பகுதி - 5- வைக்கம் - எர்னாகுளம் - அருகில் உள்ள ஆலயங்கள்
பதிவு - 27- #சுப்ராம்ஆலயதரிசனம்
#சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
31.உதயம்பேரூர் ஏகாதசி பெரும்திருக்கோயில்:
✨இந்துக் கோயில் கேரளாவின் கட்டிடக்கலை பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். நினைவுச்சின்ன கோபுரங்கள் மற்றும் சுற்று கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ள இக்கோயில் கேரளாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களில் ஒன்றாகும்.
✨பரசுராமர் இங்குள்ள மூல
வரை சிலையை நிறுயதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்றாகும்.
✨நீங்கள் கேரளாவில் பார்க்க அமைதியான மற்றும் ஆன்மீக ஸ்தலத்தை தேடுகிறீர்கள், என்றால், நீங்கள் திரிபுனித்துரா வைக்கம் சாலையில் உள்ள பழமையான இந்த சிவன் கோவிலைக்குறிப்பிடலம்.
✨இந்த கோவில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ளது, இது மாநிலத்தில் உள்ள பல இந்து கோவில்களை நிர்வகிக்கிறது.
✨கோவிலின் தனிச்சிறப்பு வட்ட வடிவமானது அதன் அழகையும் அழகையும் கூட்டுகிறது. மாலைக் காட்சி மிகவும் அமைதியாகவும் அமைதியாகவும் இருக்கும்.
✨கோவிலில் ஒரு இனிமையான சூழ்நிலை உள்ளது, அது நம்மை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நிரப்புகிறது.
✨₹பெரும்திரிகோவில் சிவன் கோவில் வெறும் வழிபாட்டுத் தலமாக இல்லாமல், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பொக்கிஷமாகவும் உள்ளது. இந்த கோவிலுக்கு நீங்கள் எப்போதாவது தரிசிக்க வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் நிச்சயமாக அதன் சிறப்பையும் புனிதத்தையும் கண்டு மயங்குவீர்கள்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🕉️இவ்வாலயம் சென்ற போது ஆலயம் இரவு பூசை ஆரம்பித்து இருந்திருந்தார்கள். எம்மைத்தவிர வேறு பத்தர்கள் கூட்டம் ஏதும் இல்லை. பெரும் மழை பெய்து கொண்டிருந்த போதும், ஆலயம் சுற்றி வந்து காலத்தில் பூசனை நடைபெற்றது.
🕉️இது ஒரு மாடக் கோவில் போன்று இருந்தது. ஆலயக்குருக்கள் மிக நல்ல தமிழ் பேசினார். ஆலயம் புராணம் கூறினார்.
🕉️கேரளவின் முதல் ஆலயம். மிக மிகப்
பழமை என்றும். மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனி என்றும் சிறப்புகள் பலவும் நிறைந்த ஆலயம் என்றும் விளக்கினார்.
🕉️இதை அடுத்து எர்னாகுளம் வந்து இரவு உணவு முடித்துக் கொண்டு, காரைக்கால் எர்னாகுளம் ரயிலில் புறப்பட்டு, மறுநாள் 14.08.2024 அன்று காரைக்கால் வந்து நலமுடன் இல்லம் சேர்ந்தோம்.
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
🛐இறைவர் ஸ்ரீ சுந்தராம்பாள் கைலாச நாதர் திருவருளால், இந்த ஆண்டும், ஆடி சுவாதியில்
ஸ்ரீ சுந்தரர் கைலாயம் செல்லும் விழா நடைபெறும் திரு அஞ்சைக்களம் விழவிற்கு செல்லும் வாய்ப்புக்கிட்டியது.
🛐இந்த விழா தரிசித்து, இத்துடன் இணைத்து சேரநாட்டின் - கேரள மாநிலத்தில் - உள்ள ஸ்ரீபரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட 108 ஆலயங்களில் சிலவற்றையும், மேலும் சில புராதான முக்கிய ஆலயங்கள் சிலவற்றையும் வருடாவருடம் தரிசித்து வருவது வழக்கம்.
🛐எமது குடும்ப நன்பர் திரு கணேசன் அவர்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்து வந்தோம். இந்த பயணத்தின்
முழு பயணத்திட்டத்தைம் வகுத்து, அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து மிக அருமையாக வழிநடத்தினார் திரு கணேசன் அவர்கள் . அவரும், அவர் தம் இல்லத்துணைவியார், மற்றும் செல்லக் குழந்தைகளுடனும் இந்த யாத்திரையில் நான் பங்கு பெற்றது எமது பாக்கியமாகும். மிகவும் பேறு பெற்றேன். அகமகிழ்ச்சியும், மன நிறைவும் தந்தது இந்த பயணம்
🛐9.8.24 முதல் 13.8.24 வரை
நாங்கள் சென்று வந்த யாத்திரையில்,
நாங்கள் தரிசித்த ஆலயங்களைப் பற்றிய சில குறிப்புகள், எங்கள் பயண அனுபவங்கள் சிலவற்றை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததது.
🛐இந்தக் குறிப்புகள் கேரளா யாத்திரைக்கு செல்பவர்களுக்கு இது உதவலாம்.
இந்த முறை கேரள பயணம் பல புதிய அனுபவங்களை எமக்குத் தந்தது.
🛐 முதல் முறையாக சில ஆலயங்களும், மற்றும் சில ஆலயங்கள் ஏற்கனவே தரிசித்து இருந்தாலும், இம்முறை சென்ற போது பல மாற்றங்களுடனும், புதிய அனுபவங்களும் ஏற்பட்டன.
🛐💐இறையருளால் இந்த ஆண்டு கேரள புனித யாத்திரை இனிது நிறைவெய்தியது.
🙏🏻நன்றி வணக்கம்.🙏🏻
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
பயணங்கள் தொடரும்....
13.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
13.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
No comments:
Post a Comment