#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
பதிவு - 9
#மைசூர் 7.11.24
Jaganmohan Palace (Sri JayachamarajendraArt Gallery) And Auditorium
🌟 மைசூர் அரண்மனை அருங்காட்சியகம்,
🌼இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூர் நகரில் உள்ள அரண்மனை, அருங்காட்சியகம் ஆகும்
🌼இந்த அரண்மனை மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்டது. உடையார் குடும்பத்தினர் அம்பாவிலாஸ் எனப்படும். மைசூர் அரண்மனை கட்டப்படும் வரை இங்கு இருந்தனர்.
🌟அருங்காட்சியகம்
🌼அரசக் குடும்பத்தினர், பயன்படுத்திய உடைகள், நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட (சிம்மாசனம்) இருக்கைகள், அரசகுடும்பத்தினரை ஓவியர் ரவிவர்மாவால் எழுதப்பட்ட ஓவியங்கள், ஓய்வு அறைகள், படுக்கையறைகள், உணவுக்கூடங்கள், அரசர்கள் சிறு வயதினராக இருந்தபொழுது பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்கள், அரச குடும்பத்துப் பெண்கள் வெளியில் செல்வதற்கு பயன்படுத்திய மூடிய பல்லாக்குகள் போன்றவை உள்ளது.
🌼அதற்கடுத்த பகுதியில் அரசர்கள், படைத்தளபதிகள், படைவீரர்கள் பயன்படுத்திய வாள், வேல், ஈட்டி, கத்தி, கவச உடைகள், துப்பாக்கிகள், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட கத்திகள், குத்து வாள், முதலிய பார்வைக்கு உள்ளது.
🌼அரண்மனையில் இடம்பெற்றுள்ள சுவரோவியம் மைசூர் தசராவின் முந்தைய படமாகும், மேலும் இது காய்கறி சாயங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டது. அரச குடும்பத்தின் வம்சாவளியைக் குறிக்கும் வாடியார்களின் குடும்ப மரமும் அரண்மனையில் உள்ள சுவரில் வரையப்பட்டுள்ளது.
🌼விஷ்ணுவின் பத்து அவதாரங்களான தசாவதாரத்தைக் காண்பிக்கும் இரண்டு மரக்கலைப்பொருட்கள் அரண்மனையில் உள்ளன.
🌼அரண்மனை முழுக்க கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட தூண்கள், சிற்பங்கள், திரைகள் நிறைந்துள்ளன. இந்த அரண்மனையில் உள்ள தஞ்சாவூர் மற்றும் மைசூர் ஓவியங்கள், அரண்மனை வளாகத்தில் உடையார் பேரரசர் ஆட்சி காலத்தின் 25 வாரிசுகளின் வரலாறும் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
⭐கட்டிடக்கலை
🌼இந்த அரண்மனை பாரம்பரிய இந்து பாணியில் கட்டப்பட்டுள்ளது மற்றும் மூன்று மாடிகளைக் கொண்டுள்ளது.
⭐ஆடிட்டோரியம்
🌼1900 ஆம் ஆண்டில், அரண்மனைக்கு பின்னால் ஒரு அரச ஆடிட்டோரியம் மண்டபத்துடன் வெளிப்புற முகப்பு சேர்க்கப்பட்டது. இந்த முகப்பில் மூன்று நுழைவாயில்கள் உள்ளன, மேலும் என்டாப்லேச்சரில் மத உருவங்கள் மற்றும் சிறு கோயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
🌼நடனம், இசை, மற்றும் பிற கலாச்சார நிகழ்வுகளுக்காக இந்த ஆடிட்டோரியம் முக்கியமாக தசரா
கலைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
🌟பராமரிப்பு
🌼இந்த அரண்மனை, கர்நாடக அரசினாலும் இந்திய தொல்லியல் துறையினாலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
🌼இது பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்படுகிறது.
நுழைவுக் கட்டணம் ரூ 60 /- (7.11.24)
(Photography inside the place are not permited)
🏵️Cheppals stands available
நன்றி🙏🏼
7.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024
Jaganmohan Palace (Sri JayachamarajendraArt Gallery) And Auditorium
No comments:
Post a Comment