#திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :
பதிவு : ஆறு (பாடல்:11,12)
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏
'தமிழனன்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா'
என்பது வெற்றுக் கூற்றல்ல.
நம் தமிழ் மொழி உலக இலக்கியத்தில் ஒப்பற்றது என்று நாம் உண்மையில் தெரிந்து உணர வேண்டும்.
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல்களின் அமுதத்தின்
பொருள், அமைப்புக் குறித்து சிந்தித்து ஒரு துளியேனும் பருக வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்த இந்த சிறு முயற்சியில் விளைந்ததே இந்தத் தொடர் பதிவு.
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏
தமிழ் ஞானசம்பந்தரின் பதிகங்களில் ஏகபாதம் என்னும் மிகச்சிறந்த இந்த
வகை யாப்பு அமைந்த பதிகம்
ஏகபாதம்:- ஏகபாதம் என்பது,
ஏகம் - ஒன்று; பாதம் - அடி.
ஏகபாதம் - ஓர் அடி.
ஓரடியே அடுத்தடுத்த அடிகளில் பொருள் வேறுபடுமாறு நான்கு முறை மடித்து மடித்து வந்து ஒரு பாடலாக அமைந்திருப்பதால் "ஏகபாதம்" எனப் பெயர் பெற்றது.
மிறைக்கவி என்பார்கள். இதன் பொருள் வருத்தஞ்செய்வது, மூளையைக் கசக்கிப் பிழிந்து உரை செய்வதாம்.
திட்டமாக உரை செய்வதியலாது
திருஞானசம்பந்தப் பெருமானின் பதிகப் பாடல்கள் இறைவன் தந்த அருளுரைகளே என்பதால் இதற்கு சம்பந்தப் பெருமானே முழுப் பொருள்
தர இயலும் என்று கூறுகிறார்கள்.
பன்னிரு பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தில் உள்ள இன்னொரு தனிச்சிறப்பு, சீர்காழித் திருத்தலத்தின் பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு விளங்குவது.
பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம் வாருங்கள்.
இன்றைய சிந்தனை
பாடல்கள்: 11, 12 பற்றியது.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿🗻🙏
பாடல் 1380- கொச்சைவயம்
சீர்காழி பதியின் மற்றொரு பெயரிது.
கொச்சைவயம் - மச்சகந்தியை விரும்பிய
பழிச்சொல் நீங்க- (கொச்சைபடுவது) பராசரர் வழிபட்டது.
🙏🙇♀️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏽♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇♀️🙏🏾🙇🏾♂️🙏🏿
முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 11.
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
🙏🙇♀️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏽♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇♀️🙏🏾🙇🏾♂️🙏🏿🙇🏼♀️🙏
பொருள் :
1. கொச்சையாம் பழியை நீக்கக் கோரி
பராசர முனிவரால் பூசிக்கப் பெற்ற கொச்சை வயம் என்னும் நிழலைப் பேணாதவர் பேதையர் ஆவர்.
2. ஈசன் புகழ் போற்றாது அவமாய்த் திரிபவர்கள்
அறியாமையுற்றவர் அஞ்ஞானத்தவராய் உலகில் உழல்வார்கள்
3.பிறவி எடுத்ததன் பேற்றை இழந்து,
4. குற்றத் தொகுதிக்கண் மூடப் பெற்றவராய்
நன்னிலையை நீத்தவராவர்.
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏
மிக மிகப் பழைய உரை மூலம்:
(தத்துவப் பொருள் குறிப்பு சுருக்கம்.)
ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும் மறைக்கப்படார்கள்.
மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது.
புலால் நாற்றத்தைப் பொருந்திய அழுக்கு மெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல்;
அதுவே தமது நிலை பெற்ற உருவாக நினைத்துத், துவராடையாலே உடம்பைச் சூழப்பட்ட புத்தரும்,
பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய நலத்தைக் கொள்ளும் பொருட்டு
அவளது சரீரம் எல்லாம் சுகந்தமொய்க்கும்படி அவளுடனே பொருந்திய பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால்.
பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள
கொச்சை நகரம் என்னும் திருப்பதியிலே எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி
வழிபடமாட்டார்களது நினைவு எவ்வாறிருக்கும் என்னில்,
மழைக்காலிருளும் வெளிதென
இருண்ட மயக்கத்தையுடைய
ஆணவ போதமாயிருக்கும்.
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏🙇🏻♂️🙏🏼
பாடல். 1381 - கழுமலம்
மலத் தொகுதி விலகுமாறு உரோமச முனிவர் வழிபட்ட சீர்காழி யின் மற்றெரு பெயர்
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏🙇🏻♂️🙏🏼.
முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 12.
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏🙇🏻♂️🙏🏼
பொருள் :
1. குற்றத் தொகுதி நீங்குமாறு உரோமச முனிவர் வழிபட்ட கழுமல நகரில் வீற்றிருக்கும் ஞானத்தின் தலைவன்
2. கவுணியர் கோத்திர மரபில் தோன்றிய ஞானசம்பந்தரின் சொற்களாக மலர்ந்து அருள்பவன்.
3. இந்த மொழிகளைக் கொள்கின்ற நன்மனத்தினர்கள் வினைக் கட்டு அறும்.
பிறவித்தளை நீங்கும்;
4. எக்காலத்திலும் அழியாது மூத்து நிலையாக நின்று விளங்கும் பதியாகிய கழுமலத்தின் பெருமான் திருவடியை அன்பினால் அணைந்து மேன்மையடைவீராக.
🙏🏿🙇♀️🙏🏻🙇🙏🏾🙇🏾♀️🙏🏽🙇🏾♂️🙏🏼🙇🏻♀️🙏🏻🙇♀️🙏🙇🏻♂️🙏🏼
பழைய தத்துவ விளக்க உரை சுருக்கம்:
மிகுதிப்பட்ட தோஷமாயுள்ள சுக்கில சுரோணிதமாகிய இருவகை நீரின்கண்ணே
சிர முதலாகிய அவயவமாகத் தோன்றிப் பூமியின்கண் செனித்துப் பரிணமித்துப் பின்பு தேய்ந்து மரிக்கின்ற சென்மத்தையும்
(பரிணமித்தல் - வேறுபடுதல்)
கீழ்ச் சொல்லிப்போந்த சென்மத்தையும் கழுவி மலத்திரயங்களையும் கழுவாநிற்கும்.
தனது பாதியாகிய திருவருளினாலே என்னை அகப்படுத்திக்
கவளிகரித்துக் கொண்டு
அந்த அருள்வழியாக என திடத்தில் இடையறாமல் வாழும்
தன்னை எனக்குத் தந்த அடிமை குலையாமல் எக்கண்ணும் விட்டு விளங்கும் கர்த்தர்.
(பாதி எனற்பாலது பதி எனக் குறுகி நின்றது)
மாயா மயக்கத்தின்கண்ணே மயங்கி பெத்த முத்தி இரண்டும் தெரியாமல் திண்டாடப்பட்ட மலபோதர்க்கு அமுதம் போன்று அரிதாயுள்ளவனுமாய் விட்டு விளங்கப்படாநின்ற
பொன்னுருவையுடையவனாய்ச் சிருஷ்டிக்குக் கர்த்தாவாகிய பிரமனது சிரக் கபாலத்திலே பிச்சைகொண்டு நுகரும் கருணை யாளனே!
திருக்கழுமலம் என்னும் மூவாப் பழங்கிழமைப் பன்னிரு பெயர்பெற்ற அனாதி மூலமாகிய பதியிடத்துக்
கவுணிய கோத்திரத்திலே
தோன்றப்பட்ட யான்
நிவேதிக்கப்படும் காட்டாகிய இப்பாடலைக்
கீழ்ச்சொன்ன வற்றிலும்
மலத் திரயங்களிலும் அழுந்தாநின்ற ஒருத்தராகிலும் பலராகிலும்
உரை செய்வார் உயர்ந்தாரேயாதலால்
இப்பாடலை இடை விடாமல் உரைசெய்வீராக.
(காட்டு என்பது கட்டு எனக் குறுகிநின்றது)
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம்.
வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇🛐என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇🛐
முதல் பாடல் முதல் பதிவில் காணலாம்:
https://m.facebook.com/story.php?story_fbid=3964605860281308&id=100001957991710
பதிவு : 2
பாடல் 2,3 மற்றும் 4 விளக்கத்திற்கு :
https://m.facebook.com/story.php?story_fbid=3971000689641825&id=100001957991710
பதிவு: 3
பாடல் 5 மற்றும் 6 விளக்கத்திற்கு :
https://m.facebook.com/story.php?story_fbid=3976198605788700&id=100001957991710
பதிவு.. 4.
பாடல் 7 மற்றும் 8 விளக்கத்திற்கு :
https://m.facebook.com/story.php?story_fbid=3979457082129519&id=100001957991710
பதிவு.. 5
பாடல் 9 மற்றும் 10 விளக்கத்திற்கு :
https://m.facebook.com/story.php?story_fbid=3983732481701979&id=100001957991710
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇🛐
No comments:
Post a Comment