Wednesday, February 12, 2025

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 9 - 15.11.24 - FRIDAYபதிவு - 37#ஹம்பி - #நவபிருந்தாவனம்#ஆனேகுந்தி

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 9 - 15.11.24 - FRIDAY
பதிவு - 37
#ஹம்பி - #நவபிருந்தாவனம்
#ஆனேகுந்தி
🌟💥#நவபிருந்தாவனம் (Nava Brindavana) #நவவிருந்தாவனம் என்றும் அழைக்கப்படுகிறது); 

🌟இந்தியாவின் கர்நாடக மாநிலம், ஹம்பிக்கு அருகில் உள்ள ஆனேகுந்தியில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. நவபிருந்தாவனத்தில் உள்ள ஒன்பது இந்து, துவைதத் துறவிகளின் பிருந்தாவனங்கள்.

 🌟உத்திராதி மடம், வியாசராஜ மடம் மற்றும் இராகவேந்திர மடம் ஆகியவற்றுக்கு சொந்தமானது. இவர்கள் அனைவரும் மத்வரின் நேரடி சீடரான பத்மநாப தீர்த்தரின் வழிவந்தவர்கள்.
நவ பிருந்தாவனத்தில் உள்ள ஒன்பது துறவிகள் பின்வருமாறு:

பத்மநாப தீர்த்தர்
கவீந்திர தீர்த்தர்
வாகீச தீர்த்தம்
வியாசதீர்த்தர்
சீனிவாச தீர்த்தர்
இராமதீர்த்தர்
இரகுவார்ய தீர்த்தர்
சுதீந்திர தீர்த்தர்
கோவிந்த உடையார்
வளாகத்தில் இரங்கநாதர் மற்றும் அனுமன் சன்னதிகளும் உள்ளன.

வரலாறு
🌟நவ பிருந்தாவனம் சுக்ரீவனால் ஆளப்பட்ட ஒரு புராண இராச்சியமான கிட்கிந்தையின் ஒரு பகுதியாக இருந்த ஆனேகுந்தியில் அமைந்துள்ளது.

🌟இராமாயணத்தில், இராமனும் இலட்சுமணனும் சீதையைத் தேடும் போது, இராமன், இலட்சுமணனுக்கு ஒரு தீவை (இப்போது 'நவபிருந்தாவனம்' என்று அழைக்கப்படுகிறது) சுட்டிக்காட்டி, அந்தத் தீவில் வணங்கக் கேட்டுக்கொண்டார். 

🌟வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிறந்த சக்தி வாய்ந்த துறவிகள் தங்கள் புனித தியானம் செய்ய அங்கு தங்குவதற்கு கீழே வருவார்கள் என இந்துக்கள் நம்புகின்றனர். 

🌟நவ பிருந்தாவனம் ஒரு கண்ணோட்டம் 
நவ பிருந்தாவனம் என்பது ஹம்பி அல்லது விஜயநகருக்கு அருகிலுள்ள துங்கபத்திரை ஆற்றிலுள்ள ஒரு சிறிய தீவு ஆகும். பிருந்தாவனம் (ஒன்பது மத்வத் துறவிகளின் சமாதி) உள்ளதால், இது மத்வர்களுக்கு புனிதத் தலங்களில் ஒன்றாகும். 

🌟வியாசதீர்த்தரின் பிருந்தாவனம் மையத்தில் உள்ளது. மற்ற எட்டு துறவிகளின் பிருந்தாவனங்கள் அதைச் சுற்றி வட்டமாக உள்ளன. ஒன்பது சன்னதிகளின் சமாதியைச் சுற்றி அமைதி மற்றும் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்காக, சன்னதிகளின் முன் தரையில் மஞ்சள் வட்டம் வரையப்பட்டுள்ளது. புனித துறவிகளின் தியானத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு பக்தர்கள் இந்தக் கோட்டைக் கடக்க அனுமதிக்கப்படவில்லை.

 🌟பிருந்தாவனங்களுடன், இரங்கநாதர் 
மற்றும் அனுமன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதிகளும் இங்கு உள்ளன. 

🌟வியாசராஜரால் இங்கு நிறுவப்பட்ட அனுமன் சிலை உண்மையில் தனித்துவமானது. இது அனுமன், பீமன் மற்றும் மத்துவர் ஆகிய மூன்று அவதாரங்களையும் ஒரே வடிவத்தில் சித்தரிக்கிறது. முகம் அனுமனைப் போன்றது, கைகள் மற்றும் தோள்கள் நன்கு வட்டமானது மற்றும் கதாயுதத்துடன் கூடிய தசைகள் பீமனைக் குறிக்கின்றன. அடுத்த யுகத்தில் அனுமனின் அவதாரம் மற்றும் அவரது கையில் உள்ள கையெழுத்துப் பிரதிகள் மத்துவாச்சார்யாவைக் குறிக்கின்றன.

பூசை
💠நவ பிருந்தாவனம் ஒரு தீவு என்பதால் இங்கு பூசாரிகள் கிடைக்க மாட்டார்கள். ஆனேகுந்தியில் உள்ள மத்வ மடங்களில் பூசாரிகள் தங்கியிருப்பார்கள். தினமும் அதிகாலை 7 மணிக்கு, ஆனேகுந்தியிலிருந்து படகுகளில் பயணம் செய்து நவ பிருந்தாவனம் வந்து அபிசேகம் செய்துவிட்டு மதியத்திற்கு முன்பே திரும்பிவிடுவார்கள்.

