Sunday, May 3, 2026

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்

திருச்செந்தூர்
 ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர் ஆகும். 

பலமுறை வந்து தரிசனம் பெற்றாலும் ஒவ்வொரு பயணத்தையும் சிறப்பு செய்வது கண்கண்ட தெய்வம் செந்திலாண்டவர் கருணையே.

பயண அனுபவக்குறிப்புகள்
சுப்ராம் 🔱🇮🇳 26.04.26
விடியற்காலை 3.30 க்கு சிறப்பு தரிசனம் ரூ 100/- வரிசையில் நுழைந்தோம். பொருள் வைப்பு அறை 4.30 க்குத்தான் திறப்பார்கள் என்று கூறியதால், உடமைகளுடன், கைப்பேசி எல்லாவற்றையும் சுமந்து கொண்டே வரிசையில் நின்று 5.30 அளவில் விஸ்வரூப தரிசனம் மிகவும் அற்புதமாக கிடைத்தது நிதானமாக மிகவும் திருப்தியாக அருகில் நின்று தரிசனம் பெற்றோம். 
மேலும், ஜெயந்திநாதர், சண்முகர் தரிசனம் முடித்து, இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சூரனை வதம் செய்யும் சத்ருசம்ஹார மூர்த்தி முருகரை அபிஷேகத்துடன் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  
மேலும், ஆலய முதல் பிரகாரத்தில் உள்ள தட்சினாமூர்த்தி வள்ளி தெய்வாணை சஷ்ட்டி மண்டபம் மற்றும் சண்டிகேஸ்வரர், நடராஜர், பைரவர் தரிசித்து கொடி மரம் வணங்கி இரண்டாம் பிரகாரம் சகஸ்கரலிங்கம் சம்ஹார மூர்த்தி விநாயகர்பெருமாள் பெருமாள் தரிசனம் செய்து ஆலயம் வலம் வந்து காலை 6.00 மணி அளவில் கோவில்யானை தென்புறம் கோபுரம் அருகில் வணங்கும் காட்சியையும் கண்டோம். 

அடுத்து நாழி கினறு நடை பாதையில் சென்று, மூவர் சமாதி தரிசித்து, அடுத்து 100 மீட்டர் தூரத்தில் தற்போதுள்ள எழுப்பப்பட்டுள்ள அய்யா வைகுண்டர் பதி சென்று தரிசித்து பக்கத்தில் உள்ள சத்ருசம்ஹர மூர்த்தி மடம், ஆவுடையப்பர் மடம், சங்கர சுவாமி மடங்களையும் தரிசித்தோம்.

மேலும், ஆலயம் வந்து மேற்கு வழி பாதையில் சென்று துண்டுகைவிநாயகர் ஆலயம்
தரிசித்தோம்

பிறகு, ஆலய மேற்குமுன் நுழைவு வளைவுக்கு எதிரில் உள்ள பழமையான 
சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் சென்று கால பூசை தொழுது பின் எங்கள் வாகனம் சென்று அடைந்தோம்.

நிறைவான தரிசனம் தந்து மகிழ்வுடன் பயணம் நிறைவு செய்ய கருணை கடலின் அன்புதான் முழுமுதல் காரணமாகும். நன்றி நன்றி🛐🙏🛐

திருச்செந்தூர் தரிசனத்திற்கு செல்பவர்களுக்கு மேலும் சில குறிப்புகள்

ஆலய தரிசன வசதிகள்

⚡பேருந்து, ரயில் பயணிகள் இறங்கும் இடங்களில் இருந்து ஆலயம் தென்புறம் அருகில் வர வாகன வசதிகள் உண்டு
முடிந்தவர்கள் நடந்து வந்து மேற்கு புற ஆலய நுழைவு வாயில் வழியாகவும் வரலாம்.
⚡வாகனங்கள் ஆலய தென்புறம் நிறுத்த இடம் இருந்தாலும், வேன்கள் சிறிய பேருந்துகளை தெப்பக்குளம் அருகில் நிறுத்த செய்யப்படுகிறது.

