளி அதின்மேலே தோணிபோல மிதந்த வெங்குருவாகிய தோணிபுரம் என்றதே

🔘தலப் பெருமை:
⚛️பூந்தராய் :

⏺️வேண்டினார் வேண்டியது கொடுத்துத் தொலைவறச் சங்கநிதி பத்மநிதி என்று சொல்லப்பட்ட இரண்டு நிதிகளும் பூவும் தராயும் பூசிக்கையாலே திருப்பூந்தராயென்னப்பட்ட சீர்காழி தலம்.

🔘தலப் பெருமை:
☮️வரபுரம் :

🔸வேண்டும் வரத்தைத் தருவதான புரமென்றுணரத்தக்க சிரபுரமென்பதால்
இப்பதிக்கு வரபுரம் என்று பெயர்.

🔘தலப் பெருமை:
✳️சிரபுரம் :

🔹தேவர்களும் பிர்ம விஷ்ணுக்களுமாகக்கூடி அமிர்தத்தையுண்டாக்கித் தேவர்களை இருத்தி விஷ்ணுபகவான் அமிர்தம் படைத்துக்கொண்டு வருகிற வேளையில் ராகு கேது என்கிற இரண்டு பாம்புங்கூடிக் கரந்திருந்து அமிர்தபானம் பண்ணுவதாக இருப்பதுகண்டு விஷ்ணு பகவான் அமிர்தம் படைத்துவருகின்ற சட்டுவத்தைக் கொண்டு தலையற வெட்டுகையால் உடலிழந்து நாகமிரண்டும் நம்முடல் தரக்கடவான் பரமேசுவரனொழிய வேறேயில்லை என்று திருப்பூந்தராயிலே வந்து பரமேசுவரனை நோக்கி இரண்டு சிரங்களும் பூசித்ததால் சிரபுரம் என்று பெயருண்டாயது.
  
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

💥இப்பதிக சிறப்பு:

⏺️சிவபெருமானின் பல்வேறு பராக்கிரமங்களையும் சிறப்புகளையும் மனம் ஒன்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்களையும் குறிப்பால் உணர்த்தி யருயது.

🔹இத்தலத்தின் பெருமையையும், பல்வேறு சிறப்புகளையும் தல புராணங்களை உணர்த்தி எடுத்துக் கூறியது.

🔸சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர் ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக் கூறினார் என்பர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

இது போன்று ஒவ்வொரு அடுக்கிலும் செந்தமிழ் பாக்களை அடுக்கி இந்த பாடல் அமைகிறது இப்பாடல்களின் அமைப்பு பொருள், விளக்கம், சிறப்புக்களை பதிவின் நீளம் கருதி தொடர்ந்துவரும் பதிவுகளில் சிந்திப்போம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
சிந்தனையும் தொகுப்பு ஆக்கம்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பதிவு ஒன்று : முதல் வரிசை: வரி 1, 2:
https://m.facebook.com/story.php?story_fbid=4051843124890914&id=100001957991710
பதிவு : 2, வரிசை 2,3 பாடல்வரி: 3 - 9:
https://m.facebook.com/story.php?story_fbid=4066646166743943&id=100001957991710
பதிவு : 3 ல் வரிசை 4, 5 பாடல் வரிகள்:
    பாடல் வரிகள் 10 முதல் 13 வரை
    பாடல் வரிகள் 14 முதல் 19 வரை
https://m.facebook.com/story.php?story_fbid=4084714111603815&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...