Tuesday, July 21, 2020

திருஎழுக்கூற்றிருக்கை பதிவு : ஐந்து

திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#திருஎழுகூற்றிருக்கை
பதிவு : ஐந்து.
முதலாம் திருமுறை: 01.128:
வரிசை 7 வரிகள் 32 - 42 வரை.
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பக்தியும் தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்...
   🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
❇️  நாம் இந்த பதிவுகளில் #திருஎழுக்கூற்றிருக்கை என்ற அமைப்பில் உள்ள பாடல் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்

💠ஒப்பற்ற பக்தி இலக்கியங்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளில் திருக்கடைக்காப்பு என்னும் முதலாம் தேவாரத்தில்,
128 வது பதிகமாக உள்ளது.
திருப்பிரமபுரம் என்றும் சீர்காழி தலம் பற்றியது.
1382 வது பாடலாகும்.
47 அடிகளால் ஆன இதனைத்தினமும் பாராயணம் செய்து ஓதினால் திருஞானசம்பந்தர் அருளிய அனைத்தையும் ஓதிய பலனைத் தருவதாகும்.
 🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
🛡️ பாடல் அமைப்பு முறை, பொருள் விளக்கம், சிறப்பு பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

📝 #திருஎழுக்கூற்றிருக்கை:

🛑அமைப்பு :

திரு + எழு + கூற்று + இருக்கை

பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும்  அடுக்கில்
முதல் 7 வரை படிப்படியாக     
           ஒன்று, இரண்டு, ஒன்று,  
                            1  2  1
ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று
                        1  2  3  2  1
என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்
                       1  2  1
இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்
                   1  2  3  2  1
மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்
                1  2  3  4  3  2  1
நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்
            1  2  3  4  5  4  3  2  1
ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி, 
         1  2  3  4  5  6  5  4  3  2  1
ஆறாம் கூற்றிலும், ஏழாம் கூற்றிலும்
   பதிமூன்று அறைகள்  அமைப்பர்
     1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1

🎎இவற்றை சித்திரக்கவி, ரதபந்தம் என்பர்.இது தேர் போன்ற அமைப்பும் 

எண்களைக் கூட்டி பின் ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி, மேலே வந்து அடுத்த எண்ணைக் கூட்டிச் செல்லும். என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. 

அதன் பின் ஒரு இடைத் தட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி
தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும்.

✴️முடிவில் பாடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும்.
              
                        o
                    1  2  1 
                1  2  3  2  1
            1  2  3  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
             ⏫மேலடுக்கு
                    நடு பீடம்
                    கீழடுக்கு ⏬
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
1  2  3  4  5  6  7  6  5  4  3  2  1
    1  2  3  4  5  6  5  4  3  2  1
        1  2  3  4  5  4  3  2  1
            1  2  3  4  3  2  1
                1  2  3  2  1
                    1  2  1 
                        o
          
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

☸️ திருஞானசம்பந்தர் அருளிய திருமுறையில் வரும் இந்த அமைப்பு பதிகப் பாடல் வரிகள் அமைந்துள்ள முறைமை பற்றியும், பாடல், பொருள், சிறப்பும் விளக்கமும் பற்றி ... ...

முதல் பதிவில்*
முதல் அடுக்கு வரிசையில் அமைந்துள்ள பாடல் வரிகள் 1 மற்றும் 2 பற்றியும்,

இரண்டாவது பதிவில்**
இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
   பாடல்கள் வரிகள் 3 முதல் 5 வரை  
   மற்றும் வரிகள் 6 முதல் 9 வரையிலும்

மூன்றாவது பதிவில்,***
நான்காவது மற்றும் ஐந்தாவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
    பாடல் வரிகள் 10 முதல் 13 வரை
    பாடல் வரிகள் 14 முதல் 19 வரை

நான்காவது பதிவில்****
ஆறவது அடுக்கு வரிசையில் அமைந்துள்ள
     பாடல் வரிகள் 19 முதல் 31வரை

பற்றியும் சிந்தித்தோம்.
  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

📔இனி

✳️ இப்பதிகத்தில் அமைந்துள்ள
பாடல் வரிகள்  32  முதல் 42 வரை ஏழாவது மேலடுக்குவரிசையில் அமைந்துள்ள பாடல் வரிகளின் 

அமைப்பு, பொருள், விளக்கம் பற்றியும் இந்தப் பதிவில் சிந்திப்போம்; வாருங்கள்.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

 7️⃣ அடுக்கு : 7
              (1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1)

☢️ பாடல்: (வரிகள் - 32-42)

ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன், அறியாப்
பண்பொடு நின்றனை; சண்பை அமர்ந்தனை;

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ் இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறை முதல் நான்கும்,
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்.

