என்ன பிறப்பு, என்ன வாழ்வு, எப்படி இறப்பு என்று நாளும் சலித்து சலித்து, இப்படிப்பட்ட வாழ்விலிருந்து விடுதலையை எண்ணி எப்படி தவம் செய்து துன்பங்களை நீக்குவது என்ற குழப்பம் உள்ளவர்களே, நீங்கள் தளர்வுற்று, கவலை கொண்டு வருத்தமடைய வேண்டாம். நம் இறைவன் வந்து நிச்சயம் காத்தருளுவான். நீங்கள் இறைவனை நம்பிக்கையுடன் சென்று வணங்குங்கள். தூங்கானைமாடம் என்னும் தலத்தில் கொன்றைமாலை சூடி, கங்கை தரித்து, ரிஷபத்தில் வந்து காட்சியளிப்பான். அவன் நம்மைக் காத்தருளுவான் என்று, வாழ்வில் கலங்கி நிற்கும் நல் உள்ளங்களுக்கு அருமருந்தாக இப்பாடலை அருளியுள்ளார்; நம் தமிழ் விரகன், திருஞானசம்பந்தர்.
(தேவாரம் :முதல் திருமுறை: பதிகம்: 59 பாடல் 3 (636).
No comments:
Post a Comment