#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 5 - 11.11.24 - MONDAY
பதிவு - 28
#தர்மஸ்தல கோயில் அல்லது தர்மசாலா கோயில் (#Dharmasthala Temple)
🛕 கர்நாடகாவின் தெற்கு கன்னடம் மாவட்டத்தின் பெல்தங்கடி தாலுகாவில் நேத்ராவதி ஆற்றின் கரையில் தர்மசாலா கோயில் அமைந்த ஊராகும்.
🛕ஸ்ரீ மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட
800 ஆண்டு பழமையான சிவன் கோயிலாகும்.
🛕இக்கோயில் மூலவர்களாக மஞ்சுநாதரும், சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திரபிரபாவும், கோயில் காவல் தெய்வங்களாக குமாரசுவாமியும் மற்றும் கன்னியாகுமரி எனும் யட்சினியும் உள்ளனர்.
🛕தர்மஸ்தலா கோயிலின் நிர்வாகத்தை சமண சமய வீரமன்னா பெர்கடே என்பவரின் வழிவந்த குடும்பத்தினர் மேற்பார்வையிடுகின்றனர். ஆனால் கோயில் பூசைகளை மத்வரின் துவைத மரபை பின்பற்றும் வைண அந்தணர்கள் கோயில் பூசைகள் செய்கின்றனர்.
🛕800 ஆண்டுகளுக்கு முன்னர் குடுமா கிராமத்தில் (தற்கால தர்மஸ்தலா) வாழ்ந்த சமணரான வீரமன்னா பெர்கடே என்பவரின் கனவில் தோன்றிய தர்மதேவதை, இத்தலத்தில் மஞ்சுநாதர், சந்திரபிரபா, குமாரசுவாமி மற்றும் கன்னியாகுமரி தெய்வங்களின் விக்கிரகங்களை நிறுவி வழிபடச் சொன்னார். அதன் படியே வீரமன்னா பெர்கடேயும் நான்கு தெய்வங்களுக்கும் சன்னதிகள் எழுப்பி வழிபட்டார்.
💠தெய்வங்களுக்கு பணிவிடை செய்பவர்கள் தேலம்படிதயா என்றும் மனவோலிதயா என்றும் அழைக்கப்பட்டனர். அதற்கு பிரதிபலனாக, பெர்கடே குடும்பத்தைப் பாதுகாப்பதாகவும், கோவிலுக்கு நிறைந்த தருமத்தையும் புகழையும் வழங்குவதாகவும் தெய்வங்கள் உறுதி அளித்தனர். பெர்கடே இவற்றை ஏற்றுக் கொண்டு கோவில்களைக் கட்டி பிராமண குருக்களை அழைத்து சடங்குகளை நிறைவேற்றினர்.
💠இயற்கை தெய்வங்களுடன் சிவலிங்கத்தையும் அமைக்குமாறு இந்த குருக்கள் பெர்கடேவைக் கேட்டுக் கொண்டனர். மங்களூர் அருகில் உள்ள கத்ரியிலிருந்து மஞ்சுநாதேஸசுவரா ஆலயத்தின் லிங்கத்தைக் கொண்டு வர தம் பணியாளான அன்னப்ப சுவாமியை தெய்வங்கள் அனுப்பின. பின்னர் லிங்கத்தைச் சுற்றி மஞ்சுநாதா ஆலயம் கட்டப்பட்டது.
💠16 ஆம் நூற்றாண்டில் தேவராஜா ஹெக்கடே, உடுப்பியின் ஸ்ரீ வதிராஜா சுவாமியை இந்தக் கோவிலைக் காண வருஅழைத்தார். அவரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று வந்த சுவாமிஜி, மஞ்சுநாதா கடவுளின் தெய்வச்சிலையை வேகை தருமாறு சடங்குகளின்படி அமைக்கவில்லை என்பதால் தனக்கு வழங்கிய பிக்ஷையை(உணவு) மறுத்துவிட்டார். பின்னர் சிறீ ஹெக்கடே சுவாமியே சிவலிங்கத்தை மறுபிரதிஷ்டை செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்த பின்னர், சுவாமி அவர்கள் சிவலிங்கத்திற்கு மாதவா முறையின் படி பூசைகளைச் செய்ய ஏற்பாடுகளைச் செய்தார்.
💠வேதமுறைப்படியான சடங்குகளையும் ஹெக்கடேவின் தரும செயல்களையும் கண்ட பின்னர், சுவாமி அவர்கள் தருமம் மற்றும் ஈகையின் இருப்பிடம் என்ற பொருள்படும்படி அந்த இடத்திற்கு தர்மஸ்தலம் என்று பெயரிட்டார். 600 ஆண்டுகளுக்கு முன்பு பெர்கடேக்கள் உருவாக்கிய தருமச் செயல்களையும் சமய ஒற்றுமையையும் ஹெக்கடே குடும்பத்தினர் வளர்த்து உறுதிப்படுத்தி வருகின்றனர். ஹெக்கடே குடும்பத்தினர் பெர்கடே குடும்பத்தின் வழிவந்தவர்களாவர். இந்தத் தன்னலமற்ற அர்ப்பணிப்பின் பலனாக தர்மஸ்தலம் இன்று பூத்துக் குலுங்குகிறது.
அன்னக் கொடை
🌟இங்கு தினந்தோறும் சராசரியாக சுமார் 10,000 புனிதப் பயணிகள் வருகை தருகின்றனர். இக் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான புனிதப் பயணிகளின் ஜாதி, நம்பிக்கை, கலாச்சாரம் அல்லது நிலை ஆகியவை எதுவாக இருப்பினும் அவர்கள் ஒவ்வொருவரும் தர்மஸ்தலத்தின் மதிப்புமிக்க விருந்தினர்களே ஆவர்.
🌟இந்தப் புனிதமான கோவிலின் நிகழ்வுகளில் "அன்னதானமே" (இலவச உணவு) சிறப்பு மிக்க ஒன்றாகும். தினந்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இங்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. கோவிலில் அதிநவீன கருவிகளைக் கொண்டு நாள் முழுவதும் தரமான உணவு தயாரிக்கப்படுகிறது.
🌟இந்தக் கோவில் அன்னதானத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டைப் பார்ப்பதில்லை. உணவு உண்ணும் இடம் "அன்னப்பூர்ணா" என்று அழைக்கப்படுகிறது.
மருத்துவக் கொடைகள்:
🔆 இவர்களின் மருத்துவ உதவி திட்டம். உதட்டுப்பிளவிற்கான அறுவைசிகிச்சை மற்றும் பற்சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் போன்ற தனிச்சிறப்பு சிகிச்சைகளையும் வழங்குகிறது.
🌟ஹெக்கடே பண்டைய உடல் ஆரோக்கிய முறையான யோகக்கலையைப் பரப்புவதில் ஊக்கத்துடன் ஈடுபட்டுவருகிறார். யோகா கற்றுத்தரும் மையங்களில் சூர்ய நமஸ்கார முகாம்கள் வழக்கமாக நடத்தப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 250 பேருக்கு யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 100 மாணவர்களுக்கு கற்றுத்தருகின்றனர்.
பாதுகாப்பு கொடை
🌟1972 ஆம் ஆண்டு தொடங்கிய இலவச மொத்தத் திருமணங்களை நடத்தி வைக்கும் நிகழ்வு புகழடைந்துள்ளது. இந்நிகழ்வில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான ஜோடிகள் திருமணம் (சமூக விவாக மஹோத்சவம்) செய்து கொள்கின்றனர்.
🌟அனைத்து மதங்களும் இனங்களும் வரவேற்கப்படும் இந்த புனிதத் தலத்தின் மரபினைப் பின்பற்றி நூற்றுக்கணக்கான தம்பதிகள் தங்கள் மத வழக்கப்படி திருமணம் செய்துகொள்கின்றனர். திருமண ஆடை, தாலி மற்றும் தம்பதியரின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விருந்தினர்களுக்கான திருமண விருந்து ஆகியவற்றின் செலவை ஆலயமே ஏற்றுக்கொள்கிறது.
ஹெக்கடே குடும்பம்
🌟தர்மஸ்தலத்தின் தற்போதைய தலைவரான பத்மபூசன் டாக்டர். டி. வீரேந்த்ர ஹெக்கடே, தர்மாதிகாரி பீடத்தின் 21 ஆம் அதிகாரியாவார். 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலவச மொத்தத் திருமணம் போன்ற பல சமூக பொருளாதாரத் திட்டங்களை இவர் தொடங்கியுள்ளார்.
🌟1973 ஆம் ஆண்டு ஒரே பாறையில் செதுக்கப்பட்ட பாகுபலி கடவுளின் சிலை ஒன்று, தர்மஸ்தலத்தில் மஞ்சுநாதா ஆலயத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய குன்றின் மீது நிறுவப்பட்டது. அந்தச் சிலை 39 அடி (12 மீ) உயரமும், 175 டன் எடையும் கொண்டிருந்தது.