💠பாடல் அமைப்பு :
          1-2-3-4-5-6-7-6-5-4-3-2-1

(1) ஒருமலை எடுத்த

(2) இருதிறல் அரக்கன் விறல் கெடுத்து 
          அருளினை புறவம் புரிந்தனை

(3)  முந்நீர்த் துயின்றோன்

(4) நான்முகன் அறியாப்பண்பொடு 
           நின்றனை சண்பை அமர்ந்தனை

(5) ஐயுறும் அமணரும்

(6) அறுவகைத் தேரரும் ஊழியும்     
          உணராக் காழி அமர்ந்தனை எச்சன்

(7)  ஏழ் இசையோன் கொச்சையை 
            மெச்சினை
(6) ஆறுபதமும்

(5) ஐந்து அமர் கல்வியும் மறைமுதல்

(4) நான்கும்

(3) மூன்று காலமும்தோன்ற நின்றனை

(2) இருமையின் ஒருமையும்

(1) ஒருமையின் பெருமையும்

☣️ பொருள்: (வரிகள் - 32-42)

(1) இராவணன் இமய மலையை எடுத்தான்

 (2) வலிமை-பெருவலிமையுடைய அரக்கன் வெற்றியைக் கெடுத்து, நான் என்ற ஆணவத்தை அழித்து அருளினார்.
சிபி ராஜாவுக்கும், புறவுக்கும் முக்தி கிடைத்த புறவம் ஆகிய சீர்காழியில் இருப்பவர்.

(3) பாற்கடலில் உறங்கும் விஷ்ணு ,
(முந்நீர்த் துயின்றோன்- முந்நீர்(கடல்)
பாற்கடலில் உறங்கும் விஷ்ணு)பிரம்மன்
இவர்கள் அறியமுடியாத ஆற்றலைப் போற்றுகிறது.

(4) நான்கு மறைகளிலும் தோய்ந்தவன்.

(5) ஐந்து எழுத்தாகும் ஞானத்திலும் சிறப்பானவன்.

(6) சமணரும் தேரரும் உணராதவராய் காழியில் வீற்றிருப்பார்.

(7) ஏழ் இசையோன் கொச்சை என்ற காழியில் இருப்பாவர்.

(6) ஆறுபதமும்- ஆறு விதமான விழிப்புநிலைகளை இது குறிக்கிறது. ஆழ்ந்த உறக்கம், துரியம்,துரியாதீதம் முதலியன.

(5) ஐந்து அமர் கல்வியும்- அவர் காலத்தில் ஐந்து வகையான கல்வி ஞானத்தில் விளங்கியவர்.

(4) நான்கு மறைகளையும் அருளியவர்.

(3)கடந்த/நிகழ்எ/திர் காலம் என்ற முக்காலத்தையும் தோன்ற வைத்து நின்றவர்.

(2) இறைவன் வேறு, நாம் வேறு என்பது ஒரு கொள்கை.அனைத்தும் ப்ரஹ்மம் என்பது அத்வைதக்கொள்கை. 

(1) எல்லாமாக, எல்லா உயிர்களுமாக பிரபஞ்சமாக நீக்கமற நிறைந்த ஒருமை இறைவனின் பெருமையும்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

♦️மேலும் இவ்விடத்தில்
மிகப் பழைய உரை ஆசிரியர்கள்  உரைகளின் சிறப்புகளையும் சுருக்கமாக சிந்திப்போம்.
🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘
🛐குறிப்புரையும், விளக்கமும்: (மிகப் பழமையான நூல்களில் உள்ள விளக்கம்)

