#திருமுறைசிந்தனைகள்:
#சம்பந்தர்தூது: - வண்டு -
✅பகுதி - ஒன்று
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
'தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி ....'
இது ஒரு திரைப்படப் பாடல் வரிகள்.
இதில் ஒரு தலைவி, தன் தலைவனைக் நேரில் காண இயலாமல் தனிமையில் தவிக்கும் போது, தலைவனை நினைத்து தான் வாடும் நிலையை அந்த தலைவனிடம் கூற ஒரு தோழி இல்லையே வருந்துகிறாள்.
💚
நமக்கு விருப்பமானவர்கள் தொலைதூரத்தில் இருக்கும் நிலையில் அவர்களுடைய நினைவுகளால் வாடும் உள்ளம் நமக்கு விளக்கப்படுகிறது.
💜
உலகம் முடங்கிக் கிடக்க, புலம் பெயர்ந்து வாழும் பலர் குடும்ப உறவுகளைப் பிரிந்து கால சூழலினால் கருத்தை நேரில் பரிமாறிக் கொள்ளா முடியாத நிலை. மனம் பிரிவு ஆற்றமையால் தன் எண்ணத்தை வெளிப்படுத்த முயலுகிறது.
♥️
தமிழ் இலக்கியத்தில் தூது அமைப்பு என்பது ஒரு வகையான கவிதை அமைப்பு.
🧡
ஒரு கலைஞன் தன் படைப்பை வெளிப்படுத்த 32 வகையான உத்திகளைக் கையாளுகிறான் என்று நற்றிணை என்னும் நூல் உரைக்கும்.
அதில் ஒன்றில்தான், அஃறிணைப் பொருள்களில் தன் எண்ணத்தை வைத்து தூது சென்று உரைக்கும் பாங்கு.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
இறைவனை தலைவனாகவும், ஆன்மாவை தலைவியாகவும் கொண்டு
தலைவனை எண்ணி தலைவி உருகி தான் காணும் பொருள்களிடம் தலைவனுக்கு தூது அமைத்து பாடுகிற அமைப்பில் உள்ள திருமுறை பாடல்களை எண்ணி சிந்திப்போம் வாருங்கள்.
💛
பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கும் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வராகிய திருஞானசம்பந்தர் தரும் பதிகங்களில் ஒன்றில் இந்தத் தூதுக் காட்சியைப் பார்க்கலாம்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
முதலாம் திருமுறையில் வரும்
60-வது பதிகம். தலம்: திருத்தோணிபுரம். (சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்று)
வண் தரங்கப் புனற்கமல ... எனத் தொடங்கும் பதிக பாடல்கள் பற்றியது இது.
🤎
காழி வேந்தர், பல தலங்கள் சென்று தரிசித்து அற்புதங்கள் பல செய்து வருங்கால், பல நாட்கள் சென்றுவிட்டன.
தாம் அருள்பெற்ற தோணிப்பர் நினைவு வந்து விடுகிறது.
தம்மைத் தலைவியாகவும், தாம் வணங்கும் இறைவரை தலைவனாகவும் எண்ணுகிறர் பிரிவாற்றாமையில் வெளிப்படும் பாடல்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
காட்சி - 1
தாம் இருக்கும் இடத்தில் ஒரு ஆண் வண்டு தேனை உண்டு தம் துணையுடன் மகிழ்ந்து இசைபாடி மகிழ்ந்திருக்கும் காட்சியைப் பார்த்து, அந்த வண்டுவிடம் தான் இறைவனையே நினைத்து நினைத்து உருகி தவிக்கும் நிலையை தோனிபுரம் சென்று தம் தலைவனாகிய இறைவனிடம் பரிவோடு பகரருமாறு கூறுகிறார்.
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
பாடல்-1
வண் தரங்கப் புனற் கமல
மதுமாந்திப் பெடையினோடும்
ஒண் தரங்க இசைபாடும்
அளி யரசே ஒளிமதியத்
துண்டர் அங்கப் பூண்மார்பர்
திருத் தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க்கு என் நிலமை
பரிந்து ஒரு கால் பகராயே.
- (திருமுறை 01.60.01).
தரங்கம்: அலை அளி- வண்டு
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
ஆன்மாக்கள் பெண் தன்மை உற்றதென்றும் அது கொழு கொம்பாகிய இறைவனைப் பற்றி நிற்றல் வேண்டும் என்ற உள்ளடக்கிய கருத்து இதில் உள்ளது என்பர் அறிஞர்.
💜
முடங்கிய உலகத்தில் உறவுகளை பிரிந்து வாடும் உள்ளங்கள் அமைதி பெற வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைப்போம்.
இறையருள் பெறுவோம்.
நன்றி🙏
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🙏🛐🙏🙏🛐🙏🙏🛐🙏
https://m.facebook.com/story.php?story_fbid=5653593588049185&id=100001957991710
No comments:
Post a Comment