Wednesday, February 12, 2025

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 6 & 7- 12, & 13.11.24 - TUESDAY | Wednesdayபதிவு - 31#முருடேஸ்வரர் #முருதீசுவர் ஆலயம்

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 6 & 7- 12, & 13.11.24 - TUESDAY | Wednesday
பதிவு - 31
#முருடேஸ்வரர் #முருதீசுவர் ஆலயம்

⚜️முருதீசுவர் என்பது கருநாடகத்தின் வட கன்னட மாவட்டத்தில் உள்ள ஊர் ஆகும், இந்நகரம் அரபிக்கடலோரம் அமைந்துள்ளது.

⚜️மங்களூரு-மும்பை கொங்கன் தொடருந்துபாதையில் முருதீசுவர் என்ற பெயரில் இங்கு தொடருந்து நிலையம் உள்ளது.

⚜️இந்நகரத்தில் நாம் காண வேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ளது.

⚜️முருதீஸ்வரர் ஆலயம், புகழ்பெற்ற 20 மாடிகள் கொண்ட 249 அடி ராஜகோபுரம், 123 அடி சிவன் சிலை, மற்றும் அடிப்பீடத்தில் அமைந்துள்ள ஆலயங்கள், செயற்கை குகை, சிலையின் பீடத்தின் மேல்புறம் தலவரலாற்று சிற்பம், மற்றும் அருகில் உள்ள கீதா உபதேசம் சிற்பம், காணத்தக்கவை.

⚜️ சுற்றுலாவிற்காககடற்கரைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் விளயாட்டுப் பகுதிகள், பொழுதுபோக்கு பூங்கா, தங்குமிடங்கள் இவற்றையும் அமைத்துள்ளனர். 

⚜️சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக இருப்பதால், ஏராளமான மக்கள் தினம்தோறும் வந்து குவிகின்றனர்.
நகரின் வளர்ச்சியும் அபாரமாக உள்ளது.

🛕இராஜ கோபுரம்

🛕#முருடேஸ்வரர் ஆலயம்
இக்கோவில் கன்டுக்க / கந்துகா மலையில் மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. முருதீசுவர் என்பது இறைவன் சிவனின் இன்னொரு பெயராகும். 

🛕சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில் உள்ள 249 அடி உயர ராஜகோபுரம், உலகிலேயே மிக உயரமான ஆலய கோபுரம் என்று கூறுகின்றனர்.

🛕இந்த வளாகத்தில் உள்ள ராஜ கோபுரம் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது. 

🛕20 மாடிகள் இருப்பினும் 18 மாடி வந்ததும் பெரிய Hall| அமைக்கப்பட்டு அங்கே 4 பக்கங்களிலும் கண்ணாடி ஜன்னல்கள் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பார்த்தால் கீழே உள்ள 123 அடி உயரமுடைய சிவனின் சிலையின் அற்புதக்காட்சியைக் காணலாம். மேலும், அரபிக்கடலின் அழகும், சுற்றுப்புறங்கள் காண்பதற்கும் அற்புதமான ஓர் அனுபவம்.

🛕அரபிக்கடலை நோக்கிய மலையில் அமைந்துள்ள இந்த ஆலயம், கண்கொள்ளாக் காட்சிகளை வழங்குகிறது.

🛕மேல சென்றுவர மின்தூக்கி (லிப்ட்) வசதிகள் லிப்டில் சென்றுவர பெரியவருக்கு 20 ரூபாயும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு 10 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு லிப்ட் 6 பேர் கொண்ட கொள்ளலவு 2 மின்தூக்கிகள் வசதிகள் உள்ளன. காலை 7 மணிக்கு, ஆரம்பித்து தொடர்ந்து பகலில் மட்டும் அனுமதி உண்டு.

🛕கோபுரத்திலிருந்து சிவன் சிலை, கடல் மற்றும் சுற்றுப்புற இயற்கை அமைப்புகளும், கடற்கரையில் உள்ள எல்லாப் பகுதிகளும் மிக நன்றாக கண்டுகளிப்பது மிக நல்ல ஒரு அனுபவம்.

