Monday, May 31, 2021

திருமுறை சிந்தனைகள் - சம்பந்தர் தூது பகுதி-4

#திருமுறைசிந்தனைகள்:
#சம்பந்தர்தூது
பகுதி: நான்கு
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
'இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கிறேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ'... ...

இங்கு பிரிந்த தலைவனை எண்ணித் தலைவி, தென்றலைத் தலைவனுக்கு தூது  விட்டு தான் தனிமையில் வாடும் நிலையை உணர்த்த முயற்சி செய்கிறாள். இது தமிழரின் ஒரு கவித்துவ முறை.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

செந்தமிழ்நாடு செய்த தவக்கொழுந்து போல்வார், ஞான வள்ளலாராகிய திருஞானசம்பந்தர் தந்த அருட்கொடையான தேவாரம் என்னும் பக்தி இலக்கியத்தில் அவர்,

தம்மைத் தலைவியாகவும், தாம் வணங்கும் இறைவரை தலைவனாகவும் எண்ணி வடித்தத் திருப்பதிகப் பாடல்களை சிந்தித்து வருகிறோம்.

முதலாம் திருமுறையில் வரும் 
60-வது பதிகம். தலம்: திருத்தோணிபுரம். (சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்று)
வண் தரங்கப் புனற்கமல ... எனத் தொடங்கும் பதிகத்தில் வரும் தூது அமைந்த பாடல்களில்.

முதல் பதிவில், வண்டு (பாடல் 1)  மூலமும்
இரண்டாம் பதிவில் 
இளங்குருகு (பாடல் - 2) கோழி (பாடல் - 3)
மற்றும் மூன்றாம் பதிவில் நாரை (பாடல்-4) மற்றும் புறா (பாடல் 5) மூலம் தூது அனுப்பியத் திறன் பற்றியும் சிந்தித்தோம்.

இதன் தொடர்ச்சியாக... ... 

ஆளுடையப் பிள்ளை அடுத்தடுத்து  
அங்கு வசிக்கும், 
       அன்னம் (பாடல் 6)
       அன்றில் பறவை (பாடல் 7) 
மூலம் தூது அனுப்பும் கவித்திறன் பற்றி மேலும் சிந்திக்கலாம். 
வாருங்கள்...

🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

காட்சி - 6: அன்னம்:

இதற்கு முன்பு தூது அனுப்பிய புறாக்களும் இன்பத்தில் மூழ்கி அசையாதிருக்க, 

நெற்கதிர்கள் சூழ தாமரை மலரில் வீற்றிருக்கும் அன்னம் இவர் கண்ணில்பட்டது.

இரங்கும் பெருந்தன்மை அற்ற அவைகள் கிடக்கட்டும்; இந்த அரச அன்னமாவது என் குறையை நிறைவேற்றும் என்று எண்ணி அதனை அழைத்தார்.

விண்ணுலகம் மண்ணுலகம் ஆகியவற்றையும் நான்கு வேதங்களையும் தோற்றுவித்த திருத்தோணிபுரத்தில் உறையும் சிவபிரானாருடைய யாராலும் அசைத்தற்கு இயலாத இயமனை உதைத்தழித்த திருவடிகளை யாம் அடையும் வழிகளைக் கூறுவீர்களா, என்றமைத்தார்.

(இப்பாடலின் இலக்கிய நயம், தரம் உணரத்தக்கது.
தாமரை மலர் அரசர் ஆசனம் போன்றும், அதில் அரச போகத்துடன் அன்னம் வீற்றிருப்பது போன்றும், அதன் இருபுறமும் செந்நெற்கதிர்கள் காற்றில் வீசிக் கொண்டிருப்பது அரசருக்கு கவரி வீசுவது போலவும், காட்சிமைப்படுத்தப்பட்டுள்ள கவித்துவமும்,  கற்பனை வளமும் உய்த்துணரத்தக்கது.)

பாடல் : (650)
சேற்றெழுந்த   மலர்க் கமலச்
     செஞ்சாலிக்   கதிர் வீச
வீற்றிருந்த   அன்னங்காள்
     விண்ணொடு  மண்மறைகள்
தோற்றுவித்த  திருத்தோணி
      புரத்தீசன்   துளங்காத
கூற்று   தைத்த  திருவடியே
      கூடுமா   கூறீரே.
      
- தேவாரம் - முதல் திருமுறை - 01.60.06

🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

காட்சி - 7:  அன்றில் பறவை - தூது.

அன்னங்களாலும் பயன்பெறாது மயங்கியவர்
 
வீடுகளின் வாயிற்பகுதியில் மடல்களை உடைய பனைமரங்களில் கட்டிய கூடுகளில்  வாழும் அன்றிலைப் பார்த்துக்கூறுகிறார். அவர் பார்த்த காலம் பகல் ஆதலின் அன்றில்கள் கூடிக்குலாவிக் கொண்டிருந்தன. 

 நீவிர் பிரிவுத்துன்பத்தை அறியமாட்டீர் ஆயினும் நேசிப்பதில் மிக வல்லவர்களாயுள்ளீர்கள். தென்றல் காற்று தவழ்ந்து வரும் திருவீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கொன்றை மாலை அணிந்த சடை முடியினை உடைய சிவபிரானுக்கு என்பால் மிகுந்துள்ள பசலை நோயின் இயல்பை எடுத்துரைப்பீர்களாக என்கிறார்.
 
பாடல் - 651:
முன்றில்  வாய்  மடல்  பெண்ணைக்
     குரம்பை வாழ்   முயங்கு  சிறை
அன்றில் காள்  பிரிவுறுநோய்
     அறியாதீர்   மிகவல்லீர்
தென்றலார்   புகுந்துலவும்
     திருத் தோணி  புரத்துறையும்
கொன்றை   வார்  சடையார்க்கு  என்
     கூர்பயலை   கூறீரே.

-தேவாரம் - முதல் திருமுறை - 01.60:07

என்நோயைக் கூறுகின்ற நீங்கள், இறைவரின் சடைக்கண்ணதாகிய கொன்றை மாலையைப் பெற்றுக் கொண்டு வந்து கொடுத்தால், அது பெற்றாயினும் உய்வேன் என்று, உபாயம் அறிவித்தல் குறிப்பு.
🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

உலகம் முடங்கிக் கிடக்க, புலம் பெயர்ந்து வாழும் பலர் குடும்ப உறவுகளைப் பிரிந்து கால சூழலலினால்  கருத்தை நேரில் பரிமாறிக் கொள்ளா முடியாத நிலை.  மனம் பிரிவு ஆற்றமையால் தன் எண்ணத்தை வெளிப்படுத்த முயலுகிறது.

இந்த சூழலில், பிரிவின் ஏக்கத்தில் விளைந்த பக்தி இலக்கிய பாடல்களில்
நம் இதயத்தை செலுத்தி இறையருள் பெறுவோமாக. 
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
தொடர்புடைய பதிவுகள்:

பதிவு : ஒன்று: பாடல் 1 பற்றியது.
https://m.facebook.com/story.php?story_fbid=3913167225425172&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5653593588049185&id=100001957991710

பதிவு: இரண்டு:பாடல் 2 மற்றும் 3 பற்றியது
https://m.facebook.com/story.php?story_fbid=3916498978425330&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5657246011017276&id=100001957991710

பதிவு மூன்று :பாடல் 4, மற்றும் 5 பற்றியது:
https://m.facebook.com/story.php?story_fbid=5662733943801816&id=100001957991710

🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

Sunday, May 30, 2021

திருமுறை சிந்தனைகள் - சம்பந்தர் தூது பகுதி - 3.

#திருமுறைசிந்தனைகள்:
#சம்பந்தர்தூது
பகுதி - மூன்று

முடங்கிய உலகத்தில்  உறவுகளை பிரிந்து
வாடும் உள்ளம் அமைதி பெற வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைத்து வணங்குவோம்.

🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

இன்றைய சிந்தனை:

பக்தி இலக்கியத்தில் ஞாலம் உய்ந்திட ஞானம் உண்ட நாம் தமிழ்ஞானசம்பந்தர் அருளிய முதலாம் திருமுறையில் வரும் 
60-வது பதிகம். தலம்: திருத்தோணிபுரம். (சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்று)
வண் தரங்கப் புனற்கமல ... எனத் தொடங்கும் பதிகம்   தூது பற்றியது.

 இதன் பாடல்கள் 1 முதல் 3 பாடல்களில் 
வண்டு, இளங்குருகு, கோழி இவற்றின் மூலம் தூது அனுப்பியத் திறன் பற்றி முதல் இரு பதிவுகளில் சிந்தித்தோம்.

இதன் தொடர்ச்சியாக... ... 

ஆளுடையப் பிள்ளை அடுத்தடுத்து  
அங்கு வசிக்கும், நாரை, புறா, ஆகியவற்றின் மூலம் தூது அனுப்பும் கவித் திறன் பற்றி சிந்திக்கலாம்.

🙏🐾🙇🐾🙇🐾🙇🙏🐾🙇🐾🙇🐾🐾🙏

காட்சி 4  :   நாரை மூலம் தூது.

உப்பங்கழியில் வாழும் அழகுமிக்க சிவந்த கால்களை உடைய நாரையைப் பார்த்து வேண்டுகிறார்

தூதுசொல்லவேண்டிய இன்றியமையாமையையும் விளக்குகிறார்.
 
இன்றே திருத்தோணிபுரம் சென்று,
என்தூதை இரகசியமாய்ச் சொல்லுதற்கேற்ற அவகாசம் கிட்டும்வரைத் அங்கு தங்குவதற்கு வானோங்கி வளர்ந்துள்ள அழகிய மணிமாடங்கள் நிறைந்த மாடவீடுகளைக் கொண்டுள்ளது.

'நாரையே நீ சென்றால் பிறர்கண்ணில் படாமல் அங்குள்ள மாடங்களில் தங்கி, 
அங்கு எழுந்தருளியுள்ள என்னை ஆட்கொண்டவனாகிய, ஆண்மக்களில் சிறந்தவராய் விளங்கும் சிவபிரானை இன்றே சென்று அடைந்து`உடல் மெலிந்து பசலை நோய் பூக்கப்பெற்று உன் அடியவள் வருந்துகிறாள்` என்று
என் மெலிவுக்குரிய காரணத்தை அவர் அறியுமாறு உணர்த்துவாயாக. என்றார்.

பாடல் 4.. (648): 

காண்தகைய  செங்கால்ஒண்
     கழி  நாராய்  காதலால்
பூண் தகைய முலை மெலிந்து
     பொன் பயந்தாள்  என்று வளர்
சேண்தகைய  மணிமாடத்
     திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற்கு  இன்றே  சென்று
     அடியறிய  உணர்த்தாயே.

- தேவாரம் - முதல் திருமுறை 01.60:04

உள்ளக்கிடக்கையும் அடி முதல் தற்போது உள்ளவரையில் கூறவும் என்றும் ஈசனார் திருவடி அறியவும் உணர்த்தலும் உணரவேண்டும்
🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

காட்சி 5 : புறா  மூலம் தூது

இங்ஙனம் வண்டு, இளங்குருகு, சேவல், நாரை முதலானவற்றை இவர் வேண்ட, அவையும் இவரைத் திரும்பியும் பாராமல் ஒழிய,  இன்னது செய்வது என்று தோன்றாத நிலையில், 

மாடப்புறாக்களை அழைத்துக் கூறுகிறார்

அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த செழுமையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய புறாக்களே!
உங்களைத் தொழுகின்றேன்.
யான் அழைத்த வண்டு, இளங்குருகு, சேவல், நாரை முதலியவர்கள் என்னை ஒருமுறையும் திரும்பிவந்து என்னைப் பாராது உள்ளனர்.

நீவிர் தேரோடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையினை உடைய சிவபிரானிடம் சென்று என் பிரிவாற்றாத நிலையைக் கூறுவீர்களாக.
என்கிறார்.

பாடல் : (649) 

பாராரே  எனை  ஒருகால்
     தொழுகின்றேன்  பாங்கமைந்த
காராரும்  செழு  நிறத்துப்
      பவளக்காற்   கபோதங்காள் 
தேராரு   நெடுவீதித்
      திருத்தோணி புரத்துரையும்
நீராரும் சடையாருக்கு
       என்நிலமை   நிகழ்த்தீரே.

- தேவாரம் - முதல் திருமுறை 01.60:05
(கபோதம் - புறா)
🙏🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙇🐾🙏

நமக்கு விருப்பமானவர்கள் தொலைதூரத்தில் இருக்கும் நிலையில் அவர்களுடைய நினைவுகளால் வாடும் உள்ளம் விளங்கவே இந்த தூதுயியல் பாடல்கள் மூலம் நமக்கு  உணர்த்தப்படுகிறது.

🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
தொடர்புடைய பதிவுகள்:

பதிவு : ஒன்று: பாடல் 1 பற்றியது.
https://m.facebook.com/story.php?story_fbid=3913167225425172&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5653593588049185&id=100001957991710

பதிவு: இரண்டு:பாடல் 2 மற்றும் 3 பற்றியது
https://m.facebook.com/story.php?story_fbid=3916498978425330&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5657246011017276&id=100001957991710
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

Saturday, May 29, 2021

திருமுறை சிந்தனைகள் -சம்பந்தர் தூது பகுதி - 2.

https://m.facebook.com/story.php?story_fbid=5657246011017276&id=100001957991710
#திருமுறைசிந்தனைகள்:
#சம்பந்தர்தூது: 
பகுதி - இரண்டு
🎎
பாட்டுக்குப் பாட்டெடுத்து – நான்
பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே – நீ போய்த்
தூது சொல்ல மாட்டாயோ...
🛶⛵
என்று ஒரு தலைவி, தன்னை தனிமையில் விட்டு சென்ற தன் தலைவனை நேரில் காண இயலாமல் தவிக்கும் போது,  தலைவனை நினைத்து தான் படும் பாட்டை அலைகளிடம் முறையிட்டு அதைத் தூது விடுத்து தன் தலைவனிடம் தன் துயர் நிலை விளக்குமாறு கூறுகிறார்.
🏝️🏜️🌴
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏
🐝
பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கும் தமிழ்த் தலைவர், முத்தமிழ் விரகர், வண்டமிழ்நாயகர், செந்தமிழ்  திருஞானசம்பந்தர்  பதிகங்களில் ஒன்றில் இந்தத் தூதுக் காட்சியைப் பார்க்கலாம்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

முதலாம் திருமுறையில் வரும் 
60-வது பதிகம். தலம்: திருத்தோணிபுரம். (சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்று)
வண் தரங்கப் புனற்கமல ... எனத் தொடங்கும் பதிக பாடல்கள் பற்றியது இது.

காழி வேந்தர், பல தலங்கள் சென்று தரிசித்து அற்புதங்கள் பல செய்து வருங்கால். பல நாட்கள் சென்றுவிட்டன.
தாம் அருள்பெற்ற தோணிப்பர் நினைவு வந்து விடுகிறது. தம்மைத் தலைவியாகவும், தாம் வணங்கும் இறைவரை தலைவனாகவும் எண்ணி இப்பதிகப் பாடலை அருளியிருக்கிறர்கள்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏
🐝
காட்சி - 1
முதலில் இசைபாடும் வண்டு மூலம் தோணிபுரத்து இறைவருக்குத்
தூது விடுகிறார்.*

ஆனால்,
என் விதிப்பயனால் முன்னம் வண்டுகள் சென்று இறைவரிடம் என் நிலமை உறைத்ததோ, அன்றி அங்கு செய்யப்படும் வேத ஒலியில் எதுவும் விளங்காமல் போயிற்றோ என்று மனம் வருந்தி இருந்து வருங்கால்;   

அங்குள்ள சுறா மீன்கள் வாழும் உப்பங்கழியின் அருகில் உள்ள சோலைகளில் துள்ளித் தாவி பெரிய சப்தம் இட்டு  விளையாடி மகிழ்ச்சியுடன் வாழும் இளங்குருகு பறவையை நோக்கி
 
நான் என் தலைவனாகிய இறைவனை எண்ணி பசலை நோயில் நான் வீழ்ந்து வாடும் நிலையை நீ சென்று என் நிலையை உரைக்க வேண்டும் என்று தன்னிலையை விளக்கி இளம்குருகை தூதுவிடுகிறார்.

🦆🐤🐥🦅🏞️🦈🐬🐋🐳🐟
பாடல் 
எறி சுறவம் கழிக்கானல்
     இளங்குருகே என்பயலை
அறிவுறாது ஒழிவதுவும்
      அருவினை யேன் பயனன்றே
செறிசிறார்  பதம் ஓதும்
       திருத்தோணி புரத்துஉறையும்
வெறி நிறார் மலர்க்கண்ணி
      வேதியர்க்கு விளம்பாயே.
      
-  (திருமுறை 01.60.02)
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
சுறவம் - சுறாமீன். கழி - உப்பங்கழி. கானல் - கடற்கரைச் சோலை. குருகு - நாரை. பயலை - பிரிந்த மகளிர்க்கு உண்டாகும் ஒரு நோய். செறிசிறார் - நெருங்கிய சிறுவர்கள். பதம் - பதமந்திரங்கள். வெறி நிற ஆர் மலர் - மணமும் நிறமும் பொருந்திய மலர். 
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏

காட்சி - 2
🎎🐝🦅🦈🐬🐋🐓🐔
இளம் குருகும் தன்நோயை சென்று உரைக்கவில்லை என்று கருதும் ஞானசம்பந்தர்.   அருகில் உள்ள வயல்களின் கரைகளில் சம்பங் கோரைகளின் இடையில் வாட்டமின்றி  மகிழ்ச்சியுடன் இருக்கும் சேவலைப் பார்த்து தன் வாட்டமுற்ற நிலையை இறைவனாகிய தன் தலைவனிடம் சென்று கூறுமாறு கூறுகிறார்.

இன்னும் ஒரு குறிப்பு உண்டு. 
அதாவது வண்டு கூறியும் எடுபடாத சொற்கள் வாட்டமில்லாத இந்த கோழியின் வார்த்தைகள் இறைவனிடம் எடுபடுமா என்று தயங்கும் கோழியிடம்,  
தன் தலைவன் சிறந்த பண்புகள் உடையவன் என்பதால் உனக்கு எந்தவிதப் பழியும் நேராது எனவே மொழிவாயாக என்றார். மேலும்,

வண்டுகள் மொய்க்காத மலராகிய சென்பகம் நிறைந்த தோணிபுரத்தில் இருக்கும் இறைவரை இந்தக் கோரையின் நடுவில் வாழும் இந்த கோழி சென்று உரைக்க வாய்ப்புள்ளது என்றும் எண்ணுகிறார்.
🎎🐝🦅🦈🐬🐋🐓🐔
பாடல்:
பண்பழனக்  கோட்டகத்து
     வாட்டமிலாச்   செஞ்சூட்டுக்
கண்பகத்தின்  வாரணமே
    கடுவினையேன்  உறுபயலை
செண்பகம்சேர்  பொழில்புடைசூழ்
     திருத் தோணி புரத்துறையும்
பண்பனுக்குஎன் பரிசுரைத்தால்
     பழியாமோ  மொழியாயே.

 - தேவாரம் முதல் திருமுறை 01.60.03.
 
பொருள்: செஞ்சூட்டு - சிவந்த கொண்டை; 
கண்பகம் - செண்பங் கோரையின் இடையில்: வாரணம் - கோழி (சேவல்)
பயலை - பசலை நோய்
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏
முடங்கிய உலகத்தில்  உறவுகளை பிரிந்துவாடும் உள்ளம் அமைதி பெற வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைப்போம். இறையருள் பெறுவோம்.
நன்றி.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏
*முதல் பதிவின் - வண்டு தூது விளக்கம் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=5653688794706331&id=100001957991710
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🛐🙏🙏
https://m.facebook.com/story.php?story_fbid=5657246011017276&id=100001957991710

Friday, May 28, 2021

திருமுறை சிந்தனைகள் சம்பந்தர் தூது பகுதி 1, ( 1.60.01)

#திருமுறைசிந்தனைகள்:
#சம்பந்தர்தூது:  - வண்டு -
✅பகுதி - ஒன்று
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

'தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி ....'

இது ஒரு திரைப்படப் பாடல் வரிகள்.
இதில் ஒரு தலைவி, தன் தலைவனைக் நேரில் காண இயலாமல் தனிமையில் தவிக்கும் போது,  தலைவனை நினைத்து தான் வாடும் நிலையை அந்த தலைவனிடம் கூற ஒரு தோழி இல்லையே வருந்துகிறாள்.
💚
நமக்கு விருப்பமானவர்கள் தொலைதூரத்தில் இருக்கும் நிலையில் அவர்களுடைய நினைவுகளால் வாடும் உள்ளம் நமக்கு விளக்கப்படுகிறது.
💜
உலகம் முடங்கிக் கிடக்க, புலம் பெயர்ந்து வாழும் பலர் குடும்ப உறவுகளைப் பிரிந்து கால சூழலினால்  கருத்தை நேரில் பரிமாறிக் கொள்ளா முடியாத நிலை.  மனம் பிரிவு ஆற்றமையால் தன் எண்ணத்தை வெளிப்படுத்த முயலுகிறது.
♥️
தமிழ் இலக்கியத்தில் தூது அமைப்பு என்பது ஒரு வகையான கவிதை அமைப்பு.
🧡
ஒரு கலைஞன் தன் படைப்பை வெளிப்படுத்த 32 வகையான உத்திகளைக் கையாளுகிறான் என்று நற்றிணை என்னும் நூல் உரைக்கும். 
அதில் ஒன்றில்தான், அஃறிணைப் பொருள்களில் தன் எண்ணத்தை வைத்து தூது சென்று உரைக்கும் பாங்கு.

🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

இறைவனை தலைவனாகவும், ஆன்மாவை தலைவியாகவும் கொண்டு
தலைவனை எண்ணி தலைவி உருகி தான் காணும் பொருள்களிடம் தலைவனுக்கு தூது அமைத்து பாடுகிற அமைப்பில் உள்ள திருமுறை பாடல்களை எண்ணி சிந்திப்போம் வாருங்கள்.
💛
பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கும்  உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்  தவமுதல்வராகிய திருஞானசம்பந்தர் தரும் பதிகங்களில் ஒன்றில் இந்தத் தூதுக் காட்சியைப் பார்க்கலாம்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

முதலாம் திருமுறையில் வரும் 
60-வது பதிகம். தலம்: திருத்தோணிபுரம். (சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்று)
வண் தரங்கப் புனற்கமல ... எனத் தொடங்கும் பதிக பாடல்கள் பற்றியது இது.
🤎
காழி வேந்தர், பல தலங்கள் சென்று தரிசித்து அற்புதங்கள் பல செய்து வருங்கால், பல நாட்கள் சென்றுவிட்டன.
தாம் அருள்பெற்ற தோணிப்பர் நினைவு வந்து விடுகிறது. 
தம்மைத் தலைவியாகவும், தாம் வணங்கும் இறைவரை தலைவனாகவும் எண்ணுகிறர் பிரிவாற்றாமையில் வெளிப்படும் பாடல்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

காட்சி - 1

தாம் இருக்கும் இடத்தில் ஒரு ஆண் வண்டு  தேனை உண்டு  தம் துணையுடன் மகிழ்ந்து இசைபாடி மகிழ்ந்திருக்கும் காட்சியைப் பார்த்து, அந்த வண்டுவிடம்  தான் இறைவனையே நினைத்து நினைத்து உருகி தவிக்கும் நிலையை தோனிபுரம் சென்று தம் தலைவனாகிய இறைவனிடம் பரிவோடு பகரருமாறு கூறுகிறார்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

பாடல்-1

வண் தரங்கப் புனற் கமல
      மதுமாந்திப்  பெடையினோடும்
ஒண் தரங்க இசைபாடும்
    அளி  யரசே  ஒளிமதியத்
 துண்டர்   அங்கப் பூண்மார்பர்
      திருத் தோணி  புரத்துறையும்
பண்டரங்கர்க்கு என் நிலமை
      பரிந்து ஒரு கால் பகராயே.
      
                 - (திருமுறை 01.60.01).
தரங்கம்: அலை   அளி- வண்டு 
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏

ஆன்மாக்கள் பெண் தன்மை உற்றதென்றும் அது கொழு கொம்பாகிய இறைவனைப் பற்றி நிற்றல் வேண்டும் என்ற உள்ளடக்கிய கருத்து இதில் உள்ளது என்பர் அறிஞர்.
💜
முடங்கிய உலகத்தில்  உறவுகளை பிரிந்து வாடும் உள்ளங்கள்  அமைதி பெற வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைப்போம்.  
இறையருள் பெறுவோம்.

நன்றி🙏

🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
https://m.facebook.com/story.php?story_fbid=5653593588049185&id=100001957991710

Thursday, May 27, 2021

சம்பந்தர் அமுதம் 01.102. பாடல் 2, 3.

#சம்பந்தர்அமுதம் 

இறைவனை ஐயா என்று சரணடைந்தால் எவ்வித அல்லல்களும் நம்மை அடையாது
என்றும்,
அரனே என்று உள்ளம் பொருந்திப் பாடுகின்ற அடியவர்களுக்கு எந்த நோயும் அண்டாது
என்பதை
மிக அருமையான பாடல்கள் மூலம் நம் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தனார் அருளியுள்ளமை எண்ணி உணரத்தக்கது.
முதலாம் திருமுறையில் சீர்காழி தலத்திற்குரிய பதிகம் எண் :102 பாடல்கள் 2 மற்றும் 3வது பாடல்களில் இவ்வாறு அருளியுள்ளதை பொருள் விளக்கத்தோடு சிந்திப்போம்.
❤️🙇🏼‍♂️🙆🏼💙
பாடல். (2).1103.
மொய்சேர்வண்டுண்  மும்மதநால்வாய் முரண்வேழக்

கைபோல்வாழை  காய்குலையீனும் கலிக்காழி

மைசேர்கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே

ஐயாஎன்பார்க்கு அல்லல்களான அடையாவே.
🙏♥️🙇🏼‍♂️
பொருள் : வண்டுகள் உண்கின்ற மும்மதம் பொருந்திய, தொங்கும் வாயைப் போன்ற வேழத்தின் துதிக்கை போன்று, நீண்டு பெருகிய வாழை, குலையீனும் காழியில், 
நீலகண்டமும், எண்தோளும், முக்கண்ணும் கொண்ட மறையவனே! ஐயா! என்று, ஈசனைப் போற்றிப் பணிபவர்களை அல்லல் அடையாது.

