Tuesday, May 18, 2021

எண்ணலங்காரம் பகுதி-1 (1.11.2) (109)

#சம்பந்தர்அமுதம் 
#எண்ணலங்காரம் : 
பகுதி - 1.

திருவிளையாடல் படத்தில் சிவனை அவ்வையார் ஒன்று, இரண்டு... என்று ஏற்றிப் பாடுவார். 

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்...

இதுதான் எண்ணலங்காரப் பாடல்.

எண்ணலங்கராம் தமிழ் இலக்கனத்தில்
ஆகுபெயர் வகையைச் சார்ந்தது:

ஓர் எண்ணால் அளவையின் பெயர் அந்த எண்ணிக்கையில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது:
ஒன்று பெற்றால் ஒளிமயம்
இதில் ஒன்று என்பது குழந்தைக்கு ஆகி வருவது
 
நமது தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று. 

இது குறித்த சிந்தனைப் பதிவு:

பலருக்கும் இந்த எண்ணலங்கார பாடல்கள் குறித்து தெரிந்து முன்பே சுவைத்திருந்தாலும்.
நாம் இங்கு பக்தி சுவையில்
இந்த பாடல் வகை பற்றி பார்க்கலாம்.

தமிழ் சுவையுடன் பக்தியைப் போற்றியவர் நம் திருஞானசம்பந்தர்.
முதலாம் திருமுறையில்
திருவீழிமிழலை தலத்தில் வரும் சடையார்புனல் என்று தொடங்கும் பதிகத்தில் வரும் பாடல் இது:
 
ஈராய் முதல் ஒன்றாய்இரு
பெண் ஆண் குணம் மூன்றாய்
மாமறை நான்காய் வரு
பூதம் அவை ஐந்தாய்
ஆறார் சுவை ஏழோசையோடு
எட்டுத்திசை தானாய்
வேறாய் உடன் ஆனான்இடம்
வீழிம்மிழ லையே.
(1.11.2)  (109)
- தேவாரம்  - முதலாம் திருமுறை
- 11. திருவீழிமிழலை பதிகம்
- பாடல் 2.

விளக்கம்:

1️⃣ஒன்று :
உயிர்களைத் தோன்றச் செய்வதும் ஒடுங்கும் காலத்தில்தானே ஏற்பதும்
இறைவன்.

2️⃣இரண்டு: உருவங்கள்
ஆண் பெண் உருவில் இரண்டாகத் தோன்றுகிறார்.

3️⃣மூன்று: குணங்கள்
சத்துவம், ரஜோ, தாமசம் 

4️⃣நான்கு:  மறைகள்
இருக்கு, யஜூர், சாமம், அதர்வனம்

5️⃣ஐந்து:    பூதங்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

6️⃣ஆறு:   சுவைவகைகள்
உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு (கசப்பு) புளிப்பு, இனிப்பு

7️⃣ஏழு:   (ஒலி ஓசை)இசை
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
எழு சுரங்கள்:
சட்சம் (சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், (ச ரி க ம ப த நி )

8️⃣எட்டு:  திசைக் கோணங்கள்
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு,
வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு
💛
இப்பாடலில் ஈசன் யாவுமாய் என்பது முத்தும், மணியும் கலந்தும் என்றும்,
பாலும், சர்க்கரையும் பொருந்திக் கலந்தது போல உடனாகவும் 
என்று உணர வேண்டும்.

- சிந்தனைப் பகிர்வு:
❤️🙏💙🙏🤎🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🧡🙏💚🙏💜🙏

No comments:

Post a Comment

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூ...