#திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :
பதிவு : ஐந்து (பாடல்:9, 10)
ஏகபாதம் :
ஒரே அடியில் உள்ள சொற்கள் நான்கு அடிகளிலும் வரும்போது பொருள் வேறு, வேறு பெற்று விளங்குவதுதான் திருஏகபாதம்.
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏
தமிழ் ஞானசம்பந்தரின் பதிகங்களில் ஏகபாதம் என்னும் மிகச்சிறந்த இந்த
வகை யாப்பு அமைந்த பதிக பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம் வாருங்கள்.
இன்றைய சிந்தனை
பாடல்கள்: 9, 10 பற்றியது.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿
பாடல் 1378 - சண்பை
சண்பை என்னும் கோரைப் புல்லால்
மடிந்த தமது குலத்தினரால் தனக்கு நேர்ந்த பழியானது பற்றாதவாறு கண்ணபிரான் (திருமால்) வழிபட்டதால்
சீர்காழி தலத்திற்கு சண்பை என்ற பெயர்
ஏற்பட்டது.
🙏🙇♀️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏽♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇♀️🙏🏾🙇🏾♂️🙏🏿
முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 9.
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
🙏🙇♀️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏽♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇♀️🙏🏾🙇🏾♂️🙏🏿
பொருள் :
1. சண்பை என்னும் கோரையால் விளைந்த சாபம் தீருமாறு, திருமால் (கண்ணபிரான்) வழிபட்ட சண்பை நகரில் விளங்கும் பெருமான், மலை எடுத்த தச முகனாகிய இராவணன் முடிகள் நெரியுமாறு, கயிலை மலையைத் திருப்பாதவிரலால் ஊன்றி அருள் புரிந்தவன்.
2. மன்னுயிர்களின் 10 வகையான குற்றங்களை நீக்கும் முகத்தால் ஞானம் அருள வல்லவன்.
3.பல விதமான கொடுமைகளைப் புரிந்த அசுரர்களின் கோட்டை மதில்களை எரித்தவன்.
4.நறுமணம் பொருந்தி விளங்கும் அப்பிரமனை உகந்து தொழுமின்.
தசமுகன் - இராவணன்
தசம் முகன் நெறி
தச முகன் எரித்தான்
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏
மிக மிகப் பழைய உரை மூலம்:
தத்துவப் பொருள் குறிப்பு சுருக்கம்.
பத்துத்தலையுள்ள இராவணன் முரியும்படி திருவிரலால் அடர்த்தவன் யாரென்னில்,
சண்பை என்னும் திருப்பதியிலே வீற்றிருக்கும் கடவுள்.
ஆத்துமாக்களிடத்துக் கருணைபிறக்கும் இடமாயுள்ளவன்.
அக்கினி வீசப்பட்டுத் திருவரையிலே அழுந்தச் சாத்தியுள்ள விரிந்த படத்தினையுடைய பாம்பை அரைஞாணாகவுடையான்.
எல்லாம் இறந்து அந்தமாயுள்ள சிவஞானிகள் குழாத்துக்கு நேரிதாகிய சூனியமாயுள்ள பொருளைத் தோற்றுவித்துள்ளானுமாய்ப்
புலியினது ஊன்பொருந்திய தோலாடையைத் திருவரையிலே விரித்துடுத்தவன்.
நேரி எனற்பாலது நெரி எனக் குறுகிநின்றது.
தரக்கு எனற்பாலது தர எனக் குறைந்தது.
தூசு எனற்பாலது துசு எனக் குறுகிநின்றது.
பாயான் எனற்பாலது
பையானெனக்குறுகிப் போலியாயிற்று.
ஆத்தும விகாரமான அகங்காரம் போம்படி என்னறிவில் எதிர்ப்பட்டவன் கயிலாயமலையைத் திருவுள்ளத்தடைத்து எழுந்தருளியிருந்து ஆத்துமாக்களை இரட்சையாக நின்ற விசேஷத்தை உடையவன் என்றே ஏத்தும் சட்சமயங்களுக்கும் அவரவர் கொண்ட பயனா யுள்ளவன்.