🤎🙏💜🙇🏼‍♂️💙🙆🏼💛🙏💚
பாடல்: 3. 1104
அரனே! என்று உள்ளம் பொருந்திப் பாடுகின்ற அடியவர்களுக்கு நோய் அடையாது.
💜🙇🏼‍♂️
இளகக்கமலத்து ஈன்கள் இயங்கும் கழிசூழக்

கனகப்புரிசை கவினார்சாரும் கலிக்காழி

அளகத்திருநல் நுதலிபங்கா 
அரனேஎன்று

உளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே.
💛🙇🏼‍♂️💚🙆🏼
பொருள் :
தாமரை மலரிலிருந்து இளகி வெளிவரும் தேன் வழியும் உப்பங்கழி சூழ, சுண்ணாம்பு பூசப்பெற்ற மதில்கள் அழகு பொலிய விளங்கும் காழியில், அழகிய கூந்தலும் நல்ல நெற்றியும் உடைய உமாதேவியைப் பாகங் கொண்டுள்ளவனே! அரனே! என்று உள்ளம் பொருந்திப் பாடுகின்ற அடியவர்களுக்கு நோய் அடையாது.

அளகம் - கூந்தல்
உளகப்பாடும் - உள்ளம் பொருந்தப்பாடும்.

பதிவும், பகர்வும்
🙏♥️🙇🏼‍♂️🙏💙🙆🏼🙇🏼‍♂️🙏💚
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏♥️🙇🏼‍♂️🙏💙🙆🏼🙇🏼‍♂️🙏💚

Wednesday, May 26, 2021

சம்பந்தர் அமுதம்: முதல் திருமுறை : 1.59.9

#சம்பந்தர்அமுதம் 
முதுமையால் வாடி வாழ்வை பழி என்றும், இழி என்றும் நினைத்து வாடி, நற்கதி பெற வேண்டுமே என்று ஏங்கி தவரான, பொறுத்தமற்ற இடத்தினை அடைந்திடாமல், உடனடியாக நம்இறைவன் அருள்தரும் இடத்தை அடைந்து உருகி தொழுதால் நிச்சயம் நாம் நற்கதி பெறலாமே என்று நம் தமிழ் விரகன், ஞானசம்பந்தப்பெருமான் அருளிய மற்றும் ஒரு பாடல் இது.
முதல் திருமுறையில் 59வது பதிகத்தில் வரும் 9 வது பாடல். திருத்தூங்கானைமாடம் (பெண்ணாடம்) என்னும் தலத்தில் அருளியது.
தலத்தின் சிறப்புகள்:
🛐தலம். திருத்தூங்கானைமாடம்
பெண்ணாகடம்
❤️❤️விருத்தாச்சலம் - திட்டக்குடி சாலையில் தொழுதூரிலிருந்து 15 கி.மீ. திட்டக்குடிக்கு கிழக்கில் 15 கி.மீ
🧡🧡நடுநாட்டுத்தலம்
💚💚தேவகன்னியர், காமதேனு, வெள்ளையானை (பெண் +ஆ+ கடம்)
வழிபட்டது
💜💜கடந்தை நகர் எனவும் பெயர்
🤍🤍கலிக்கம்ப நாயனார் (பணியாள் சிவனடியாராக வர, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டியவர்) அவதாரத்தலம்
🤎🤎அப்பர் சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்றத்தலம்.
💛💛'பொன்னார் திருவடிக் ஒன்றுண்டு
விண்ணப்பம் போற்றி செய்யும்

என்னாவு காப்பதற்கு இச்சையுடன் இரு கூற்று அகல

மின்னாரு மூவிலைச் சூலம் என்மேற்பொறி மேவு கொண்டல்

துன்னார் கடந்தை தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே.
(நாவுக்கரசர்)
💙💙மெய்கண்டார் அவதாரத்தலம்
🙏🙆🏼🙇🏼‍♂️🙏🙆🏼🙇🏼‍♂️
சுவாமி : சுடர்க்கொழுந்திஸ்வரர், பிரளயகாலேஸ்வரர்.
அம்பிகை: கடந்தைநாயகி
சுவாமி, கிழக்கு நோக்கியவர்
அம்பிகை தெற்குநோக்கி தனி அமைப்புடன்.
🛐🛐கஜபிருஷ்ட விமானம்
⚛️⚛️மூலவர் நான்கு புறமும் பலகணி (சன்னல்) உள்ளது
🔯🔯மூலவர் வடக்கில் கட்டு மலைமேல் செளந்தரேஸ்வரர் சன்னதி தனி வித்யாசமான திருக்கோவில் அமைப்பு.
☸️☸️பிரளயம் காத்த அதிகார நந்தி கிழக்கு நோக்கியது.
🕉️🕉️பெரிய ஆலயம். மிக சிறப்பான தலம்.
❤️🙏💚🙏🧡🙏💛🙏💜🙏💙
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏💚🙏🧡🙏💛🙏💜🙏💙

Tuesday, May 25, 2021

சம்பந்தர் அமுதம் 01.59.8.

#சம்பந்தர்அமுதம் 

முதுமையான பிறகு வாழ்வை பழியென்றும், இழியென்றும் நினைத்து தன் நிலை  குறைவென்றும்,  தயங்கி யார்யார் சொல்லும் கேட்டுநிலைகுலையாமல்,  நிற்பவர்கள் செய்ய வேண்டியது எது என்பதை உணர்த்தும் பாடல்
நம் தமிழ் விரகனார் அருளியது.

💜முதல் திருமுறை:
பதிகம்: 59 பாடல்: 8 (641)
தலம் : திருத்தூங்கானைமாடம் (பெண்ணாகடம்)
💙
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் 
பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்

இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம் இறையே பிரியா தெழுந்துபோதும்

கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் காதலியுந் தானுங் கருதிவாழும்

தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்  
தூங்கானை மாடந் தொழுமின்களே.
                         -01.59.08 (641)
❤️
பொருளுரை

மூப்பு, பிணி உற்ற தன்மையால் பற்கள் வீழ்ந்தும், நாவானது தளர்ச்சியுற்று வாய் சொற்கள் குழறியும், மெய்யாது (தேகம்) சுருங்கி வாட்டம் கொண்டும், பிறரால் கிழம் என்று பழிக்கப்பட்டும் இழிக்கப்படும் இவ்வாழ்க்கை ஒழிய வேண்டும் என்று கருதி, அதனால், பொருத்தமற்ற இடங்களில் நிற்காமல் சிறிதும் தாமதியாது பழமையான சிறப்பும், நற்கதியும் அருளும் சக்தியுடன் அருள்புரியும்  சிவன் உறையும் பதியாகிய தூங்கானைமாடம் சென்று தொழுதால் இறையருள் பெற்று நலமுடன் இருக்கலாம்.
🛐

🛐தலம். திருத்தூங்கானைமாடம்
பெண்ணாகடம்
❤️விருத்தாச்சலம் - திட்டக்குடி சாலையில் தொழுதூரிலிருந்து 15 கி.மீ.  திட்டக்குடிக்கு கிழக்கில் 15 கி.மீ
🧡நடுநாட்டுத்தலம்
💚தேவகன்னியர், காமதேனு, வெள்ளையானை (பெண் +ஆ+ கடம்)
வழிபட்டது
💜கடந்தை நகர் எனவும் பெயர்
🤍கலிக்கம்ப நாயனார் (பணியாள் சிவனடியாராக வர, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டியவர்) அவதாரத்தலம்
🤎அப்பர் சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்றத்தலம்.
💛'பொன்னார் திருவடிக் ஒன்றுண்டு
விண்ணப்பம் போற்றி செய்யும்

என்னாவு காப்பதற்கு  இச்சையுடன் இரு கூற்று அகல

மின்னாரு மூவிலைச் சூலம் என்மேற்பொறி மேவு கொண்டல்

துன்னார் கடந்தை  தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே.
(நாவுக்கரசர்)
💙மெய்கண்டார் அவதாரத்தலம்
🙏🙆🏼🙇🏼‍♂️
சுவாமி : சுடர்க்கொழுந்திஸ்வரர், பிரளயகாலேஸ்வரர்.
அம்பிகை: கடந்தைநாயகி
சுவாமி, கிழக்கு நோக்கியவர்
அம்பிகை தெற்குநோக்கி தனி அமைப்புடன்.
🛐கஜபிருஷ்ட விமானம்
⚛️மூலவர் நான்கு புறமும் பலகணி (சன்னல்) உள்ளது
🔯மூலவர் வடக்கில் கட்டு மலைமேல் செளந்தரேஸ்வரர் சன்னதி தனி வித்யாசமான திருக்கோவில் அமைப்பு.
☸️பிரளயம் காத்த அதிகார நந்தி கிழக்கு நோக்கியது.
🕉️பெரிய ஆலயம். மிக சிறப்பான தலம்.
❤️🙏💙🙏💜🙏💛🙏💚
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏💙🙏💜🙏💛🙏💚

Monday, May 24, 2021

சம்பந்தர் அமுதம் முதல் திருமுறை : பதிகம்:100. பாடல் 5. (1084)

 
ஈசனை ஒன்றிய சிந்தனை உடையவர்க்கு உறுநோய் இல்லை
என்று அருளியது.
தலம்: திருப்பரங்குன்றம்.
பாண்டி நாட்டுத்தலம். மதுரைக்கு அருகில் உள்ளது. அறுபடைவீடு முருகன் தலங்களில் ஒன்று.
சுவாமி: பரங்கிநாதர்
அம்பாள் : ஆவுடைநாயகி
முருகன் தெய்வயானையை மணம் புரிந்த பதி. நக்கீரர் வாழ்ந்த இடம். பராசர முனிவரின் புதல்வர் நக்கீரர், சிபி மன்னன், பிம்மா பேறு பெற்ற தலம்.
முதல் திருமுறை : பதிகம்: 100: பாடல்..5 (1084) :

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்

துன்னியசோதி ஆகியஈசன் தொல்மறை

பன்னிய பாடல் ஆடலன்மேய பரங்குன்றை 

உன்னிய சிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.

பொருள் :
பொன்னைப் போன்று ஒளிரும் தன்மை உடைய கொன்றை மலரும், பாம்பும், ஒளி திகழும் செஞ்சடையும் உடைய ஈசன், தொன்மையான வேதப் புகழ் விளங்கும் பாடலின் இயல்பிற்கு ஏற்ப ஆடலும் கொண்டு பரங்குன்றத்தில் மேவி வீற்றிருக்கின்றான். அப்பெருமானைச் சிந்தை ஒருமித்து நினைப்பவர்களுக்கு நோய் இல்லை.
❤️🙏💜🙏💚🙏💙🙏💛
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏💜🙏💚🙏💙🙏💛

Sunday, May 23, 2021

சம்பந்தர் அமுதம் பகுதி- 4. மூன்றாம் திருமுறை : பதிகம்:380. பாடல் 6.

#சம்பந்தர்அமுதம் 
#எண்ணலங்காரம்:
பகுதி : நான்கு

சினிமா வசனம் ஒன்று நினைவில் வந்தது..

'அறிந்தது, அறியாதது, 
தெரிந்தது, தெரியாதது, புரிந்தது, புரியாதது ... எல்லாம் எமக்குத் தெரியும்'
என்பார் ஈசர்
இதில் இறைவருக்கு எல்லாம் தெரியும் என்று புரிகிறது. அதை எப்படி நாம் உணரமுடியும்? அதை நம் திருநெறிய தமிழ் வல்லவர் திருஞானசம்பந்தர் தம் அருட்பாடல் கொண்டு விடை தருகிறார்.

🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
கருவிலே திரு அமையப் பெற்று, இறையருளால் ஞானப்பால் அருந்திய ஞானி, 'இவ்  வையம் வாழ யாம் வாழ'
ஏராளமான திருத்தலங்கள் சென்று தமிழ் பண்கள் அமைத்துப் பாடிய பதிகப் பாடல்கள் மிகப்பல. 

அவற்றில் நமக்குக் கிடைத்தவற்றை மூன்று திருமுறைகளாகத் தொகுத்து அமைத்துள்ளர்  நம் முன்னோர்.
முதலாம் திருமுறையில் 136, இரண்டாம் திருமுறையில் 122, மூன்றாம் திருமுறையில் 125 ம் மேலும் 3 திருப்பதிகங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. 
226 திருத்தலங்களில்  இவர் அருளிய  பதிகங்களின் எண்ணிக்கை மொத்தம் 386. இவற்றில் நமக்கு 4146 பாடல்கள் கிடைத்துள்ளன. 

இசைத் தமிழால் ஈசனை வழிபட 23 தமிழ்ப் பண்களில் இப்பாடல்கள் விளங்குகிறது.

இவர் அமைத்த 23 தமிழ் பண்கள்:

நட்டபாடை,  தக்க ராகம்,   
பழந்தக்க ராகம், தக்கேசி,  குறிஞ்சி,
வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, யாழ்மூரி, இந்தளம், சீகாமரம், காந்தாரம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி, காந்தார பஞ்சமம்,  கொல்லி,   கொல்லிக் கெளவாணம்,  கெளசிகம்,   பஞ்சமம்,   சாதாரி,  பழம்பஞ்சுரம், புறநீர்மை, அந்தாளிக் குறிஞ்சி ஆக 23 பண்கள்.

பாடல் வகையில்
வினாவுரை, திருவிராகம், திரு இயமகம், வெள்ளிப் பாட்டு, நாலடிமேல் வைப்பு, திருமுக்கால், திருப்பாசுரம், 
தனித்திருவிருக்குக்குறள், ஈரடிமேல்வைப்பு,  நாலடிமேல்வைப்பு, இன்னும் பிறவுமாம்.

🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
இப்படிப்பட்ட தனித்தமிழ் சிறப்பு வாய்ந்த இறையுணர் திருமுறைப் பாடல்களில்   மேலும் ஒரு மகுடமாக இறைவனை ஒன்று இரண்டு என்று வைத்துப் பாடும் எண்ணங்காரப் பாடல் வரிசையில்  
இதோ ஒன்று:

சுவாமிகள் அருளிய  மூன்றாம் திருமுறையில் 380 வது பதிகமாக திரு ஓமாம்புலியூர் என்ற திருத்தலம்.
 (கொள்ளிடம் வடகரையில் மயிலாடுதுறை - மனல்மேடு - திருப்பனந்தாள் சாலை வழியில், மனல்மேடு - முட்டம் (கொள்ளிடம் பாலம்) தாண்டி காட்டு மன்னார்குடி பாதையில் சுமார் 1 கி.மீ  தென்புறமாக உள்ள தலம்.
சுவாமி : பிரணவ வியக்ரபுரீஸ்வரர் , துயர்தீர்த்தநாதர், அம்பிகை: பூங்கொடி நாயகி).
🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
மணந்திகழ் திசைகள் எட்டும்ஏ ழிசையும்
     மலியும் ஆறு  அங்கம்ஐ  வேள்வி

இணைந்தநால் வேதம் மூன்றுஎரி இரண்டும்
     பிறப்பென  ஒருமையால்   உணரும்

குணங்களும்  அவற்றின்  கொள்பொருள் குற்றம்
      அற்றவை  யுற்றதும்  எல்லாம்

உணர்ந்தவர் வாழும்  ஓமமாம் புலியூர்
   உடையவர் வடதளி  யதுவே.

- தேவாரம் மூன்றம் திருமுறை
-  திருத்தலம் - திருஓமாம்புலியூர்
- பூங்கொடி மடவாள் என்று தொடங்கும்
- 380 வது பதிகம். 
-  6வது பாடல்.

🙏🛐🧘🙏🛐🧘🙏🛐🧘🙏
இந்தப் பாடல் எண்கள் இறங்குமுகமாகவும் சுவாமியின் பெருமை உயர்ந்தும் வைத்துள்ளது
கவணிக்க வேண்டும்.

எட்டு : 
எண் திசைகள்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு என்னும் எட்டுத் திசைகளாகவும் விளங்குகிறார்.

ஏழு:
இசையின் எழுவகை ஓசை : குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். 
ஏழு சுரங்கள்: சட்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் (ச ரி க ம ப த நி).

ஆறு:
ஆறு அங்கம் என்றது வேதங்களின்
சிஷை (எழுத்திலிலக்கணம்), வியாகரணம் (சொல்லிலக்கணம்),
நிருக்தம் (நிகண்டு),  
கல்பம் (கர்மாஷ்ட்டன முறை),
சந்தஸ் (பாவிலக்கணம்),
ஜ்யோதிஷம் (சோதிடம்) என்பதும்
    சோதிடத்தில் ஆறு அங்கம்
  ஜாதகம், கோள், நிமித்தம், பிரச்சனம்,     
  முகூர்த்தம், கணிதம்.
என எதிலும் வியாபித்துள்ளமை.

ஐந்து :
ஐந்து வேள்விகளாக நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களாகவும், ஐந்து தன்மையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவையாகவும் இருப்பவன்.

நான்கு:
வேதங்கள் : பதி, பசு, பாசம் என்ற மூன்று பொருளையும் ஆய்ந்துணரும்
இருக்கு, யஜூர், சாம, அதர்வனம் என்ற நான்கு மறைகளாக விளங்குபவர்.

மூன்று :
மூன்று வகை நெருப்புத் தன்மைகளான
 ஆகவனீயம், காருகபத்தியம், தட்சனாக்கினி  என்பது 
எரியும் தீ யின் சூட்டின் ஸ்பரிசம், ஒளியின் வண்ணம், எரியும் போது விளையும் ஓசை    இவையாகவும் உள்ளார்.

இரண்டு :
இரு பிறப்பு எனப்படுவது இம்மை மறுமையாகவும், சிவம், சக்தி என்னும் இரு வேறு உருவாகவும், முடிவும், முதலாகவும் இருப்பவர்.

ஒன்று :
ஒருமை மனத்தால் உணரும் எண்ணத்தில் ஒன்றாகவும்
எல்லா குணங்களும் அவற்றின் பொருளாகவும் குற்றமற்றவை, குற்றமுள்ளவை இவற்றை அனைத்தையும் உணர்ந்து வீற்றிருப்பவரே இறைவன்.

என இறைவர்  எல்லாம் அறிந்து, புரிந்து, தெரிந்து, இறைவன் எல்லாமாக விளங்குவதை உணர்ந்து போற்றி பரவுகிறார்.

❤️🙏💚🙏💛🙏💜🙏💙
சிந்தனையும் பதிவும்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏💚🙏💛🙏💜🙏💙

Saturday, May 22, 2021

சம்பந்தர் அமுதம் எண்ணங்காரம் பகுதி - 3 தேவாரம்: 2.143.3

#சம்பந்தர்அமுதம் 
#எண்ணலங்காரம் :
பகுதி: மூன்று

தமிழ் எங்கள் உயிர். தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன். கொலை வாளினை எடடா கொடியோர் செயல் அறவே.  
என்றல்லாம் நம் தமிழ் மொழியின் மீது அளவில்லா பாசம் வைத்து அது முற்றி பழி பாவத்திற்கு அஞ்சா நிலை எய்தியவர் கூற்றுகளால் தமிழின்  உயர் நிலைச் சிறப்பை கூட்டிக் காட்டிடுவர் ஒருபுறம்.

இருப்பினும்

இறையருள் பெற்ற அருளாலர்கள், தெய்வத் தமிழில்உயர்ந்த கலைச் சொற்களையும், ஏராளமான சந்தங்களையும் வைத்து தந்த
அருமையான அருட்பாடல்களில்
 நம் தமிழ் மொழியின் நறுமணம் பாலிற்படு நெய்போல்  கலந்துள்ளது.

யாவருக்கும் மேலான இறைவனை உணர்த்த    இந்த அருளாலர்கள் 
 இனிய தேன் தமிழ்பாடல்களால் அருச்சித்து  பாடல் பெற்ற பாங்கு 
நம்மால் வணங்கி உணரத்தக்கதாய் விளங்குகிறது.

அவற்றில் ஒரு பாடல் பற்றி சிந்திப்போம்:

தெரிந்தோ தெரியாமலோ செய்த செயல்களின் தன்மைக்கு ஏற்ப வந்தடைவது பாவம்.

எதிர்பாராதவிதமாகப் பிறர் செய்யும் தீய செயலானது தொடர்பின்றித் தன் மேல் திணிக்கப் பெற்று வருவது பழி.

இந்த பாவம், பழி போக்க என்ன செய்வது
கவலை வேண்டா

இதோ  இறையருள் பெற்று ஞானப்பால் அருந்திய ஆளுடையபிள்ளையார் 
தமிழ் பா ஒன்று தருகிறார்.

இறைவனை ஒன்று இரண்டு என்று எண்ணம் வைத்து வரும் எண்ணலங்காரம் மிக்க அற்புத பாடல் இது.

🙏🙏🙏
இரண்டாம் திருமுறையில் திருவாஞ்சியம் என்னும் தலத்தில் வன்னி கொன்றை எனத் தொடங்கும்  பதிகத்தில் வரும் மூன்றாவது பாடல்:

மேவில் ஒன்றர் விரிவுற்ற
      இரண்டினர் மூன்றுமாய்

நாவில் நாலர் உடல் அஞ்சினர்
        ஆறர் ஏழோசையர்

தேவில் எட்டர் திரு வாஞ்சிய
            மேவிய  செல்வனார்

பாவந் தீர்ப்பர் பழி போக்குவர்
             தம்மடி யார் கட்கே.

- இரண்டாம் திருமுறை 
- தலம் (143) திருவாஞ்சியம்
- பாடல் 3.
🙏🙏🙏
விளக்கம்:

ஒன்று.
ஒப்பற்ற ஒருவனாய் ஈசன் விளங்குகின்றார்.

இரண்டு :
பரந்து விரிந்து சிவம், சக்தி என்று இரட்டித்த தன்மையுடையவனாக உள்ளார்.

மூன்று :
இச்சை, ஞானம், கிரியை என்ற மூன்றாகவும், மும்மூர்த்திகளாக மூன்று தொழில்களையும் செய்பவராகவும்,
ஒன்றாகவும் வேறாகவும், உடனாகவும்
விளங்குகின்ற தன்மையாகவும் உள்ளார்.

நான்கு :
பதி, பசு, பாசம் என்ற முப்பொருளையும் ஆய்ந்து உணர்த்த  இருக்கு, யஜூர், சாம, அதர்வணம்  என்னும் நான்கு வேதங்களாகவும் உள்ளார்.

ஐந்து :
பஞ்சபூதமாகிய நிலம், நீர் நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் உடலாக இருக்கும் தன்மையும்,
பரை, ஆதி, இச்சா, ஞானம், கிரியை என்னும்  சக்திகள் அடங்கிய ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்ற ஐந்து வகை உடலுருவம் கொண்டும் உள்ளது உணரத்தக்கது.

ஆறு:
வேதத்தின்   ஒலி, சொல், பொருள், செயல்முறை, செய்யுள் இலக்கனம், சோதிடம் என்ற ஆறு அங்கங்களாய் விளங்குவது.
ஆறாகிய கங்கையைச் சூடியருளும் பாங்கு.

ஏழு :
ஏழிசையாகிய சஞ்சம், ரிஷபம், காந்தாரம், மத்யம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் (ச ரி க ம ப த நி ) எனத் திகழ்பவர்.

எட்டு :
எண்குணத்தவன் அவை: 
தன் வயத்தனாதல்,  
தூய உடம்பினனாதல்,  
இயற்கை உணர்வினனாதல்,  முற்றுணர்தல்,  
இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல்.   
பேரருளுடைமை,   
முடிவில் ஆற்றலுடைமை,   
வரம்பில் இன்பமுடைமை 
என்னும் எட்டுக் குணங்களை உடையவர்.
என்பதும்
தெய்வத்தன்மையில் ஐம்பூதங்கள் மற்றும் சூரியன், சந்திரன் என்ற இரு சுடர்கள், மற்றும் ஆன்மா ஆகியவற்றால் எழும் தன்மையையும் உணர்தல் வேண்டும்.
🕉️🙏🛐🙏🕉️🙏🛐🙏🕉️🙏
இந்த எட்டு தன்மையும், குணங்களும் பொருந்திய இறைவனை உணர்ந்து தொழுபவர்களின் பாவம், பழியை போக்கி அருள் தருவார் ஈசன்.

என்று அருளுகிறார் திருஞானசம்பந்தப் பெருமான்.

இவ்வகையான எட்டு குணத்தையும் கொண்ட
யாவற்றிற்கும் மேலான இறைவனை உணர்த்தி
நம் தேன் தமிழில் பாடப் பெற்ற பாங்கு எண்ணிப் போற்றி வணங்குவோம்.
🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏 🛐🙏🛐🙏🛐🙏🛐🙏

Friday, May 21, 2021

சம்பந்தர் அமுதம் 01.73.8 (794)

#சம்பந்தர்அமுதம் 
தமிழே சிவன் :

தமிழில் இறைநாமம் பேசிடுபவர்களிடமும், இசையுடன் பாடுபவர்களிடம் ஈசன் சிவன் என்றும் இருப்பார் என்று உணர்த்தும் பாடல்.

தமிழ் விரகன் தமிழ்ஞானசம்பந்தரின் அற்புதம்

தேவாரம் - முதலாம் திருமுறை -
தலம்: திருக்கானூர். பதிகம்: 73 பாடல்: 8 (794)
💙
தமிழின் நீர்மை பேசித் தாளம்
வீணை பண்ணிநல்ல

முழவமொந்தை மல்குபாடல்
செய்கை இடம் ஓவார்

குமிழின் மேனி தந்து கோல
நீர்மை யது கொண்டார்

கமழும் சோலைக் கானூர் மேய
பவள வண்ணரே
💚
பொருள் :
தமிழ் போன்ற இனிமையாகப் பேசியும், தாளம், வீணை, முழவம், மொந்தை ஆகிய இசைக் கருவிகளுடன் விளங்கும் பாடல்களைப் பாடியும், அப்பாடல்களுக்கு ஏற்ற அசைவுகளைப் புரிவித்தும், என்னுள்ளத்தில் மகிழ்ச்சியைத் தந்து, என்னை, அவனையே நினைக்கச் செய்து, என் மேனியில் குமிழும் பூ வண்ணத்தை உண்டாக்கிக் கவர்ந்து கொண்டவர். கானூர் பவளவண்ணரே.
❤️
திருக்கானூர் - விஷ்ணம்பேட்டை
திருக்கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலம் தாண்டி, குடந்தை சாலையில் விஷ்ணம்பேட்டையிலிருந்து 2. கி.மீ தனி சாலை (கொள்ளிடம் ஆறு அருகில்):

சிவலோகநாயகி / செம்மேனிநாதர்
காவிரி வடகரைத்தலம்.

அம்பிகை சிவயோகத்தில் இருந்த போது ஈசன் தீவண்ணராகத் திருவுருவம் காட்டியருளியது.
💜
இப்பதிகம் தலைவன் - தலைவி பாவனையில் அமைந்தது.

Thursday, May 20, 2021

சம்பந்தர் அமுதம் - எண்ணலங்காரம் 2 - 1.79.03

#சம்பந்தர்அமுதம்
#எண்ணலங்காரம் :
பகுதி: இரண்டு

தமிழருக்கு என்று மிகவும் பிரசித்த குணம் ஒன்று உண்டு, 
அது தன் மொழி சிறப்பு உலகில் எம்மொழிக்கும் இல்லை என்ற இறுமாப்பு.