🌟தர்மஸ்தலத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆரம்பப் பள்ளிகள் முதல் தொழில்முறைக் கல்லூரிகள் வரையிலான 25 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் இயங்கிவருகின்றன. பாரம்பரிய கட்டடக்கலையைப் பாதுகாக்கப்பதில் அக்கறை எடுத்துக்கொள்வதால் பழைய மற்றும் வலுவற்ற கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
மஞ்சுஷா மியூசியம்
🌟எதிர்கால தலைமுறையினருக்காக பண்டைய கால சுவடிகள் மற்றும் ஓவியங்கள் மிகுந்த சிரத்தை மற்றும் கவனத்துடன் மீட்கப்பட்டுள்ளன. பண்டைய காலப் பொருள்களின் அருங்காட்சியகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அரிய பழங்கால கார்கள் பலவற்றைக் கொண்டுள்ள கார் அருங்காட்சியகமும் உள்ளது.பழங்கால மரத் தேர்களும் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சர்வ தர்ம சம்மேளனம்
🌟ஒவ்வோர் ஆண்டும் தர்மஸ்தலத்தில் நடைபெறும் சர்வ தர்ம சம்மேளனத்தில் (அனைத்து சமயக் கூட்டம்), பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் கொண்ட ஆன்மீகத் தலைவர்களும் கலை மற்றும் இலக்கிய ஆதரவாளர்களும் கலந்துகொள்கின்றனர்.
🌟வருகை தரும் எல்லா பக்தர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் வழங்கும் ஒரு சில யாத்திரைத் தலங்களில் தர்மஸ்தலமும் ஒன்றாகும்.
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
🌼ஆலயவளாகம் பெரியது. ஆலயம் ஏராளமான பக்தர்கள் வந்த வன்னம் உள்ள ஆலயம்.
🌼கர்னாடகா மக்கள் இந்த ஆலய சுவாமியை மிகுந்த பயம் கலந்த பக்தியுடன் வணங்குகிறார்கள்.
🌼சண்டை வழக்கு, மேலும், எந்த ஒரு பிரச்சணைகளையும், மஞ்சுநாதர் தீர்த்து வைப்பார் என்ற பெரு நம்பிக்கை இங்கே உள்ளது.
🌼இதனால், ஏராளமான மக்கள் தங்கள் வேண்டுதலை வைக்கிறார்கள். பிரார்த்தனை நல்லபடியாக முடிந்தவுடன் தங்களால் முடிந்த பொருட்களை செலுத்தி வருகிறார்கள். இது போன்ற பிரார்த்தனை பொருட்களில், ரயில் பெட்டி, விமானம், மேலும் ஏராளமான வித்தியாசமான பொருட்களை ஆலய வளாகத்தில் காட்சிபடுத்தியுள்ளனர். பக்தர்களின்
வித்யாசமான வழிபாடுகள்.
🌼தனியார் ஆலயம் என்பதால், ஏராளமான வசதிகள் பக்தர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
கூட்டம் அதிகம் வருவதால் தனி கட்டிடத்தில் தரிசன q வரிசை தொடங்குகிறது. VIP / கட்டன வரிசையும் உண்டு.
🌼பேருந்துகள் / வாகனங்கள் நிறுத்த தனித்தனி இடங்கள் மிகவும் வசதிகள் உண்டு.
🌼நியாயமான / குறைந்த வாடகையில் தங்குமிடங்கள் உண்டு.
🌼பல இடங்களுக்கும் செல்ல Auto வசதிகள் உண்டு.
🌼தர்ம ஸ்தாலா பெயர் மட்டுமல்ல, இவாலயத்தின் சகல விஷயங்களிலும் நியாயம் நடக்கிறது. தவறு இருந்தால், உடனடியாக தண்டனை உண்டு என்பதை
உணர்த்திவிடுகிறார்.
🌼கர்நாடகா செல்பவர்கள் தர்மஸ்தலா கட்டாயம் வழிபட வேண்டிய ஊர்.
🌼எமக்கு, மூன்றாவது முறையாக இந்த ஆலயம் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம்.
🌼நாங்கள் இங்கு சென்று ஆலயம் தரிசித்து தங்கி மறுநாள் 12.11.2024 விடியற்காலை புகழ்பெற்ற கட்டில் ஆலயம் சென்றோம்
நன்றி.
11.11.24 # சுப்ராம் ஆலயதரிசனம்
⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
11.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024
No comments:
Post a Comment