Wednesday, February 12, 2025

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 4 #மைசூர்அருகில் 10.11.24பதிவு - 21#மைசூர் #ஹளபீடு#ஹோய்சலேஸ்வரர் கோயில்#சாந்தலேஸ்வரர் கோவில்

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 4 #மைசூர்அருகில் 10.11.24
பதிவு - 21
#மைசூர் #ஹளபீடு
#ஹோய்சலேஸ்வரர் கோயில்
#சாந்தலேஸ்வரர் கோவில்

🛕இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ளது. இது 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. 

🛕இக் கோயில் பொ.ஊ. 1121 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்த டெல்லி சுல்தான் படைகள் ஹளபீட்டைத் தாக்கிக் கொள்ளையிட்டபோது, இக் கோயிலும் அழிவுக்கு உள்ளாகிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. 

🛕முன்னர் துவாரசமுத்திரம் என அழைக்கப்பட்ட ஹளபீடு, பேளூரில் இருந்து 16 கிமீ தொலைவிலும், ஹாசனில் இருந்து 31 கிமீ தொலைவிலும் உள்ளது. மைசூரில் இருந்து இதன் தூரம் 149 கிமீ ஆகும்.

🛕அக்காலத்தில் போசளப் பேரரசை ஆண்டுவந்த விஷ்ணுவர்த்தன ஹோய்சலேஸ்வரன் என அழைக்கப்பட்ட விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னனின் பெயரைத் தழுவியே இக் கோயிலின் பெயர் ஏற்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. இருந்தாலும், இக் கோயில் மன்னனால் அன்றி நகரத்தின் செல்வந்தர்களான குடிமக்களாலேயே கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

🛕கேதமல்லன், கேசரசேத்தி என்னும் இருவர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இக் கோயிலின் கட்டுமானப் பணிகள் பேலூரில் கட்டப்பட்டு வந்த வைணவக் கோயிலான சென்னகேசவர் கோயிலுக்குப் போட்டியாகவே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

🛕இக் கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய குளம் ஒன்றை நோக்கியபடி அமைந்துள்ளது. இதற்கு யகாச்சி ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு ஒன்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நீர் வழங்கப்பட்டது. இக் குளம் ஹோய்சலேஸ்வரர் கோயில் கட்டப்படுவதற்குச் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. 

🛕இக் கோயில் தென்னிந்தியாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களுள் ஒன்றாகும்.

🛕இக் கோயில் , இரட்டை விமானக் கோயில் ஆகும். ஒரு விமானம் ஹோய்சலேஸ்வரருக்கும், மற்றது சாந்தலேஸ்வரருக்கும் உரியது. சாந்தலேஸ்வரர் என்ற பெயர் விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலேஸ்வரியின் பெயரைத் தழுவி ஏற்பட்டது ஆகும். 

🛕இரண்டு சிவன் ஆலயங்களுக்கும்
 இரண்டுநந்திகளும், தனி மண்டபங்களுடன் உள்ளது.

🛕நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்வதற்கு உகந்த சோப்புக்கல் எனப்படும் ஒருவகைக் கல்லாலேயே இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் ஜகதி எனப்படும் மேடையொன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோயில்களும் கிழக்கு நோக்கியவையாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் முன் மண்டபங்கள் உள்ளன. இரண்டு மண்டபங்களும் இணைக்கப்பட்டனவாய்ப் பெரிதாகக் காட்சியளிக்கின்றன. 

🛕தனித்தனியே இரண்டு கோயில்களும் பேலூரில் அமைந்துள்ள சென்னகேசவர் கோயிலிலும் சிறியவை. கருவறைகளில், சிவனைக் குறிக்கும் எளிமையான லிங்க வடிவங்கள் உள்ளன. 

🛕உட்பகுதியில் கோயிலின் தளவடிவம் எளிமையாகத் தோற்றம் அளித்தாலும், சுவர்களில் உட்பதிந்தும், வெளியே துருத்திக் கொண்டும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ள பகுதிகளால் வெளிப்புறம் வேறுபாடாகக் காட்சி தருகின்றது. 