இதை நிறுபிக்கும் விதமாக நமது திரு நூல்களில் அமைந்துள்ள பாடல்கள், கவிதைகளில் நிறைந்திருக்கும் சந்த அமைப்புகள் எம்மொழியிலும் இல்லாததே.

அருட்பாடல்களை பாடிய நம் அருளாலர்களால் இயற்றப்பட்ட பதிகங்களில் இதைக் காணலாம்.

துன்பத்திற்கு விணதான் காரணம் அதனை விலக்கும் எளிய வழியிதுவே.

' ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினைதீர்தல் எளிதாமே' 
என்னும் கூற்றுக்கிங்க

இங்கு அவர் தம் எண்ணலங்காரப் பாடல்களை உய்த்து உணருவோம்.

முதலாம் திருமுறையில்
(79) திருக்கழுமலம் (சீர்காழி) தலத்தில் அருளப்பட்ட 
அயில் உறு படையினர் எனத் தொடங்கும் பதிகத்தில் வரும்
 3வது பாடல் பற்றிய பதிவு :

எண்ணிடை ஒன்றினர் இரண்டினர் உருவம்
எரியிடை மூன்றினர் நான் மறையாளர்

மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்
வகுத்தனர் ஏழிசை எட்டிருங் கலைசேர்

பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் 
பாடிநின்று அடிதொழ மதனனை வெகுண்ட

கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில் கழுமல நினையநம்
வினைகரிசு அறுமே.

- தேவாரம் - முதல் திருமுறை
- பதிகம் 79 - திருக்கழுமலம் (சீர்காழி)
- பாடல் 3.

விளக்கம்:
இத்திருப்பாடலில் இறைவனை ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணலங்காரத்தில் விளக்கி நிற்கும் சிறப்பு:

ஒன்று:
ஈசனார், எண்ணத்தில் ஒன்றாக இருப்பவர்

இரண்டு :
சிவம், சக்தியாக இரு உருவம் கொண்டவர்

மூன்று :
தீ யாக இருப்பவர். தீயின் மூன்று தன்மைகள் ஸ்பரிசம், ஒளியின் வண்ணம், எரியும் போது விளையும் ஓசை.

நான்கு :
நான்கு மறைகளை அருளியவர்
இருக்கு, யஜூர், சாம, அதர்வண வேதங்கள்

ஐந்து:
மண்ணிடையில் சத்தம், ஸ்பரிசம்,ரூபம், ரசம், கந்தம் என்று ஐந்து தன்மாத்திரைகளாக விளங்குபவர்.

ஆறு:
வேதத்தின் 
எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், நிகண்டு (பொருள்) இலக்கணம், செயல்முறை உறைப்பது (கல்பம் என்ற கர்மாஷ்டை முறை), பாவிலக்கணம், சோதிடம் (கோள் நிலைகளை வைத்துக் காலநிலையறிந்து ஆராய்வது)
என்ற இவ்வாறு ஆறு அங்கங்களை வகுத்தவர்

ஏழு:
ஏழிசையாகிய சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யம், பஞ்சமம், தைவதம், நிஷாரம் (ச ரி க ம ப த நி)  
இதன் தன்மையான
குரல், கைக்கிளை, துத்தம், இழை, இளி, விளரி, தாரம் எனவும் வகுத்தவர்.

எட்டு :
அட்டமூர்த்தியாக (அஷ்டாவதானம்) விளங்குபவர்

ஒன்பது :
ஒன்பான் பண்கள் கொண்ட இசையாய் இருப்பவர்.

இவ்வாரான ஒன்பது தன்மைகளைக் கொண்ட ஈசனை உணர்ந்து பக்தர் தொழுதால் வினையானது அழிந்தொழியும் என்று அற்புதமாக
உரைத்தார் நம் திருநெறிய தமிழ் வல்ல திருஞானசம்பந்தப் பெருமான்.
💚🙏💛🙏💙🙏💜🙏🤎
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.
💚🙏💛🙏💙🙏💜🙏🤎

Wednesday, May 19, 2021

சம்பந்தர் அமுதம் - திருக்கோளிலி பதிகம்: 1.62.1.(667)

சம்பந்தர்அமுதம் 
அரன் மேல் ஆளாத அன்பு செய்தால், கோள்களால் வரும் துன்பம் நீங்கும் என்று அருளிய பாடல்.
❤️
நாளாய போகாமே
நஞ்சணியும் கண்டனுக்கே

ஆளாய அன்புசெய்வோம்
அடல் நெஞ்சே அரநாமம்

கேளாய்நம் கிளைகிளைக்கும்
கேடுபடாத் திறம் அருளிக்

கோளாய நீக்கும் அவன்
கோளிலி எம் பெருமானே.
❤️💙💚
பொருள்.
வாழ்நாட்களை வீனாகக் கழிக்காமல்
நஞ்சை உடைய திருநீலகண்டனாக விளங்கும் ஈசனுக்கு ஆளாகி அன்பு செய்வோம்.
பேதைமை உடைய நெஞ்சே ! கோளிலியில் உள்ள அரனுடைய திருநாமத்தைச் செவிகுளிரக் கேட்பாயாக.  அது நம் வழிவழியாக வரும் தலைமுறையினருக்கும் காப்பாக இருந்து கோள்களால் ஏற்படும் இடையூறுகளை நீங்கும்.
- திருஞானசம்பந்தர்
தேவாரம்: 
முதல் திருமுறை:
பதிகம் 62: திருக்கோளிலி
பாடல். 1. (667)
❤️
தலச்சிறப்பு:
திருக்கோளிலி - திருக்குவளை
சுவாமி: பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : வண்டமர் பூங்குழலி

காவிரி தென்கரைத்தலம்.
திருவாரூர் - எட்டுக்குடி சாலையில் உள்ளது. 
நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி ECR ல் இருந்தும் செல்லலாம்.

சப்தவிடங்களில் ஒன்று. அவனிவிடங்கர்- பிருங்க நடனம்.
வெண்மணலால் ஆன மூர்த்தி
வழிபட்டோர் :
பிரம்மன், திருமால், இந்திரன், முசுகுந்தன், அகத்தியர், நவகிரகங்கள், பஞ்சபாண்டவர்,
முதலியோர்
சுந்தரருக்கு குண்டையூர் கிழார் வேண்டுகோளின்படி நெல் மலை கிடைக்கப் பெறச் செய்த ஈசன் என்று பதிகக்குறிப்பு.
❤️🙏❤️🙏❤️🙏❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏❤️

Tuesday, May 18, 2021

எண்ணலங்காரம் பகுதி-1 (1.11.2) (109)

#சம்பந்தர்அமுதம் 
#எண்ணலங்காரம் : 
பகுதி - 1.

திருவிளையாடல் படத்தில் சிவனை அவ்வையார் ஒன்று, இரண்டு... என்று ஏற்றிப் பாடுவார். 

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்...

இதுதான் எண்ணலங்காரப் பாடல்.

எண்ணலங்கராம் தமிழ் இலக்கனத்தில்
ஆகுபெயர் வகையைச் சார்ந்தது:

ஓர் எண்ணால் அளவையின் பெயர் அந்த எண்ணிக்கையில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது:
ஒன்று பெற்றால் ஒளிமயம்
இதில் ஒன்று என்பது குழந்தைக்கு ஆகி வருவது
 
நமது தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று. 

இது குறித்த சிந்தனைப் பதிவு:

பலருக்கும் இந்த எண்ணலங்கார பாடல்கள் குறித்து தெரிந்து முன்பே சுவைத்திருந்தாலும்.
நாம் இங்கு பக்தி சுவையில்
இந்த பாடல் வகை பற்றி பார்க்கலாம்.

தமிழ் சுவையுடன் பக்தியைப் போற்றியவர் நம் திருஞானசம்பந்தர்.
முதலாம் திருமுறையில்
திருவீழிமிழலை தலத்தில் வரும் சடையார்புனல் என்று தொடங்கும் பதிகத்தில் வரும் பாடல் இது:
 
ஈராய் முதல் ஒன்றாய்இரு
பெண் ஆண் குணம் மூன்றாய்
மாமறை நான்காய் வரு
பூதம் அவை ஐந்தாய்
ஆறார் சுவை ஏழோசையோடு
எட்டுத்திசை தானாய்
வேறாய் உடன் ஆனான்இடம்
வீழிம்மிழ லையே.
(1.11.2)  (109)
- தேவாரம்  - முதலாம் திருமுறை
- 11. திருவீழிமிழலை பதிகம்
- பாடல் 2.

விளக்கம்:

1️⃣ஒன்று :
உயிர்களைத் தோன்றச் செய்வதும் ஒடுங்கும் காலத்தில்தானே ஏற்பதும்
இறைவன்.

2️⃣இரண்டு: உருவங்கள்
ஆண் பெண் உருவில் இரண்டாகத் தோன்றுகிறார்.

3️⃣மூன்று: குணங்கள்
சத்துவம், ரஜோ, தாமசம் 

4️⃣நான்கு:  மறைகள்
இருக்கு, யஜூர், சாமம், அதர்வனம்

5️⃣ஐந்து:    பூதங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

6️⃣ஆறு:   சுவைவகைகள்
உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு (கசப்பு) புளிப்பு, இனிப்பு

7️⃣ஏழு:   (ஒலி ஓசை)இசை
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
எழு சுரங்கள்:
சட்சம் (சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், (ச ரி க ம ப த நி )

8️⃣எட்டு:  திசைக் கோணங்கள்
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு,
வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு
💛
இப்பாடலில் ஈசன் யாவுமாய் என்பது முத்தும், மணியும் கலந்தும் என்றும்,
பாலும், சர்க்கரையும் பொருந்திக் கலந்தது போல உடனாகவும் 
என்று உணர வேண்டும்.

- சிந்தனைப் பகிர்வு:
❤️🙏💙🙏🤎🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🧡🙏💚🙏💜🙏

Monday, May 17, 2021

சம்மந்தர் அமுதம் 1.72.6 (781)

https://m.facebook.com/story.php?story_fbid=5595490260526185&id=100001957991710
#சம்பந்தர்அமுதம் 

முதுமையால் வரும் மெலிவு,  நோயினால் வரும் துன்பங்கள் நீங்கி, காலன் நம்மை அனுகாமல், காப்பாற்றுபவன் இறைவன் என்பதை உணர்த்தி, தமிழ் விரகன், திருஞானசம்பந்தர் அருளியத் திருப்பாடல் இது.
பொருள் :
தேகத்தில் முதுமை அடைவதால் உண்டாகும் நலிவைத் தீர்ப்பவர்,
 அனல் அம்பைக் கொண்டு முப்புரங்களை எரித்தவர்,
பார்த்தன் தவநிலை கண்டு பாசுபதம் அருளியவர்.  அவர் நம்மை நோயினால் மெலியாதவாறும், விணைகளால் துன்பம் நேராதவாறும் காத்து, காலன் நம்மைக் குறுகாத வண்ணம் பாதுகாப்பவர் காரோணத்தாரே. 
என்று அருளியுள்ளார்.

தேவாரம்: முதல் திருமுறை
பதிகம்: 72 பாடல்: 6 (781)
தலம் : திருக்குடந்தைக் காரோணம்.
சுவாமி : சோமேசர், சிக்கேசர்
அம்பாள், சோமசுந்தரி, தேனார்மொழியாள்

காவிரி தென்கரைத் 28 வது தலம்.
கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தின் கீழ்க்கரையில் உள்ளது. சோமேசர் கோயில் என்று அழைப்பர்.

மகாமகம் ஆடுதற்கு நவநதிக் கன்னியர்கள் ஆரவாரத்துடன் வரக்கண்ட அம்பிகை, இறைவனை ஆரோகணம் செய்து கொண்டதால் இறைவன் காயாரோகணர் என்றும்,
சந்திரன் வழிபட்டதால் சோமேஸ்வரர் எனவும் வழங்கப்பெறுகிறார்.

அமுதகலசத்தின் சிக்கம் (உறி) சிவலிங்கமாய் மாறியதால் சிக்கேசர் என்றும் வழங்கப்பெற்றவர்.
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏

Sunday, May 16, 2021

சம்பந்தர் அமுதம் 01.59.6 (636)

#சம்பந்தர்அமுதம் 
மூப்பு எய்தி உடல் சோர்வுற்று, செவிகள் கேட்கும் திறம் குறைந்து, கண்கள் மங்கி, பார்க்கும் திறன் குறைந்து, உடல் வலிமை இழந்து, நரையும், திரையும், தோன்றி, அல்லாடும் முதிய வயதில் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்வது மிகக் கடினம் என்பதால், இளமையான காலத்திலேயே ஆலயங்கள் சென்றும் இறைவழிபாடுகள் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிவுரை கூறும் அற்புத பாடல். நமது தமிழ் விரகனார், திருஞானசம்பந்தப் பெருமானார் நமக்கு அருளிய தேவாரப்பாடல்.          
 முதல் திருமுறை:            
 தலம்: திருத்தூங்கானைமாடம் (பெண்ணாடகம்)          
 பதிகம்: 59 பாடல்:6 (639)  
🙏🙇🏼‍♂️🙆🏼🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏

சம்பந்தர் அமுதம் 1.59.03 (636)

#சம்பந்தர்அமுதம் 
என்ன பிறப்பு, என்ன வாழ்வு, எப்படி இறப்பு என்று நாளும் சலித்து சலித்து, இப்படிப்பட்ட வாழ்விலிருந்து விடுதலையை எண்ணி எப்படி தவம் செய்து துன்பங்களை நீக்குவது என்ற குழப்பம் உள்ளவர்களே, நீங்கள் தளர்வுற்று, கவலை கொண்டு வருத்தமடைய வேண்டாம். 