நேரி எனற்பாலது நெரி எனக் குறுகிநின்றது.
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏🙇🏻♂️🙏🏼
பாடல். 1379
சீர்காழியின் மற்றெரு பெயர் காளிபுரம்
காளி வழிபட்டதால் ஸ்ரீ காளி - சீகாழி எனப் பெயர் பெற்றது.
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏🙇🏻♂️🙏🏼.
முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 10.
காழி யானயன் உள்ளவா காண்பரே
காழி யானயன் உள்ளவா காண்பரே
காழி யானயன் உள்ளவா காண்பரே
காழி யானயன் உள்ளவா காண்பரே
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏🙇🏻♂️🙏🏼
பொருள் :
1. காளிதேவி வழிபடப் பேறு நல்கிய காழியில் விளங்கும் பெருமான், பிரமனால் பூசிக்கப் பெற்றவன்.
2. அன்பின் வயத்தால் வணங்குபவர்களுக்குக் காட்சி நல்குபவன்.
3. ஊழிக்காலத்திலும் அழியாது விளங்கும் காழியில் நிலை கொள்ளும் பெருமான்.
அவன் தன்னைப் பற்றும் மெய்த் தொண்டர்களுக்கு உறுதியான பற்றாய் விளங்கி, உள்ளத்தில் பதிந்து இனிய காட்சி நல்குபவன்.
4. நினையாதவர்களுக்கு அயலாய் நிற்பவன். அவன் பெருமையை, உள்ளவாறு யாராலும் அறிந்து ஓதுதற்கு அரியவன்.
அவனைத் தொழுதிடுவீர்.
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏🙇🏻♂️🙏🏼
பழைய தத்துவ விளக்க உரை சுருக்கம்:
நிலைபெற்றுநின்ற நின்மலமாகிய சித்தத்தையுடைய பத்தரிடத்துச்
சத்தியப்பொருள் விளையும்பொருட்டு ஞானநாட்டத்திலே அவர்களைக் கடாக்ஷிக்கின்றவன்.
திருமிடற்றில் களங்கமுடையானது கருணையை நினைத்து ஞானநாட்டத்தையுடைய சிவஞானிகள்
சிவனுக்கிச்சை தன்னடியார்க்கே ஆங்காரத்தைத் தடுக்குமதே பணியெனத்தமதறிவிலே
கருதாநிற்பர்.
விஷ்ணுவும் பிர்மாவும், திருமுடியும் திருவடியும் காணும் பொருட்டு வராகமும் அன்னமுமாகக் கருதி வடிவுகொண்டார்.
ஐயோ! உள்ளபடி கருதிச் சிவனைப் பெறாமல் அவர் கருதியதேது எனில், அன்னியமே கண்டனர்.
கண் எனற்பாலது காண் என நீண்டது.
என் பொருட்டால் காழி என்னும் திருப்பதியைப் படைத்தானை,
என் ஐயனை, எனது ஆசையை, கீழ்ச் சொன்ன இருவர்களும்
தாங்கள் தேடும் தேட்டப் பிரிவில் மயக்கத்திலே தேட்டமழித்துத் தோன்றா நிற்பவனைத் தேடி மறத்தலொழிந்து எவ்வாறு காண்பர்.
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம்.
வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇🛐என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇🛐
முதல் பாடல் முதல் பதிவில் காணலாம்:
https://m.facebook.com/story.php?story_fbid=3964605860281308&id=100001957991710
பதிவு : 2
பாடல் 2,3 மற்றும் 4 விளக்கத்திற்கு :
https://m.facebook.com/story.php?story_fbid=3971000689641825&id=100001957991710
பதிவு: 3
பாடல் 5 மற்றும் 6 விளக்கத்திற்கு :
https://m.facebook.com/story.php?story_fbid=3976198605788700&id=100001957991710
பதிவு.. 4.
பாடல் 7 மற்றும் 8 விளக்கத்திற்கு :
https://m.facebook.com/story.php?story_fbid=3979457082129519&id=100001957991710
No comments:
Post a Comment