Wednesday, February 12, 2025

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 7- 13.11.24 - Wednesdayபதிவு - 33 - 2#கோகர்ணம் #மகாபலேஷ்வர் கோயில்

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 7- 13.11.24 - Wednesday
பதிவு - 33 - 2
#கோகர்ணம் #மகாபலேஷ்வர் கோயில்

🛕 #மகாபலேஷ்வர் கோயில் தென்னிந்தியாவில் உள்ள ஒரு முக்கியமான யாத்திரைக் கோயிலாகும், இங்கு இந்துக்கள் ஆத்மலிங்கத்தை அல்லது சிவபெருமானின் பிராண லிங்கத்தை வழிபட வருகிறார்கள். இந்த கோயில் திராவிட கட்டிடக்கலையில் அழகாக கட்டப்பட்டுள்ளது மற்றும் இந்து கலாச்சாரத்தில் வலுவான முக்கியத்துவம் வாய்ந்தது.
மகாபலேஸ்வரர் ஆலயம்
மகாபலேஸ்வரர் திருமுறை பாடல் பெற்ற தலம்.

என்றும் அரியான், அயலவர்க்கு;இயல்இ
  சைப்பொருள்கள் ஆகி எனது உள்
நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் மு
  டிக் கடவுள்; நண்ணும் இடம் ஆம்
ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமை
  யோர் பரவும் நீடு அரவம் ஆர்
குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை 
  மிடைந்து, வளர் கோகரணமே. 
- ஞானசம்பந்தர்
03.079.01.

சந்திரனும் தண்புனலும் சந்தித் தான்காண்;
  தாழ்சடையான்காண்; சார்ந்தார்க்கு அமுதுஆ னான்காண்;
அந்தரத்தில் அசுரர்புரம் மூன்றுஅட் டான்காண்;
  அவ்உருவில் அவ்உருவம் ஆயி னான்காண்;
பந்தரத்து நால்மறைகள் பாடி னான்காண்;
  பலபலவும் பாணி பயில்கின் றான்காண்;
மந்திரத்து மறைப்பொருளும் ஆயி னான்காண்-
  மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே
- திருநாவுக்கரசர்
06.049.01
மகாபலேஸ்வரர் ஆலயம்

🔱அரபிக்கடலில் நீராடிவிட்டு, மகாகணபதி , மகாபலேஸ்வரர் மற்றும் தாமிர கெளரி (பார்வதி) ஆலயங்கள் தரிசித்தோம்.

🔱மகாபலேஸ்வரர் ஆலயம் மிகவும் புராதனமானது. மேற்கு பார்த்த சிவன் சன்னதி பழமையான அளவிலேயே தற்போதும் உள்ளது.
கருவரை உள்ளே சென்று
சுவாமியை தொட்டு வணங்க அனுமதி உண்டு.

🔱நீள் சதுர பீடத்தில் நடுவில் சிறிய குழி போன்ற பகுதில் பசுவின் காது போன்ற அமைப்பில் சிவலிங்கம் உள்ளது.

🔱நாம் வணங்கி, கையால் பிடித்து தொட்டு உணர்ந்து வணங்கலாம்.
அதன் மேல் பால், பூ போட்டு வணங்கி வந்தோம்.

🔱ஆண்கள் மேல் ஆடைகள் அணிய தடை உண்டு.
கைபேசிகள் எடுத்துச் செல்லலாம், இயக்க அனுமதி மறுக்கின்றனர்.

🔱முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட ஆலயம் முன்மண்டபம் , உள் மண்படம் மற்றும் மிக அகலமான கருவரை.

🔱கருவரை சுற்றில் கிழக்குப் புறத்தில் துளசிமாடம் வைத்துள்ளனர்.

🔱கருவரை கோபுரம் மிக உயர்ந்தது. அழகிய வேலைப்பாடுகள் மிக்கதாய் உள்ளது. நுட்பமான பழமையன சிலைகள் கொண்ட கல்வெட்டுகள் சில இருக்கின்றன.