🌼சிவன் சிலை:
💠சிவனின் சிலை உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். சிவனாரின் சிலை 123 அடியில் கம்பீரமாக வீற்றுள்ளது. கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரிகிறது. எதிரே நந்தியின் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

💠123 அடி உயரமுள்ள சிவன் சிலை ஒரு சின்னமான அடையாளமாகவும், பொறியியலின் அற்புதமாகவும் உள்ளது.

💠 இந்த சிலையை சுற்றிலும் அழகான புல்வெளி அமைத்து பூங்கா போன்று இருப்பதால் புகைப்படம் எடுப்பதற்கு இது ஒரு சிறந்த இடமாக அமைகிறது. 

 💠சிலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். 

💠சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் ஒன்றும் உள்ளது. 
 
💠சிலையின் கீழ்புறத்தில் விநாயகர் குழந்தை வடிவில் சிவலிங்கத்தை வைக்க, உடன் ராவனர் உள்ளது போல தல புராண காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

💠சிலையின் அடிபீடத்தில் ஓரு செயற்கை குகை ராவணன் கதையில் வரும் கதாபாத்திரங்களின் சிலைகளுடன் குகை அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
உள் பகுதியில் 3D அமைப்பில் முருடேஸ்வரர் ஆலய தலவரலாற்றை சிலை மற்றும் ஓவியமாகவும், ஒலி ஒளிக்காட்சியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நுழைவுக்கட்டணம் உண்டு. காலை 7 மணிக்கு மேல் அனுமதி உண்டு.

💠அதற்கு சற்று மேற்கு புறத்தில், ஸ்ரீகிருஷ்ணர் அர்சுனனுக்கு கீதா உபதேச காட்சி பெரிய அளவிலும், ஒரு சிறிய ஆலய சன்னதியும் அமைக்கப்படுள்ளன.

💠சிலை அமைக்கப்பட்டுள்ள மலைக் கோவிலுக்கு செல்லும் படிகட்டுக்களின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

முருடேஸ்வரர் ஆலயம்

🕉️இக்கோவிலை பெரும் பொருள் கொடை தந்துபுதுப்பித்து அதன் இராசகோபுரத்தையும் கட்டியவர் பிரபல தொழிலதிபர், திருவாளர் இராம நாகப்ப செட்டி. (RN Chetty) அவர்கள் ஆலயத்தினுள் இவரின் சேவைக்கு நன்றி பாராட்டு முகமாக ஒரு பெரிய படம் வைத்துள்ளனர்.
மேலும், தனியாக வளாகத்தில் ஒரு சிலையும் வைத்துள்ளனர்.

🕉️ இந்த ஆலயம் மலையின் முன்பகுதியில் பெரிய சிலையின் அடிபுறம், சற்று வலதுபுரத்தில் தனி இடத்தில் உள்ளது.

🕉️கருவறை தவிர இக்கோவிலின் அனைத்துப்பகுதிகளும் புனரைமைக்கப்பட்டதாகும் (புதிதாக கட்டப்பட்டதாகும்).

🕉️முழுவதும் கற்றளியால் கட்டப்பட்டுள்ளது. விநாயகர்,சிவன் ஹனுமான், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நாகர், அனைத்துக் கருவரைகளும் வெள்ளியால் காப்பு போடப்பட்டுள்ளது.

🕉️தங்கத் தேர் உள்ளது.
பிரமிக்க வைக்கும் சிலைகள் கருவரைகளுக்கு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து சன்னதிகளும் வெள்ளி கவசத்தால் மூடப்பட்டுள்ளது.

வரலாறு
🔺இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள முருதேஷ்வர் கோயில் பழங்காலத்திலிருந்தே ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. 

🔺இராவணன் புராணக்கதை: 
புராணத்தின்படி, லங்காவின் அசுர மன்னனான ராவணனுக்கு காட்சியளித்த சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட ஆலயம். சிவபெருமான் ராவணனுக்கு ஆத்மலிங்கம் என்ற தெய்வீக லிங்கத்தை வழங்கினார், அது அவரை போரில் வெல்ல முடியாது. இருப்பினும், விஷ்ணுவும் விநாயகரும் ராவணனை இலங்கைக்கு எடுத்துச் செல்லாதவாறு, ஆத்மலிங்கத்தை தரையில் வைக்கும்படி செய்தனர், அது அசையாது இங்கேயே இருந்து விளங்கி வருகிறது.
🔺ஆத்மலிங்கத்தின் ஒரு துண்டு இப்போது கோயில் அமைந்துள்ள கந்துகா மலையில் விழுந்தது. 