⭐சுப்பிரமணியர் ஆலயம் வரும் வழிப்பாதையில் இரண்டு புறமும் கடைகள் பல்வேறு ஆதின மடங்கள், மற்றும் பல்வேறு சாதி இனத்தாருக்குச் சொந்தமான மடங்கள் தங்கும் வசதியுடன் கூடிய இடங்கள் பொருட்கள் வைப்பு அறைகள், குளியல் அறைகள் முதலிய வசதிகள் ஏராளம் உள்ளன. பக்தர்கள் பொருட்களை / உடமைகளை பத்திரமாக வைத்துவிட்டு ஆலய தரிசனம் செய்து வரலாம். தங்குவதற்கும் வசதிகள் உண்டு வாடகை விபரங்கள் விசாரித்துக் கொள்ளலாம்.

⭐ஆலயம் சார்பாக, ஆலயம் தென்புறம் ஆலயவளாகத்திலும் பக்தர்கள் நலமாக தங்குவதற்கு புதிய புதிய கட்டிட அமைப்புகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது ஆதார் அட்டை காட்டி அறைகள் முன்பதிவு செய்யலாம் online மூலமாகவும் செய்து கொள்ளலாம் 

⭐இலவசமாக பொருட்கள் பாதுகாப்பு இடங்கள் இலவச அன்னக்கூடம், இலவச முடி வெட்டிக்கொள்ளும் இடங்கள் இலவச கழிப்பிடங்கள் இலவச குளியல் இடங்கள் முதலிய பல வசதிகள் உண்டு 

⚡தனியார் உணவு சாலைகள், தேநீர் கடைகள், ஆலய பொருட்கள் விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன.

💥தரிசனம்
⚡இலவச தரிசனம் தனி வரிசை ஆலயம் வட பகுதியில் சென்று வரிசையில் வர வேண்டும்.

⚡சிறப்பு நுழைவு வரிசையில் ரூ 100/- கட்டனம் கட்டி வரிசையில் சென்று ஆலயம் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்

⚡முதியோர்கள் முக்கிய பிரமுகர்கள் ஆலய தென்புற பிரதான வாசல்வழியில் ஆதார் அட்டை அடையாளம் மூலமாக அனுமதிக்கப்பட்டு நேரடியாக ஆலயம் உள் சென்று தனி வரிசையில் தரிசனம் செய்விக்கப்படுகிறர்கள் 
(காலை 7.30 மணி முதல் என்று கூறுகிறார்கள்)

⚡அர்ச்சணைப் பொருட்கள் தேங்காய் பழம் முதலியவைகளுக்குப் பதிலாக சுவாமிக்கு வேல் மலர்மாலை முதலியவை சமர்ப்பித்து நேரடியாக சங்கல்ப அர்ச்சனை செய்து கொள்கிறார்கள்.
⚡ஆண்கள் பனியன் முதலிய மேல் சட்டைகள் அணிந்து தரிசிக்க அனுமதி இல்லை 

💥சாதாரணமாக வரிசையில் உள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்து ஆலயம் வெளியில் வர குறைந்தபட்சம் சுமார் 3 மனி நேரம் ஆகலாம் வரிசையில் உள்ளே வேறு எந்த வித வசதிகளும் கிடையாது. அவசரமாக வெளியில் வருவது கடினம்.

மிக முக்கியம்
💥குழந்தைகள் முதியவர்கள் சிகிச்சையில் உள்ளவர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் முன்னேற்பாடுகளுடனும் தரிசனத்திற்கு செல்வது மிகவும் அவசியம்

💥சாதாரண நாட்களில் கூட எங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் எந்த ஒரு செயல்பாட்டிற்கும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்
முருகன் திருவருள்🔱
நன்றி🙏

25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️

காயல்பட்டினம் மெய்கண்டீஸ்வரர் கோயில்

காயல்பட்டினம் மெய்கண்டீஸ்வரர் கோயில் 

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான சிவன் கோயில் ஆகும்.

காயல்பட்டினம்;
முற்கால பாண்டியர் ஆட்சிகாலத்தில்,
மதுரை தலைநகரமாகவும், காயல்பட்டினம் அதன் துறைமுகமாகவும் திகழ்ந்ததாம்.