🛕கருவறைகளுக்கு மேல் அமைந்திருந்து இன்று அழிந்து போய்விட்ட சிகரங்கள் இதன் கருவறையைப்போலவும், நல்ல நிலையிலிருக்கும் பிற ஹோய்சாலக் கோயில்களில் காணப்படுவது போலவும் நட்சத்திர (நாள்மீன்) வடிவு கொண்டு இருந்திருக்கலாம் எனக்கருதப்படுகின்றது. இக் கோயில்களின் வெளிச் சுவர்களில் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. 

🛕ஹளபீட்டில் உள்ள இக் கோயில், இந்தியக் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு எனப்படுகின்றது

🛕போசளர் கட்டிடக்கலை கட்டிடக்கலை போசளர்களின் கற்கோவில் கட்டிடக்கலையாகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பொ.ஊ. 11 ஆம் நூற்றாண்டுக்கும், பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் நிலவிய போசளப் பேரரசுக் காலத்தில் வளர்ச்சியடைந்தது.

🛕இப்பாணியைச் சேர்ந்த கோவில்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுக்கு ஏற்ற மிக மென்மையான சோப்புக்கற்களால் கட்டப்பட்டுள்ளன. போசளர் கட்டிடக்கலையின் மாட்சியை பேலூர், ஹளபீடு, மற்றும் சோமநாதபுரம் ஆகிய ஊர்களில் காணலாம். 

🛕இப்பாணியைச் சார்ந்த கட்டிடங்களுள் பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில், ஹளபீட்டில் உள்ள ஹோய்சாலேஸ்வரர் கோயில், சோமநாதபுரத்தில் உள்ள கேசவர் கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. 

🛕இவற்றைவிட போசளர் கட்டிடக்கலையின் பிற எடுத்துக்காட்டுகளை பேளவாடி, அம்ருதபுரம், ஹோசஹோளலு, நுக்கஹள்ளி ஆகிய இடங்களிலுள்ள கோயில்களிற் காணலாம். 

🛕ஹோய்சாலக் கட்டிடக்கலையில், இந்திய-ஆரியக் கட்டிடக்கலையின் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. எனினும் திராவிடக் கட்டிடக்கலையின் தாக்கம் இதில் குறிப்பிடத் தக்க அளவில் உள்ளது.

🛕போசளப் பேரரசுக் காலத்திய சமூக, பண்பாடு மற்றும் அரசியல் நிகழ்வுகள், தீவிரமான கோவிற் கட்டிடப் பணிகளுக்குக் காரணமாக அமைந்தன. கர்நாடகக் கோயிற் கட்டிடக்கலை மரபில் ஏற்பட்ட மாற்றங்கள் அக்காலத்தில் வைணவ மற்றும் வீரசைவத் தத்துவங்களைச் சார்ந்த சமயங்களின் வளர்ச்சியைப் பிரதிபலித்தன எனலாம். 

🛕அதே நேரத்தில் ஹோய்சாலப் பேரசின் படை பலத்தின் வெளிப்பாடாகவும் இது அமைந்தது. அவர்களை முன்னர் அடக்கி வைத்திருந்த மேலைச் சாளுக்கியரைக் கலைத்துறையிலும் வெல்லவேண்டும் என்ற விருப்பும் இதற்கு ஒரு காரணமாகும். பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஹோய்சாலர் மேலைச் சாளுக்கியரின் பிடியிலிருந்து விடுபடமுன்னர், அப்பகுதியின் கட்டிடக்கலையில் மேலைச் சாளுக்கியக் கட்டிடக்கலையின் தாக்கம் பெருமளவில் காணப்பட்டது. பிற்காலக் கோயில்களில், சாளுக்கியக் கலையின் சில அம்சங்கள் தொடர்ந்து இருந்தாலும், போசள மரபுக்குச் சிறப்பியல்பான பல அலங்காரங்களும், கூறுகளும் காணப்படுகின்றன. 

🛕இன்றைய கர்நாடகத்தில் இக்காலத்தைச் சேர்ந்த ஹோய்சாலப் பாணிக் கோயில்கள் நூற்றுக்கும் மேல் காணப்படுகின்றன. இவற்றுட் பெரும்பாலானவை போசள மன்னர்களின் தாயகமான மலைநாடு பகுதியிலேயே உள்ளன.
( தகவல்கள்📡வலை தளங்கள்) - நன்றி🙏🏻

⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
10.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...