நம் இறைவன் வந்து நிச்சயம் காத்தருளுவான். நீங்கள் இறைவனை நம்பிக்கையுடன் சென்று வணங்குங்கள்.

 தூங்கானைமாடம் என்னும் தலத்தில் கொன்றைமாலை சூடி, கங்கை தரித்து, ரிஷபத்தில் வந்து காட்சியளிப்பான். 
அவன் நம்மைக் காத்தருளுவான் என்று, வாழ்வில் கலங்கி நிற்கும் நல் உள்ளங்களுக்கு அருமருந்தாக இப்பாடலை அருளியுள்ளார்; நம் தமிழ் விரகன், திருஞானசம்பந்தர்.  

(தேவாரம் :முதல் திருமுறை: பதிகம்: 59 பாடல் 3 (636)).
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏

சம்பந்தர் அமுதம். 1.80.5 (868)

திருமுறை சிந்தனைகள்
#சம்பந்தர்அமுதம்
செல்வ வளத்தைக் காட்டும் உயர்ந்த மாடமாளிகைகள் விளங்க, ஞானமாகிய செல்வம் தோய, அச்செல்வத்தில் மிக்க மறைஞானச் செல்வர்கள் வாழும் தில்லையில், சிற்றம்பல நாதனாகிய செல்வக் கழலை ஏத்துதல் நல்ல மாண்பு - உண்மையான செல்வம் ஆகும்.

இப்பாட்டில் ஏழு இடங்களில் செல்வம் என்னும் சொல் சுட்டப் பெற்றதற்கு,
எழும் செல்வம் என்பதும், அவை இறைவன் கழல் ஏத்துதல் என்று உணர்த்திற்று.

திருஞானசம்பந்தர்
தேவாரம்  முதல் திருமுறை :
பதிகம்: 80
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

சம்பந்தர் அமுதம் 1.80.8

பினி நீங்க இறை வணங்குவோம்
#சம்பந்தர்அமுதம்
 கூரிய வாளையுடைய அரக்கனான இராவணனின் வலிமையை அடக்கி, புகழ் பெருகும் சிற்றம்பலம் மேவும், கங்கை தரித்த சடையுடைய ஈசனை, நாள்தோறும் ஏத்துபவர்களுக்குத் தீர்க்க முடியாது எல்லா நோயும் தீரும். பிறவி நோயும் தீரும் இது உறுதி.

தேவாரம்: முதல் திருமுறை
 தலம்:கோவில் பதிகம் 80. 
பாடல் 8 (871)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏

சம்பந்தர் அமுதம் 2.48.9

#சம்பந்தர்அமுதம்

குதர்க்கமாகப் பொருள் கூறும் பிற மதத்தவர் உரைகளைக் கொள்ளற்க.
அறிவுடைய மெஞ்ஞானம் உடையவர்களே, வேதத்தில் வல்ல மறையவர் விரும்பும் புகழ் உடைய திருவெண்காட்டுநாதனே என்று ஒதுபவர்களுக்கு எந்தவிதமான தீதும் இல்லை என்றுணர்வீராக. என்றும் உணர்வீராக.

இதுவே தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வழி.

(திருமுறை : 2.48.9)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

Saturday, May 15, 2021

சம்பந்தர் அமுதம் 01.98.05

#சம்பந்தர்அமுதம் 

உண்மை உணருங்கள்

முப்புர அசுரரை மேருவை வில்லாக எடுத்து அழித்த ஈசனே தலையாயவர். அவர் தலைமை ஏற்காதவர் உண்மையை மறைத்தவர் என்றுணர்க. என்றும் உணருங்கள்.

 வெண்மையான வட்டத்தின் மையப்பகுதியில் நீல வண்ணத்தால் வரைந்த கோடுகளை சற்று தொலைவிலிருந்து பார்த்தால், ஒரே வெண்மை நிறமாகத் தோன்றும். இது இயல்பானதே. உண்மைத் தோற்றத்தை மறைத்தாலும், உள்ள நிறத்தின் உண்மையான நிறத்தினை மறைக்க இயலாது. இதுபோலவே, ஆழ்ந்து நோக்கி, உண்மையை உணருதல் வேண்டும். 
என்று விளக்குகிறார் நம் தமிழ் விரகனார், ஞானசம்பந்தப்பெருமான்.

முதலாம் திருமுறை 
தலம் - திருச்சிராப்பள்ளி
பதிகம் 98 பாடல் 5. 1.98.5
🙏❤️🙏❤️🙏❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏❤️🙏❤️🙏❤️

சம்பந்தர் அமுதம் 01.83.07

#சம்பந்தர்அமுதம்
நோய்கள் யாவும் நீங்கும் நிச்சயம்.
இனிய வாழ்வு இறையருள் தரும்.
கழலடி போற்றுவோம்.
கடமையை செய்வோம்.

மிளிரும் மரவோடு
வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழில் அம்பர்
மாகாளம் மேய
கிளரும் சடையண்ணல்
கேடில் கழல் ஏத்த
தளரும் முறு நோய்கள் சாறும் தவந்தானே.

- திருஞானசம்பந்தர்
- முதல் திருமுறை
- தலம்: திருஅம்பர் மாகாளம்
- பதிகம்: 83 பாடல் 7
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

சம்பந்தர் அமுதம் பாடல் 01.09.05

#சம்பந்தர்அமுதம்
அடியார்கள் விரும்பும் உருவத்தில் வெவ்வேறு உருவங்களில் வந்து நம்மை ஆள்பவர் நம் ஈசனர்.                      அவரை அனுதினமும் வணங்கிப் போற்றுவோம்.
- திருஞானசம்பந்தர்
தேவாரம் முதல் திருமுறை
தலம் : வேணுபுரம்
பதிகம்: 9  பாடல் : 5
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

சம்பந்தர் அமுதம் - 01.9.10

#சம்பந்தர்அமுதம்
தமிழ் விரகனாகிய திருஞானசம்பந்தரின் இறைவன் மேல் மனம் வைத்துப் பாடிய குற்றமில்லாத இப்பதிகங்களை ஒதி துன்பம் இன்றி வாழ்ந்து சிவகதி அடையலாமே.
தேவாரம் - முதல் திருமுறை
தலம்: வேணுபுரம்
பதிகம்: 9.  பாடல்: 10
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

சம்பந்தர் அமுதம் பாடல் 1.30.10 (325)

#சம்பந்தர்அமுதம் 
மேல் நிலை அடையலாம் என்பதற்காக, ஒவ்வாத பல சொற்களை கூறுவர்.
வேறு மதத்தவர்கள்; கீழ்மைதரும்
அக்கூற்றினை ஏற்க மறுப்பவர், நமது ஈசன். 
- தமிழ் விரகன் திருஞானசம்பந்தர்
தேவாரம் முதல் திருமுறை
தலம்: திருப்புகலி
பதிகம்: 30 பாடல் 10 (325)
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

சம்பந்தர் அமுதம் 01.38.4,5 (407, 408)

#சம்பந்தர்அமுதம் 
மனம் ஒன்றி வழிபடுங்கள், மணியாய் இருந்து அனைத்துப் பிணிகளையும் நீக்கிடுவான் நம் இறைவன் இது நிச்சயம்.

இது தமிழ் விரகன், திருஞானசம்பந்தப்பெருமானின் அருளுரை.

தேவாரம்: முதல் திருமுறை :
தலம் : மயிலாடுதுறை
பதிகம்: 38
பாடல் 4,5 (407,408)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏❤️🙏❤️🙏❤️

சம்பந்தர் அமுதம் 1.36.2. (383)

#சம்பந்தர்அமுதம் 
மதி என்ற சொல்லின் ஒரு பொருள் சந்திரன் என்பதாகும். பல நிலைகளில் வரும் அப்பெயர் பொருளைக் கொண்டு அழகாக அமைந்த இப்பாடல், தமிழ் விரகன், நம் திருஞானசம்பந்தர் அருளியது.
ஓம் நமச்சிவாய.
தேவாரம். முதல் திருமுறை - தலம் திருவையாறு - பதிகம் 36 பாடல் 2 (383)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏❤️🙏❤️🙏❤️

சம்பந்தர் அமுதம் 1.50.1. (537)

#சம்பந்தர்அமுதம் 
மனம் கசிந்து உருகி மாயை நீக்கிடவும், உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, நல்லவாறு உரைத்திடவும் அருள் வேண்டியருளிய அருமையான பாடல் இது.                                                                  
பொருள்.
வலிவலத்தில் விளங்கும் ஈசனே. 
🤎1. உலக பொருள்களின் மேல் பற்றுக்கொண்டு, பரபரப்பு எய்தி, மனமானது வேகத்தில் இயங்குவதைச்
சாந்தப்படுமாறு செய்து, நின்பால் ஒன்றிப் பொருந்தி இருக்குமாறு நல்கிடுவாய்.

💜 மனம், வஞ்சனை அற்ற நிலையையும், 

💙பிறரிடம் கொடிய உரைகளை நவிலாதவாறும், 

💚தூய்மைப்படுத்திச் சுயவிருப்பின் மேல் செய்யப்படும் செயல்களை அகற்றவும்

❤️ இறை நாமத்தை எந்த நெறியில் நவில வேண்டுமோ அந்த நன்னெறியில் நவிலுமாறும் அருள் புரியவும்.

💛 அவரவர் தரத்தின் அளவினை அறிந்து, எவ்வழியில் உரை செய்தால் ஈடேற முடியுமோ அந்த நிலையை அறிந்து அவற்றை நல்கி அருள்புரிக.   

தேவாரம் : முதல் திருமுறை : 
தலம்: வலிவலம்
பதிகம்   50
பாடல்.. 1 (537)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏

சம்பந்தர் அமுதம் -1.50.3

#சம்பந்தர்அமுதம் 
மனம் உருகினால் ஈசன் அருள் நிச்சயம்.
பெண்டிர், பிள்ளைகள், சுற்றம் என்னும் மாயைப் பெருங்கடல் சூழ்ந்து, திளைத்து, முந்தைக் காலத்திலும் கிடந்து, நன்மை தருகின்ற நெறியான வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளாதவனாயினேன். அதனால் வேதனையான நோய்களில் வீழ்ந்தேன். இப்போது உன் நாம மகிமையின் சிறப்பினை உணர்ந்தேன். உள்ளம் உருகினேன்.
அருள்புரிக என் ஈசனே.
தேவாரம் : முதல் திருமுறை: தலம்: திருவலிவலம்: பதிகம்: 50 பாடல் 3. (539)
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்,
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏

சம்பந்தர் அமுதம் 1.50.10 (546)

#சம்பந்தர்அமுதம் 
எதிரிகளுக்கும் இரங்கி அருளியத்திருப்பாடல் இது:
எங்கும் நிறைந்த இறைவரை வணங்காமல், பிற மதத்தவர், அவர்கள்  மதிகெட்டு தம் விதியால் ஏற்க மறுத்து இருந்து வருகிறார்களே, அவர்கள் நிலை என்று மாறுமோ, என்ன செய்வார்களோ என்று எண்ணி வருந்திப் பாடியருளினார் நம் திருஞானசம்பந்தப்பெருமாள்.
முதலாம் திருமுறை
பதிகம்: 50.
தலம்: திருவலிவலம்
பாடல் : 10 (546)
❤️🙏❤️🙏❤️🙏❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏❤️

சம்பந்தர் அமுதம் 1. 59.5

#சம்பந்தர்அமுதம் 
உலகமாயை நம்மை வஞ்சிக்கும் போது, நம் அச்சம் நீக்க வேண்டி அருளிய பாடல்.
தன்னை தஞ்சம் அடைபவர்க்காக, நஞ்சை உண்டவர் இறைவன். அவர் நாமமே எப்போதும் நினைந்து உருகும் அடியர்களை உலக மாயை வந்து வாட்டி, வஞ்சித்து, இறைவன் மீது பற்று இல்லாமல் செய்துவிடுமோ என்ற அச்சம் நீங்க, நம் தமிழ் விரகனார் திருஞானசம்பந்தனார் அருளிய அற்புத பாடல். 
முதலாம் திருமுறை - திருவலிவலம் - பதிகம் 50. பாடல் 5 (541).
❤️🙏❤️🙏❤️🙏❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏❤️

சம்பந்தர் அமுதம் 1.59.1

#சம்பந்தர்அமுதம் 
வாழ்வில் ஏற்படும் பிணி, கேடுகள் அனைத்திலிருந்தும் விடுதலையடைய வழிகாட்டியருளியப்பாடலிது:
பொருள் :
பிணி, கேடுகள் உடைய அவலம் பொருந்திய வாழ்க்கை இதுவென்றுக் கருதி அதனின்று விலகி, தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டி, இடம் தேடி செல்ல வேண்டிய இடம், எப்போதும் வேதம் ஒலிக்கும் தூங்கானைமாடம் என்னும் தலம். இங்குள்ள இறைவரை வணங்கி, வாழ்வியல் துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம் என்று நம் தமிழ் விரகனார் திருஞானசம்பந்தனார்.
முதல் திருமுறை : தலம் :திருத்தூங்கானைமாடம்
பதிகம்: 59  பாடல்: 01 (634).

❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

சம்பந்தர் அமுதம் 1.59.03

என்ன பிறப்பு, என்ன வாழ்வு, எப்படி இறப்பு என்று நாளும் சலித்து சலித்து,  இப்படிப்பட்ட வாழ்விலிருந்து விடுதலையை எண்ணி   எப்படி தவம் செய்து  துன்பங்களை நீக்குவது என்ற குழப்பம் உள்ளவர்களே, நீங்கள் தளர்வுற்று, கவலை கொண்டு வருத்தமடைய வேண்டாம். நம் இறைவன் வந்து  நிச்சயம் காத்தருளுவான்.  நீங்கள் இறைவனை நம்பிக்கையுடன் சென்று வணங்குங்கள். தூங்கானைமாடம் என்னும் தலத்தில் கொன்றைமாலை சூடி, கங்கை தரித்து, ரிஷபத்தில் வந்து காட்சியளிப்பான். அவன் நம்மைக் காத்தருளுவான் என்று, வாழ்வில் கலங்கி நிற்கும் நல் உள்ளங்களுக்கு அருமருந்தாக  இப்பாடலை அருளியுள்ளார்;  நம் தமிழ் விரகன், திருஞானசம்பந்தர்.  

(தேவாரம் :முதல் திருமுறை: பதிகம்: 59 பாடல் 3 (636).


Saturday, May 1, 2021

சீர்காழி 12 பெயர்கள் 66 பதிகங்கள்

🏔️சீர்காழிப்பதியின் 
12 தலப் பெயர்களும் பிரமபுரம்
66 பதிக சிறப்புகளும்.
📖நமக்குக் கிடைத்த பதிகங்களைக் கொண்டு ஆராயும்போது
தமிழ் ஞானப்பெருமான் 229 தலங்களில் அருளிய பதிகங்களில் 66 பதிகங்கள் இத்தலத்திற்கு மட்டுமே உரியதாம்.  
🌀சீர்காழியின் புராண வரலாற்றை மேற்கொண்டு சம்பந்தப் பெருமான் 12 தலங்களாகச் சீர்காழி பதியை 12 வெவ்வேறு பெயர்களில்,
1.பிரமபுரம், 2.வேணுபுரம், 3.புகலி, 4.வெங்குரு, 5.தோணிபுரம், 6.பூந்தராய், 7.சிரபுரம், 8.புறவம், 9.சண்பை, 10.காழி, 11.கொச்சைவயம், 12.கழுமலம் ஆகிய திருப்பெயர்களைக் கொண்டு,
மொத்தம் 66 தனி பதிகங்கள் அருளியிருப்பதும்;  
இதில் 55 பதிகங்கள், தனித்தனி தலப் பெயர் பெருமை கொண்டு அமைந்த பதிகங்கள். 11 பதிகங்கள் வித்தியாசமான முறையில் அருளப்பெற்றுள்ளதும் தெரியும்.

🛡️சீர்காழி தலப் பெயர் பெருமைகளும் சம்பந்தர் அருளிய இப்பதிகங்களின் தனிச் சிறப்புகள் பற்றியும் சில அரிய நூல்கள் மற்றும் வளைதளங்களில் கிடைக்கப் பெற்ற தகவல்களையும் கொண்டு படிக்க முயன்றபோது மிக மிக அற்புத, ஆச்சரியமான #ஆன்மீகத்தமிழ் - தமிழ் மொழியின் - வளர்ச்சிக்கும் பொக்கிஷமாகத் எவ்வாறு திருமுறை விளங்குகிறது என்பது தெரியவருகிறது.
ஒவ்வொரு தலத்தின் பதிகங்களையும் வரிசையாகக் கொண்டு , இக்குறிப்புகளைத் தொகுத்துள்ளேன்.

1.பிரமபுரம், 6+5+4 = 15
2.வேணுபுரம், 1+2+0 = 03 
3.புகலி, 2+4+2= 08
4.வெங்குரு, 1+0+1=02
5.தோணிபுரம், 1+0+2=03
6.பூந்தராய், 0+1+3=04
7.சிரபுரம், 2+1+0=03
8.புறவம், 2+1+0=03
9.சண்பை, 1+0+1= 02
10.காழி, 4+7+2=13
11.கொச்சைவயம், 0+2+1= 03
12.கழுமலம் 4+0+3 = 07
மொத்தம் .= 24 + 22+20 = 66
இறையருளும், காலமும் உள்ளவர்கள் பொறுமையாகப் படித்து மேலும், மேலும் சிந்தித்துணர்வோம்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
🏔️1. பிரமபுரம்:
பிரம்மன் வழிபட்டுப் பேறுபெற்றதால் இப்பெயர்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
தனிப்பதிகங்கள்:
முதல் திருமுறையில் 6ம்
இரண்டாம் திருமுறையில் 5ம்
மூன்றாம் திருமுறையில் 4ம்
மொத்தம் 15 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
(1/66)
முதல் திருமுறை: 6 பதிகங்கள்
1.பதிகம்:1. 
பண் : நட்டபாடை
⏺️"தோடுடைய செவியன்" எனத் தொடங்கும் பதிகம்
⏺️
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(2/66)
2. பதிகம் எண். 63பண் : தக்கேசி
முதல்வரி தொடக்கம்: 'எரியார் மழு' 
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு:
#'பல்பெயர்பத்து'
#'பனுவல் மாலை' என்று சிறப்பிக்கப்பட்ட பதிகம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(3/66)
3. பதிகம் எண் :90.
பண் : குறிஞ்சி
'அரணை உள்குவீர்'  
எனத் தொடங்கும் பதிகம்.
சிறப்பு: 
#திருவிருக்குறள் என்னும் சிறப்பான குறள் அமைப்பு, இரண்டு வரிகள் உடைய 12 பாடல்களுள்ள பதிகம்.
பாடல்களில் சீர்காழியின் 12 பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது.

'தொழு மனத்தவர் கழுமலத் துறை

பழுதில் சம்பந்தன் மொழிகள் பத்துமே.'

என்று அமைத்துள்ளார்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(4/66)
4. பதிகம் எண் : 117.
பண் : வியாழக் குறிஞ்சி
'காடது அணிகலம்'  
எனத் தொடங்கும் பதிகம். 
👄 பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.
சிறப்பு:
#மொழிமாற்று என்ற இந்த அமைப்பில் உள்ளது.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(5 / 66)
5. பதிகம் எண் :127
பண் :வியாழக் குறிஞ்சி
'பிரம்மபுரத்துறை பெம்மான்'
எனத் தொடங்கும் பதிகம்.
பாடல் 1370 முதல் 1381 வரை 12 பாடல்கள்
சிறப்பு: 
#ஏகபாதம் என்ற இலக்கிய அமைப்பில் உள்ளது,
மேலும் விரிவான விளக்கம் இப்பொருள் பற்றிய என்னுடைய முந்தைய பதிவு காண்க:
#ஏகபாதம்
https://m.facebook.com/story.php?story_fbid=3986657008076193&id=100001957991710
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(6/66)
6.பதிகம் எண் :128
பண் :வியாழக் குறிஞ்சி
'ஒரு உருவாயினை'  
எனத் தொடங்கும் பாடல். 
சிறப்பு: 
#திருஎழுக் கூற்றிருக்கை.🛑
திரு + எழு + கூற்று + இருக்கை என்ற
தேர் அமைப்பில் பாடல் உருவாகும்.
பாடல்களின் உள்ள வார்த்தைகளில் உள்ள எண்களால் சுட்டப்படும் அடுக்கில்

முதல் 7 வரை படிப்படியாக   

      ஒன்று, இரண்டு, ஒன்று,  

              1 2 1

ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று

            1 2 3 2 1

என ஒன்று முதல் ஏழு வரையிலும் ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.
இதுபற்றிய தனிவிளக்கம் என்னுடைய முன்பதிவு காண:
#திருஎழுகூற்றிருக்கை:
https://m.facebook.com/story.php?story_fbid=4128933983848494&id=100001957991710
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
இரண்டாம் திருமுறை : 5 பதிகங்கள்
(7/66)
1.பதிகம் எண் :176 (40)
பண் : இந்தளம் (சீகாமரம்)
'எம்பிரான் எனக்கு அமுதம்'
எனத் தொடங்கும் பதிகம். 
11 பாடல்கள் உடையது
சிறப்பு: 
தருவானைத் தத்துவனைக்

கன்னடைந்த மதிற்பிரம

புரத்துறையுங் காவலனை

பலவடைந்தார் புண்ணியரே.

என்று திருக்கடைக்காப்பு செய்தருளியுள்ளார்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(8/66)
2. பதிகம் எண் : 201 (65)
பண் : காந்தாரம்
'கறையணி வேலியர்'
எனத் தொடங்கும் பதிகம்
11 பாடல்கள் கொண்ட பதிகம்.
சிறப்பு: 
திருக்கடைக்காப்பில், பலனுரைத்துள்ளதை உணர வேண்டும்.

பெண்ணுரு ஆணுரு வல்லாப் 
பிரமபுரநகர் மேய

அண்ணல் செய்யாதன வெல்லாமறிந்து
வகை வகையாலே

நண்ணிய ஞானசம் பந்தன் 
நவின்றன பத்தும் வல்லார்கள்

விண்ணவரோடு இனிதாக 
வீற்றிருப் பாரவர் தாமே.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(9/66)
3. பதிகம் எண் : 206 (70)
பண் : காந்தாரம்
'பிரமனூர் வேணுபுரம்'  
எனத் தொடங்கும் பதிகம். 
சிறப்பு: 
☸️#சக்கரமாற்று #திருச்சக்கரமாற்று
☸️#பனுவல்மாலை

என்றெல்லாம் பெருமையுடைய கவி அமைப்பு சார்ந்தது.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(10/66)
4. பதிகம் எண் : 209 (73)
பண் : காந்தாரம்
'விளங்கிய சீர்'  
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: 
☸️#சக்கரஞ்சீர் அமைப்பு.
12 பாடல்கள் உடையது
சீர்காழியின் 12 பெயர்களை உள்ளடக்கியது.
☸️சித்திரக்கவி வரிசையில் அருளப்பெற்றது.
☸️ #மிகைக்கவி என்றும் கூறுவர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
(11/66)
5. பதிகம் எண் : 210 (74)
பண் : காந்தாரம்
'பூமகனூர் புத்தேள்'
எனத் தொடங்கும் பாடல். 
சிறப்பு: 
#கோமூத்திரி அந்தாதி அமைப்பு.
12 பாடல்கள் உடையது
🕉️சீர்காழியின் 12 பெயர்களை உள்ளடக்கியது. 
☸️கோமூத்திரி அந்தாதி வகையில் அமைந்துள்ளது. 
☸️ '#வழிமுடக்குமாவின்பாச்சல்,' என்று அருளியது எண்ணத்தக்கது.
☸️#சித்திரக்கவி வரிசையில் அருளப்பெற்றது.
☸️ #மிகைக்கவி என்றும் கூறுவர்.
இதுபற்றிய மேலும் தனிவிளக்கம் என்னுடைய முன்பதிவு காண:

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
12/66
மூன்றாம் திருமுறை: 4 பதிகங்கள்
1.பதிகம் எண் : 295 (37)
பண் : கொல்லி
'கரமுணம்'
எனத் தொடங்கும் பதிகம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
13/66
2. பதிகம் எண் : 314 (56)
பண் : கெளசிகம்
'இறையவன்'
எனத் தொடங்கும் பதிகம்
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
14/66
3. பதிகம் எண் : 325 (67)
பண் : சாதாரி
'சுரர் உலகு'
எனத் தொடங்கும் பாடல். 
சிறப்பு: 
#வழிமொழிதிருவிராகம்
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
15/66
4. பதிகம் எண் : 368 (110)
பண் : பழம்பஞ்சுரம்
'வரமதே'
எனத் தொடங்கும் பதிகம்.
சிறப்பு: 
#ஈரடி அமைப்பு வகை
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️2. வேணுபுரம்.

இந்திரன் மூங்கில் உருகொண்டு தவம் செய்து அருள் பெற்றதால் இப்பெயர்.
தனிப்பதிகங்கள்:
1 + 2 + 0 = 3.
முதல் திருமுறையில் 1ம்
இரண்டாம் திருமுறையில் 2ம்
மொத்தம் 3 பதிகங்கள்.

🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
16/66
முதல் திருமுறை
1. பதிகம் எண் : 9 
பண் : நட்டப்பாடை
'வண்டார் குழல்'
எனத் தொடங்கும் பதிகம்.

இரண்டாம் திருமுறை
17/66
1. பதிகம் எண் : 153 (17)
பண் : இந்தளம்
'நிலவும் புனல்'
எனத் தொடங்கும் பதிகம்

18/66
2. பதிகம் எண் : 217 (81)
பண் : காந்தாரம்
'பூதத்தின் படையினீர்'
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️3. புகலி :

அசுரர்களுக்கு அஞ்சித் தேவர்கள் புகலிடம் பெற்றதால் இப்பெயர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
தனிப்பதிகங்கள்:
2 + 4 + 2 = 8 (19, 20 / 21-24 / 25, 26)
முதல் திருமுறையில் 2 ம்
இரண்டாம் திருமுறையில் 4ம்
மூன்றாம் திருமுறையில் 2ம்
மொத்தம் 8 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
19/66
முதல் திருமுறை:
1. பதிகம் எண் : 30
பண் : தக்கராகம்
'விதியால் விளைவாய்'
எனத் தொடங்கும் பதிகம்

20/66
2. பதிகம் எண் : 104
பண்: வியாழக் குறிஞ்சி
'ஆடல் அரவசைத்தான்'
எனத் தொடங்கும் பதிகம்

இரண்டாம் திருமுறை:

21/66
1.பதிகம் எண் : 161 (25)
பண் : இந்தளம்
'உகலியாழ் கடல்'
எனத் தொடங்கும் பதிகம்.