ஆலய அமைப்பு🛕
தென் தமிழ்நாட்டின் நவ லிங்கபுரங்களில் ஒன்றாகும். 
கோயில் சிறப்பம்சங்கள்:
மூலவர்: மெய்கண்டீஸ்வரர் /மெய்கண்டேஸ்வரர் (சிவன்).
மேற்கு பார்த்த சிவஸ்தலம்
முன் பகுதி கூறை அமைக்கப்பட்டுள்ளது.
உள்மன்டபம் கற்றளியாக உள்ளது.
மேல் விதானம் முழுதும் அழகிய சிறிய அளவில் புராதன சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருவரையில்  சுமார்1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவராக லிங்க வடிவில் மெய்கண்டீஸ்வரர் அருட்காட்சியளிக்கிறார்.
அவருக்கு முன்பாக நந்தியம்பெருமாள் அமைந்து இருக்கிறார்.  மீதி ஆலய இடங்கள் எழுப்பப்பட வேண்டியதுள்ளது.

பிள்ளயார் அம்மன் வழிபாடு இல்லாத கோவில். உள் மன்பத்தில் வடபுறம் நடுவில் நடராஜர் சன்னதியில் ஒரு சிறிய உலோக நடராஜர் திவ்யமாய் இருந்து அருள்பாலிக்கிறார்.
மிகவும் அமைதியாக உள்ளது  
ஆலயம் வெளிமண்டபம் பெரிய Shed போடப்பட்டு தனி கதவுடன் உள்ளது
அம்மனுக்கு தனி சன்னதி கிழக்குப்புறத்தில் சிறிய கட்டிடம் ஆரம்ப வேலையில் உள்ளது

பிரதோஷம் நடைபெறுவதாக தெரிகிறது.
பிற மதத்தவர்கள்  வீடுகள் சூழ அமைந்துள்ளார்
அடியவர்கள் பெருமுயற்சியில் வழிபாடு பூசைகள் நடைபெற்று வருகின்றன.
முழுவதுமான மீட்பும் வழிபாடுகள் சிறக்கவும் இறைவன் அருள்புரிய வேண்டும்

அருகில் உள்ள பழமையான  கணபதீஸ்வரர் சிவாலயம் திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலய நிர்வாகத்தில் உள்ளது என்று கூறுகிறார்கள்.   தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன
உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் முற்றிலும் அறியப்படாத மிகவும் பழமையான ஆலயங்களில் இத்தலமும் ஒன்று.
🔱
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🔱🇮🇳
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில்கள்,
நீண்டகாலமாக திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு விழாவினை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.

பிரதோஷ வழிபாடு தவிர, மற்ற நேரங்களில்
பக்தர்கள் கூட்டம் வருகையின்மையால்
தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது.

தூத்துக்குடியிலிருந்து காயல்பட்டினம் சென்று நகரின் உள் பகுதியில் உள்ளதால் குறிப்பிட்ட வழியில் விசாரித்து செல்ல வேண்டும் ஆலயம் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன

ஆலயம் அருகில் செல்வதற்கு சற்று நெருக்கடியான பாதையில் செல்ல வேண்டியுள்ளது

காயல்பட்டினத்தில் மெய்கண்டேஸ்வரர் மற்றும் கணபதீஸ்வரர் ஆகிய சிவன் கோயில்கள் தரிசித்து பலன் பெறுவோம்.
அடியாருக்கு முன் தகவல் தந்து சென்று தரிசித்து வரலாம்

25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்

மேலும் சில தகவல்கள்
பிரும்ம ரிஷியார் பதிவுகளிலிருந்து .....
நன்றி🛐
தச வீரட்டானம் ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போராட்டத்தில் மனதிற்கும் உடலுக்கும் வெற்றியினைத் தருபவை, நலம் தருபவை. நிம்மதியும் தெளிவும் தருபவை.

இந்த ஆலயம் சருமம் சம்பந்தபட்ட மேனி சம்பந்தபட்ட சிக்கல்களை உடலாலும், மனம் சம்பந்தபட்ட சிக்கல்களை சூட்சுமமாகவும் தீர்க்கும் சக்தி கொண்டது. வேண்டிய வரத்தை தரக் கூடிய சக்திமிக்க தலம்.

ஒருமுறை இந்த மெய்கண்டேஸ்வரரை தரிசித்துப் பாருங்கள். அவரே உங்களை மீட்டெடுத்து தன் ஆலயத்தின் வழமையான பக்தர்களாக சாட்சிகளாக மாற்றிக்கொள்வார். இது சத்தியம்.

💥....... துர்வாசர்...உண்மை எனும் மெய்பொருளை அறியாமல் அவர் அடிக்கடி தானே பெரியவர் எனச் சாபமிட்டதால் இந்நிலை வந்தது. அப்படியான நிலையில்தான் இங்கு அவர் சிவன் அருளில் குணமானார்.

அவரின் மெய் எனும் உடலை குணமாக்கி அப்படியே மெய்பொருளாவது சிவமே, சிவமே எக்காலமும் மெய்பொருள் தன் தவமோ வலிமையோ அல்ல என அவர் உண்மை உணரவைத்ததால் அந்தச் சிவன் மெய்கண்டேஸ்வரர் என்றானார்.

இந்த ஆலயம் முன்பு மிகப் பிரமாண்டமாய் இருந்தது. அதன் சொத்துக்களும் வருமானமும் பாண்டியர் காலத்தில் மிக மிக பெரிதாக இருந்தது.

பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்தை மிக மிக பெரிதாகக் கொண்டாடினார்கள். மூன்று பிரகாரம் கொண்டு திருசெந்தூர் கோவில் போல் அது பெரிதாக இயங்கிற்று.

💥 .......சுமார் 400 வருடங்கள் கிழக்கு கடற்கரைகள் அந்நியர்வசம் சிக்கிய சீரழிவின் சாட்சிகள் இவை...........

...... காயல்பட்டண மெய்கண்டேஸ்வரர் ஆலயமும் அழிய ஆரம்பித்தது.

40 ஏக்கர் கோவில், அதனைச் சுற்றி 200 ஏக்கர் நிலம் இன்னும் அதன் எதிரே ஒரு பெருமாள் கோவில் இடையில் அக்ரஹாரம் என பிரமாண்டமாக இருந்த இந்த ஆலயம் பின் மாற்றுமத காலத்தில் சிக்கி சீரழிந்து அடையாளமே இல்லாமல் போயிற்று.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் சில பக்தர்கள் ஒன்று கூடி அதனை ஓரளவு மீட்டு கூரையிட்டு வழிபாடுகளைத் துவக்கினார்கள். அதுவும் அவ்வப்போது நடக்கின்றது.

இப்போதைக்கு ஆலயம் அழியாமல் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றதே அன்றி முழுமையான வரலாறும் வரவில்லை,
பூஜைகளுக்கும் பெரிதாக வழியில்லை. அறநிலையத்துறை ஒருகால பூஜைக்குக் கூட இங்கு ஒத்துழைக்கவில்லை.

.......இந்த ஆலயம் சக்தி வாய்ந்தது. சுமார் 700 ஆண்டுகள் போராட்டத்திலும் மீண்டு எழுந்து தன்னை நிறுத்திக் கொண்ட ஆலயம். ஒருமுறை வழிபட்டால் மீண்டும் மீண்டும் உங்களை இழுக்கும் ஆலயம்.

இங்கு ஒரு சித்தர் வலுவாக உண்டு அவர் துர்வாசமுனியா அகத்தியர் வழியா என்பது இன்னும் அறியபடவில்லை அந்த சித்தர்தான் அவரின் சூட்சும காவல்தான் இக்கோவில் முழுக்க அழியாமல் நிற்கின்றது

இன்று அது துலங்கி நிற்க அந்த சித்தர்தான் காரணம், அந்த சித்தர் ஆறு அடி நாகமாக அங்கு உண்டு, இப்போதும் சிவனை வழிபட்டு செல்லும் நாகமாக அங்கு உண்டு

அந்த சித்தரின் அருளும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்

மேற்கு நோக்கி வீற்றிருக்கும் இந்தச் சிவனே துர்வாசரின் கர்மவினை மட்டுமல்ல தன்னை நாடிவரும் ஒவ்வொருவர் கர்மவினையும் அகற்றுகின்றார். நல்வாழ்வு தருகின்றார்.

....இந்த ஆலயம் வழிபாட்டு நேரம் தவிர இதர நேரம் பூட்டியிருக்கும். இதனால் இந்த ஆலயத்தை தரிசிக்க விரும்புவோர் ரமேஷ் ஐயர் என்பவரை 9442306662 எனும் எண்ணில், முத்து செல்வம் என்பவரை 9843999869 எனும் எண்ணில் தொடர்பு கொண்டுவிட்டு சென்றால் எளிதில் தரிசிக்கலாம்.

திருசெந்தூர் செல்லும் போது, குலசேகரபட்டணம் பக்கம் செல்லும் போது இந்த மெய்கண்டேஸ்வரரை தரிசிக்க மறவாதீர்கள்....
தகவல்கள் பிரம்மரிஷியார் பதிவுகளிலிருந்து
நன்றி🛐

#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECR #திருச்செந்தூர்-தூத்துக்குடி அருகில்

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர்திருக்கோயில்

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர்
திருக்கோயில்

அமைவிடம்⛳
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
  
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, சங்கரராமேஸ்வரர் திருக்கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் மூலவர் சங்கரராமேஸ்வரர், அம்பிகை பாகம்பிரியாள்.

தல வரலாறு📚
தூத்துக்குடியின் பழம்பெயர் 'திருமந்திரநகர்' என்பதாகும். இங்குதான் சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு வரையறுத்ததாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த இடம் 'திருமந்திரநகர்' என்று அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் பசுமை நிறைந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார். அதுவே இந்த சங்கர ராமேஸ்வரர் கோவில் என்று கூறப்படுகிறது.

 இத்தல இறைவனை காசியப முனிவர், கவுதமர், பரத்வாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள்பெற்றுள்ளனர்.

பிற்கால குறுநில மன்னரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தார். இவருக்கு குழந்தைப்பேறு இல்லை. இதனால் மனம் வருந்திய மன்னன், காசி போன்ற புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று புனித நீராடி வந்தார். ஒரு சமயம் மன்னன் தனது
பரிவாரங்களுடன் புனித நீராடச் செல்லும்போது, இறைவனது குரல் “பாண்டியா, திருமந்திர நகரில் உள்ள காசிக்கு நிகரான வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா" என அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து சங்கரராம பாண்டியன் வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி காசியப முனிவர் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு திருக்கோவில் ஒன்றை எழுப்பினார்.

ஆலய அமைப்பு🛕
கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. 

உயர்ந்த கொடி மரம், நந்தி உள்ளன. அதனை கடந்தவுடன் வாசலின் இருபுறமும் சூரியன், சந்திரன் உள்ளனர். சூரியனை ஒட்டி அதிகார நந்தி கைகூப்பியபடி உள்ளார்.

 இறைவன் சன்னிதி முன்பு அர்த்தமண்டபம், மகா மண்டபம் உள்ளன. இத்தல இறைவன் லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியபடி இரண்டு திருக்கரங்களில் ஒரு கரத்தில் தாமரை ஏந்தியும், மற்றொரு கரத்தை இடையோடு தொங்கவிட்டபடியும் பார்க்க ஒரு நாட்டிய மங்கைபோல் காட்சி அளிக்கிறார்.
இறைவன் கருவறை முன் வாசலில் அழகிய விநாயகர் தனிச் சன்னிதியில் அருள்கிறார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகார சன்னிதிகளாக தென்புறம் அறுபத்துமூவர், தென்மேற்கில் விநாயகர், அடுத்து புறச்சுற்றில் கிழக்கு நோக்கிய பஞ்ச லிங்கங்கள் உள்ளன. எதிரில் சிறிய நந்திகளும் உள்ளன.
வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார். அருகில் தெற்கு நோக்கியபடி உற்சவ திருமேனியுடன் முருகன் சன்னிதியும் உள்ளது. வடப்புற சுற்றில் தெற்கு நோக்கிய இரு மாடங்களில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் உள்ளனர். அதே சுற்றில் தெற்கு நோக்கிய சனிபகவான் சன்னிதி உள்ளது. அழகிய மண்டபத்தில் வடகிழக்கில் நடராஜர் சிவகாமியுடன் உள்ளார். அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது. அதில் சனிபகவான் கையில் வில் அம்புடன் உள்ளார். மற்ற கிரகங்களும் கையில் ஆயுதங்களுடன் வாகனத்தில் உள்ளனர்.
இரண்டாம் பிரகாரத்தில் கன்னி விநாயகர், முருகன், ஐயப்பன் சன்னிதிகள் உள்ளன.

