Tuesday, July 21, 2020

சம்பந்தர் தூது பகுதி: இரண்டு

#திருமுறைசிந்தனைகள்:
#சம்பந்தர்தூது: 
பகுதி - இரண்டு
🎎
பாட்டுக்குப் பாட்டெடுத்து – நான்
பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே – நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ...
🛶⛵
என்று ஒரு தலைவி, தன்னை தனிமையில் விட்டு சென்ற தன் தலைவனை நேரில் காண இயலாமல் தவிக்கும் போது,  தலைவனை நினைத்து தான் படும் பாட்டை அலைகளிடம் முறையிட்டு அதைத் தூது விடுத்து தன் தலைவனிடம் தன் துயர் நிலை விளக்குமாறு கூறுகிறார்.
🏝️🏜️🌴
உலகம் முடங்கிக் கிடக்க, புலம் பெயர்ந்து வாழும் பலர்  தம்குடும்ப உறவுகளைப் பிரிந்து கால சூழலலினால் தமக்கு விருப்பமானவர்கள் தொலைதூரத்தில் இருக்கும் நிலையில் அவர்களுடைய நினைவுகளால் வாடும் உள்ளத்தின் துயர் நிலை நமக்கு வேதனையளிக்கிறது.

 தங்கள் கருத்துக்களை நேரில் பரிமாறிக் கொள்ளா முடியாத நிலையில், பிரிவு ஆற்றமையால்,  அஃறிணைப் பொருளாக இருந்தாலும் அதனை தூது விடு பொருளாக ஆக்கி தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்த முயலுகிறது நமது மனம்.  இது ஒரு கவிதை அமைப்பு 
🎎🐝🐞🦋🎭🍀🌱🦆🐤🐥🦅

பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கும் தமிழ்த் தலைவர், முத்தமிழ் விரகர், வண்டமிழ்நாயகர், செந்தமிழ்  திருஞானசம்பந்தர்  பதிகங்களில் ஒன்றில் இந்தத் தூதுக் காட்சியைப் பார்க்கலாம்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

முதலாம் திருமுறையில் வரும் 
60-வது பதிகம். தலம்: திருத்தோணிபுரம். (சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்று)
வண் தரங்கப் புனற்கமல ... எனத் தொடங்கும் பதிக பாடல்கள் பற்றியது இது.

காழி வேந்தர், பல தலங்கள் சென்று தரிசித்து அற்புதங்கள் பல செய்து வருங்கால். பல நாட்கள் சென்றுவிட்டன.
தாம் அருள்பெற்ற தோணிப்பர் நினைவு வந்து விடுகிறது. தம்மைத் தலைவியாகவும், தாம் வணங்கும் இறைவரை தலைவனாகவும் எண்ணி இப்பதிகப் பாடலை அருளியிருக்கிறர்கள்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏
🐝
காட்சி - 1
முதலில் இசைபாடும் வண்டு மூலம் தோணிபுரத்து இறைவருக்குத்
தூது விடுகிறார்.*

ஆனால்,
என் விதிப்பயனால் முன்னம் வண்டுகள் சென்று இறைவரிடம் என் நிலமை உறைத்ததோ, அன்றி அங்கு செய்யப்படும் வேத ஒலியில் எதுவும் விளங்காமல் போயிற்றோ என்று மனம் வருந்தி இருந்து வருங்கால்;   

அங்குள்ள சுறா மீன்கள் வாழும் உப்பங்கழியின் அருகில் உள்ள சோலைகளில் துள்ளித் தாவி பெரிய சப்தம் இட்டு  விளையாடி மகிழ்ச்சியுடன் வாழும் இளங்குருகு பறவையை நோக்கி
 
நான் என் தலைவனாகிய இறைவனை எண்ணி பசலை நோயில் நான் வீழ்ந்து வாடும் நிலையை நீ சென்று என் நிலையை உரைக்க வேண்டும் என்று தன்னிலையை விளக்கி இளம்குருகை தூதுவிடுகிறார்.

🦆🐤🐥🦅🏞️🦈🐬🐋🐳🐟
பாடல் 
எறி சுறவம் கழிக்கானல்
     இளங்குருகே என்பயலை
அறிவுறாது ஒழிவதுவும்
      அருவினை யேன் பயனன்றே
செறிசிறார்  பதம் ஓதும்
       திருத்தோணி புரத்துஉறையும்
வெறி நிறார் மலர்க்கண்ணி
      வேதியர்க்கு விளம்பாயே.
      
-  (திருமுறை 01.60.02)
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
சுறவம் - சுறாமீன். கழி - உப்பங்கழி. கானல் - கடற்கரைச் சோலை. குருகு - நாரை. பயலை - பிரிந்த மகளிர்க்கு உண்டாகும் ஒரு நோய். செறிசிறார் - நெருங்கிய சிறுவர்கள். பதம் - பதமந்திரங்கள். வெறி நிற ஆர் மலர் - மணமும் நிறமும் பொருந்திய மலர். 
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏

காட்சி - 2
🎎🐝🦅🦈🐬🐋🐓🐔
இளம் குருகும் தன்நோயை சென்று உரைக்கவில்லை என்று கருதும் ஞானசம்பந்தர்.   அருகில் உள்ள வயல்களின் கரைகளில் சம்பங் கோரைகளின் இடையில் வாட்டமின்றி  மகிழ்ச்சியுடன் இருக்கும் சேவலைப் பார்த்து தன் வாட்டமுற்ற நிலையை இறைவனாகிய தன் தலைவனிடம் சென்று கூறுமாறு கூறுகிறார்.

இன்னும் ஒரு குறிப்பு உண்டு. 
அதாவது வண்டு கூறியும் எடுபடாத சொற்கள் வாட்டமில்லாத இந்த கோழியின் வார்த்தைகள் இறைவனிடம் எடுபடுமா என்று தயங்கும் கோழியிடம்,  
தன் தலைவன் சிறந்த பண்புகள் உடையவன் என்பதால் உனக்கு எந்தவிதப் பழியும் நேராது எனவே மொழிவாயாக என்றார். மேலும்,

வண்டுகள் மொய்க்காத மலராகிய சென்பகம் நிறைந்த தோணிபுரத்தில் இருக்கும் இறைவரை இந்தக் கோரையின் நடுவில் வாழும் இந்த கோழி சென்று உரைக்க வாய்ப்புள்ளது என்றும் எண்ணுகிறார்.
🎎🐝🦅🦈🐬🐋🐓🐔
பாடல்:
பண்பழனக்  கோட்டகத்து
     வாட்டமிலாச்   செஞ்சூட்டுக்
கண்பகத்தின்  வாரணமே
    கடுவினையேன்  உறுபயலை
செண்பகம்சேர்  பொழில்புடைசூழ்
     திருத் தோணி புரத்துறையும்
பண்பனுக்குஎன் பரிசுரைத்தால்
     பழியாமோ  மொழியாயே.

 - தேவாரம் முதல் திருமுறை 01.60.03.
 
பொருள்: செஞ்சூட்டு - சிவந்த கொண்டை; 
கண்பகம் - செண்பங் கோரையின் இடையில்: வாரணம் - கோழி (சேவல்)
பயலை - பசலை நோய்
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏
முடங்கிய உலகத்தில்  உறவுகளை பிரிந்துவாடும் உள்ளம் அமைதி பெற வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைப்போம். இறையருள் பெறுவோம்.
நன்றி.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏
*முதல் பதிவின் வண்டு தூது விளக்கம் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=3913167225425172&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...