பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்
பதிவு - 16 - 12.8.2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
21
திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோவில்:
திரு அஞ்சைக்களம்.
தேவார பதிகம் கிடைக்கப் பெற்ற 276 தலங்களில் கேரளாவில் உள்ள ஒரே தலம் - திருவஞ்சைக்களம் மட்டுமே.
மகாதேவர் கோவில், கொச்சி அரச குடும்பத்தின் குலக் கடவுள் ஆவார்.
கோவில்களில் மிகவும் நல்ல சுவரோவியங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட உள்ளது. ASI மூலம் நினைவுச்சின்னம்.
பழைய தமிழ்ச் சங்க இலக்கியங்களில் வரலாற்றில் மிகப் பழமையான குறிப்புகளைக் கொண்ட இந்த ஆலயம், சுந்தர மூர்த்தி நாயனார் மற்றும் சேரன் செங்குட்டுவன் பற்றிய குறிப்புகளையும் கோயில் வளாகத்தில் காணலாம்.
குலசேகரர்களின் தலைநகரான மஹோதயபுரம் கோயிலைச் சுற்றி கட்டப்பட்டது மற்றும் எல்லாப் பக்கங்களிலும் உயர்ந்த கோட்டைகளால் பாதுகாக்கப்பட்டது. மற்றும் விரிவான பாதைகள் மற்றும் அரண்மனைகளைக் கொண்டிருந்தது.
திப்பு சுல்தானின் கேரளப் படையெடுப்பின் போது இக்கோவில் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது, செப்பு கூரை மற்றும் தங்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இக்கோயில் கொச்சி/ பெரும்படப்பு ஸ்வரூபத்தைச் சேர்ந்த பாலியத் அச்சனால் புனரமைக்கப்பட்டது.
ஆலயம் கிழக்கு நோக்கியது.
நேரம்: காலை 5.00 முதல் 11.00 வரை & மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை. தரிசனம் செய்யலாம்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
12.8.24 காலையில் கொடுங்களூரில் இருந்து பேருந்தில் புறப்பட்டு திருவஞ்சைக்களம் ஆலயம் அடைந்தோம்.
அஞ்சைக்களத்தில் உள்ள ஒரு சைவ உணவிடுதியில் காலை உணவு முடித்து விட்டு, திருவஞ்சைக்களம்
ஆலய தரிசனம் செய்தோம்.
பல முறை இவ்வாலயம் தரிசித்து உள்ளோம்.
இந்த முறை (11.8.24 இரவும் 12.8.24 காலையிலும் வந்து தரிசனம் செய்தோம்.
ஸ்ரீ சுந்தரர் ஆடி சுவாதி பூசையின் போது இங்கு விழா சிறப்பாக தமிழக அடியார்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடைபெறுகிறது.
முதல்நாள், கொடுங்களூர் பகவதி அம்மன் ஆலயத்திலிருந்து அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில், ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகளும், ஸ்ரீ சேரப் பெருமான் எடுத்துவரப் பெற்று திரு அஞ்சைக்களம் பிரகாரத்தில் வைத்து பூசை செய்கிறார்கள்.
நாள் முழுதும் அன்னதானம் செய்கிறார்கள்.
இந்த விழாவிற்காக கோவையில் அடியார்கள் குழு ஒன்று முழு ஏற்பாடுகளும் சீரிய முறையில் செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு 90 ம் ஆண்டு என்று கோவை அடியார்களால் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், இவ்விழாவை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அடியார்கள் கூட்டமாகவும், குழுவாக வந்து பல்வேறு தொண்டுகள் செய்து இவ்விழாவை சிறப்பிக்கினறனர்.
இங்கிருந்து அருகாமையில் உள்ள சில ஆலயங்கள் சென்று தரிசித்தோம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
நன்றி🙏🏻
பயணங்கள் தொடரும்....
12.8.2024
நன்றி🙏🏻
#KERALAYATRA2024
12.8.24🛐#சுப்ராம்ஆலயதரிசனம்
#KERALAYATRA2024
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐🙏🏻🛐
https://www.facebook.com/share/p/1AroxH8Puh/?mibextid=oFDknk
No comments:
Post a Comment