#சம்பந்தர்அமுதம்
முதுமையால் வரும் மெலிவு, நோயினால் வரும் துன்பங்கள் நீங்கி, காலன் நம்மை அனுகாமல், காப்பாற்றுபவன் இறைவன் என்பதை உணர்த்தி, தமிழ் விரகன், திருஞானசம்பந்தர் அருளியத் திருப்பாடல் இது.
பொருள் :
தேகத்தில் முதுமை அடைவதால் உண்டாகும் நலிவைத் தீர்ப்பவர்,
அனல் அம்பைக் கொண்டு முப்புரங்களை எரித்தவர்,
பார்த்தன் தவநிலை கண்டு பாசுபதம் அருளியவர். அவர் நம்மை நோயினால் மெலியாதவாறும், விணைகளால் துன்பம் நேராதவாறும் காத்து, காலன் நம்மைக் குறுகாத வண்ணம் பாதுகாப்பவர் காரோணத்தாரே.
என்று அருளியுள்ளார்.
தேவாரம்: முதல் திருமுறை
பதிகம்: 72 பாடல்: 6 (781)
தலம் : திருக்குடந்தைக் காரோணம்.
சுவாமி : சோமேசர், சிக்கேசர்
அம்பாள், சோமசுந்தரி, தேனார்மொழியாள்
காவிரி தென்கரைத் 28 வது தலம்.
கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தின் கீழ்க்கரையில் உள்ளது. சோமேசர் கோயில் என்று அழைப்பர்.
மகாமகம் ஆடுதற்கு நவநதிக் கன்னியர்கள் ஆரவாரத்துடன் வரக்கண்ட அம்பிகை, இறைவனை ஆரோகணம் செய்து கொண்டதால் இறைவன் காயாரோகணர் என்றும்,
சந்திரன் வழிபட்டதால் சோமேஸ்வரர் எனவும் வழங்கப்பெறுகிறார்.
அமுதகலசத்தின் சிக்கம் (உறி) சிவலிங்கமாய் மாறியதால் சிக்கேசர் என்றும் வழங்கப்பெற்றவர்.
❤️🙏❤️🙏❤️🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment