#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
பதிவு : மூன்று
#வழிமொழிதிருவிராகம், பற்றிய பதிவு.
மூன்றம் திருமுறை பதிகம்: 325
பாடல் 1 முதல் 4 பாடல்கள்.
🙏🙇♂️அன்பு வேண்டுகோள்:🙇♂️🙏
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.
🙇♂️நன்றி🙏
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
#தமிழரின்பொக்கிஷம்:
#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல்
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.
📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்: 714 - 725
பதிகம் 325 தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.
⚜️#வழிமொழிதிருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.
🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)
🔸இதன் ஓசை அமைப்பில் பாடல்
தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதனனா
என அமைகிறது.
🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.
⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.
🔹சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல்: 01 -
💠 திருப்பிரமபுரம்: படைப்புத் தொழில் வேண்டி, பிரம்மன் தங்கி வழிபட்டு இறையருளைப் பெற்றதால் இப்பெயர்.
🔹இந்தப் பதிகத்தின் முதல் பாடல் பிரம்மபுரம் என்ற சீர்காழி பதியின் பெயர் வந்த வழியை சொல்லும்
✳️பாடலில் 'ர' கரமாக சீர் அமைத்துள்ளார்.
பாடல் : 714
சுரர்உலகு நரர்கள்பயில் தரணிதல
முரன் அழிய அரணமதில்முப்
புரம்எரிய விரவுவகை சரவிசைகொள்
கரமுடைய பரமன் இடமாம்
வரம்அருள வரன்முறையின்
நிரைநிறைகொள்
வருசுருதி சிரவுரையினாற்
பிரமன்உயர் அரன்எழில்கொள்
சரணஇணை
பரவவளர் பிரமபுரமே.
- 0:3:325:01
பொருள் :
சுரர் உலகும் - தேவலோகமும்
நரர்கள் பயில் - மனிதர் வாழும்.
தரணி தலம் - பூலோகமும்,
முரண் அழிய - வலிமை அழியும்படி. ( அதனால்,)
அரணம் - காவலாகிய.
முப்புரம் - முப்புர முடிய.
விரவுவகை எரிய - கலந்து பல இடமும் எரியும்படி.
சரவிசை - அம்பின் விசையால்
கொள் - ( அவ்அம்பைக் ) கொண்ட,
கரம் உடைய, பரமன் இடமாம்.
நிரை - வரிசையாக,
வரன்முறையின் வரு - வரன்முறையில் ஓதிவருகின்ற.
நிறைகொள் - நிறைவையுடைய.
சுருதி சிரம் - வேத முடிவாகிய உபநிடதங்களின்,
உரையினால் - வசனங்களினால்.
உயர் - எவரினும் உயர்ந்த,
அரன் - சிவபெருமானின்.
எழில் கொள் - அழகையுடைய,
சரண இணை - இரு திருவடிகளையும். வரம் அருள - தனக்கு வரம் அருள்வான் வேண்டி, (பிரமன்)
பரவ - துதிக்க.
வளர் - புகழால் ஓங்கிய.
பிரமபுரமே - பிரமபுரம் என்னும் பெயர்பெற்ற தலமாம்
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
♦️இதே முறையில் வரும் அடுத்தடுத்தப் பாடல்களையும் சீர் அமைப்பு முறையும் கவனிக்க வேண்டும்.
🔹இரண்டாவது பாடலில் வேணுபுரம் என்ற பெயர் வருவதால் 'ண' கரவரிசை வருமாரு அமைத்துள்ளார்.
பாடல் : 02. (வேணுபுரம்):
💠இந்திரனுக்காக, விநாயகரைப் படைத்து
கஜாசுரனை அழித்து, இறைவன் அருளியதால், மூங்கில் உருவம் கொண்டு இந்திரன் தவம் செய்த தலம்.
