Wednesday, February 12, 2025

#கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 5 - 11.11.24 - MONDAYபதிவு - 26#NETHIRAVATHI #நேத்திராவதி#தர்மஸ்தலா

#கர்னாடகா2024   #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 5 - 11.11.24 -  MONDAY
பதிவு - 26
#NETHIRAVATHI #நேத்திராவதி
#தர்மஸ்தலா

🏞️நேத்ராவதி ஆறு (Netravati River) இந்தியாவின் கர்நாடக #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️மாநிலத்திலுள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள குதிரேமுக் பகுதியில் உற்பத்தியாகும் ஓர் ஆறு ஆகும். 

🏞️குதிரேமுக்கிலுள்ள பேங்கராபாலிகி சமவெளியின் எலநீரு மலையில் இப்பகுதி அமைந்துள்ளது. நேத்ராவதி நதி என்று இதை அழைக்கிறார்கள். 

🏞️கர்நாடகாவின் பிரபலமான சுற்றுலாத்தலமான தர்மசுதாலா நகரின் குறுக்கே இந்நதி பாய்கிறது. கர்நாடகாவில் பாயும் புனித நதிகளில் ஒன்றாகவும் இந்நதி பார்க்கப்படுகிறது. 

🏞️மங்களூரு நகருக்குத் தெற்கே உப்பினங்காடி நகரத்திலுள்ள குமாரதாரா ஆற்றுடன் சேர்ந்து பாயும் நேத்ராவதி நதி பின்னர் அரபிக் கடலில் கலக்கிறது. 

🏞️பண்ட்வால் மற்றும் மங்களூரு நகரங்களுக்கு நேத்ராவதியே மிகமுக்கியமான தண்ணீர் ஆதாரமாகும். 

🏞️நேத்ராவதி இரயில்வே பாலம் மங்களூருக்கான நுழைவாயிலாக விளங்கும் முக்கியமான பாலங்களில் ஒன்றாகும்.

🏞️கர்நாடகாவின் தட்சிண கன்னடாவின் புனித நதியான நேத்ராவதி, புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலமான ஸ்ரீ க்ஷேத்திர தர்மஸ்தலா வழியாக பாய்கிறது. 

🏞️இது சிக்மகளூர் மாவட்டத்தின் குத்ரேமுக்கில் உள்ள யால்னிர் காட்டின் பங்கராபலிகே பள்ளத்தாக்கில் அதன் தோற்றம் கொண்டது. பெல்தங்கடி, பண்ட்வால் மற்றும் மங்களூரு தாலுகாக்களின் மலைகள் மற்றும் கிராமங்களைச் சூழ்ந்துள்ள பாறைகள் வழியாக இந்த ஆறு பாய்கிறது. 

🏞️செல்லும் வழியில் உப்பினங்காடியில் குமாரதாரா ஆற்றில் கலக்கும் முன் மங்களூருவின் கொடியாலா அருகே அரபிக்கடலில் கலக்கிறது. அதன் தோற்றம் பற்றி ஒரு புராண நம்பிக்கை உள்ளது. 

🏞️துறவி வாதிராஜர் தனது தீர்த்தப் பிரபந்தத்தில் அதன் பிறப்பைக் குறிப்பிடுகிறார். எல்லாம் வல்ல இறைவன் வராக வடிவில் வெள்ளத்தில் மூழ்கிய நிலத்தை எழுப்பி பாதுகாத்ததாக நம்பப்படுகிறது. நிம்மதியடைந்து, பேரின்ப நிலையில் உள்ள நிலம், நன்றியுணர்வு ஆனந்தக் கண்ணீரை வடித்தது, அதுவே நேத்ராவதியின் பிறப்பாக கருதப்படுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

💠தர்மஸ்தலா தலம் செல்பவர்கள் இந்த நதியில் நீராடிவிட்டு ஆலயம் செல்லும் வழக்கம் உள்ளது.

⚜️நதி வேகமான ஒட்டத்தில் சுழன்று கடல் நோக்கி செல்லும் வழி இயற்கையாக அமைந்துள்ளது. இவ்விடத்தில் ஒரு சிற்றணை - தடுப்பணை - கட்டியுள்ளனர்.

💠தர்மஸ்தலா  இங்கிருந்து 1.8 கி.மீ.தூரத்தில் உள்ளது.

⚜️இந்த நதி கர்நாடகத்தின் முக்கிய புனித நதி எனப்படுகிறது. இதனால், ஏராளமான பக்தர்கள் நீராட இங்கு வருவதால், இந்த இடம் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப நீண்ட படி துறைகள், உடை மாற்றும் அறைகள், ஓய்வு அறைகள், வாகன நிறுத்தும் இடங்கள் அமைத்துள்ளார்கள்.

💠நாங்கள் இங்கு நீராடி முடித்துக் கொண்டு, தர்மஸ்தாலா சென்று, தங்குமிடத்தில் பொருட்கள் வைத்துவிட்டு. உடனடியாக குக்கே சுப்பிரமணியர் ஆலயம் சென்று தரிசித்து பின் மீண்டும் தர்மஸ்தலா வந்து, ஆலயம்  தரிசித்து, இரவு தங்கினோம்.

11.11.24 # சுப்ராம் ஆலயதரிசனம்
⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
11.11.2024  #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...