வரிசை - 7: வரிகள்: 32 - 42

ஒப்பற்ற கயிலை மலையைப் பெயர்த்த பெருந்திறல் படைத்த இராவணனின் வலிமையை அழித்தாய்.
புறவம் என்னும் தலத்தை விரும்பினாய்,
கடலிடைத் துயிலும் திருமால் நான்முகன் ஆகியோர் அறிய முடியாத பண்பினை உடையாய்.
சண்பையை விரும்பினாய்.
ஐயுறும் சமணரும் அறுவகையான பிரிவுகளை உடையபுத்தரும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்கக் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளாய்.
வேள்வி செய்வோனாகிய ஏழிசையோன் வழிபட்ட கொச்சை வயத்தை விரும்பி வாழ்கின்றாய்,
ஆறு பதங்கள், ஐந்து வகைக் கல்வி, நால் வேதம், மூன்று, காலம், ஆகியன தோன்ற நிற்கும் மூர்த்தியாயினாய்,
சத்தி சிவம் ஆகிய இரண்டும் ஓருருவமாய் விளங்கும் தன்மையையும் இவ்விரண்டு நிலையில் சிவமாய் ஒன்றாய் இலங்கும் தன்மையையும்,
பெருமையுடையது.

🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘
பழைய உரை ஆசிரியர்கள் தந்த குறிப்புரை என்ற விளக்க உரைகளின் சுருக்கம். 
🎆🔅🔆✳️❇️💠🔷🔹⚛️✡️🔯☸️☮️♦️🔘

வரிசை - 7: வரிகள்: 32 - 42

பாடல் வரி: 32

பெருமையுள்ள கயிலாயம் என்னும் பேரையுடைத்தாய் உனக்கே ஆலயமாயிருப்பதொரு வெள்ளிமலையை எடுத்த பெரிய புசபலங்கொண்ட இராவணனுடைய கர்வத்தைக் கெடுத்தருளினை.

பாடல் வரி: 33

🔘தலப் பெருமை:

புறவும்:

பிர்மரிஷி, கௌதமரிஷியை நோக்கி நீ ஸ்திரீபோகத்தைக்கைவிடாமல் இருக்கின்றவன்  என்று அவமதிக்க,   கவுதமரிஷியும் பிரசாபதி பகவானைப் பார்த்து நீ புறா என்னும் ஒரு பக்ஷியாய் நரமாமிசம் புசிப்பாயாக என்று சபித்தார்.
பிரசாபதியும் ஒரு புறாவாய்ப் போய்ப் பலவிடத்தினும் நரமாமிசம் புசிக்கையிலே;    ஒரு நாள் மாமிசந்தேடிச் சோழவம்சத்திலே சிபி என்னும் சக்கரவர்த்தி பெரும் கொடையாளி என தெரிந்து  இந்தப் புறாவாகிய ரிஷியும் போய் ராசாவைப்பார்த்து எனக்கு அதிக தாகமாயிருக்கின்றது சற்று நரமாமிசம் இடவல்லையோ என்ன ராசாவும் உனக்கு எவ்வளவு மாமிசம் வேண்டும் எனப் புறாவும், உன்சரீரத்திலே ஒன்று பாதி தரவேண்டும் என்று கேட்க,  ராசாவும் தன் உடலின்  பாதியை அரிந்தி தந்திட அது புறாவுக்கு நிறையப் போதாமல், முழு உடலையும் தர முன்வந்தார் ராஜா.
இதனால் புறாவாகிய மகரிஷி 
பரமேசுவரனை வேண்டி சீர்காழி தலம் வந்து தவம் செய்தார். ஈசனும் தன் சரீரத்தைப் புறாவிற்காக தானம் செய்யவந்த சிபிச்சக்கரவர்த்திக்கு உடலும், அருளும் தந்து,  புறாவின் சாபத்தையும் நீக்கி வரம் தந்தருளியது.
இதனால் இப்பதிக்கு புறவம் என்ற பெயர்.

பாடல் வரி: 34

ஆற்றுநீர் வேற்றுநீர் ஊற்றுநீர் என்று சொல்லப்பட்ட முந்நீராகிய சமுத்திரத்திலே துயிலாநின்ற நாராயணனும் நான்முகத்தினையுடைய பிர்மாவும் அடியும் முடியும் தேடற்கு அரிதாய் நின்ற பண்பினையுடையையாய் எழுந்தருளியிருந்த இறைவன்.

