ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி (சௌந்தரநாயகி) சமேத ஸ்ரீ சோழீஸ்வரர் ஆலயம்.
குத்தாலம்.
சுந்தரர் பாடிய தேவார வைப்பு தலம். விக்கிரமசோழன் திருப்பணி செய்து வழிபட்டதால் சோழீஸ்வரர் என மூலவர் அழைக்கப்படுகிறார்.
5 நிலை இராஜ கோபுரத்துடன் கூடிய கிழக்கு நோக்கிய மிகப்பழமையான ஆலயம்
10.9.23 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சோழ மன்னர்களில் ஒருவரான
விக்ரம சோழனால் கட்டப்பட்ட ஆலயத்தின் மூலவர் ஶ்ரீ சோழீஸ்வரர்.
தற்போதைய ஆலயம் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..
பரத முனிவர் பெண் குழந்தை பெற வேண்டி அம்பாளை வேண்டிக்கொள்ள,
அம்பாள் சிவ பெருமானிடம் பரிந்து உரைக்க, பரிந்து உரைத்த நாயகி (பரிந்துரை செய்பவள்) என இத்தல அம்பாள் அழைக்கப்படுகிறாள்.
ஈஸ்வரன் அம்பாளை அவளை
முனிவரின் மகளாகப் பிறக்கும்படி வேண்டி கொள்ள முனிவரின் மகளாக அம்பாள் பிறந்து பின்னர் சிவ பெருமானை மணந்து கொள்கிறார்.
இந்த ஆலயத்தில் அம்பாள் திருமணமாகாத பரிமளா சுகந்த நாயகியாகவும், பிரதான சந்நிதியில் சௌந்தர நாயகியாகவும், இரண்டு சன்னதிகளில் நமக்கு காட்சி அளிக்கிறார்.
விக்ரம சோழனின் மனைவி கோமளைக்கு மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத தோல் நோய் இருந்தது. சோழன் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து நோய் நீங்கியதால்
இந்த ஆலயத்தை விரிவாக கட்டினார்.
இன்றும், தோல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இந்த
கோவிலுக்கு சென்று, திராட்சை சாற்றை கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
இந்த ஆலயம் ஓர் சனி பரிகார தலம்.
இங்கு தனி சன்னதியில் சனீஸ்வரர்
பாதாள சனீஸ்வரர் என வணங்கப்படுகிறார்.
தேவர்கள் மற்றும் ரிஷிகள் இந்த தலத்திற்கு வருகை புரிந்த போது சனிஸ்வரர் அவர்களை அமிர்த கலசம் கொடுத்து வரவேற்றதால் அமிர்த கலச சனி என்றும் அழைக்கப்படுகிறார்.
நள மகாராஜா சனிப்பெயர்ச்சியில் இருந்து விடுபட யாத்திரை மேற்கொண்டபோது,
இந்த ஆலய பாதாள சனிஸ்வரரை வழிபட்ட பின்னர், சனீஸ்வரர் மன்னனை ஆசிர்வதித்து, திருநள்ளாறில் அவரது துன்பங்கள் தீரும் என்று தெரிவித்தார் என்பர்.
ஆலய தூண்களில் அனுமனுக்கு சிறப்பு சன்னதியும் . அனுமனின் பக்தர்கள் சனி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவதால், அமிர்த கலச சனியை வழிபடுவதுடன், அவரை வழிபடுவதும் மிகுந்த ப்பலனைத் தரும்.
பிரகாரத்தில் சித்தி விநாயகர், நால்வர்,
தேவியருடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விநாயகருடன் தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பாதாள சனீஸ்வரர் தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.
கோஸ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை சிற்பங்கள் உள்ளன.
நாகர் சிலைகள் வில்வ விருட்சத்தின் கீழ் அமைந்துள்ளன.
ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டது.
#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment