பகுதி - 4- எர்னாகுளம் மற்றும் அருகில் உள்ள ஆலயங்கள்
பதிவு - 20 - தரிசனம்: 12.8.2024
திருக்காக்கரை - பெருமாள் - சிவன் ஆலயங்கள்
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
திருக்காட்கரை (Thrikkakara)
24. திருக்காட்கரை இரட்டை ஆலயங்களாக அமைந்துள்ளது.
1. திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் (வாமனமூர்த்தி) ஆலயம்.
2. மகாதேவர் ஆலயம்.
🛐திருக்காட்கரை என்ற ஊரில் அமைந்துள்ள முக்கியமான வைணவ 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்றாகும்.
🛐கடவுள் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரமான வாமனமூர்த்திக்கு அமைந்துள்ள மிகச்சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
🕉️தற்போது உள்ள பெயர் ஸ்ரீ திருக்காட்கரை.
மூலவர் திருநாமம் ஸ்ரீ காட்கரையப்பன், ஸ்ரீ அப்பன்.
நின்ற திருக்கோலம்.
🛐உற்சவர் திருநாமம் ஸ்ரீகாட்கரையப்பன்
தாயார் திருநாமம் ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி, ஸ்ரீ வாத்சல்ய வல்லியாகும்.
🛐தீர்த்தம் ஸ்ரீ கபில தீர்த்தமாகும்.
விமானம் ஸ்ரீ புஷ்கல விமானம்.
இருப்பிடம் :
🕉️இது கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருக்கக்கராவில் அமைந்துள்ளது.
🕉️கொச்சி விமான நிலையத்திற்கு சுமார் 20 கி.மீ அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்.
🕉️எடப்பள்ளியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கரக்கரா .
🕉️எர்ணாகுளம் நகர மையத்தில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
🕉️பொது போக்குவரத்து மூலம் நகரம் மற்றும் கிராமப்புறங்களை எளிதாக அணுகலாம்.
சிறப்பு
🕉️திருக்காக்கரை வாமன மூர்த்தி கோவில் இந்தியாவின் முக்கிய இந்து கோவில்களில் ஒன்றாகும்,
🕉️இது விஷ்ணு கடவுளின் வடிவமான வாமனருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று சிவபெருமான் ஆலயம்.
🕉️மகாவிஷ்ணுவின் தச அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரமான வாமனமூர்த்திக்கு அமைந்துள்ள மிகச்சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
🕉️கோயில் 1000-1500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று அங்குள்ள கல் சுட்டிக்காட்டுகிறது.
🕉️இது 4000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும் கூறப்படுகிறது.
🕉️இந்த இடம் வைணவர்கள் தரிசிக்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.
🕉️அரக்க மன்னனான மகாபலி சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் அழுத்தி அழித்த இடம் இந்த தலம் ஆகும்.
🕉️ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் மிக முதன்மையான கோயில்.
ஆலயஅமைப்பு:
இரட்டை ஆலயங்களாக அமைந்திருந்தாலும், ஒரு
கோயில் வட்டவடிவ கேரள பாணிகட்டிடக்கலையில் அமைந்துள்ளது. இது வாமன மூர்த்தி ஆலயம்.
மற்றொன்றுகோயில் மகாதேவருக்கு என்று பரசுராமரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
🕉️மகாவிஷ்ணு வாமனர் தோற்றத்தில், நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கியபடி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
🕉️வாமனர் தோற்றத்தில் இருக்கும் இவரை ‘திருக்காட்கரையப்பன்’ என்றே அழைக்கின்றனர்.
🕉️கோயிலின் முதன்மைக் கடவுள் வாமனமூர்த்தி மற்றும் மகாதேவன் சிலைகள் இரண்டு வெவ்வேறு கருவரைகள் கொண்ட ஆலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
🕉️இரண்டு கோயில்கள் உள்ளன, ஒன்று வாமனனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மற்றொன்று சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
🕉️பிரதான தெய்வமாக வாமன மூர்த்தி அமைந்துள்ளது.
🕉️கோயிலுடன் தொடர்புடைய இரண்டு குளங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று கபிலதீர்த்தம் மற்றும் மற்றொன்று ஆராட்டுவின் போது சிலையின் சடங்கு ஸ்நானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
🕉️மேலும் பிரார்த்தனை மற்றும் விளக்கேற்றும் பக்தர்களுக்காக ஒரு சிறிய 'காவு'.
🕉️கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வாமனரின் சிலை அழகாகவும், மயக்கும் விதமாகவும் உள்ளது.
🕉️பழமையான கட்டிடக்கலை மற்றும் பிரமாண்டமான பலிகல்லு கண்களுக்கு பிரமிக்க வைக்கும் காட்சி.
🕉️இது 2014 இல் புதுப்பிக்கப்பட்டது. மேலும் பல தெய்வங்களும் உள்ளன.
