சம்பந்தர்அமுதம்
அரன் மேல் ஆளாத அன்பு செய்தால், கோள்களால் வரும் துன்பம் நீங்கும் என்று அருளிய பாடல்.
❤️
நாளாய போகாமே
நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம்
அடல் நெஞ்சே அரநாமம்
கேளாய்நம் கிளைகிளைக்கும்
கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்கும் அவன்
கோளிலி எம் பெருமானே.
❤️💙💚
பொருள்.
வாழ்நாட்களை வீனாகக் கழிக்காமல்
நஞ்சை உடைய திருநீலகண்டனாக விளங்கும் ஈசனுக்கு ஆளாகி அன்பு செய்வோம்.
பேதைமை உடைய நெஞ்சே ! கோளிலியில் உள்ள அரனுடைய திருநாமத்தைச் செவிகுளிரக் கேட்பாயாக. அது நம் வழிவழியாக வரும் தலைமுறையினருக்கும் காப்பாக இருந்து கோள்களால் ஏற்படும் இடையூறுகளை நீங்கும்.
- திருஞானசம்பந்தர்
தேவாரம்:
முதல் திருமுறை:
பதிகம் 62: திருக்கோளிலி
பாடல். 1. (667)
❤️
தலச்சிறப்பு:
திருக்கோளிலி - திருக்குவளை
சுவாமி: பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : வண்டமர் பூங்குழலி
காவிரி தென்கரைத்தலம்.
திருவாரூர் - எட்டுக்குடி சாலையில் உள்ளது.
நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி ECR ல் இருந்தும் செல்லலாம்.
சப்தவிடங்களில் ஒன்று. அவனிவிடங்கர்- பிருங்க நடனம்.
வெண்மணலால் ஆன மூர்த்தி
வழிபட்டோர் :
பிரம்மன், திருமால், இந்திரன், முசுகுந்தன், அகத்தியர், நவகிரகங்கள், பஞ்சபாண்டவர்,
முதலியோர்
சுந்தரருக்கு குண்டையூர் கிழார் வேண்டுகோளின்படி நெல் மலை கிடைக்கப் பெறச் செய்த ஈசன் என்று பதிகக்குறிப்பு.
❤️🙏❤️🙏❤️🙏❤️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏❤️
No comments:
Post a Comment