 இக்கோவிலில் உள்ள 'வாஞ்சா புஷ்கரணி' என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இக்கோவிலை ஒட்டி தென்புறத்தில் வைகுந்தநாதப் பெருமாள் கோவிலும் உள்ளது. (திருப்பணி வேலை நடைபெறுகிறது)

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

நகரின் மத்தியப்பகுதியில் உள்ளதால் ஒரு வாகனங்களில் வருபவர்கள் ஒருவழிப்பாதை அனுசரித்து ஆலயம் சென்று தரிசித்து வரவேண்டும் 
 தூய்மையுடனும் நல்ல பராமரிப்புடனும், வழக்கமான பூசை விழாக்களுடனும் சிறப்பாக உள்ளது. ஏராளமான பத்தர்கள் தரிசித்து செல்கிறார்கள்.

அருகில் சிவன் ஆலயம் ஒட்டி தென்புறத்தில் வைகுந்தப்பெருமாள் ஆலயமும் உள்ளது தற்போது புனரமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஆலயத்தின் வடக்கு பிரதான வீதியில் முத்தாரம்மன் என்ற பழமையான தனியார் ஆலயமும் உள்ளது 
இவற்றையெல்லாம் தரிசித்தோம்

25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECR #திருச்செந்தூர்-தூத்துக்குடி அருகில்

தம்பிக்கோட்டை சுந்தரநாயகி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம்

தம்பிக்கோட்டைசுந்தரநாயகி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம்

அமைவிடம்⛳
நாகப்பட்டிணம் - தூத்துக்குடி ECR சாலையில்
தம்பிக்கோட்டை பிரதான சாலையை ஒட்டியே அமைந்துள்ளது.

ஆலய அமைப்பு🛕
ஆலயம் கிழக்கு நோக்கியது முன்மன்டபத்துடன் கூடிய 3 நிலை இராஜகோபுரம் உடையது. முன்மன்டப முகப்பில் காட்சி தரும் அமைப்பில் விநாயகர் சுவாமி அம்பாள் முருகன் உள்ளனர்

கொடிமரம் பலிபீடம் நந்தியும்அடுத்து ஆலய மண்டபம் வலது புறம் அம்மன் சன்னதி தெற்கு நோக்கி சுந்தரநாயகி அருள் பாலிக்கிறார்

உள் மன்டபத்தில், சுவாமி கருவரை முன் வலது புறத்தில் லெட்சுமணர் பூசித்த மகாகணபதி, மற்றும் சுவாமி நோக்கிய நந்தியம் பெருமாள் நிருத்த மண்டபத்துடன் கருவரையில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் சுந்தரேஸ்வரர் உள்ளார்.

மன்டபத்தில் தெற்கு நோக்கி உற்சவர் விக்ரகங்கள் மற்றும் நடராஜர் சன்னதி உள்ளன. நால்வர் தென்புறம் அமைக்கப்பட்டுள்ளனர்.

அம்மன் சன்னதி வாசல் வழியாக பிரகாரம் செல்லலாம். கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி தனி சன்னதி அமைப்பு. வன்னிமரம் மற்றும் தனி துர்க்கை வடக்கு நோக்கி அமைந்துள்ளார்.

கன்னிமூலையில் நிருதி விநாயகர் மேற்கு பிரகாரமேடையில் பஞ்ச பூதலிங்கங்கள், 
அன்னபூரணி விஸ்வநாதர் விசாலாட்சி 
மற்றும் ராகுகால பரிகாரலிங்கம் நாகராஜர் உள்ளனர். மற்றும் தனி சன்னதிகளில் வள்ளி தெய்வானையுடன் முருகர், மகாலட்சுமியும் அமைந்துள்ளனர்.
மேற்கு கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர்
வடக்கில் பிர்மா, தனி சன்னதியில் சண்டிகேஸ்வரர் உடன் சண்டிகேஸ்வரரி உள்ளனர். வட பிரகாரத்தில் நாகலிங்க மரம் ஒன்றும் உள்ளது. 

கிழக்கில் காலபைரவர், சிவசூரியன், சனீஸ்வரர், நவகிரகங்கள் மற்றும் பால ஆஞ்சனேயர் அமைந்துள்ளனர்.

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதால் மிகவும் பொலிவுடன் ஆலயம் விளங்குகிறது.

அமைதியும் பத்தி உணர்வுடனும் உள்ளது.
ECR பிரதான சாலையிலேயே உள்ளது ஆலயம் முன்புறம் அருகில் வாகனங்கள் நிறுத்த இடங்கள் உள்ளன. அருகில் வேறு கடைகள் கிடையாது.

25.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️
#ECR



திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...