#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 6- 12.11.24 - TUESDAY
பதிவு - 28
#UDUPI #SRIKRISHNATEMPLE
#உடுப்பி #ஸ்ரீகிருஷ்ணர்ஆலயம்
🌼உடுப்பி (Udupi) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாநகரம் ஆகும். உடுப்பி நகரானது கல்வி, வணிகம், தொழில்துறை போன்றவற்றின் மையமான மங்களூருக்கு வடக்கே 55 கிமீ (34 மைல்) தொலைவிலும், மாநிலத் தலைநகரான பெங்களூருக்கு மேற்கே சாலை வழியாக சுமார் 422 கிமீ (262 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
🛕 #உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது.
🛕ஶ்ரீ கிருஷ்ணர் ஆலயம் தென்புறம் நுழைவு வாயில் வழியாக உள்சென்றாலும், கருவரை மேற்கு புறத்தில் உள்ள ஒன்பது துளைகள் கொண்ட பலகணி வழியாக மட்டுமே மூலவர் தரிசனம் செய்ய முடியும்.
🛕முன்புறம் ஒரு சிறிய மண்டபம் அமைப்புள்ளது. பஜனைகள் செய்யவும் பூசைகள் செய்யவும் பக்தர்களுக்கு இங்கு வசதிகள் உள்ளன.
சிறிய உருவம் தினந்தோரும் அலங்காரம், பூசைகள் செய்து பக்தியுடன் வணங்கி வருகிறார்கள்.
🛕பல்வேறு மடங்களின் தொடர்பு இருப்பதால் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
வெளிப்பிரகாரத்தில் கீதா உபதேசம் தேருடன் கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் லீலைகளில் சிலவற்றை ஓவியமாகவும் காட்சிபடுத்தி உள்ளனர்.
🛕அன்னதானக்கூடம் செல்லவும் தனி வழிகள் அமைத்துள்ளனர்.
🌟தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.
🌟சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.
🛕உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் உண்மையிலேயே ஒரு தெய்வீக ரத்தினம்! 13 ஆம் நூற்றாண்டில் பெரிய ஸ்ரீ மத்வாச்சார்யா ஜியால் நிறுவப்பட்ட இந்த கோவிலின் வரலாறு அற்புதங்கள் மற்றும் அதிசயங்கள் நிறைந்தது.
🛕பால கிருஷ்ணாவின் வருகை பற்றிய கதை வெறுமனே ஆச்சரியமாக இருக்கிறது. விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் கிருஷ்ணர் சிலையை மனைவி ருக்மணிதேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கியது.
🛕துவாரகாவைச் சேர்ந்த மூர்த்தி, கடலில் தொலைந்து பல ஆண்டுகளாக களிமண்ணில் மறைந்திருந்தார்.
🛕 தெய்வீக சக்தி மூலம், அது ஒரு வணிகரின் ஜஹாஸில் முடிந்தது. உடுப்பி அருகே ஒரு புயலின் போது, மத்வாச்சார்யா கப்பலை பாதுகாப்பாக வழிநடத்தினார். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பரிசளிக்க, அவர் களிமண் கட்டியைத் தேர்ந்தெடுத்தார், இது அழகான பால கிருஷ்ண மூர்த்தியை வெளிப்படுத்தியது.
🛕 பின்னர் மத்வ சரோவரா ஏரியில் ஸ்நானம் செய்து புதிதாக கட்டப்பட்ட மடத்தில் அதை நிறுவினார்.
🛕 பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட (பாலகிருஷ்ணர்) குழந்தை கிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.
மடங்கள்
🛐ஆலய நிர்வாகமும் தனித்துவமானது, பர்யாயா என்ற அமைப்பில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் எட்டு கணிதங்கள் மாறி மாறி வருகின்றன.
🛐உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு வருடங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.
🕉️உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மடம் சுமார் 800 ஆண்டுகள் மேலாக பக்தி, ஆழ்ந்த சிந்தனை மற்றும் நமது சமஸ்கிருதத்தின் ஆற்றல் மையமாக இருந்து வருகிறது. ஆசீர்வாதங்களையும் வரலாற்றின் தொடுதலையும் தேடும் எவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!
🕉️பர்யாய வைபவம்
🛐புதிய சுவாமி மடத்தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது.
🛐இந்த கோவிலில் கனகனா கிண்டி, பக்த கனக தாஸுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறிய கிட்கி, மற்றும் நவகிரக கிண்டி, வழிபாட்டிற்காக ஒன்பது செட் கொண்ட சண்டி கா கிட்கி போன்ற சில அம்சங்கள் உள்ளன.
🌼கனகதாசர்
முன்பு கனகதாசர் என்ற மகான். தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டுவந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் மேற்கு கோபுரம் எதிரில், ஸ்ரீகனகதாசர் சிலை, ஒரு அழகிய வட்டமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
🌼கனகதண்டி
மேற்கு கோபுரம் மூலம் மூலவர் வழிபாடு செய்யலாம்.
உட்பிரகாரத்தில், ஸ்ரீ கிருஷ்ணரை இந்த ஒன்பது துளை பலகணி மூலம் சுவாமி தரிசிக்கலாம். இதை கனக தண்டி தரிசனம் என்பர்.