22/66
2. பதிகம் எண் : 165 (29)
பண் : இந்தளம் (மாயா மெளளி)
'முன்னியகலை'
எனத் தொடங்கும் பதிகம்

23/66
3. பதிகம் எண் : 190 (54)
பண் : காந்தாரம்
'உருவார்ந்த மெல்லிய '
எனத் தொடங்கும் பதிகம்

24/66
4. பதிகம் எண் : 258 (122)
பண் : செவ்வழி
'விடைய தேரி '
எனத் தொடங்கும் பதிகம்

மூன்றாம் திருமுறை

25/66
1. பதிகம் எண் : 261 (3)
பண் : காந்தாரப் பஞ்சமம்
'இயலிசை'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: #நாலடி மேல் வைப்பு என்ற அமைப்பு.

26/66
2. பதிகம் எண் : 265 (7)
பண்: காந்தாரப் பஞ்சமம்
'கண்ணுதலானும் '
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿

🏔️4. வெங்குரு:

குருவழிபட்டு அருள் பெற்றதால் இப்பெயர்.

தனிப்பதிகங்கள்:
1 + o+1 = 2
முதல் திருமுறையில் 1ம்
மூன்றாம் திருமுறையில் 1ம்
மொத்தம் 2 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
1+0+1 = 02 (27 / 0/ 28)
27/66
முதல் திருமுறை
1. பதிகம்: 75
பண் : குறிஞ்சி
'காலை நன்மா மலர், '
எனத் தொடங்கும் பதிகம்.

28/66
மூன்றாம் திருமுறை

1. பதிகம் 352 (94)
பண் : சாதாரி
'விண்னவர்' 
எனத் தொடங்கும் பதிகம்.
சிறப்பு: #'திருமுக்கால் ' என்னும் அமைப்பு
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️5. தோணிபுரம்

ஊழி காலத்தில் தோணியாய் இருந்ததால் இப்பெயர் கொண்டது.

தனிப்பதிகங்கள்:
1 +0 + 2 = 3
முதல் திருமுறையில் 1ம்
 மூன்றாம் திருமுறையில் 2ம்
மொத்தம் 3 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
1+0+2 = 3 (29 / 0/ 30 - 31)
29/66
முதல் திருமுறை
1. பதிகம் எண் : 60
பண் : பழந்தக்க ராகம்
'வண்டரங்கப்புனல்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: தூதுவகை பாடல்

30/66

மூன்றாம் திருமுறை

1. பதிகம் எண்: 339 (81)
பண் : சாதாரி
'சங்கு அமருமுன் கை'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: திருவிராகம் அமைப்பு

31/ 66

2. பதிகம் எண்: 358 (100)
பண் : பழம்பஞ்சுரம்
'கரும்பமர்'
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️6. பூந்தாராய்

சங்கநிதி, பதுமநிதி என்ற இரு அதிதேவதைகள் பூந்தாராய் (தார் = மாலை) இருந்து வழிபட்டதால் இப்பெயர்.

தனிப்பதிகங்கள்:

இரண்டாம் திருமுறையில் 1ம்
மூன்றாம் திருமுறையில் 3ம்
மொத்தம் 4 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
0+1+3= 4 (0 / 32/ 33 - 35)

32/66
இரண்டாம் திருமுறை

1. பதிகம் எண் : 137 (1)
பண்: இந்தளம்
'செந்நெல் அங்கழனி'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு : #வினாவுரை அமைப்பு

மூன்றாம் திருமுறை

33/66
1. பதிகம் எண் : 260 (2)
பண் : காந்தாரப் பஞ்சமம்
'பந்து சேர்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: இத்தலம் 6வது பதியெனக் குறிப்புள்ள பாடல் உள்ளது.

34/66
2. பதிகம் எண் : 263 (5)
பண் : காந்தார பஞ்சமம்
'தக்கன் வேள்ளி'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: ஈரடிமேல் வைப்பு என்ற அமைப்பு.

35/66
3. பதிகம் எண் : 271 (13)
பண் : காந்தாரப் பஞ்சமம்.
'மின்னன எயிறு'
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️7. சிரபுரம்:

சிலம்பன் என்ற அசுரன் வேற்றுருவுடன் வந்து அமுதம் பெற, திருமால் அவனது தலைய (சிரம்) வெட்டிவிட அது ராகுவாக நின்று பூசை செய்ததால் இப்பெயர். திருமாலும் பாவம் நீங்க வழிபட்டுப் பேறு பெற்ற இடம்.

தனிப்பதிகங்கள்:

முதல் திருமுறையில் 2ம்
இரண்டாம் திருமுறையில் 1ம்
மொத்தம் 3 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
2 + 1 +0=03 (36,37 / 38 / 0)
36/66
முதல் திருமுறை

1.பதிகம் எண் : 47
பண் : பழந்தக்க ராகம்
"பல்லடைந்த'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: 6 வது பாடல் முக்கன் மூன்று

37/66
2. பதிகம் எண் : 109
பண்: வியாழக் குறிஞ்சி
'வாரு நு வனமுலை'
சிறப்பு: எதுகை சிறப்பு மிக்கது
38/66

இரண்டாம் திருமுறை

1. பதிகம் எண் : 238 (102)
பண் : நட்டராகம்
'அன்னமென்னடை'
எனத் தொடங்கும் பதிகம்.

🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️8. புறவம் :

சிபி சக்கரவர்த்தியிடம் அக்கினி தேவன் புறாவாகச் சென்று சோதித்த அரசரும் உடல் தசை அறுத்து ஈடு செய்தது. பின் அவரும் வழிபட்டுப் பேறுபெற்று, அக்கினியும் தன் பாவம் போக்கிக் கொண்டதால் புறவம் எனப் பெயர்.

தனிப்பதிகங்கள்:

முதல் திருமுறையில் 2 ம்
மூன்றாம் திருமுறையில் 1 ம்
மொத்தம் 3 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
2 + 0 + 1 = 03 (39,40 / 0/ 41)
39/66
முதல் திருமுறை

1. பதிகம் எண் : 74
பண் : தக்கேசி
'நறவ நிறைவண்டரை'
எனத் தொடங்கும் பதிகம்

40/66
2. பதிகம் எண் : 97
பண் : குறிஞ்சி
'எய்யா வென்றி '
எனத் தொடங்கும் பதிகம்

41 / 66

மூன்றாம் திருமுறை
1. பதிகம் எண் : 342 (84). 
பண்: சாதாரி
'பெண்ணிய உருவினர்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: திருவிராக அமைப்பு
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️9. சண்பை:

கண்ணன், கபில முனிவர் சாபத்தால், யாதவன் வயிற்றில் உதித்த இரும்பை பொடியாக்கிக் கொட்டிட அது சண்பைப் புற்களாய் முளைத்து, அப்புற்களால் யாதவர் சண்டையிட்ட மாண்டிட, பழி நீங்கக் கண்ணனும், கபில முனிவரும் வழிபட்ட இடம்.

தனிப்பதிகங்கள்:
முதல் திருமுறையில் 1ம்
மூன்றாம் திருமுறையில் 1ம்
மொத்தம் 2 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
1+0+1=2 (42 / 0/ 43)
42/66

முதல் திருமுறை

1. பதிகம் எண் : 66
பண் : தக்கேசி
'பங்கமேறுமதி சேர்'
எனத் தொடங்கும் பதிகம்

43/66
மூன்றாம் திருமுறை

1. பதிகம் எண் : 333 (75)
பண் : சாதாரி
'எந்தமது '
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: திருவிராகம் அமைப்பு
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️10. காழி:

காளிதன் என்ற பாம்பும், காளியும் வழிபட்டதால் இப்பெயர்.

தனிப்பதிகங்கள்:
முதல் திருமுறையில் 4ம்
இரண்டாம் திருமுறையில் 7ம்
மூன்றாம் திருமுறையில் 2 ம்
மொத்தம் 13 பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
4+7+2=13 (44 - 47 /48 - 54/ 55-56)
44/66
முதல் திருமுறை

1. பதிகம் எண் : 24
பண் : தக்கராகம்
'பூவார் கொன்றை '
எனத் தொடங்கும் பதிகம்

45/66

2. பதிகம் எண் : 34
பண் : தக்கராகம்
'அடலேற மருதம்'
எனத் தொடங்கும் பதிகம்

46/66
3. பதிகம் எண் : 81
பண் : குறிஞ்சி
'நல்லோர் தீ மேவு'
எனத் தொடங்கும் பதிகம்

47/66
4. பதிகம் எண் : 102
பண் : குறிஞ்சி
'உரவார் கலையின்'
எனத் தொடங்கும் பதிகம்

இரண்டாம் திருமுறை

48/66
1. பதிகம் எண் : 147 (11)
பண் : இந்தளம்
'நல்லாணை நான் மறை'
எனத் தொடங்கும் பதிகம்

49/66

2. பதிகம் எண் : 185 (49)
பண் : சீகாமரம்
'பண்ணினேர் மொழி'
எனத் தொடங்கும் பதிகம்

50/66
3. பதிகம் எண் : 195 (59)
பண் : காந்தாரம்
'நலங்கொள் முத்து'
எனத் தொடங்கும் பதிகம்

51/66
4. பதிகம் எண்: 211 (75)
பண் : காந்தாரம்
'விண்ணியங்கு மதி'
எனத் தொடங்கும் பதிகம்

52/66
5. பதிகம் எண் : 232 (96)
பண் : பிந்தைக்காந்தாரம்
'பொங்கு வெண்புரி'
எனத் தொடங்கும் பதிகம்

53/66

6. பதிகம் எண்: 233 (97)
பண்: நட்டராகம்
'நம் பொருள் நம் மக்கள் '
எனத் தொடங்கும் பதிகம்

54/66
7. பதிகம் எண் : 249 (113)
பண் : செவ்வழி
'பொடியிலங்கு திருமேனி'
எனத் தொடங்கும் பதிகம்

மூன்றாம் திருமுறை

55/66
1. பதிகம் எண் : 301 (43)
பண் : கௌசிகம்
'சந்தமார்'
எனத் தொடங்கும் பதிகம்

56/66
2. பதிகம் எண் : 375 (117)
பண் : கெளசிகம்
'யா மாமா'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: #மாலைமாற்று என்ற அமைப்பு
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️11. கொச்சைவயம் :

பராசர முனிவர் தன் உடல் துர்நாற்றம் பழியும் போக்கும் பொருட்டுப் பூசித்துப் பேறு பெற்றதால் இப்பெயர்.

தனிப்பதிகங்கள்:
இரண்டாம் திருமுறையில் 2ம்
மூன்றாம் திருமுறையில் 1ம்
மொத்தம் 3பதிகங்கள்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
0+2+1 = 3 (/0/ 57-58 / 59)

இரண்டாம் திருமுறை
57/66
1. பதிக எண்: 219 (83)
பண் : பியந்தைக் காந்தாரம்
'நீலநன் மாமிடற்ற '
எனத் தொடங்கும் பதிகம்

58/66
2. பதிக எண்: 225 (89)
பண் : பியந்தைக் காந்தாரம்
'அறையும் பூம்புனலோடு'
எனத் தொடங்கும் பதிகம்

மூன்றம் திருமுறை
59/66
1. பதிக எண்:347 (89)
பண் : சாதாரி
'திருந்துமா'
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐

🏔️12. கழுமலம்:

உரோமச முனிவர் உபேதசம் பெற்ற உலக உயிர்களின் மலங்களைக் நீக்கம் வரம் பெற்றதால் இப்பெயர்.

தனிப்பதிகங்கள்:
முதல் திருமுறையில் 4ம்
மூன்றாம் திருமுறையில் 3ம்
மொத்தம் 7பதிகங்கள்.
மொத்தம் 66 பதிகங்களாகும்.
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
4 +0+ 3 = 7 (60-63 / 0/ 64-66)
60/66
முதல் திருமுறை
1. பதிக எண்:19
பண் : நட்டப் பாடை
'பிறையணி படர்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: திருவிராகம் அமைப்பு

61/66
2. பதிக எண்: 79
பண்: குறிஞ்சி
'அயில் உறுபடையினர்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: #எண்ணலங்கரம் கொண்டது

62/66
3. பதிக எண்.126
பண் : வியாழக்குறிஞ்சி
'பந்தத்தால் வந்ததப்பால்'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: #திருத்தாளச்சதி என்னும் இசை வகை சிறப்பு

63/66
4. பதிக எண்:129
பண் : மேகராகக் குறிஞ்சி
'சேவுயருந்திண் கொடி'
எனத் தொடங்கும் பதிகம்

மூன்றாம் திருமுறை

64/66
1. பதிக எண்: 282 (24)
பண் : காந்தார பஞ்சமம் (கொல்லி)
'மன்னில் நல்ல'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: மதுரையில் அருளியது

65 /66
2. பதிக எண் : 371 (113)
பண் : பழம்பஞ்சரம்
'உற்றுமை'
எனத் தொடங்கும் பதிகம்
சிறப்பு: திருஇமயகம் என்னும் அமைப்பு
மடக்கணி சிறப்பு, 12 பெயர்களுள்ள பாடல்கள்.

66/66
3. பதிக எண்:376 (118)
பண் : புறநீர்மை
'மடல்மலி '
எனத் தொடங்கும் பதிகம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
முதல் திருமுறை : 24
இரண்டாம் திருமுறை : 22
மூன்றாம் திருமுறை : 20
மொத்தம் :66
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐
இனி இப்பதிகங்களின் சிறப்புகளைத் தனித்தனியாகச் சிந்திப்போம்
🛐🙏🙇‍♂️🙏🏻🛐🙏🏼🎪🙏🏽🛐🙏🏾🙆🙏🏿🛐