Sunday, August 30, 2026

திருத்தணி சுப்பிரமணியர் ஆலயம் 15.O8.26

#திருத்தணி 
சுப்பிரமணியர் ஆலயம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் (Subramaniya Swamy Temple, Tiruttani) என்பது முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.
வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.
இந்த கோயில் தணிகை மலை என்ற மலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு வளாகங்கள் உள்ளன. இக்கோயிலுடன் தொடர்புடைய பல நீர்நிலைகள் உள்ளன. இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடி போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திபெற்றவராகக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது இந்த முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி ஆகும். ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும், திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. சரவணப் பொய்கை என்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது. இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது மடம் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை அழகு திருத்தணி மலை எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு
சிறிய குன்றின் மீதுள்ள ஆலயம் 

மலைக்கு வேன் கார்கள் செல்ல அனுமதி உண்டு தனி பாதை வாகன நிறுத்துமிடம் உள்ளது. மிகவும் கூட்டம் அதிக நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உண்டு.
ஆலய பேருந்து வசதிகளும் உள்ளன.
நிறைய கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் வசதிகளுக்காக ஒய்வு அறைகள் குளியல் அறைகள் சிறிய கடைகள் உணவுக்கடைகள் உள்ளன. தனியார் குளியல் அறைகளும் தங்குமிடங்களும் சிறிய மண்டபங்களும் உண்டு. 
#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#திருத்தணி

No comments:

Post a Comment

பழையனூர் (திருவலங்காடு) கைலாசநாதர் ஆலயம் 15.08.26

பழையனூர் கைலாசநாதர் ஆலயம் பழையனூரில் கிழக்குபாகத்தில் அமைந்துள்ளது கிழக்கு நோக்கிய ஆலயம் தென்புறம் நுழைவு வாசல் உள்ளது கீழ்புரம் பலிபீடம் நந...