பாடல் வரி: 35

🔘தலப் பெருமை:

சண்பை:

துர்வாச மகரிஷி ஆசிரமத்தில், கிருஷ்ண அவதார காலத்தில், யாதவ சிறுவர்கள் ரிஷியை கேலி செய்ய எண்ணி 
 ஒருவனைக் கர்ப்பிணியாகப் பாவித்துச்சென்று அவள் பெறுவது ஆணோ பெண்ணோ என்று அந்த ரிஷியைக் கேட்க அவர் கோபித்து இவள் பெறுவது ஆணுமல்ல பெண்ணுமல்ல உங்கள் வமிசத்தாரைக் கொல்ல, ஒரு இருப்புலக்கை பிறக்கக்கடவதென்று சபித்து விடுகிறார்.  இதன்படி பிறந்த இருப்புலக்கையை கிருஷ்ணர் பொடியாக்கி சமுத்திரத்தில் கலந்துவிட செய்துவிடுகிறார்.  சமுத்திரத்தில் உள்ள 
ஒரு வேப்பம் விதைப் பிரமாணமுள்ள இரும்பை ஒரு மீன் விழுங்கி ஒரு வலைக்காரன் கையிலே அகப்பட்டது.

அதன் வயிற்றில் கிடந்த இரும்பைத் தன் அம்புத் தலையிலே வைத்தான். மற்றுஞ் சமுத்திரத்திற்போட்ட இரும்புப் பொடிகளெல்லாம் அலையுடனே வந்து கரைசேர்ந்து சண்பையாக முளைத்துக் கதிராய் நின்ற இடத்தில்;
யாதவர்கள் விளையாடி வருவோமென்று இரண்டு வகையாகப் பிரிந்து சென்று அந்தச் சண்பைக்கதிரைப் பிடுங்கி எறிந்துகொண்டு அதனாலே பட்டுவிழுந்தார்கள்.

இதைக் கிருஷ்ணன் கேட்டு இதனாலே நமக்கு மரணமாயிருக்குமென்று ஊகித்து ஆலின்மேலே ஒரு இலையிலே யோகாசனமாக ஒரு பாதத்தை மடித்து ஒரு பாதத்தைத் தூக்கி அமர்ந்திருக்கிற சமயத்திலே 

அந்த மீன்வேடன் வேட்டைக்கு வருகிறபோது தூக்கிய பாதத்தை ஒரு செம்பருந்து இருக்கிறதாகப் ஊகித்து அம்பைத் தொடுத்தெய்யக் கிருஷ்ணனும் பட்டுப் பரமபதத்தை அடைந்தான். 

இந்தத் சாபதோஷம் துர்வாச மகரிஷியைச்சென்று நலிகையாலே இந்தத் தோஷத்தை நீக்கப் பரமேசுவரனை நோக்கி தவம் செய்து

 துர்வாச மகரிஷிக்குச் சண்பை சாபத்தினாலுள்ள தோஷத்தை நீக்கியருளுகிறார்.
இதனால் துர்வா கெமுனிவருக்கு சண்பைமுனி என்கின்ற நாமத்தையும் தரித்தருளினார்.  துர்வாசரும் சீர்காழி பதியில் தவம் செய்ததால் சண்பை என்றே தலத்தின் பெயராகிறது.

பாடல் வரி 36
ஐயுறும் அமணரும் அறுவகைத்தேரரும் ஊழியும் உணராக் காழியமர்ந்தனை - என்றது, 

🔘தலப் பெருமை:
காழி:

வேதாகம புராண சாத்திரங்களிலுள்ள பலத்தை இல்லை என்று ஐயமுற்றிருக்கின்ற அமணரும்
 கைப்புப் - புளிப்புக் - கார்ப்பு - உவர்ப்பு - துவர்ப்புத் - தித்திப்பு என்கின்ற அறுவகை ரசங்களையும் 
உச்சிக்கு முன்னே புசிக்கின்றதே பொருளென்றிருக்கின்ற புத்தரும்,
ஊழிக்காலத்தும் தங்கள் அறியாமையால்  உணராமல் இருந்தவர்கள்.
மிகவும் காளிதமான விஷத்தையுடைய காளி என்கின்ற நாகம் பூசிக்கையாலே 
சீகாழி எனப்படுகிறது.

