Thursday, February 18, 2021

நாக தோஷ பரிகார தலங்கள்: காத்திருப்பு,செம்மங்குடி, கோடங்குடி, திருக்களாச்சேரி

நாக தோஷ பரிகார தலங்கள் : காத்திருப்பு:
 சொர்ணபுரீஸ்வரர் சொர்ணபுரீஸ்வரி அம்பாள் திருத்தலம். காரைக்கால் - சீர்காழி வழித்தடத்தில் உள்ள தலம். சுந்தரர் பொருள் கேட்பார் என்று சிவன் ஒளிந்தது போல இருக்க அம்பாள் அருளால் சுந்தரர் பொருள் பெற்ற தலம். வைப்புத் தலம். வாசுகி நாகம் வணங்கி பேறு பெற்ற தலம் சில ஆண்டுகளுக்கு முன் ஆலய பராமரிப்பு பணி செய்த போது கிடைத்த ராகு கேது ஒரே வடிவத்தில் சிலாரூபமாக அமைந்தது. ராகு கேது பெயற்சி குருக்கள் மற்றும் ஊர் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாங்கூர் 11 சிவாலயங்களில் ஒன்று.

2
நாக தோஷ பரிகார தலங்கள் : செம்மங்குடி:
சீர்காழியிலிருந்து கிழக்கில் திருக்குருகாவூர் வெள்ளடை மற்றும் திருமுல்லைவாயில் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம் செம்மங்குடி நாகநாதர் ஆலயம் வைப்புத் தலம் சிவாலயம். ஒரு காலம் பூசை. அருகில் உள்ள ஒரு வீட்டில் சாவி கேட்டு பெற்று தரிசிக்கலாம்.


3
நாக தோஷ பரிகாரத் தலங்கள் : கோடங்குடி:
  கார்கோடகநாதர் மயிலாடுதுறை - நல்லத்துக்குடி வழி கோடங்குடி. 2. பொறையார் - மங்கநல்லூர் பாதையில் பெரம்பூர் (ஸ்ரீ சுப்பிரமணியர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் - வைப்புத் தலம் அருணகிரிநாதர் திருப்புகழ் தலம்) தரிசித்துப் பின் வடக்கில் கடகம் சென்று கோடங்குடி செல்லலாம். மிகவும் புராதான ஆலயம்.

4நாக தோஷ பரிகாரத் தலங்கள் :
திருக்களாச்சேரி:
பொறையாறு க்கு மேற்கில் 5 கி.மீ நாகநாதர் ஆலயம். அம்பாள் குறா மரமாக இருந்து சுயம்பு நாகநாதரை வழிபட்டதாக புராணம்


Saturday, January 30, 2021

திருத்தலங்கள் தரிசனம் 2021 கடுவெளி

கடுவெளி : திருவையாறு காவிரி வடகரையில் தில்லைஸ்தானம் பாடல் தலம் கடந்து
 (திருக்காட்டுப்பள்ளி) - கல்லணை சாலை 4 கி.மீ. தூரத்தில் உள்ள கடுவெளி யில் உள்ள
புகழ்பெற்ற கடுவெளி சித்தர் அமைத்த
ஸ்ரீ ஆசாசபுரீஸ்வரர் ஸ்ரீமங்களாம்பிகை
ஆலயம் உள்ளது.
ஆலயம் முன்பும் ஒரு நந்தி மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் தரிசித்து, பின் 5 நிலை இராஜகோபுரம் கடந்தால்,
வரும் நந்தியை வணங்கி ஆலயம்
முன் முன் மண்டபம் அழகுற அமையப்பெற்றிருக்கிறது.
2013 ல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. நல்ல பராமரிப்பில் உள்ளது. முன்மண்டபம் கடந்தால் .உள் மண்டபம் தெற்கு நோக்கிய அம்பாள், கிழக்கு நோக்கிய சிவனும் உள்ளார்கள். அம்பாளுக்கு தனி நந்தியும் தென்புறம் உள்ளது.
பெரிய அளவில் ஏகப்பிரகாரமாக இருந்தாலும், வினாயகர், முருகன், தனி சன்டிகேஸ்வரர்  சன்னதிகள் சுற்றி அமைந்துள்ளது.  ஆலயம் வடபுறத்தில் கிழக்குப் பார்த்து கடுவெளி சித்தருக்கு தனி சன்னதியும் அருமையான சூழலில் அமைந்துள்ளது.
ஆலயம் இராஜகோபுரம் அருகில் இவ்வாலயம் உபய குறிப்புகள் உள்ள தனிகல்லில் பொறித்துள்ளது.

ஆலயம் முன்புறத்தில் ஆலயக் காப்பாளரிடம் சாவி வாங்கி உடன் தரிசனம் செய்யலாம்.
#அற்புதத்திருத்தலங்கள் 
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்

திருத்தலங்கள் தரிசனம் 2021 கூத்தூர் - திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி வழியில்

கூத்தூர்: 
திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள சிறிய ஊர். இங்கிருந்து வடக்கில் வானரங்குடி என்ற கொள்ளிடம் ஆறு அருகில் உள்ள ஊருக்கு செல்லும் வழியில் 
உள்ளது.
1. ஸ்ரீ நாராயனேஸ்வரர், 
ஸ்ரீ அதலாம்பிகை சிவன் ஆலயம்,
2. ஸ்ரீ லெட்சுமிநாராயணர் ஆலயம்,

மேலும் ஒரு சிறிய காளியம்மன் ஆலயமும் உள்ளது.
சிவன் ஆலயம் சுவாமி, அம்மன், நந்தி க்கு தனிதனி மண்டபமும், ஆலயத்தில் உள்ளது. விநாயகர், முருகனுக்கு சுவாமி சன்னதிக்கு முன்பு வைத்து வழிபாடு நடை பெறுகிறது.  
ஒரு காலம் என்பதால்,
அருகில் உள்ள ஒரு அடியார் வீட்டில் சாவி வாங்கி தரிசிக்கலாம்.

பெருமாள் ஆலயம் முன் மண்டபம் மேல் கூறை இடிந்து வெட்டவெளியாக இருக்கிறது.
ஆலயம் முன் மிக உயரமான புராதானமான அரசமரம் உள்ளது.
 20.01.2021
 #சிற்றூர்ஆலயதரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.

திருத்தலங்கள் தரிசனம் 2021 பேரளம் அருகே : மேனாங்குடி, அகிலாம்பேட்டை.

மேனாங்குடி
திருநள்ளாறு - கொல்லாபுரம் கடந்து பேரளம் சாலையில் உள்ள ஊர்.
ஊர் நடுவில் மிக அழகிய சிறிய ஆலயம். 
ஸ்ரீ நாகநாதர் ஸ்ரீ பிரத்யஷ்ட நாயகி, 
சுவாமி கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கிய தனி சன்னதியும் உடையது.
தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், தனிதனி சன்னதிகள்.
ஆலயம் முன்பு தனி பஞ்சமுக தசபுஜ ஆஞ்சனேயர் சன்னதி உண்டு.
23.01.2021
#சிற்றூர்ஆலயதரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்,

அகிலாம்பேட்டை: 
1.பேரளம் - காரைக்கால் வழியில் பேரளத்திலிருந்து 500 மீ.தூரம் தாண்டினால் தெற்கில் பிரியும் சாலையில் 1 கி.மீ. தூரத்தில் உள்ள சிற்றூர்.
2. பேரளம் - நன்னிலம் சாலையில் வரும் பேரளத்திலிருந்து தெற்கில் 2 கி.மீ. இஞ்சிக்குடி வந்து இஞ்சிக்குடிக்கு கிழக்கில் 1. கி.மீ தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ ஜம்புநாதேஸ்வரர், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி 
சிறிய சிவனாலயம்.
சுவாமி கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்கு பார்த்தும், தனி தனிக் கருவறைகள் இணைத்து, ஏக மண்டபம் ஆக கட்டியுள்ளார்கள்.
விநாயகர், முருகர் சுவாமி கருவரை வாசலில் உள்ளார்கள். எதிரில் நந்திபகவான். சிறிய சுற்று பிரகாரம்.
சிறிய ஆலயம். இஞ்சிக்குடியிருந்து அர்ச்சகர் வர வேண்டும். 
இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு, 02.04.2021 அன்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
02.04.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...