🕉️ இதே கோவில் வளாகத்தில் உள்ள மிகப் பழமையான பரசுராமரால் ஸ்தாபிக்கம் பெற்ற பெரிய சிவன் கோவில் இணைந்தே உள்ளது.
🛐இது தனிக்கோவிலாக, மூலவர் மகாதேவராகவும் , இதனுடன் தனித்தனி கருவரைகளுடன் கனபதி, பார்வதி, மற்றும் துர்க்க சன்னதிகளும் உள்ளன.
வாமன புராணம்:
🕉️மக்கள் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருந்தனர். அந்த அவதாரத்தைப் பற்றிய கதை, இந்தியாவில் பழங்காலத்தில் குறையற்ற ஆட்சியாளர்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டுவதாகும்.
🕉️மகாபலி சக்கரவர்த்தி அகந்தையை நீக்கவே வாமன அவதாரம்.
🕉️மகாவிஷ்ணு தனது வாமன அவதாரத்தில் இப்பகுதியின் முன்னாள் அரசனான மகாபலிக்கு இங்கு காலடி எடுத்து வைத்தார் என்பது புராணக்கதை.
🕉️மகாபலியின் இருப்பை இங்கு உணர முடியும் என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
🕉️அரக்க மன்னனான மகாபலி சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் அழுத்தி அழித்த இடம் இந்த தலம் ஆகும்.
🛐மலையாள தேசத்து அரசன் மகாபலி அசுரர் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும், நல்லாட்சி செய்து தன் நாட்டு மக்களிடம் நற்பெயரைப் பெற்றிருந்தான். அவனுக்கு மூவுலகையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணம் திடீரென்று ஏற்பட்டது. அதற்காக அவன், அசுரர் குலக்குருவான சுக்ராச்சாரியாரைக் கொண்டு மிகப்பெரும் வேள்வியை நடத்தத் தொடங்கினான்.
🛐மகாபலி நடத்தும் வேள்வியால், தன்னுடைய இந்திர பதவி பறிபோய் விடுமோ என்று பயந்த இந்திரலோகத்து அரசன் இந்திரன், அந்த வேள்வியை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட முடிவு செய்தான். முதலில், பிரம்மாவுடன் ஆலோசனை செய்த அவன், பிரம்மாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டான். அவர்கள் சொல்வதைக் கேட்ட மகாவிஷ்ணு, மகாபலியின் வேள்வியை நிறுத்தி, மூவுலகையும் காப்பதாகச் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தார்.
🛐மகாவிஷ்ணு ஒரு கையில் ஓலைக்குடையும், மற்றொரு கையில் கமண்டலமும் தாங்கி, மூன்று அடி உயரத்திலான வாமனத் தோற்றத்தில் பூலோகம் வந்தார். பின்னர் மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்கு சென்று, அங்கு தானம் பெற்றுச் செல்வதற்காக நின்றிருந்தவர்களின் வரிசையில் போய் நின்று கொண்டார். அவரது முறை வருவதற்கு முன்பாகவே தானம் முடிவடைந்து விட்டது.
🛐அங்கிருந்த மகாபலி, வாமனரைப் பார்த்து, ‘நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள், நான் தருகிறேன்’ என்றான்.
🛐வாமனர் அவனிடம், தனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டினார். அப்போது அங்கிருந்த சுக்ராச்சாரியார், ‘நம் வேள்வியை நிறுத்தும் எண்ணத்துடன் மகாவிஷ்ணுவே வாமனர் உருவத்தில் வந்திருக்கிறார். எனவே தானம் செய்து ஏமாற்றமடைய வேண்டாம்’ என்று மகாபலியை எச்சரித்தார். ஆனால் மகாபலி, அந்த எச்சரிக்கையை மீறி, வாமனரின் கையிலிருந்த கமண்டல நீரைப் பெற்றுத் தானமளிப்பதாகச் சொன்னான். அதனைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் வண்டாக உருமாறிச் சென்று, கமண்டலத்தின் நீர் வரும் வழியை அடைத்தார். உடனே வாமனர், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தினார். அதனால் காயமுற்ற வண்டு உருவிலிருந்த சுக்ராச்சாரியார் கமண்டலத்தில் இருந்தது வெளியேறினார்.
🛐மகாபலி வாமனரிடம் இருந்த கமண்டல நீரைப் பெற்று, நிலத்தில் விட்டுத் தானமளிக்கத் தயாரானான். உடனே, வாமனர் தோற்றம் மிகப்பெரும் தோற்றமாக மாறி, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார். பின்னர், ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே?’ என்று மகாபலியிடம் கேட்டார்.
🛐அதனைக் கண்டு வியப்படைந்த மகாபலி, வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘தங்களது மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்” என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலியை நிலத்தினுள் அழுத்தினார்.