🔱கருமை நிறக் கற்களால் ஆனது.
பிரகாரத்தில் சுற்றிலும் மன்டபங்கள் உள்ளன..

🔱இரண்டாம் பிரகாரத்தில், ஆதி கோகர்னேஸ்வரர், மற்றும் சேஷேஸ்வரர் சிவலிங்க சன்னதிகள் கிழக்கு நோக்கி வடக்குப் பிரகாரத்தில், தனித்தனியாக உள்ளன.

🔱ஆலயம் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 - 12.30, மாலை 5 முதல் 8 வரை.

தாமிர கெளரி (பார்வதி) ஆலயம்

🛕சிவன் ஆலயம் பின்புறம், தனி ஆலயமாக பார்வதி ஆலயம். கருவரை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
தாமிர கெளரி சிவனை நினைத்து கையில் பூவுடன் பூசை செய்யும் நின்ற கோலம். 

🛕சிவபெருமானை மணக்க வேண்டும் என்ற விருப்பத்தினால், இங்கு வந்து அவதாரம் செய்தததாகவும், தவம் மேற்கொண்டு, பிரம்மா, விஷ்ணு இவர்களின் துணை கொண்டு, சிவனைக்கைப் பிடித்ததாக வரலாறு. வருடாவருடம், விஜயதசமி அன்று இதற்கான பெரும் மனவிழா இங்கு நடைபெறுவதாகவும், ஏராளமான பக்தர்கள் கூட்டம் அன்று வருவதாக
கூறுகிறார்கள்.

🕉️இச்சிறு ஆலயத்தில், ஈசான மூலையில் சிறிய தொட்டி போன்ற குளம் உள்ளது. இது ஒரு புண்ணியதீர்த்தம். புராணகாலத்தில் இது இங்கு ஒரு புனித கங்கையாகப் பாய்ந்ததாகவும் கூறுகிறர்கள்.தற்போதும் அங்கு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள்.

🛐சிறிய ஆலயமாக இருப்பிலும், நல்ல தூய்மையாக வைத்துள்ளனர், நல்ல பராமரிப்பில் உள்ளது.

மகா கணபதி ஆலயம்
🛐மகாபலஸ்வரர் ஆலயம் தென்புறம் சாலையில் உள்ளது 
மகா கணபதி ஆலயம் உள்ளது.
ராவணன் கணபதி தலையில் குட்டியதாக வரலாறு. இதனால்,
விநாயகர் தலையில் குழி உள்ளது.
இரண்டு கைகள் உள்ள விநாயகர். நின்ற கோலம். பால உருவம். மிகப்பழமையான சிலை.
தனிக்கோவில் மேற்கு பார்த்து அமைந்துள்ளது.

🛐இதை அடுத்து
 அருகில் உள்ள வெங்கட்டரமணன் ஆலயம் சென்று தரிசித்தோம். மிகவும் சிறிய ஆலயம் மூன்று கருவரைகள் மேற்கு நோக்கி நடு சன்னதியில் வெங்கட்டராமர்.
சாலையை ஒட்டி உள்ளது. மகாபலேஸ்வரரர் ஆலயத்திலிருந்து கிழக்கில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் உள்ளது.
இதையும் நாங்கள் தரிசித்தோம்.

🌼ஏற்கனவே கோகர்ணம் வந்த போது, அரபிக்கடலில் நீராடி, ஊரின் கிழக்குப் பகுதியில் உள்ள கோடி தீர்த்தம் குளத்தில் நீராடிவிட்டு, மகாகணபதி தரிசனம் செய்து மகாபலேஸ்வரர் தரிசித்தோம்.

✨இறையருளால், இந்த முறையும் நீராடி, தரிசனம் செய்ய வாய்ப்புக்கிடைத்தது.

💫இவ்வாலயங்களை தரிசித்து இரவு Hotel லில் தங்கி 14.11.2024 விடியற்காலையில் புறப்பட்டு Hampy செல்லும் வழியில் துங்கபத்தரா Dam பார்த்தோம்.

⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼13.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...