பழையனூர்
தழுவக் குழைந்த ஈஸ்வரர்
2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது. திருவலங்காடு பஸ் நிலையத்திலிருந்து தெற்கே 1 கிமீ. அ | மீ ஆனந்த வள்ளி சமேத தழுவிக் குழைந்தீஸ்வரர் ஆலயம்.
மேற்கு நோக்கிய ஆலயம்
முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜாதி ராஜன் மூன்றாம் ராஜாதிராஜன் ஆகியோர் காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் செப்புபட்டையங்கள் உள்ளன.
கற்கால மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்கள் கருவிகள் கிடைக்கப்பெற்றன. இந்தக்குறிப்புகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அம்மையார் ஆலங்காடு வழி கேட்க இறைவர் மேற்கு நோக்கி காட்டியருளிய இடமாகும்.
பிரதோஷத்தில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு
ஆலயம் முன்பு மூர்த்தி விநாயகர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி உள்ளார் தனி முன்மன்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயம் தென்புறம் உள் நுழைவில் தனியாக ஒரு பெருமாள் சன்னதியும் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. ஒரு சிறிய விநாயகர் நந்தி இருக்கிறது.
மேற்கு புறம் சிவன் சன்னதி நோக்கி தனியாக சற்று நடுத்தரமான அளவில் ஓரு நந்தி தனி மன்டபத்தில் உள்ளார்.
ஆலய முன்மன்டபத்தில் ஒரு நந்தியும்
இறைவன் கிழக்கு நோக்கியும் அம்மன் ஆனந்தவள்ளியம்மன் தெற்கு நோக்கியும் உள்ளார்கள் கோஷ்ட்டத்தில் பிரும்மா துர்க்கை விநாயகர் உள்ளனர்.
2007ல் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டுள்ளது
திருவாலங்காட்டு ஈசன் திருவாதிரை விழாவில் இவ்வூருக்கு எழுந்தருளி அருகில் உள்ள சாட்சி நாதர் ஆலயம் கைலாசநாதர் ஆலயம் வந்து மன் எடுத்து செல்லும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
கிராம அமைதியான சூழலில் ஆலயம் அமைந்துள்ளது.
#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
#பழையனூர்-திருவலங்காடு
No comments:
Post a Comment