பாடல் : 715
தாணுமிகு ஆணிசைகொடு ஆணுவியர்
பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி
மாணிமது நாணும் வகையே
ஏணுகரி புணழிய ஆணியல்கொண்
மாணிபதி சேண்அமரர் கோன்
வேணுவினை யேணிநகர் காணிதிவி
காணநடு வேணுபுரமே.
-03.325.02 (715)
தாணு - சிவபெருமான்
ஆணு - ( தன் ) அன்பர்களாகிய தேவர்கள்.
வியர் பேணு மது - (கயமுகாசுரனால்) அச்சம் கொள்வதை.
காணும் அளவில் - அறிந்ததும்.
மிகு - வலிமை மிகுந்த.
ஆண் இசைகொடு - ஆண் யானையின் வடிவைக்காண இசைந்து. ( நிற்க - அதற்கேற்ப.)
கோணுநுதல் - வளைந்த நெற்றியை. நீள்நயனி - நீண்ட கண்ணையுமுடையவளாகிய அம்பிகை. கோண்இல் - குற்றமில்லாத படி.
பிடி - பெண் யானையின் உருவை.
மாணி - பெருமையையுடையவளாய்க் காண.
மது - மது என்ற அசுரனும்.
நாணும் வகை ஏணு - வெட்கும்படி வலிமைகொண்ட.
கரி - கயமுகாசுரன்.
பூண் - தான் மேற்கொண்ட தீய தொழில்கள்.
அழிய - அழியும்படி.
ஆண் - ஆண் தகையாகிய விநாயகக் கடவுள். ( கயமுகாசுரனுக்குப் பேடியர் போல் அஞ்சிய தேவர் துயரந் தவிர்த்த வீரம் குறிக்க ஆண் என்றனர் )
இயல் - ( அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் ) அருளை,
கொள் - கொள் வித்த.
மாணி - பெருமையுடையோனாகிய சிவபெருமானின்.
பதி - இடம்.
சேண் - வானுலகில் உள்ள,
அமரர்கோன் - இந்திரன்.
வேணு வினை - மூங்கிலை.
ஏணி - ஏணியாகக்கொண்டு.
காண்இல் - தான் நேரேகாண முடியாத. திவி - தேவலோகத்தின் நிலையைக் காண - ஒளிந்து காணும் பொருட்டு.
நடு - நட்ட,
வேணுபுரம் - வேணுபுரமாம்
ஆணு - அன்பு
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல்: 3: புகலி (என்பதால் 'ல' கர சீர்)
சனகாதி முனிவர்களுக்கு அருள குருமுகமாய் அருளிய இடம். தேவர்கள் புகலிடமான இடம்.
பாடல் : 716
பகல்ஒளிசெய் நகமணியை முகைமலரை
நிகழ்சரண அகவு முனிவர்க்கு
அகலமலி சகலகலை மிகவுரைசெய்
முகமுடைய பகவன்இடமாம்
பகைகளையும் வகையில்அறு
முகஇறையை
மிகஅருள நிகரில் இமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிகழ்
அலர்பெருகு புகலிநகரே.
-03:325:03 (716)
பொருள் :
நகம் = மலை
முகை மலர் = தாமரை மலர்
பகவன் = சிவபெருமான்
பகல் ஒளி செய் - சூரியனைப்போற் பிரகாசிக்கும்.
நகம் மணியை - மலையிற் பிறக்கும் பத்மராக மணிகளையும்.
முகை மலரை - அரும்பு விரிந்த செந்தாமரை ( நாண் ) மலரையும்.
நிகழ் - போன்ற.
சரண - திருவடிப் பேற்றுக்குரிய.
அகவு - விருப்பம் மிக்க.
முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு,
அகலம்மலி - விஸ்தார மாகிய,
சகலகலை - கலைகளனைத்தையும்.
மிக - ( தெளிவு ) மிகும்படி.
உரை செய் - உபதேசித்தருளிய.