நவபிருந்தாவனம்
சிறப்புகள்:
🌼துங்கபத்ராவில் ஒரு சிறிய தீவில் அமைந்துள்ள நவபிருந்தாவனம் ஒன்பது துறவிகள், மத்வாச்சார்யாவைப் பின்பற்றுபவர்கள் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரரின் முன்னோடிகளின் சமாதிகளைக் கொண்டுள்ளது.

 🌼மத்வாச்சார்யா தானே பத்ரிநாத்தில் தெய்வீகத்துடன் இணைந்தார், அதனால் ஒரு கல்லறை இல்லை, அதே நேரத்தில் மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரரின் சமாதி ஆந்திராவில் உள்ள ஒரு புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலமாகும். 

🌼ஒரு பீடத்திற்கு தலைமை தாங்கிய ஒன்பது துறவிகளின் கல்லறைகள் உள்ள சில இடங்களில் இதுவும் ஒன்றாகும், மேலும் இந்த துறவிகள் 'ஜீவ சமாதி' அடைந்ததாக நம்பப்படுகிறது, அதாவது அவர்கள் இன்றும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. கல்லறைகள்!

🌼ராமாயணத்தின் கிஷ்கிந்தா என்று நம்பப்படுகிறது - ஹனுமான், வாலி மற்றும் சுக்ரீவன் தலைமையிலான குரங்கு கூட்டங்கள் வசிக்கும் ஆனேகுண்ந்தி யில் ஏராளமான கோயில்கள் மற்றும் குகைகள் உள்ளன. 

🌟இந்த இடம் புராணங்கள் நிறைந்துள்ளது, மேலும், விஜயநகர மற்றும் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டைகள் மற்றும் அரண்மனைகளின் இடிபாடுகள் அவற்றுக்கிடையே குறுக்கிடப்பட்டுள்ளன. 

#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
🌟15.11.24 அன்று நாங்கள் தங்கியிருந்த
Hospet என்று ஊரிலிருந்து காலை உணவு முடித்துக் கொண்டு ஆனேகுந்தி வந்து, அங்கிருக்கும் துறையில் படகு பேசி இந்த தீவுப்பகுதி வந்து அடைந்தோம்.

🌟தீவின் ஒரு பகுதியில் இறங்கி குளித்தோம். மிகவும் பாறைகள் நிறைந்த இடம். வழுக்கும், சில இடங்கள் ஆழம் மிக அதிகம் வெளியில் தெரியாது. துங்கபத்ரா நதி மிகவும் வித்தியாசமானது. எனவே, மிகமிக ஜாக்கிரதையாக இறங்கி குளிக்க வேண்டும். குளிப்பதற்கான இடத்தில் இறங்கி குளித்து விட்டு. நவபிருந்தாவனம் வந்து சேர்த்தோம்.

🌟நவபிருந்தாவனத்தில் பூசைகள் ஆரம்பித்து அபிஷேகம் செய்தனர். தமிழ்நாடு, கோயம்புத்தூர் பகுதியில் இருந்து பூசைக்குறிய எற்பாடுகள் செய்து, வழிபட வந்திருந்தனர்.

 🌟ஏற்கனவே ஒரு முறை நாங்கள் ஆனே குந்தி வந்து தங்கி மத்துவர் மடத்தைச் சார்ந்த ஒருவர் உதவியினால் 
நவபிருந்தாவனம் வந்து பூசை ஏற்பாடுகள் செய்து வணங்கி சென்றது நினைவில் வந்தது.

🌟தற்போது பிருந்தாவனத்தைச் சுற்றி இரும்பு வேலி அமைத்துள்ளனர் .

🌟இவ்விடங்கள் வர விரும்புகிறவர்கள் பகலில் தகுந்த முன் ஏற்பாடுகளுடன் வந்து பூசித்து செல்லலாம்.

இவ்விடங்கள் தரிசனம் முடித்துக் கொண்டு, படகினில் ஆனே குந்தி சென்றோம்..

🌟ஆனேகுந்தியில் சில இடங்களைப் பார்த்து விட்டு காலை உணவு முடித்துக் கொண்டு, பம்பா சரோவர் மற்றும் அஞ்சனாத்திரி புறப்பட்டோம்.

🌼ஆனேகுந்தி | நவ பிருந்தாவனம் 
செல்ல வழி

🌼மந்திராலயத்திலிருந்து நவபிருந்தாவனம் செல்வதற்கான வழி:
சாலை வழியாக பயணம்,
கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தில் (KSRTC) , மந்திராலயத்திலிருந்து ராய்ச்சூருக்கு சென்று (1.5 மணி நேரம் பயணம்). அங்கிருந்து கங்காவதிக்கு பேருந்தில் பயணம் செய்யவேண்டும் (3 மணிநேர பயணம்). அங்கிருந்து உள்ளூர் பேருந்தில் ஆனேகுந்தியை (20 நிமிட பயணம்) அடையலாம்.

💥💥💥2019 ம் ஆண்டு பிருந்தாவனத்தில் நடந்த 😰நாசவேலை சம்பவம் இந்தியா முழுதும் மிகவும் பிரபலமான செய்தியாக இருந்தது. உலக ஆன்மீக பக்தர்களுக்கு மிகவும் வருந்த தக்க செய்தியாக இருந்து குறிப்பிடத்தக்கதாகும்.

💥💥💥18 ஜூலை 2019 அன்று வியாசராஜ தீர்த்த பிருந்தாவனத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். மத்துவ சமூகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களால் விரைவான புனரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், நாசம் செய்தவர்களை 3 நாட்களுக்குள் காவலர்கள் கைது செய்தனர் 

நன்றி.
⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
15.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...