Monday, August 17, 2020

மாலைமாற்று பதிவு : இரண்டு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
#மாலைமாற்று (பாடல் 3, 4, 5 )
பதிவு : இரண்டு

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 
🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
 நமது பாரம்பரிய தமிழரின் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் சிதைந்து இருந்ததை மீட்டு சீர்திருத்தியவர், திருஞானசம்பந்தர்.

📚சைவத் திருமுறைகள் தமிழின் பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது.
சித்திரக்கவி என்னும் வகையில் சம்பந்தப்பெருமான் அருளிய 
#மாலைமாற்று பதிகம் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் பதிவு.

☣️ சம்பந்தர் அருளிய  மிக மிக அரியவகை  தமிழ் இலக்கியப் பாடல்களாகும்.

❇️#சித்திரக்கவி வரிசையில்  திருஞானசம்பந்தரின்
  #மாலைமாற்று வகை என்பது..

⏺️ஒரு பாடலில் உள்ள இரண்டு அடிகளை முன்னிருந்து பாடினாலும், பின்னிருந்து பாடினாலும், சொல்லும்  பொருளும் மறுபடாமல் இருப்பது.

⏺️மலர்களை கொண்டு மாலை கட்டி முடிக்கும் போது ஆரம்பமும் முடிவும் ஒன்றாக முடியும் அது போல வார்த்தைகளை அடுக்கி வரிகளை முடிக்கும்போது அதே வரிசையில் திரும்ப வாசிக்க அதற்கும் பொருள் வரும்.  மாலை போல முதலும் முடிவும் மாறி மாறி சுற்றிவருவதால் இதை மாலைமாற்று பாடல் என்று அழைக்கப்படுகிறது.

⏺️இவ்வகைக் கவிகளை மிக முயன்று அமைத்துள்ளமையால் இவை #மிகைக்கவி என்னும் கூறுவர். எளிதில் பொருள் காணமுடியாத பாடல் என்பது அதன் பொருள்.

⏺️சொல்லணியில் இது #வண்ணகம் என்ற அமைப்பு  வகையில்   நெட்டெழுத்து மிகுதியும் பெற்று வரும்
 'நெடுஞ்சீர் வண்ணம்"  என்றும் வகைப்படுத்துகின்றனர்: 

🔱தமிழில் இது பற்றிய சில வார்த்தைகள்:

சிவயவசி, விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை, தேருவருதே, மாடுஓடுமா, மோருதாருமோ, தோடுஆடுதோ, மேகராகமே, மேளதாளமே, வைபூவை, மாலாபோலாமா,

"பூவாளை நாறு நீ பூ மேக லோகமே
பூநீறு நாளை வா பூ"
இதன் பொருள் :
= பூச்சூடி, திருநீறு கொண்டு, நாளை வா'

❇️இவ்வகையில் ஒரு பாடலில் இரண்டு வரிகளை அமைத்து 11 பாடல்களைக் கொண்ட ஒரு பதிகம் அற்புதமாக இயற்றி அருளிச் செய்துள்ள தமிழ் ஞானசம்பந்தர் சிறப்பு போற்றத்தக்கது. 

✳️ஒரு மெய்யெழுத்து கூட இப் பதினோறு பாடல்களிலும் இல்லை என்பது இன்னும் சிறப்பு.

❇️மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள
(117) 375வது சீர்காழி தலத்தில் அருளிய பதிகம்

✳️ #மாலைமாற்றுப் பதிகம் பற்றி மேலும் சற்று விரிவாக சிந்திப்போம்.

❇️கெளசிகப் பண் அமைந்த பதிகம்.

📖 முதல்பதிவில் முதலிரண்டு பாடலைப் பற்றி பார்த்தோம். இந்த பதிவில் 3 முதல் 5 வரை உள்ள  பாடல் பொருள் உரை பற்றியும் சிந்திப்போம்.

தொடர்ந்து  அடுத்தடுத்த பதிவுகளிலும் தொடர்ந்தும் சிந்திக்கலாம்).
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
3
பாடல் 1259:

தாவரமூவா   தாசாகா  ழீநாதாநீ  யாமாமா
மாமாயாநீ  தாநாழீ  காசாதாவா  மூவாதா.

🏵️முதல்வரி:

தாவா - அழியாத. 
தாவம் - நெருப்பு

மூவா - மூப்பில்லாத (என்றும் 
              இளமையாய் உள்ள) 

தாசா - தசகாரியத்தால் அடையும் 
             பொருளாக உள்ளவனே.
             ஆசானாகத் திகழ்பவர்
          
காழீநாதா - சீகாழிக்குத்தலைவனே! 

நீ - எவரும் சஞ்சரிப்பதற்கு அஞ்சி 
      நீக்குகின்ற, 

யாமா - நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் 
              நாதனே. 

மா - பெருமை வாய்ந்தவனே

🏵️இரண்டாவது வரி:

மா = பெரிய
மா - ஐராவணமாகிய பெரிய 
         யானையின்மேல்,

யா நீ - ஏறி வருபவனே! 

தானாழி - (தான + ஆழி) = கொடையில் 
                    கடல் போன்றவனே. 