முகம் உடைய - திருவருள் நோக்கம் உடைய.
பகவன் இடமாம் - சிவபெருமானின் இடம் ஆகும்.
முகை மலர்ந்த மலர் - புதுப்பூ. பகவன் - சிவபெருமான்
முகம் - என்னும் சொல் திருவருள் நோக்கம் என்னும் பொருளில் வந்தமை காண்க.
பகை - தேவர் பகைவர்களாகிய அரக்கர் முதலாயினோரை. ` பகை ` பகைவருக்கு ஆயினமையின் பண்பாகுபெயர்.
இறை - கடவுள்.
மிக - அறச்செயல்கள் அதிகரிக்க.
அருள - தர. அதனால்.
நிகரில் இமையோர் - மகிழ்ச்சியில் நிகர் இல்லாத தேவர்கள்.
புக - சரண்புக,
எழில் திகழ - அழகு விளங்க.
நிகழ் - ( இவற்றால் ) நேர்ந்த ( புகலியெனும் பெயர் ).
அலர்பெருகு - அனைத்துலகினும் மிக்குப் பெருகிய ( புகலி நகர் என்க.)
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல்:04 - வெங்குரு =
💠குருபகவான் வழிபட்ட இடம்.
✳️('ங்' - சீர் அமைப்பில் பாடல்)
பாடல்: 717
அங்கண்மதி கங்கைநதி வெங்கண்அர
வங்கள்எழில் தங்கும் இதழித்
துங்கமலர் தங்குசடை அங்கிநிகர்
எங்கள்இறை தங்கும் இடமாம்
வெங்கதிர்வி ளங்குலகம் எங்கும்எதிர்
பொங்கெரிபு லன்கள் களைவோர்
வெங்குருவி ளங்கிஉமை பங்கரசர
ணங்கள்பணி வெங்குருவதே.
-03.325:04 (717)
பொருள் :
இதழி=கொன்றை மலர்
வெங்குரு விளங்கி = குருபகவானைச் சுட்டியது.
வெம்மை = விருப்பம் என்னும் பொருள்.
அங்கண்மதி - அழகிய ஆகாயத்தினிடத்தில் உள்ள சந்திரனும், வெங்கண் அரவங்கள் - கொடிய பாம்புகளும்.
எழில் தங்கும் இதழித் துங்கமலர் - அழகு தங்கிய கொன்றையின் தூயமலரும். தங்கு சடை - பொருந்திய சடையானது.
அங்கி நிகர் - தீயையொக்கும்.
எங்கள் இறை - எங்கள் தலைவன்.
வெங்கதிர் - சூரியனால்,
விளங்கும் - விளங்குகின்ற. உலகமெங்கும் - உலகில் உள்ள அனைவரும்.
எதிர் - நல் வழிக்குமாறாக.
பொங்கு - மிக. எரி - வருத்துகின்ற. புலன்கள் - மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையை.
களைவோர் - நீக்க விரும்புவோர்.
வெங்குரு - கொடிய தேவ குருவினால். விளங்கி - தமது துயர் களைதற்கிடமிதுவேயென்று தெளிந்து. உமைபங்கர் - சிவபெருமானின் - சரணங்கள் பணி - பாதங்களைப்பணிந்த.
வெங்குரு அது - வெங்குரு என்னும் அத்தலமாம்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
#வழிமொழிதிருவிராகம் என்னும் இவ்வற்புத பதிகத்தின் பாடல்களின் விளக்கத்தையும் சிறப்புகளையும் அடுத்தடுத்த பதிவில் தொடர்ந்து சிந்திக்கலாம்.
நன்றி.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.🙇♂️🙏🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு : ஒன்று
https://m.facebook.com/story.php?story_fbid=4163567850385107&id=100001957991710
பதிவு : இரண்டு
https://m.facebook.com/story.php?story_fbid=4167871086621450&id=100001957991710
No comments:
Post a Comment