பாடல் வரி: 38
 ஏழிசையோன்

ஏழிசை : குரல் - துத்தம் - கைக்கிளை - உழை - இளி - விளரி - தாரம் என்பது ஏழிசை..
குரல் =சங்கத்தொனி, 
துத்தம் = ஆண்மீன்பிளிறு,
கைக்கிளை= குதிரையின்குரல். 
உழை = மானின்குரல், 
இளி = மயிலின்குரல்
விளரி = கடலோசை, 
தாரம் = காடையின்குரல் 

இவ்வகையான நாதங்களையும் மெச்சினை,

🔘தலப் பெருமை:
கொச்சை: 

பராசரப் பிரமரிஷியானவர் , கோபத்தினால் மற்ற ரிஷிகள் எல்லோரையும் முறையான விரதங் கொள்ளார் என்று தூஷனம் செய்துவிட,

 அவர்களும் நீ மச்சகந்தியைப் புணர்ந்து மச்சகந்தமும் உன்னைப்பற்றி,விடாமல் அனுபவிப்பாயென்று சபிக்கையாலே அந்தச் சாபத்தின்படி போய் மச்சகந்தியைப் புணர்ந்து அந்தத் துர்க்கந்தம் பற்றியது.
இதனால் பராசர முனிவர் சீர்காழிப் பதிவந்து தவம் செய்தார். ஈசன் இவர் மேண பற்றிருந்த துர்க்கந்தத்தையும் போக்கிச் சுகந்தத்தையும் தந்தருளிக் கொச்சை என்கின்ற சந்தான நாமத்தை அருளியதால், இத்தலம் கொச்சை என்கின்ற சிறப்படைந்தது. 

பாடல் வரிகள் : 39-41

பிரத்தி - பிரத்தியா காரம் - துல்லியம் - துல்லியாதீதம் - வித்தை - அவித்தை என்கின்ற ஆறுபதங்களும்,

 ஆசு - மதுரம் - சித்திரம் - வித்தாரம் - விரையம் என்கின்ற ஐந்தும்

,இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற நாலுவேதங்களும், 

செல்காலம் - வருங்காலம் - நிகழ்காலம் என்கின்ற மூன்று காலம்
தோன்றாநின்ற திரிமூர்த்தியாயினை 

சத்திசிவங்களா யிருந்துள்ள இரண்டும் ஒன்றாய் அர்த்தநாரீசுவரவடிவமாய் இருந்துள்ளார் என்பதாகும்.

பாடல் வரி: 42
ஒருமையின் பெருமை = தானே ஒரு எல்லையில்லாத சிவமாயிருந்துள்ளதை உணர்த்தும்.

  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

💥இப்பதிக சிறப்பு:

⏺️சிவபெருமானின் பல்வேறு பராக்கிரமங்களையும் சிறப்புகளையும் மனம் ஒன்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்களையும் குறிப்பால் உணர்த்தி யருயது.

🔹இத்தலத்தின் பெருமையையும், பல்வேறு சிறப்புகளையும் தல புராணங்களை உணர்த்தி எடுத்துக் கூறியது.

🔸சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர் ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக் கூறினார் என்பர்.
  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

இது போன்று ஒவ்வொரு அடுக்கிலும் செந்தமிழ் பாக்களை அடுக்கி இந்த பாடல் அமைகிறது இப்பாடல்களின் அமைப்பு பொருள், விளக்கம், சிறப்புக்களை பதிவின் நீளம் கருதி தொடர்ந்துவரும் பதிவுகளில் சிந்திப்போம்.
  🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
சிந்தனையும் தொகுப்பு ஆக்கம்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பதிவு ஒன்று : முதல் வரிசை: வரி 1, 2:
https://m.facebook.com/story.php?story_fbid=4051843124890914&id=100001957991710
பதிவு : 2, வரிசை 2,3 பாடல்வரி: 3 - 9:
https://m.facebook.com/story.php?story_fbid=4066646166743943&id=100001957991710
பதிவு : 3 ல் வரிசை 4, 5 பாடல் வரிகள்:
    பாடல் வரிகள் 10 முதல் 13 வரை
    பாடல் வரிகள் 14 முதல் 19 வரை
https://m.facebook.com/story.php?story_fbid=4084714111603815&id=100001957991710
பதிவு : 4 ல் வரிசை 6, 
     பாடல் வரிகள் 19 முதல் 31வரை
https://m.facebook.com/story.php?story_fbid=4093885337353359&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...