திருவலங்காடு
வட ஆரண்யேஸ்வரர் ஆலயம்
திருவாலங்காடு வட ஆரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
இச்சிவாலயத்தின் மூலவர் வட ஆரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி.
சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜ பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும். இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம்.
கிழக்கு நோக்கியத் தலம்
நடராஜர் இரத்தினசபை. தெற்கு நோக்கி அமைந்துள்ளது. காரைக்கால் அம்மையர் அமர்ந்த தலம்.
மூலவர் :வட ஆரண்யேஸ்வரர், தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருளும் வண்டார் குழலி அம்மன். முன் காலத்தில் ஆலமரக்காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வட ஆரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
பிரார்த்தனை
நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்.
மாந்திக்கு சிறப்பு வழிபாடு உண்டு;
கருவறை உள்சுற்று பிராகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ளார். பிரார்த்தனைத்தலமாக விளங்குகிறது.
#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#திருவலங்காடு
No comments:
Post a Comment