Wednesday, February 12, 2025

கர்னாடகா2024 #karnataka2024 #பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️நாள் - 3. #மைசூர்அருகில் 9.11.24பதிவு - 20#மைசூர் #GOLDENTEMPLE#பைலகுப்பே#NamdrolingMonasteryGoldenTemple (Tibetan Buddhist monastery)🏯நாம்ட்ரோலிங் நிய்ங்மபா மடம் (Namdroling Nyingmapa Monastery)

#கர்னாடகா2024 #karnataka2024 
#பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️
நாள் - 3. #மைசூர்அருகில் 9.11.24
பதிவு - 20
#மைசூர் #GOLDENTEMPLE
#பைலகுப்பே
#NamdrolingMonasteryGoldenTemple 
(Tibetan Buddhist monastery)
🏯நாம்ட்ரோலிங் நிய்ங்மபா மடம் (Namdroling Nyingmapa Monastery)

🏯 #பைலகுப்பே, மாநில நெடுஞ்சாலை எண்.88 இல் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் பிற முக்கிய நகரங்களோடு சாலை இணைப்பு உள்ளது. மைசூரு, பெங்களூரு, மங்களூர், சென்னை மற்றும் பனாஜி ஆகிய நகரங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

💠நாங்கள் தலக்காவேரி பார்த்துவிட்டு மைசூர் வரும் போது
#பைலக்குப்பே என்ற ஊரில் உள்ள
Golden Temple பார்த்துவிட்டு வந்தோம்.

🎎இந்தியாவில் தஞ்சமடைந்த திபெத்தியர்களுக்காக, ஏற்படுத்தப்பட்ட பல குடியேற்றங்களில் இரண்டு அகதி மறுவாழ்வு மையங்கள் #பைலக்குப்பேயில் உள்ளன. 

🎎இங்கு பெரும்பாலும் திபேத்தியர்களே வாழ்கின்றனர். 

💠#NamdrolingMonasteryGoldenTemple
Prominent Tibetan Buddhist monastery.
🏯நாம்ட்ரோலிங் நிய்ங்மபா மடம் (Namdroling Nyingmapa Monastery) பத்மசம்பவர் நிறுவிய திபெத்திய பௌத்தக் கோட்பாடான 'நியிங்மபா'வை போதிக்கும் பெரிய அமைப்பாகும். 

💠இந்திய மாநிலமான கருநாடகத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள பைலக்குப்பே எனும் சிற்றூரில் அமைந்துள்ள இந்த நாம்ட்ரோலிங் மையம் ஏறத்தாழ 5000 லாமாக்களுக்கு (இருபால் துறவியருக்கும்) வாழ்விடமாகவும் மதக்கல்வி அளிக்கும் இடமாகவும் விளங்குகிறது. 
🎍திபெத் பாரம்பரிய முறையில் சிகிச்சையளிக்கும் மருத்துவமனையையும் இது கொண்டுள்ளது.

🏯இந்திய அரசு வழங்கிய நிலத்தில்
இக்கல்வி நிலையத்தை கட்டும் பணி நடைபெற்றுள்ளது.

🎍புத்தக் கல்லூரி (ஷேத்ரா) 1978லும்,
 மற்றும் 1999 செப்டம்பர் 24 ஆம் தேதியில் ‘பத்மசம்பவா புத்த விகாரை’யும் துவக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் இதைப் ‘பொற்கோயில்’ என்று அழைக்கின்றனர். இது ஆயிரக்கணக்கான புத்தபிக்குகள் ஒரேசமயத்தில் வழிபட விசாலமாக உள்ளது.• ‘சோக்யால் ஷெத்ருப் டர்கியிலிங்’ எனப்படும் பெண் துறவிகளுக்கான மடம் 1993 நவம்பர் 27 ஆம் தேதி திறக்கப்பட்டது.

🏯NamdrolingMonasteryGoldenTemple
இது திபெத்திய பௌத்தத்தின் நியிங்மா பாரம்பரியத்தில் உள்ள ஒரு மடாலயம். 
சாக்யமுனி புத்தர், பத்மசாம்பவா மற்றும் அவலோகிதேஷ்வரா ஆகியோரின் 3 நிலைகளைக் கொண்ட ஜான்ட்ரோக் பால்ரி என்ற பத்மசாம்பவா கோயில், பத்மசாம்பவ புத்த விஹாரா என்ற பெரிய மண்டபம் உள்ளது. 

💠மக்கள் தங்கக்கூடிய மடாலயத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே ஒரு விருந்தினர் மாளிகை உள்ளது, உணவகங்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் கடைகள் கொண்ட வணிக வளாகத்தின் முதல் தளத்தில். மடத்தின் பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு சிறிய புத்தகக் கடை உள்ளது. 

🔔மற்றொரு ஈர்ப்பு விலைமதிப்பற்ற பிரதிகளால் நிரப்பப்பட்ட ஒரு ஸ்தூபி ஆகும்.அங்கு ஒருவர் கோரா அல்லது ஓம் / மணி பத்மே / ஹம் போன்ற மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் சிறந்த புண்ணியத்தை கொண்டு வர முடியும். விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்தூபிக்கு அடுத்ததாக 16 ஸ்தூபிகள் உள்ளன. 

⚙️பல்வேறு மந்திரங்களால் நிரப்பப்பட்ட முழு மடாலய வளாகத்தைச் சுற்றிலும் ஒரு கோர அல்லது சுற்றுப்பாதையில் 1100 பிரார்த்தனை சக்கரங்கள் உள்ளன.

🚍வாகனங்கள் நிறுத்த தனியாக Parking வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஏராளமான சிறிய பெரிய கடைகள் உள்ளன. மாலை 6 மணி வரை பார்வையாளர் அனுமதி உண்டு.

🍮மாலையில், இந்த ஆலயம் பார்த்து விட்டு இங்கே மாலை உணவு முடித்துக் கொண்டு, மைசூர் வந்து Hotel அடைந்தோம்.

⭐பயணங்கள் தொடரும்.....
நன்றி🙏🏼
9.11.2024 #சுப்ராம்
#சுப்ராம்ஆலயதரிசனம்.
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கர்னாடகா2024

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...