#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 3. #மைசூர்அருகில் 9.11.24
பதிவு - 19
#மைசூர் #தலகாவிரி
#தலைக்காவிரி :
🏞️இந்த இடம், காவிரி ஆற்றின் மூலமாக - உற்பத்தி ஸ்தானமாக - பொதுவாகக் கருதப்படும். இது கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், பிரம்மகிரி மலைகளில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீ. உள்ள இந்து புனிதத் தலமாகும்.
🏞️தலைக்காவிரி, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பாகமண்டலாவிலிருந்து 7 கி.மி மற்றும் மடிகேரியிலிருந்து 48 கி.மி தொலைவில் உள்ளது. இது கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
🏞️இதுவே காவிரி ஆற்றின் மூலம். இத்திருத்தலத்தில் தோன்றும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களில் பாய்ந்தோடி வங்கக் கடலில் கலக்கிறது.
🏞️ஒரு மலைப்பாதையில் கொடவர்களால் ஒரு தொட்டி அல்லது "குண்டிகே" அமைக்கப்பட்டுள்ளது, தோற்றம் என்று கூறப்படும் இடத்தில். இது ஒரு சிறிய கோயிலாக அமைந்துள்ளது, மேலும் இப்பகுதி பக்தர்கள் அடிக்கடி வருகிறார்கள்.
🏞️இது கொடவர்களின் வழிபாட்டுத் தலமாகும். சிறப்பு நாட்களில் நீராட ஒரு புனித இடமாக கருதப்படும்.
இந்த தொட்டியை உணவளிக்கும் நீரூற்று என இந்த நதி உருவாகிறது. பின்னர் நீர் சிறிது தூரத்தில் காவிரி ஆறாக வெளிப்படுவதற்கு நிலத்தடிக்கு பாய்கிறது.
🏞️இந்த கோயில் சமீபத்தில் (2007) மாநில அரசால் விரிவாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
🏞️தலைக்காவிரி பாகமண்டலாவிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், பனதூரிலிருந்து (கேரளா) 36 கி.மீ தொலைவிலும், மடிக்கேரியிலிருந்து 48 கி.மீ தூரத்திலும் உள்ளது.
🛕இங்குள்ள கோயில் கவரம்மா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு வணங்கப்படும் பிற தெய்வங்கள் அகஸ்தீஸ்வரர், இது காவிரிக்கும் முனிவர் அகஸ்தியருக்கும் தொடர்பு உள்ளது
🛕இங்குள்ள கோயில் கவரம்மா
காவிரி சங்க்ரமன திருநாள் -
சங்கராந்தி - துலாம் மாதம் முதல் நாள் ; (இந்து நாட்காட்டியின் படி) இது பொதுவாக அக்டோபர் நடுப்பகுதியில் வரும் (அக்டோபர் 17) நாளில் அண்டைப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த புனித ஆற்றின் பிறப்பிடத்திற்கு வந்து நீராடிச் செல்வது வழக்கம்.
🛐அத்திருநாளில், ஊற்றின் வேகமும் உயரமும் அதிகரித்து காணப்படுவது வியப்பு. காவிரியின் கரைகளில் உள்ள நகரங்களில் காவிரி சங்கராந்தி (துலா மாதத்தில் புனித குளியல்) காணப்படுகிறது.
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
🌼காவிரி உற்பத்தியாகும் புனித ஸ்தானம்.
அடிவாரத்தில் பெரிய சிறிய பேருந்துகள் நிறுத்துமிடம் உள்ளது.
🌼Bus Parking இடத்திலிருந்து ஆலயம் நுழைவு பகுதி வரை சுமார் 500 மீட்டர் செல்ல Auto உள்ளது. அல்லது நடந்தும் செல்லலாம். அங்குள்ள நுழைவு வாயிலில் ஒரு பெரிய Arch 🏞️அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து நீர் உற்பத்தி தொட்டி மற்றும் ஆலயம் செல்ல, நீண்ட அழகிய படி வரிசைகள் உண்டு. மேலும் சாய்தள வழி ஒன்றும் வலதுபுறத்தில் உள்ளது.
🏞️இங்கிருந்து மலைக்காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது. மாலை 6.00 மணி வரை அனுமதி உண்டு. குப்பைகள், உணவுக் கழிவுகள் தடை உண்டு. மிகவும், தூய்மையான வளாகமாக பாராமரிக்க வேண்டியிருப்பதால், பல கட்டுப்பாடுகள் செய்து வருகிறார்கள். நல்ல பராமரிப்பு. இலவச நுழைவு. எவ்விதக் கட்டனம் இல்லை. சிறிய தொட்டியில் நீர் உற்பத்தியாகும் இடம். அதை கருவரையாக அமைத்து ஒரு விளக்கும் ஏற்றி வைத்துள்ளனர். இங்கும் பூசைகளும் உண்டு
🛕தொட்டியில் இருந்து வரும் நீரை சற்று பெரிய குளம் அமைத்து அதில் விட்டு அந்த குளத்தில் நீராடி முடித்தவர்களுக்கு, நீர் உற்பத்தியாகும் சிறு தொட்டியில் உள்ள நீரை எடுத்து பூசாரி தெளித்து விடுகிறார்கள். .
🕉️ குளத்தில் இருந்து வரும் நீரை மீண்டும்
ஒரு நந்தி தலை அமைத்து அதிலிருந்து நீரை வெளியேற்றி ஆற்றிற்குள் செல்ல அமைப்பு ஏற்படுத்தியுள்ளர்கள்.
🌼காவிரி உற்பத்தியாகும் இடத்திற்கு மேல் ஒரு தலவிருஷ்சம் உள்ளது. அதற்கு தனி மேடையும் அமைத்து உள்ளனர்.
🛕சற்று மேல்புறத்தில், ஸ்ரீ அகத்தீஸ்வரர் கருவரை சன்னதி, ஒரு விநாயகர் சன்னதி காவிரியம்மாவிற்கு ஒரு சன்னதியும்
அமைக்கப்பட்டுள்ளது.
🌼பிரகாரத்தில் அலுவலகக்கட்டிடம், மற்றும் அர்ச்சனை, பூசை, மற்ற ஹோமம் முதலியவை கட்டணத்துடன் செய்யப்படுகிறது.
🌼மேலும், உடை மாற்றும் இடம், அன்னதானக் கூடம், கழிவரை, Cheppal Stand, Police Booth முதலிய ஏற்பாடுகளும் தனித்தனியாக முறையாக செய்யப்பட்டுள்ளது.
🌼 நாங்கள் மேலே சென்று, நீராடி வணங்கி வழிபட்டோம். இலவசமாக அன்னதானம், காபி, டீ குடித்தோம்.
மீண்டும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்துக் கொண்டு, அடிவாரம் வந்து புறப்பட்டோம். இங்கும் ஒரு - தனியார் - மடம் ஆலயம் - உள்ளது.
🛐மாலையில் இங்கிருந்து புறப்பட்டு தங்க புத்தர் ஆலயம் சென்றோம்.
⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
9.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024
No comments:
Post a Comment