சா - சாவதினின்றும். 
கா - காப்பாற்றுவாயாக. 

காசா - இரத்தினம் போன்ற ஒளியை உடையனே!  
காசு = (குற்றம்) குற்றம் இல்லாதவன்

தா - கேட்டவரங்களை எல்லாம் தருவாயாக. 

வா - என் முன் எழுந்தருள்வாயாக. 

மூ - எவற்றினும் முன்னே தோன்றிய.

வாதா - காற்று முதலாக உள்ள ஐம்பூத வடிவாய் உள்ள. 

🔱பொருளுரை:

⏺️அழியாத நெருப்பாகவும், மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாகவும், குருவாகவும் உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. 
   எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற   
   சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் 
   நாதனே. 

⏺️மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. 
   கொடையில் கடல் போன்றவனே.     
   சாவினின்றும் எங்களைக்    
   காத்தருள்வாயாக. குற்றம் இல்லாத    
   ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே.
   வேண்டும் வரங்களைத்    
   தந்தருள்வாயாக. எங்கள்முன் 
   எழுந்தருள்வாயாக.
   முன்னைப் பழம்பொருளே. 
   காற்று முதலான ஐம்பூதங்களின்   
   வடிவானவனே!
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
4
பாடல் 1260 :

நீவாவாயா  காயாழீ  காவாவானோ வாராமே
மேராவானோ  வாவாகா  ழீயாகாயா
வாவாநீ

பொருள் :
🏵️முதல்வரி:

நீவா - என்றும் மாறாத. 

வாயா - உண்மைப் பொருளானவனே. 

கா - தாங்கிய. 

யாழீ - வீணையினையுடையவனே.

காவா - (காகா) வந்து காத்தருள்வாயாக, 

வான் - தேவர்கள். 

நோவாவா - துன்பமடையாவாறு.

வான்நோவாராமே - கொடிய பிறவித் துயரம் எம்மை எய்தாமல், 

🏵️இரண்டாம் வரி:

மேரா - மேரு மலையை ஏந்தியவனே. 

காழீயா - சீகாழிப் பதியுள் எழுந்தருளியுள்ளவனே. 

காயா - ஆகாய சொரூபியே. 

வாவா நீ - நீ விரைந்து வருவாயாக. 

வாய் - உண்மை. 

🔱பொருளுரை :

⏺️என்றும் மாறுதலில்லாத நீக்கப் பெறாத மெய்ப்பொருளானவனே.  தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. 

⏺️விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே,  ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
5
பாடல்: 1261

யாகாலாமே யாகாழீ  யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ  தாமேயா ழீகாயாமே லாகாயா

பொருள் :
🏵️முதல்வரி:

யா - எவையும் வணங்கத்தக்க. 
யா - எவற்றிற்கும். 

காலா - கால வடிவமாக உள்ளவனே. 

மேயா - எவற்றினுள்ளும் எள்ளில் 
               எண்ணெய் போல் வியாபித்து 
               இருப்பவனே. 

மேதாவீ - அறிவில் மேம்பட்டவனே. 

தாய் ஆவி - எவ்வுயிருக்கும் தாயாகவும் உயிராகவும் உள்ளவனே. 

🏵️இரண்டாம் வரி

வீயாதா - என்றும் அழிவில்லாதவனே. 

வீ - கின்னரம் முதலிய பறவைகள் (தாம் - அசை) 

மே - தன்னருகில் வந்து விழும்படியாக. 

யாழீ - வீணைவாசிப்பவனே. 

யாம் - நாங்கள் மேல் - மேற்கொண்டு. 

ஆகு - ஆவனவற்றிற்கு.

ஆயா - ஆயாதவாறு. 

கா - எம்மைக் காப்பாயாக.

⚜️பொருளுரை:

⏺️யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே!  அறிவில் மேம்பாடு உடைய ஞான பூரணமானவனே!
   அனைத் துயிர்கட்கும் தாயாகவும், 
   உயிராகவும் உள்ளவனே! 

⏺️என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. 
   பிறவா நிலை அடைய, யாங்கள்      
   மேற்கொண்டு ஆவனவற்றிற்கு   
   ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் 
   வாயாக.
🙏
🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏
இதன் தொடர்பதிவில் அடுத்தடுத்த பாடல்களின் பொருளும் உரையும் பற்றி சிந்திக்கலாம்.

⏺️திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை உணர்த்தியதும்,மறுபுறம் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட பா அமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏🙏🔯🛐🎪⚛️🙇‍♂️🙏

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள் முருகனின் அவதாரமாய்  போற்றிய  அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள்
(http://thevaaram.org/ta/index.php)
மற்றும் பல்வேறு நூல்களின் அடிப்படையில் இப்பதிவில் குறிப்புக்கள் கொண்டும், பேரறிஞர்  வ. த. இராமசுப்பிரமணியம்,  முதலிய ஒப்பற்ற பல பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முதல் பதிவு: பாடல் 1, 2:
https://m.facebook.com/story.php?story_fbid=4247201255355099&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...