🌼கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பால்கணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பால்கணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது.
🕉️ஆலயம் சுற்றி 8 பிரதான மடங்களும், அவற்றின் நீட்சியான கட்டிடங்களும் ஏராளமாக இருக்கின்றன.
🛐ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தின் தென்புறத்தில் உள் இரண்டு முக்கிய புராதான ஆலயங்கள் ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்துடன் இணைந்து வணங்கப்பட வேண்டிவை.
🕉️1.ஸ்ரீ அனந்தீஸ்வரர் ஆலயம்.
🌟அனந்தேஸ்வரர் கோயில் என்பது அனந்தேஸ்வரா என்று அழைக்கப்படும் லிங்க வடிவில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான கோயிலாகும்.
🌟ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்திற்குத் தென்புறம் உள்ள ஆலயம் பரசுராமர் வழிபட்ட சிவன் ஆலயம்.
🌟8ம் நூற்றாண்டு ஆலயம் துலுவ நாட்டின் மிகப் பழமையான ஆலயம்.
🌟மத்துவாச்சாரியர்கள் வழிபட்டு பூசை செய்கிறார்கள்.
🌟 நீள் வட்டக்கருவரை அமைப்பு.
🌟கிழக்குப்பார்த்த சன்னதி
🌟அனந்தீஸ்வரர் சிவலிங்க வடிவம்.
🌟கருவரை முன்பு தனி மன்டபம். முன் மண்டபம் உள்ளது. பலிபீடம் உள்ளது.
🌟முழுவதும் கேரளபாணியில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம்
🌟கிருஷ்ணர் ஆலயம் நுழைவு எதிரில் உள்ளது.
🌟இந்த கோவில் விஷ்ணு மற்றும் சிவன் இருவரின் பிரதிநிதித்துவம் என்று கூறப்படுவது தனிச்சிறப்பு.
🌟இது கிருஷ்ணர் கோயிலை விட பழமையானது, இது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
🌟இது 13 ஆம் நூற்றாண்டில் உடுப்பி கிருஷ்ண மடத்தை நிறுவிய த்வைத தத்துவத்தின் ஆதரவாளரான ஸ்ரீ மத்வாச்சார்யாவுடன் நெருக்கமாக தொடர்புடையது. இங்கே அவர் தனது பல நூல்களை எழுதினார். ஸ்ரீ மத்வாச்சாரியார் மறைந்த தலம் இது.
🌟இந்த ஆலயம் முன்புறம் ஸ்ரீகிருஷ்ணர் ஆலய ரத்தின தேர் உள்ளது. அடைத்து இருந்தாலும், உள்ளே பார்க்க சிறிய ஜன்னல் வழி உள்ளது.
🌟கிருஷ்ணர் கோவிலுக்குச் செல்வதற்கு முன் முதலில் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர கோவிலுக்கும், அதைத் தொடர்ந்து ஸ்ரீ அனந்தேஸ்வரா கோவிலுக்கும் செல்வது வழக்கம்.
2🛐.💠ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் ஆலயம்.
🌟ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் தென்புறம் நுழைவு அருகில் உள்ளது.
🌟சுவாமி கிழக்குப்பார்த்து அழகாக உள்ளார்
🌟நீள் வடிவ கருவரை கேரள அமைப்புக் கோவில்.
🌟தனி முன் மண்டபம், பலிபீடம் உள்ளது.
முன்மண்டபம் பிரகார மண்டபம் நுழைவில் அழகான பழமையான ஓவியங்கள் சிவன், பார்வதி உருவசிலை அமைப்பு அழகு.
🌟ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் தரிசிக்கும் போது இந்த ஆலயமும் ஸ்ரீ அனந்தீஸ்வரர் ஆலயமும் இணைந்து தரிசிக்க வேண்டும்.
🛐 3. மேற்கு ராஜ கோபுரம் எதிரில் கனகதாசருக்கு தனி சிலை வட்ட மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து அவர் உருக்கமாக பாடி ஸ்ரீ கிருஷ்னர் தரிசனம் பெற்றார்.
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
🛐வாகனங்கள் நிறுத்த தனி இடம் வசதி செய்யப்படுள்ளது.
நாங்கள் சென்ற போது ஆலயத்தில் கூட்டம் எதுவும் இல்லை.
🛐கிழக்குப் புறத்தின் வழியாக சென்று தென்புறம் உள்ள குளம் சுற்றி அமைக்கப்பட்ட மிகப்பெரிய காலியான வரிசை கூண்டுகளின் வழியாக தெற்குவாசல் வழி மட்டுமே, ஆலயம் உள்நுழைய வசதி செய்யப்பட்டிருந்தது.
🛐இவ்வாலயயத்திற்கு ஏற்கனவே, இருமுறைகள் வந்து தரிசித்திருந்தாலும்,
இந்த முறை கூட்டம் நெறிசல்கள் தள்ளுமுள்ள இன்றி மிக அமைதியான தரிசனம் செய்துவந்தோம்.
🛐 இவ்வாலயம் தரிசித்துவிட்டு, ஆனேகுந்தி என்ற ஊரில் உள்ள பிரபலமான விநாயகர் ஆலயம் சென்றோம்.
நன்றி.
⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
12.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024
No comments:
Post a Comment