🛐அப்போது மகாபலி, ‘இறைவா! என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கொருமுறை என் நாட்டு மக்களைக் காணும் வாய்ப்பை எனக்கு வரமாகத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினான். வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார்.
🛐மகாவிஷ்ணு வாமனத் தோற்றமெடுத்து மகாபலி மன்னனை நிலத்தினுள் அழுத்தி அழித்த இடத்தில் அமைந்ததே திருக்கட்காரை ஆலயம்.
🕉️இன்னொரு தரப்பினர், மகாபலி அழிவுக்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவை வாமனத் தோற்றத்தில் காண விரும்பியதாகவும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்று வதற்காக மகாவிஷ்ணு இங்கு வாமனர் தோற்றத்தில் காட்சியளித்தார் என்றும், கபிலருக்குக் காட்சியளித்த இடத்தில் அமைந்ததே இக்கோவில் என்றும் சொல்கின்றனர்.
🕉️இந்த கோவில் புகழ்பெற்ற ஓணம் கொண்டாட்டத்துடன் தொடர்புடைய
மிக முதன்மையான கோயில்.
🕉️திருக்காக்கர மன்னன் மஹாபலியின் வசிப்பிடம் மற்றும் முக்கிய பண்டிகை ஓணம். இது 10 நாட்கள் நீடிக்கும் திருவிழா மற்றும் ஓணசத்யா (விருந்து) கடைசி 2 நாட்களில் வழங்கப்படுகிறது.
🕉️பண்டிகை நாட்களில் கோயில் மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
🕉️விழா அற்புதமானது மற்றும் ஒரு பெரிய பக்தியுள்ள கூட்டத்தை இழுக்கிறது. யானைகள் மற்றும் பல்வேறு இசைக்கருவிகள் மேளம் நாகஸ்வரம் போன்றவை கவர்ச்சிகரமானவை.
🕉️கோவில் வளாகத்தில் நடைபெற்ற ஓணம் சத்யா மற்றும் கலாச்சாரக் கொண்டாட்டங்களில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
🕉️பத்து நாள் கோயில் திருவிழா உலகெங்கிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களின் ஓணம் கொண்டாட்டத்துடன் இணைந்து கொள்வார்கள்.
🕉️உத்திராடம் மற்றும் சிங்கமாத திருவோணம் ஆகிய நாட்களில் முக்கிய பண்டிகையாகும். மற்ற பண்டிகைகள் விஷு, நவராத்திரி, மகர சங்கராந்தி மற்றும் தீபாவளி.
🕉️இங்கு ஓணம் திருவிழா நடக்கும், அந்த நாட்களில் ஏராளமான உணவு மற்றும் ஷாப்பிங் ஸ்டால்கள் வரும்.
🕉️இந்த கோவிலில் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்களுக்கு பயன்படுத்தப்படும் மண்டபங்களும் உள்ளன.
🕉️ஏராளமான பெரிய மரங்கள் மற்றும் அனைத்து பக்கங்களிலும் போதுமான வாகன நிறுத்துமிடங்களுடன் உள்ள இந்த வளாகம் மிகப்பெரியது. மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன.
🕉️திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு அமைதியான சூழலை வெளிப்படுத்துகிறது.
🌟ஆலயம் திறந்திருக்கும் நேரம்
4:30 AM to 11:00 AM 5:00 PM to 8:00 PM.
🕉️அமைதியான மற்றும் அழகான ஆலயம். கட்டாயம் தரிசிக்கப்பட வேண்டிய ஆலயம்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
நாங்கள் 12.8.24 அன்று Ernakulam Town பகுதியில் ஒரு Hotel Book செய்து இருந்தோம். அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு திருக்காக்கரை என்ற இடத்திற்கு பேருந்தில் சென்றோம்.
இந்த ஆலயத்திற்கு முன்பு ஒரு தரம் வந்து தரிசனம் செய்து இருந்தோம். இப்போது இந்த ஆலயம் மற்றும் இதனுடன் இணைந்த சிவன் ஆலயம் இரண்டும் மிகவும் நேர்த்தியான அளவில் புனரமைப்பு செய்யப்பட்டு நல்ல பொலிவுடன் இருந்தது. மிகவும்
பெரியவளாகம்.
🕉️தற்போது 12.02.2024 அன்று நாங்கள் தரிசனம் செய்ய சென்ற போது கூட்டம் இல்லை. இரண்டு ஆலயங்களையும் அமைதியான முறையில் தரிசனம் செய்தோம்.
🕉️அங்கிருந்து உள்ளூர் பேருந்து பயணம் செய்து திருபுனித்துரா என்ற இடத்தில் உள்ள புகழ்பெற்ற Poornathrayeesa Temple ஆலயம் தரிசிக்கச் சென்றோம்.
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
12.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
12.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
No comments:
Post a Comment