🔺ராமாயணம்: இந்தக் கோயில் இராமாயணக் காவியத்துடன் தொடர்புடையது, ஏனெனில் இது இராவணனைக் கொன்ற பிறகு ராமர் தவம் செய்த இடமாக நம்பப்படுகிறது. 

🔺இந்து மத நூல்களில் உள்ள குறிப்புகள்: பல்வேறு இந்து மத நூல்களிலும் இந்தக் கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முருதேஸ்வரா ஆலயத்தில் செய்யப்படும் பூசைகள்:
 🛐பலவிதமான சடங்குகள் மற்றும் பூஜைகளை வழங்குகிறது, இது ஆன்மீக நிறைவைத் தேடும் பக்தர்களின் முக்கிய இடமாக அமைகிறது. மிகவும் பொதுவான சடங்குகள் பின்வருமாறு:

🛐ருத்ராபிஷேகம்: சிவபெருமானுக்கு புனித நீர், பால் மற்றும் மலர்களை உள்ளடக்கிய ஒரு சக்திவாய்ந்த சடங்கு.

🛐பஞ்சாம்ருத அபிஷேகம்: பால், தயிர், தேன், சர்க்கரை மற்றும் நெய் ஆகிய ஐந்து புனித பொருட்களைப் பயன்படுத்தி அபிஷேகத்தின் ஒரு தனித்துவமான வடிவம்.

🛐ஹோமம் : சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தவும், தெய்வீக ஆசீர்வாதங்களை பெறவும் செய்யப்படும்.

🌟வளாகம் சுற்றியுள்ள கடற்கரை அழகியது மற்றும் ஓய்வெடுக்க அல்லது நீந்துவதற்கு ஏற்றது. 

🌟சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் சிற்பங்களுடன் இந்த ஆலயமே அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

🌟மேலும் சூழல் அமைதியாகவும் அமைதியாகவும் இருக்கிறது.

🌟இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் இடம்.
 நன்கு பராமரிக்கப்பட்டுவரும் கோயில்.

#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

🔅நாங்கள் கொல்லூர் ஸ்ரீ முகாம்பிகை தரிசனம் முடித்துக் கொண்டு, 12.11.24 மாலை முருடேஸ்வரர் வந்து ஒரு Hotel வில் தங்கிக் கொண்டோம்.
🔅அங்கிருந்து சிவன் ஆலயம் சென்று தரிசனம் செய்தோம். இரவு அர்த்தஜாம பூசையில் கலந்து கொண்டோம்.
🔅இரவில், அர்த்தஜாம பூசையில் தங்கத்தேரில் சுவாமி உட்பிரகாரம் புறப்பாடு நடைபெறுகிறது.
🔅இரவு உணவு முடித்து Hotel லில் தங்கினோம்.
🔅13.11.24 விடிற்காலை மீண்டும் ஆலய வளாகம் சென்று எல்லா இடங்களையும் மீண்டும் கண்டு களித்தோம்.
🔅20 மாடி ராஜகோபுரம் மின்தூக்கியில் சென்று வந்தோம்.
🔅123 அடி உயர சிவன் சிலை அருகில் சென்று சுற்றி வந்தோம். பீடம் அடிப்பகுதியில் உள்ள குகை (நுழைவுக் கட்டணம் ரூ 20/-) சென்று பார்த்து வந்தோம். 
🔅மீண்டும் முருடேஸ்வரர் ஆலயம் தரிசித்து விட்டு, Hotel சென்று காலை உணவு முடித்துக் கொண்டு இடகுன்ஞ் என்ற புகழ்பெற்ற இடத்தில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீதுள்ள விநாயகர் ஆலயம் தரிசிக்க சென்றோம்.
🌟முருடேஸ்வரர் ஆலயம் ஏற்கனவே இரண்டு முறை தரிசனம் செய்திருந்தாலும், இந்த முறை சென்ற போது பல இடங்கள் அதிக வளர்ச்சியுடன் காணப்பட்டது. மேலும் ஆலயய பராமரிப்பு வளாக பராமரிப்பு வேலைகள் நிறைய நடைபெற்று வருகின்றன. 
🔅
12 & 13.11.24. மீள் தரிசனம்
⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
12. & 13.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...