Tuesday, July 21, 2020

திருமுறைக் காட்சி பகுதி: ஏழு

#திருமுறைக்காட்சி:
காட்சி  - 7
#அப்பர்அமுதம்

அரச கட்டளை
விஷம் நிறைந்த குளம் 
விலகி இரு  என்றது 

காவலர் கண்விழித்து காத்தனர். 
சற்றும் பயமின்றி முன் சென்றார் அவர்.     காவலர் வந்து கனிவுடன் தடுத்தனர் எடுத்தும் உரைத்தனர் பணிந்து: 
வேண்டாம்   விபரீதம் 

ஆணவமலம் மறைத்தது அகங்காரம் முன்வந்து அழைத்தது:
யாராலும் என்னை ஏதும் செய்யலாகாது
கயம் (குளம்) புகல்வேன் பார்    எனப் பகர்ந்து உள் புகுவார்.

காவலர் தடுத்தும் கரையிலிருந்த மாந்தரும் மருளிட வீழ்ந்தார் விஷக்குளத்தில்.

விதித்ததை மாற்றிட முடியுமா வீழ்ந்துவிட்டார்   வேதனையில் துடிதுடித்தார்:

காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள்  என்று சொல்லி 
 நீத்து ஆய கயம்புக நூக்கியிட
நிலைக் கொள்ளும் வழித்துணை
ஒன்று அறியேன்,

(நான்காம் திருமுறை. பதிகம் 1. திருவதிகை வீரட்டானம் - பாடல் - 5)

என்று ஆர்த்தார்  அலரினார்  வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தார்.

விதிவசத்தால் வீழ்ந்தவர்
 மதிமயக்கம் தெளிந்தார்
 வஞ்ச மனம் ஒன்றும் இலாதவர் 
 அப்பர் அவர்

இரவும் பகலும்  பிரியாது வணங்கி நின்றார்  மெய் ஞானமுனிவர்
 உண்மை ஞானம் அறிவு பெற்றார்.

அரச கட்டளை அது மீறி 
வேதனையால் துடித்திட்டு பின் 
கதறி அழுது மீண்ட கதையிதுவே.

முனிவர்களும் ஞானிகளும் நாயன்மார்களும் ஆழ்வாரடிகளும்
வாழ்ந்து காட்டி வழி அமைத்த பூமி இது அவர் தம் வார்த்தைகளை போற்றி நிற்போம் விதி மாறும் வினை அகலும் இறை துணை நின்று காக்கும்
இது உண்மை என்று உணர்வோம்.

விஷ பினியால் சூழ் உலகம்

தொற்று விலகிடவே சூழ்ந்துவரும்
இன்னலை  எதிர்த்து நின்று
அவனியிலே  உள்ள அரசுகள்
நாளும் எடுத்துவரும் நடவடிக்கை
மதித்து ஏற்றிடுவீர்.

பகலிரவு பாராமல் பணிபுரியும் காவலர்தம் கடமையினை
கண்டு உணர்வீர்

மாந்தர்தம் இன்னுயிரைக் காத்திடவே
தம்முயிரை துச்சமென தந்திடும்
மருத்துவ பணியாளரிடம்
கண்ணியம் நீ காத்திடுவீர்.

நாளெல்லாம் தன்னலமின்றி
களப்பணி ஆற்றிவரும் பணியாளர்,
தன்னார்வ தொண்டரிடம் 
கட்டுப்பாடு கொண்டிடுவீர்

பதவி வெறியால் பகுத்தறிவு
இதுஎனவே பல பேசி பகர்ந்திடுவார்
உறவுகளைத் தவிர்த்திடுவீர்

சமூக இடைவெளி கடைபிடிப்பீர் விலகியிடுவீர் தனித்திருப்பீர்.

உற்றாரும் மற்றாரும் உயிர் வாழ நீ
ஊர் சுற்றாமல் உன் வீட்டிலியே இருந்திடுவீர்.

அரசகட்டளை அது மதிப்போம்
அரன் நம்மை வந்து காப்பான்
நிச்சயம் விதி மாறும் வினை அகலும்.

நன்றி : சுப்ராம் அருணாசலம்.

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...