Tuesday, July 21, 2020

ஏகபாதம் பதிவு. 2

#திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :
பதிவு : இரண்டு

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏

ஏகபாதம் :
ஒரே அடியில் உள்ள சொற்கள் நான்கு அடிகளிலும் வரும்போது பொருள் வேறு, வேறு பெற்று விளங்குவதுதான் திருஏகபாதம்.

தமிழ் ஞானசம்பந்தரின்  பதிகங்களில் ஏகபாதம் என்னும் மிகச்சிறந்த இந்த
வகை யாப்பு அமைந்த பதிக பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம் வாருங்கள்.
இன்றைய சிந்தனை 
பாடல்கள்: 2, 3, 4 பற்றியது.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿
பாடல் 1371.

சீர்காழி பதியின் 12 பெயர்களில் வேணுபுரம் என்பதும் ஒன்று.
இறைவன் மூங்கில் வடிவில் தோன்றியதாலும்,
தேவேந்திரன் மூங்கில் வழியாகவந்து பூசித்ததாலும்,
வேணுபுரம் என்னும் பெயர் பெற்றது.

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿
தேவாரம் - முதல் திருமுறை 
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல் : 2.

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏿‍♂️🙏🏾
பொருள் : 
1. ஈசன் மூங்கில் (வேணு) வடிவில் தோன்றி விளங்கியவன்.

2.விரிந்த மலர்கள் கொண்ட சோலைகள் அழகுற விளங்கும் வேணுபுரத்தில் விளங்குபவன், ஈசன்.

3. அழகிய வேணுபுரத்தில் விஷ்ணுவால்
பூசிக்கப்பெற்றவன்.

4. விஷ்ணுவின் உந்திக்கமலத்தின் மீது அலர்ந்த தாமரையில் விளங்கும் நான்முகனுக்கு அணியாகி விளங்கி, படைத்தல் தொழில் செய்பவன்.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿
மற்றும் ஒரு பழைய உரையின் சுருக்கம்:

1.சிலம்பினைத் தரித்துள்ளவர் 2.முப்புரத்தை எரித்தவர்
3. தேவர்களால் கற்பகப் பூஞ்சோலை மலர்கள் கொண்டு அர்ச்சிக்கப்படுகின்றவர்.
4. பூஞ்சோலைகள் சூழ்ந்த வேணுபுரத்தில் வீற்றிருக்கும் இறைவர்.
என்றும் பொருள் உரைப்பர்.
🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

பாடல் 1372.

சீர்காழிப்பதியின் மற்றொரு பெயர்.
திருப்  புகலி  என்பது.
தேவர்களின் புகலிடமாய் விளங்கியதால் இப்பெயர் அமைந்துள்ளது.
🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

தேவாரம் - முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 3.

புண்டரி கத்தவன்  மேவிய புகலியே
புண்டரி கத்தவன்  மேவிய புகலியே
புண்டரி கத்தவன்  மேவிய புகலியே
புண்டரி கத்தவன்  மேவிய புகலியே

🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿
பொருள் :
1.இதய கமலத்திலிருந்து இடையறாத ஆனந்தம் பொழியப்பட்டு என்னை மலபோதத்தில் தள்ளாமல் எனக்கு அடைக்கலப் பொருளாயுள்ளவன்.

2.சிவன் தனது இச்சையால் பொருந்தியிருக்கும் ஊர் தாமரை மலர் மேவிய பிரமாபூசித்த புகலி என்னும்திருப்பதி.

3. திருமாலால்  வணங்கப்படுபவன்.

4. நெற்றித் திலகமாக விளங்கும்
திருநீறு போன்றவன்.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏

பாடல் 1373

சீர்காழி பதிக்கு வெங்குரு என்று ஒரு பெயர் உண்டு.
குருபகவான் வழி பட்டதால்
இத்தலத்திற்கு இப்பெயராம்.

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 4.

விளங்கொளி திகழ்தரு  வெங்குரு மேவினன்.
விளங்கொளி திகழ்தரு  வெங்குரு மேவினன்.
விளங்கொளி திகழ்தரு  வெங்குரு மேவினன்.
விளங்கொளி திகழ்தரு  வெங்குரு மேவினன்.
🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿
பொருள் :
1. பிரகஸ்பதியாகிய வியாழபகவான்
பூசித்துப் பேறு பெற்ற வெங்குரு என்னும் பதியில் மேவியவன்.

2. விளங்குகின்ற ஒளியின் வண்ணம் பெருக வீற்றிருக்கின்றனன்.

3. அறியாமை என்னும் வெம்மை தவிர்க்கும் குருவாகவும், ஆல் நிழல் நின்ற நிலையை ஒத்த குளிர்ச்சி மிக்க தெய்வ பீடமாகிய வெங்குருவில் வீற்றிருந்து ஞானம் வழங்குபவனாய் உள்ளவன். 

4.ஒளி வண்ணமாகத் திகழ்தரும் ஈசன், அவன் அருள் வடிவாய் மேவி விளங்குபவன்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
மிக மிகப் பழைய உரை மூலம்
எடுத்து பொருள் குறிப்பு சுருக்கம்.

குருமூர்த்தியாய் வந்து என் பிறவியை ஒழித்துத் தனது பேரின்பமாகிய பரிபூரணத்திலே எனது அடிமை குலையாமல் இரண்டற வைத்தவன். 
எங்கும் பிரகாசியா நின்ற கீர்த்தியினால் சிறக்கப்பட்டுள்ளவன்.
இயமனால் பூசிக்கப்பட்டவர்.
வெங்குரு என்னும் சீகாழி திருப்பதியை விரும்பியுள்ளான்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏

பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
முதல் பாடல் முதல் பதிவில் காணலாம்:

https://m.facebook.com/story.php?story_fbid=3964605860281308&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...